Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்துவே நம் விசுவாசத்தின் மையம்

Transcribed from a message spoken in October 2014 in Chennai

மில்டன் இராஜேந்திரம் 

வேதவாசிப்பு : சகல பரிசுத்தவான்களோடுங்கூடக் கிறிஸ்துவினுடைய அன்பின் அகலமும், நீளமும், ஆழமும், உயரமும் இன்னதென்று உணர்ந்து, அறிவுக்கெட்டாத அந்த அன்பை அறிந்துகொள்ள வல்லவர்களாகவும், தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும், அவர் தமது மகிமையின் ஐசுவரியத்தின்படியே, உங்களுக்கு அநுக்கிரகம் பண்ணவேண்டுமென்று வேண்டிக்கொள்ளுகிறேன் (எபே. 3:18, 19).

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நீளம், அகலம், ஆழம், உயரம் ஆகியவைகள் இல்லாத ஒரு நபர். இந்த வசனத்தில் சொல்லப்பட்டுள்ள நீளம், அகலம், ஆழம், உயரம் என்பவைகள் கிறிஸ்துவின் அன்புக்குப் பொருத்தமாக இருக்கும் என்று சொல்லலாம். ஆனால், அவை கிறிஸ்துவுக்குத்தான் அதிகமாகப் பொருந்தும் என்றும் சொல்லலாம். ஆம், கிறிஸ்துவுக்குத்தான் மிகவும் பொருத்தமாக இருக்கும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஒரு மாபெரும் நபர். இந்த நபருக்கு நீளம், அகலம், ஆழம், உயரம் இல்லை.

அறிவுக்கெட்டாத கிறிஸ்து

அவருடைய அன்பு அறிவுக்கெட்டாத அன்பு, knowledge-surpassing love of Christ என்று பவுல் குறிப்பிடுகிறார். ஒருபக்கம், அது நாம் அறியமுடியாத அன்பு; ஆனால் இன்னொருபக்கம் அந்த அன்பை நாம் அறிந்துகொள்கிறோம் என்று அதே வசனத்தில் அவர் சொல்கிறார். இது கொஞ்சம் முரண்பாடாகக்கூட இருக்கும். ஒருபக்கம் இந்த அன்பை நாம் அறியமுடியாது; ஆனால் இன்னொரு பக்கம் நாம் இந்த அன்பை அறிந்துகொள்வதற்கு அழைக்கப்பட்டிருக்கிறோம். இது மிகவும் ஆச்சரியமானது.

பொதுவாக மனிதர்கள் அறியமுடியாத இந்த நபரையும், இந்த அன்பையும் அறிந்துகொள்வது தேவனுடைய மக்களுடைய சிலாக்கியம். இந்த சிலாக்கியத்தைப்பற்றி நீங்கள் எந்த அளவுக்குப் பரவசப்படுகிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. பொதுவாக மனிதர்கள் அறியமுடியாத ஒன்றை அறிந்துகொள்ளக்கூடிய ஒரு privilege and capacityயைத் தேவன் நமக்குக் கொடுத்திருக்கிறார். Ordinarily people cannot know this; but God has given us something which others don’t have, which enables us to know Christ, the Christ whose length and breadth and height and depth ordinary human beings cannot know but we can know. அதுபோல அவருடைய அறியமுடியாத அன்பை அறிந்துகொள்வதற்குத் தேவன் நமக்கு ஒன்றைக் கொடுத்திருக்கிறார்.

இயேசு கிறிஸ்து என்ற நபர்

நாம் கண்டுகொண்டது ஒரு மதமோ அல்லது ஒரு techniqueகோ அல்லது ஒரு theological systemமோ அல்லது ஒரு traditionனோ, conventionனோ அல்ல. நாம் கண்டுகொண்டது ஒரு நபரை, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து என்னும் நபரை.

பொதுவாக, கிறிஸ்தவம் அல்லது கிறிஸ்தவ மதம் என்று சொல்லும்போது, மக்களுடைய மனதிலே அவர்களுடைய கற்பனையிலே, பலவிதமான எண்ணங்கள் வரும். ஒரு கோயில், அதில் சிலுவை, ஞாயிற்றுக்கிழமை திருப்பலி அல்லது ஆராதனை, வருடம் முழுவதும் வருகின்ற பண்டிகைகள், குறிப்பாக பத்து நாட்கள் நடைபெறும் திருவிழாக்கள்போன்ற காரியங்கள் அவர்கள் மனதில் உதிக்கும். இவைகளெல்லாம் கிறிஸ்தவம் என்று மனிதர்கள் நினைப்பதுண்டு. ஆனால், இவைகளெல்லாம் வேதம் கற்பிக்கின்ற அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து போதித்தவை அல்ல.

இந்த முழு வேதாகமம் வலியுறுத்துவது அல்லது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவும், அவருடைய அப்போஸ்தலர்களும், சீடர்களும் வலியுறுத்தியது ஒன்றேவொன்றுதான், அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்கிற நபர்.

“ஒரு நாள் தேவன் நம்மை நியாயந்தீர்க்கும்போது நாம் எவ்வளவு நல்லவர்கள் அல்லது எவ்வளவு கெட்ட வர்கள் என்று பார்ப்பார். நம்முடைய நல்ல செயல்களெல்லாம் தராசின் ஒரு தட்டிலும், நம்முடைய கெட்ட செயல்களெல்லாம் தராசின் இன்னொரு தட்டிலும் வைக்கப்பட்டு எடைதூக்கிப்பார்க்கப்படும். நல்ல செயல்கள் அதிகமாக இருந்தால் நாம் பரலோகத்திற்குப் போவோம்; கெட்ட செயல்கள் அதிகமாக இருந்தால் நரகத்திற்குப் போவோம். இதுவா அதுவா என்று தீர்மானிக்க முடியாது என்றால் உத்தரிக்கிற ஸ்தலத்திற்குப் போவோம். பிறகு என்னுடைய பிள்ளைகள் என்னை நினைவுகூர்ந்து வருடந்தோறும் வைக்கிற பூசையின் விளைவாக நான் உத்தரிக்கிற ஸ்தலத்திலிருந்து பரலோகத்திற்குப் போவேன்,” என்று மக்கள் நினைக்கலாம். இது மனிதனுடைய இயற்கையான இன்னொரு லாஜிக்.

“நான் ஒருநாள் செத்துப்போனபிறகு ஒருவேளை உத்தரிக்கிற ஸ்தலத்திற்குப் போய்விட்டால்…அப்புறம் யாருமே என்னை நினைத்துப் பூசை வைக்கவில்லையென்றால் என்னுடைய கதி என்னவாகும்! எவ்வளவு நாள்தான் இந்த உத்தரிக்கிற ஸ்தலத்தில் இருப்பது!!” என்று நான் சிறுவனாக இருந்தபோது எனக்கு மிகவும் பயமாக இருக்கும். என் சிறுவயதில் இவைகளெல்லாம் என்னுடைய பெரிய பயங்கள். இந்தக் கற்பனைகளையெல்லாம் ஒரு பக்தியான ரோமன் கத்தோலிக்கப் பாரம்பரியத்திலே வளர்க்கப்பட்டவன் என்ற முறையிலே எனக்குப் பெரிய அச்சத்தைத் தரும். “நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் நடத்துகின்ற உபாத்தியாய் இருந்தது,” என்று (கலா. 3:24) அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வதுபோல, இவைகளெல்லாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்திலே என்னை நடத்துகின்ற உபாத்தியாய் இருந்தன. என்னுடைய பக்தியான ரோமன் கத்தோலிக்க வளர்ப்பு என்னை இயேசு கிறிஸ்துவினிடத்தில் நடத்துகின்ற உபாத்தியாக அல்லது ஆசிரியனாக இருந்தது என்று என்னால் சாட்சி பகரமுடியும்.

கிறிஸ்துவிடம் நடத்தும் ஆசிரியன்

இந்துமதமும் ஒரு மனிதனை இயேசு கிறிஸ்துவினிடத்தில் நடத்துகின்ற உபாத்தியாய் இருக்க முடியும். “இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ வேண்டும்,” என்கிற ஒரு அறிவு நமக்கு இருக்கும். ஆனால் அப்படிப்பட்ட ஒரு வாழ்க்கை வாழ்கிற வல்லமையோ அல்லது திராணியோ நமக்கு இருக்காது. அப்போது நாம் தேட ஆரம்பிப்போம். “இப்படித்தான் ஒரு வாழ்க்கை இருக்க வேண்டும் என்று எனக்குத் தெரியும். ஆனால், இப்படி வாழ்கிற எந்த மனிதனையும் நான் சந்தித்ததில்லை. இப்படி வாழ்ந்த ஒரு மனிதன் இந்த மனித வரலாற்றிலே உண்டா?” என்று தேட ஆரம்பிப்போம்.

சந்நியாசிகள், சாமியார்கள், குருக்கள், யோகிகள் ஆகியவர்களைக்குறித்து எச்சரிக்கையாக இருக்கவேண்டும் என்று நான் சொல்லமாட்டேன்; இவர்களை நம்பவே கூடாது என்று நான் சொல்வேன். ஏனென்றால், நடிகர்-நடிகைகளும் அரசியல்வாதிகளும் தங்களுக்குப் பேரும் புகழும் வேண்டும் என்பதற்காகத் தங்களைக்குறித்த உயர்ந்த எண்ணத்தை மக்களிடையே உருவாக்குவதற்காக எவ்வளவு பணம் செலவழிக்கிறார்களோ, அதுபோல பொதுமக்களுக்குமுன்பாகத் தங்களைப் பெரிய மகான்களாகக் காட்டிக்கொள்வதற்காக அவர்களும் அந்த அளவுக்குப் பணம் செலவழிக்கிறார்கள்.

இப்போதெல்லாம Reputation Management Firms இருக்கிறது. “உங்களைப்பற்றி மெய்யோ பொய்யோ சொல்லி, உங்களுக்கு நாங்கள் ஒரு மகா பெரிய imageஐக் கட்டிவிடுவோம். நாங்கள் Twitterஐப் பயன் படுத்துவோம்; Facebookஐப் பயன்படுத்துவோம்; emailஐப் பயன்படுத்துவோம்; எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி உங்களை நாங்கள் பெரியவர்களாக்குவோம்,” என்று செயல்படுகிற நிறுவனங்கள் இருக்கின்றன. ஆனால், இந்த ஆசாமிகளோடு நெருங்கி வாழ்கின்ற மக்களுக்கு அவர்களை நன்றாகத் தெரியும்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவோடு நெருங்கி வாழ்ந்த மக்கள் அவரை எல்லாக் கோணங்களிலும் சோதித்துப்பார்த்தார்கள், அவரை அலசி ஆராய்ந்துபார்த்தார்கள்; பார்த்துவிட்டு, அவருடைய நண்பர்கள், பகைவர்கள் எல்லாரும் அவரைக்குறித்துக் கொடுத்த சான்று என்ன தெரியுமா? “இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை,” (லூக். 23:4) என்று சொன்னார்கள்.

ரோம அரசாங்கத்தின் ஆளுனராகிய பிலாத்து அக்குவேறு ஆணிவேறாக அவரிடத்தில் கேள்வி கேட்டுப் பார்க்கிறான்: கேள்வி கேட்டபிறகு அவனுடைய தீர்மானம், “இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை.” 

அவருடைய எதிரிகளாகிய பரிசேயர்கள் அவரிடத்தில் வந்து, “போதகரே, எந்த மனிதனைக்குறித்தும் உமக்குக் கவலையில்லையென்றும், நீர் உண்மையை உண்மையென்று போதிக்கிறவரென்றும் எங்களுக்குத் தெரியும். ஆதனால் உம்மிடம் ஒரு கேள்வி கேட்கிறோம். இதற்குப் பதில் சொல்லும் பார்க்கலாம். இராயனுக்கு வரி செலுத்தலாமா, செலுத்தக்கூடாதா?” என்று கேட்டார்கள். அவருடைய பதிலைக் கேட்டு அவர்கள் மலைத்துப்போனார்கள்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனாலும், மனிதர்களாலும் எல்லாவிதத்திலும் பரிசோதிக்கப்பட்டு பாவமற்ற ஒரு மனிதர். “என்னிடத்தில் பாவம் உண்டென்று உங்களில் யார் என்னைக் குற்றப்படுத்தக்கூடும்?” (யோவான் 8:46) என்று அவர் கேட்டார். அந்தக் கேள்விக்கு எந்த மனிதனும் முன்வந்து, “நான் உம்மைக் குற்றப்படுத்துகிறேன்.” என்று சொல்லவில்லை. அவருடைய எதிரிகள்கூட, “இவன் தன்னைத் தேவன் என்று சொல்லுகிறான்,” என்று குற்றம் சாட்டித்தான் அவரை சிலுவையில் அறைந்தார்களேதவிர, “இவன் பாவி, இவன் சொன்னது ஒன்று, இவன் செய்தது ஒன்று,” என்று சொல்லி எந்தக் குற்றத்தையும் அவர்மேல் சாட்டமுடியவில்லை.

கிறிஸ்தவம் கிறிஸ்து என்ற நபரைப்பற்றியது

ஆகவே, இந்த முழுவேதாகமம் அல்லது சுவிசேஷம் (நற்செய்தி என்று நாம் சொல்லுவோம்) அல்லது கிறிஸ்தவம் ஆகியவைகளெல்லாம் இயேசு கிறிஸ்து என்கிற ஒரு நபரைப்பற்றியது.

வழக்கமாக நான் பேசுவதற்கு முன்பு ஒரு தலைப்பை சொல்லிவிடுவதுண்டு. அந்தத் தலைப்பை இதுவரை நான் சொல்லவில்லை. சொல்லவேண்டுமென்பதால் சொல்லிவிடுகிறேன். நம்முடைய விசுவாசத்தின் மையம் அல்லது நம் வாழ்வின் மையம் இயேசு கிறிஸ்து என்கிற நபர். 

பொருளற்ற பாரம்பரியமும், பழக்கவழக்கங்களும்

நாம் கூடிவருகிறோம்; இது நம்முடைய வாழ்க்கையின் மையம் அல்ல. நாம் பாடல் பாடுகிறோம், ஜெபிக்கிறோம், பேசுகிறோம்; இவைகளெல்லாம் நம்முடைய வாழ்க்கையின் மையங்கள் அல்ல. இவைகளெல்லாம் இயேசு கிறிஸ்து என்கிற நம்முடைய வாழ்வின் மையத்தோடு இசைந்து, பொருந்தி வருமென்றால் இவைகளில் அர்த்தம் உண்டு, பயன் உண்டு. இந்த இயேசு கிறிஸ்து என்கிற மாபெரும் நபரோடு இவைகளெல்லாம் பொருந்தி வரவில்லையென்றால் அல்லது இசைந்து வரவில்லையென்றால் இவைகள் எதற்கும் அர்த்தமுமில்லை, பயனுமில்லை, இதைச் சொல்வதில் நமக்கு எந்தச் சங்கடமுமில்லை. நாம் ஞாயிற்றுக்கிழமைதோறும் கூடிவருவது இயேசு கிறிஸ்து என்கிற நபரை அறிவதற்கும், அனுபவிப்பதற்கும், நேசிப்பதற்கும், விசுவாசிப்பதற்கும், பற்றிக்கொள்வதற்கும், பின்பற்றுவதற்கும் நமக்கு உதவிசெய்யவில்லையென்றால் ஒருநாளிலே இந்த ஞாயிற்றுக்கிழமை கூட்டத்தை நாம் நிறுத்திவிடுவோம். “நாம் சந்திப்பதையும், தொடர்புகொள்வதையும் நிறுத்திவிடுவோம்,” என்று நான் சொல்லவில்லை. ஞாயிற்றுக்கிழமை கூடுகையை நாம் நிறுத்திவிடுவோம். ஞாயிற்றுக்கிழமை கூடுகை ஒன்றும் சீனாய் மலையிலே கா;த்தரிடத்திலிருந்து நாம் பெற்றுக்கொண்ட கட்டளை இல்லை.

நான் இதைச் சொல்வதற்குக் காரணம் நாம் ஞாயிற்றுக்கிழமை கூடுகையின் எதிரி என்பதற்காக அல்ல. கிறிஸ்தவர்கள் பொதுவாக எதை விட்டாலும் விடுவார்கள், ஆனால் ஞாயிற்றுக்கிழமை கூடுகையை விடமாட்டார்கள்? “ஞாயிற்றுக்கிழமை கோவிலுக்குப் போகலியா நீ? நீ சாவான பாவத்தைக் கட்டிக்கொண்டாய். அதை ஒத்துக்கொள்ளவே முடியாது,” என்று சாதிப்பார்கள்.

நான் ஒரு ரோமன் கத்தோலிக்கனாயிருந்திருக்கிறேன். நான் தேவனை நம்பாத ஒரு வாலிபனானபிறகும்கூட ஞாயிற்றுக்கிழமை பூசையை நான் விடவில்லை. “ஞாயிற்றுக்கிழமைகளிலும் கடன்திருநாட்களிலும் முழுப்பூசை காண்கிறது,” என்ற திருச்சபை கட்டளைக்குப் பயந்து நான் பூசைக்குப் போகவில்லை. மாறாக, அது என்னுடைய சமுதாயப் பழக்கவழக்கம். என்னுடைய உறவினர்கள் வருவார்கள், என்னுடைய நண்பர்கள் வருவார்கள்; அவர்களைப் பார்க்க வேண்டும் என்பதற்காகப் போவேன். கடவுளைச் சந்திப்பதற்காக நான் பூசைக்குப் போகவில்லை. பெற்றோர் கேள்வி கேட்பார்களே என்பதற்காகவும் போகவில்லை அது என்னுடைய பிறவிப் பழக்கவழக்கம். ஞாயிற்றுக்கிழமையானால் கோவிலுக்குப் போகவேண்டும் என்ற மரபு, பாரம்பரியம், பழக்கவழக்கம். கோவிலுக்கு உள்ளே போக வேண்டும் என்ற கட்டாயம்கூட இல்லை. கோவிலுக்குப் பக்கத்தில் சுற்றிச்சுற்றி வந்தால்கூட போதும். ரோமன் கத்தோலிக்க மார்க்கத்திலோ அல்லது சி.எஸ்.மார்க்கத்திலோ வளர்க்கப்பட்ட தேவனுடைய மக்கள் எல்லாரும் இதைக்குறித்து சாட்சி கொடுக்க முடியும். “உண்மையிலே நான் கடவுளைச் சந்தித்தேன் அல்லது சந்திக்கப்போகிறேன்,” என்ற ஒரு நோக்கத்திற்காக ஒன்றும் போவதில்லை. அது நம்முடைய பழக்கவழக்கம். அந்தப் பழக்கம் முறிந்து விட்டதென்றால் எதையோ இழந்துவிட்டதுபோல ஒரு உணர்ச்சி வரும்.

அதைத் தொடர்ந்து அவர்களுக்கு இன்னும் நிறைய பழக்கம் இருக்கும். அன்றைக்குக் கறி வாங்கி குழம்பு வைக்கிறது; அப்புறம் மத்தியானம் சீட்டு விளையாடுறது, சில பேர் அதைவிட அதிகமாகப் போவார்கள். கிறிஸ்துமஸ் அன்றைக்கும் அவர்கள் இதைத்தான் செய்வார்கள். கடவுளை அறிந்துகொள்வதற்காக யாரும் போவதில்லை. அன்றைக்கு எல்லா நாளையும்விட இன்னுங்கொஞ்சம் இறைச்சி, கறியெல்லாம் அதிகமாக எடுத்து குழம்பு வைப்பார்கள். இவைகளை அவர்கள் கிறிஸ்தவம் என்று நினைக்கிறார்கள்.

நான் மிக எளிமையாகப் பேசுகிறேன் என்று நினைக்கிறேன். இதை நான் யாரையும் தாக்குவதற்காகப் பேசவில்லை. அது மனிதர்களுடைய மூடத்தனம். “நீங்கள் அதிகமாக ஆராய்ச்சிசெய்து இதைக் கண்டு பிடித்தீர்களோ!” என்று யாராவது என்னிடம் கேட்டால் யோவான் எழுதின நற்செய்தியை மிக எளிமையாக ஒரு மனிதன் வாசிப்பானென்றால் அது மூடத்தனம் என்று தெரிந்துவிடும். அது ஒன்றும் மூடுதிரையாக இல்லை, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதை மறைத்துப் பேசவில்லை. அவர் பட்டவர்த்தனமாக, வெட்டவெளிச்சமாக, தெளிவாகச் சொல்கிறார்.

யோவான் எழுதின நற்செய்தி முழுவதுமே, “இந்த நபருக்கும் உங்களுக்கும் இடையே இருக்கிற உறவு என்ன என்பதுதான் காரியமேதவிர மற்றபடி மதம் என்ற பெயராலே அல்லது நம்முடைய முன்னோர்களுடைய பாரம்பரியம் என்ற பெயராலே நாம் செய்துவருகின்ற காரியங்களெல்லாம் தேவனுக்குமுன்பாக பொருளற்றவை, அர்த்தமற்றவை, வெறுமையானவை,” என்று பறைசாற்றுகின்றன. தேவனுக்குமுன்பாக இவைகளுக்கு எந்த மதிப்புமில்லை. முன்னோர்களுடைய பாரம்பரியத்தைக்குறித்து மக்கள் பெருமையாகப் பேசுவார்கள். “1527ஆம் ஆண்டு தொடங்கி நாங்கள் ரோமன் கத்தோலிக்கர்களாக இருக்கிறோம் தெரியுமா? புனித சவேரியார் வந்தபோதே நாங்கள்தான் முதன்முதலாகக் கிறிஸ்தவர்களானோம்” என்றும், இந்துக்களாக இருந்தால், “இது எங்களுடைய பாட்டன் பூட்டனெல்லாம் கொடைகொடுத்துக்கொண்டு வருகிற ஆலமரம். அதை விடவே கூடாது, என்ன ஆனாலும் சரி,” என்றும் மக்கள் மிகவும் பெருமைப்படுவதுண்டு.

கிறிஸ்துவோடுள்ள உறவு

இறுதி நாளிலே தேவன் நம்மை ஏற்றுக்கொள்வதும் ஏற்றுக்கொள்ளாததும் நம்முடைய கெட்ட செயல்கள் அதிகமா அல்லது நல்ல செயல்கள் அதிகமா என்பதை வைத்தல்ல. நான் இப்பொழுது சொல்லப்போகிறதை உங்கள் மனதிலே குறித்துக்கொள்ளுங்கள். “தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவைவைத்து, இயேசு கிறிஸ்துவைக்கொண்டு, நீ என்ன செய்தாய்?” என்பது மட்டும்தான் தேவனுடைய நியாயத்தீர்ப்பின் அடிப்படை ஆதாரம். நான் மறுபடியும் சொல்கிறேன், நம்முடைய வாழ்க்கையில் செய்த ஆயிரக்கணக்கான, பத்தாயிரக்கணக்கான நன்மைகளையும் தீமைகளையும்பற்றி ஆண்டவர் நம்மிடத்தில் ஒரு கேள்வியும் கேட்க மாட்டார். “தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவோடு உன்னுடைய நிலை என்ன? தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவோடு உன்னுடைய உறவு என்ன? தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவைக்கொண்டு நீ என்ன செய்தாய் அல்லது தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்கு உன்னுடைய பிரதியுத்தரம் என்ன? உன்னுடைய மாறுத்தரம் என்ன? உன்னுடைய பதில் என்ன?” இந்த ஒன்றேவொன்று தான் தேவன் நம்மைத் தீர்க்கிற, நம்மை நியாயந்தீர்க்கிற, அடிப்படை. இது இந்த முழு வேதாகமத்தினுடைய கூற்று. what did you do or what was your response to Christ, the Son of God?

அவருடைய குமாரனை விசுவாசிக்கிறவனுக்கு தேவன் நித்திய ஜீவனைக் கொடுக்கிறார் என்று யோவான் 3ஆம் அதிகாரம் சொல்லுகிறது. அவருடைய குமாரனைத் தள்ளுகிறவனுக்கு ஆக்கினைத்தீர்ப்பு உண்டு என்று இந்த வேதம் சொல்லுகிறது. இதைச் சொல்லும்போது கிறிஸ்தவர்களல்லாதவர்கள் மிகவும் கோபப்படுவார்கள். இயேசு கிறிஸ்துவைப் புத்தன், காந்தி ஆகியவர்களின் வரிசையிலே இன்னொரு ஃபோட்டோவாகப் போட்டுக்கொள்வதில் அவர்களுக்கு எந்தப் பிரச்சினையும் இல்லை. இயேசு கிறிஸ்து கடவுளர்களுள் ஒருவர் என்பதிலே அவர்களுக்கு எந்தச் சங்கடமும் இல்லை.

கிறிஸ்துவே தேவனின் வெளிப்பாடு

ஆனால், “மனிதர்கள் அறியத்தக்க விதத்தில் தேவன் ஒரேவொரு நபரில்தான் தன்னை வெளிப்படுத்தியிருக்கிறார், அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து; இயேசு கிறிஸ்துவுக்கு வெளியே தேவன் தன்னைப் புலப்படுத்தவில்லை,” என்று சொல்லும்போது அவர்கள் தங்கள் கைகளிலே கல்லெடுத்துக்கொள்வார்கள். இயேசு கிறிஸ்துவுக்கு வெளியே தேவன் தன்னை எங்கும் வெளிப்படுத்தவில்லை. ஒருவன் தேவனைச் சந்திக்கவேண்டுமென்றால் அவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் வரவேண்டும். யோவான் 14ஆம் அதிகாரத்தில் ஆண்டவராகிய இயேசு அதை வெட்டவெளிச்சமாகச் சொன்னார். “என்னாலேயன்றி ஒருவனும் பிதாவினிடத்தில் வரான்” (யோவான் 14:6). உடனே பிலிப்பு அவரை நோக்கி, “நீர் பிதா, பிதா என்று சொல்கிறீரே, எங்களுக்குப் பிதாவைக் காட்டும், அது எங்களுக்குப் போதும்,” என்று சொல்லுகிறார். அதற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்,” என்று பதில் சொன்னார். இது மிகவும் எளிமையான ஓர் உண்மை. இது மிகவும் கவர்ச்சிகரமானதல்ல, இது சுவாரசியமானதல்ல.

எடுத்துக்காட்டாக, சமஸ்கிருதத்திலே பத்து ஸ்லோகங்களை எடுத்துச்சொல்லி, “இவைகளில் சொல்லப்பட்டிருக்கிற நபர் இயேசு கிறிஸ்துதான்,” என்று வாதம் பண்ணுவது மிகவும் சுவையாக இருக்கும் அல்லது சில வரலாற்றுச் சான்றுகளை எடுத்துச்சொல்லி, “ஆகவே, இயேசு கிறிஸ்துதான் உண்மையான இரட்சகர்,”என்று சொல்வது சுவையாக இருக்கும்.

நான் சுவையாக ஒன்றையும் சொல்லவில்லை. ஏனென்றால், சுவையாகச் சொல்லுகிற அளவுக்கு அறிவு எனக்கு இருப்பதாக நான் நினைக்கவில்லை. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து காரியங்களைச் சொல்லி வாதம்பண்ணுவதற்காக நம்மை அழைத்ததாகவும் நான் நினைக்கவில்லை. “இயேசு கிறிஸ்து மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன்,” என்பதை நாங்கள் அறிவோம், வெளிப்பாட்டின்மூலமாகவும் எங்கள் வாழ்க்கையிலும் நாங்கள் அறிவோம். அதை நாங்கள் பிறருக்கும் அறிவிக்கிறோம். யோவான் தன்னுடைய முதல் கடிதத்திலே அப்படி எழுதுகிறார். “எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும், அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவோடும் இருக்கிறது” (1 யோவான் 1:3). “ஆதிமுதலாய் இருந்ததும், நாங்கள் கேட்டதும், எங்கள் கண்களினாலே கண்டதும், நாங்கள் நோக்கிப்பார்த்ததும், எங்கள் கைகளினாலே தொட்டுப்பார்த்ததுமான ஜீவவார்த்தையைக்குறித்து நாங்கள் உங்களுக்கு அறிவிக்கிறோம்” (1 யோவான் 1:1). எந்தப் பொய்யையும் நான் உங்களுக்குச் சொல்லவில்லை. இது நாங்கள் அனுபவித்த இயேசு கிறிஸ்து. இதை நான் மிகவும் தெளிவுபடுத்திவிட்டேன் என்று நினைக்கிறேன்.

நாம் இயேசு கிறிஸ்துவை சுவிசேஷமாக அறிவிக்கிறோம். நாம் இயேசு கிறிஸ்துவை சுவிசேஷமாக வாதம்பண்ணுவதில்லை. We are not called to argue that Jesus Christ is the Savior God manifested in the flesh; We are called to proclaim as a witness. I have seen it, I have heard it, I have touched it that Jesus Christ is truly the Son of God, our God manifested in the flesh. தேவனுடைய குமாரன் என்ற வார்த்தை புதிய ஏற்பாட்டில் பயன்படுத்தும்போது அதற்கு ஒரேவொரு அர்த்தம்தான் உண்டு, தேவன் மனித உருவில் வெளிப்பட்டால் எப்படிப்பட்ட நபராக இருப்பாரோ, அந்த நபர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து.

கிறிஸ்தவன் என்பதின் பொருள்

கிறிஸ்தவனுக்கும் கிறிஸ்தவனல்லாதவனுக்கும் உள்ள ஒரேவொரு வேறுபாடு இதுதான். கிறிஸ்தவன் என்பவன் இயேசு கிறிஸ்துவோடு ஒரு அன்பின் உறவை உடையவன். இயேசு கிறிஸ்துவோடு ஒரு அன்பின் உறவு இல்லாதவன் கிறிஸ்தவன் அல்ல. நான் பிறந்து பத்துநாள் கழித்து என்னுடைய பெற்றோர்கள் ஞானஸ்நானம் கொடுத்த அன்றைக்கு நான் கிறிஸ்தவனாகவில்லை. நான் என்னுடைய பத்தொன்பதாவது வயதில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் என்னுடைய இருதயத்திலிருந்து அன்பு வைத்து, “இவர் மனித உருவில் வந்த தேவன், என்மேல் அன்பு கூர்ந்து எனக்காக மரித்திருக்கிறார், மரித்து உயிர்த்தெழுந்திருக்கிறார்,” என்று அவரை விசுவாசித்த அன்றைக்கு நான் ஒரு கிறிஸ்தவனானேன். அதற்குமுன்புவரை நான் பயங்கரமான பாவியாக வாழ்ந்தேன் என்று நான் சொல்வதற்கில்லை. ஆனால் அதைப்பற்றி தேவன் பொருட்படுத்துவதுமில்லை. “ஆண்டவராகிய இயேசு மனித உருவில் வந்த தேவன்; இவர் எனக்காக மரித்தார், உயிர்த்தெழுந்தார், இன்று உயிரோடிருக்கிறார்; என்னோடு உறவு கொள்ளும்வகையில் உயிரோடிருக்கிறார்,” என்பதை நான் என்றைக்கு என் மனதார ஏற்றுக்கொண்டேனோ, அது உண்மை என்று ஏற்றுக்கொண்டேனோ, விசுவாசித்தேனோ, ஏற்று அவர்மேல் அன்புகூரத் தொடங்கினேனோ, அன்றைக்கு நான் ஒரு கிறிஸ்தவனானேன், அன்றைக்கு நான் தேவனுடைய பிள்ளையானேன்.

நம் எல்லோருடைய சாட்சி இதுவாகத்தான் இருக்கும். இது என்னுடைய சாட்சி மட்டுமல்ல, தேவனுடைய மக்கள் எல்லோருடைய சாட்சி. “இது மிகவும் dogmaticஆ இருக்கிறதே! நீங்கள் எந்தக் காரணகாரியங்களையுமே சொல்லாமல் ‘இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன், அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன்’ என்று சாதிக்கிறீர்கள். நான்தான் கடவுள் என்று பலர் சொல்லலாமே!” என்று இன்னொருவர் சொல்லலாம், இதைப்பற்றி நாம் வாக்குவாதம் பண்ணுவதில்லை.

“இயேசு கிறிஸ்து ஒருவரே மெய்யான தேவனும் நித்திய ஜீவனுமாயிருக்கிறார்,” என்று 1 யோவான் 5ஆம் அதிகாரத்திலே சொல்லப்பட்டிருக்கிறது. மூன்று காரியங்களை நான் சொல்ல விரும்புகிறேன். இந்த மூன்று குறிப்புகளுக்கு ஆதாரமாக ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தை எடுத்துக்கொள்வோம்.

தேவன் மனிதனைப் படைத்தபிறகு, “தோட்டத்தில் உள்ள எல்லா மரங்களின் கனிகளையும் நீ புசிக்கலாம். ஆனால், ஒரேவொரு மரத்தின் கனியை மட்டும் நீ புசிக்கக் கூடாது,” என்று சொன்னார். (அந்த மரத்தை அறிவின் மரம் என்று நாம் சொல்லலாம். நன்மை தீமை அறியத்தக்க விருட்சம் என்று தமிழ் வோதாகம் கூறுகிறது). ஆனால் ஏவாள் அந்த மரத்தைப் பார்க்கிறாள். பார்க்கும்போது அந்த மரத்தை இப்படி வருணிக்கிறாள்: “அப்பொழுது ஸ்திரீயானவள், அந்த விருட்சம் புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும், புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்க விருட்சமுமாய் இருக்கிறது என்று கண்டு, அதின் கனியைப் பறித்து, புசித்து, தன் புருஷனுக்கும் கொடுத்தாள்: அவனும் புசித்தான்” (ஆதி. 3:6).

பிசாசு அதிகமாக தாக்குகிற புத்தகம் ஆதியாகமம். ஏனென்றால், ஆதியாகமம் மனிதனுடைய உண்மையான நிலையை அம்பலமாக்குகிறது. ஆகவே, பிசாசு “இதெல்லாம் ஒரு மனிதனுடைய கற்பனை,” என்று அதை மிகவும் அதிகமாகத் தாக்குவான். இப்போது அதற்கு நான் பதில் அளிக்கப்போவதில்லை. அதற்குப்பதிலாக, இயேசு கிறிஸ்து என்ற நபர் ஏன் மகா மேன்மையானவர், ஒப்பற்றவர், தன்னிகரகற்றவார், ஈடுஇணையற்றவர் என்பதற்கு நான் பதில் அளிக்கப்போகிறேன்.

தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவின்மேல் மனிதர்கள் எல்லாரும் தங்கள் விசுவாசத்தையும், அன்பையும் அல்லது அர்ப்பணத்தையும் அளிக்கவேண்டும் என்று தேவன் எதிர்பார்க்கிறார் என்பதற்கு மூன்று காரியங்களை நான் சொல்கிறேன். உண்மையிலேயே சில சமயங்களிலே வேதத்தைப் புரிந்துகொள்வது கொஞ்சம் கடினம்தான். மிக முக்கியமாக இந்த ஆதியாகமம். ஆனால், பெரும்பாலான கிறிஸ்தவர்கள், “இந்தக் கதைகளெல்லாம் எங்களுக்குத் தெரியும். எங்களுக்கு எல்லாம் தெரியும். நிறுத்துங்க. இதில் எங்களுக்குத் தெரியாதது ஏதாவது இருக்கிறதா என்ன?” என்ற பாணியில் கேட்பார்கள்.

மட்டுப்பட்ட மனிதனின் மனம்

ஒருவன் தெலுங்கு கற்றுக்கொள்ளப் போனான். ஆசிரியர் ஒரு குதிரையைக் காட்டி “இது குர்ரம்” என்று சொன்னார். உடனே மாணவன், “ஐயா, நீங்கள் நிறுத்திக்கொள்ளலாம். எனக்கு தெலுங்கு முழுவதும் தெரிந்துவிட்டது,” என்று பதில் சொன்னான். “என்னப்பா! ஒரேவொரு வார்த்தைதானே சொன்னேன். அப்படியிருக்க நீ எப்படி முழுவதையும் கற்றுக்கொண்டாய்?” என்று ஆச்சரியமாகக் கேட்டார். “ஐயா, எனக்கு எல்லாமே தெரிந்துவிட்டது. குதிரைக்கு குர்ரம், ஆட்டுக்கு அர்ரம், மாட்டுக்கு மர்ரம், கழுதைக்கு கர்ரம். அவ்வளவுதானே!” என்று பதிலுரைத்தான்.

பல சமயங்களிலே நாம் வேதத்தைப்பற்றியும், இயேசு கிறிஸ்துவைப்பற்றியும் சொல்லும்போதுகூட, “எல்லாமே எனக்குத் தெரியும், இயேசு கிறிஸ்துவைப்பற்றி அக்குவேறு ஆணிவேறாகத் தெரியும். என் தாயின் கருவில் உருவாவதற்குமுன்பே எனக்கு எல்லாம் தெரியும். வேதாகமத்திலிருந்து எத்தனை கேள்விகள் கேட்க வேண்டுமென்று சொல்லுங்கள் நான் உங்களால் பதில் கொடுக்கமுடியாத பத்து கேள்விகள் கேட்கட்டுமா?” என்ற தொனியில் கிறிஸ்தவர்கள் பேசுவார்கள். இது சிறுபிள்ளைத்தனமானது.

ஏனென்றால், தேவனுடைய மனதில் உள்ளதை மனிதன் புரிந்துகொள்ளும்வண்ணம் ஒரு மொழியில் தேவன் எழுத முயற்சி செய்கிறார். மனிதன் தன்னுடைய மனதில் உள்ளதை ஒரு எறும்பு புரிந்துகொள்ளும் வண்ணம் எழுத முயற்சி செய்தால் அது எவ்வளவு கடினமான காரியமாக இருக்கும் இல்லையா! என்னதான் மனிதன் தன்னுடைய இருதயத்திலும், மனதிலும் உள்ளதை ஒரு குருவிக்கோ, ஒரு நாய்க்குட் டிக்கோ, ஒரு பூனைக்குட்டிக்கோ, ஒரு எறும்புக்கோ தெரிவிக்க முயற்சி செய்தாலும் அது கடினமான காரியம். பூனைக்குட்டியும், நாய்க்குட்டியும் ஓரளவுக்குப் புரிந்துகொள்ளத்தான் செய்கின்றன. ஆனால், பூனைக்குட்டி, “இவன் மனதில் இருக்கிற எல்லாமே எனக்கு அத்துப்படி,” என்று நினைத்தால் அது தவறு. ஒரு a+bஐக்கூட அவைகளால் புரிந்துகொள்ள முடியாது. Probably that is the most primitive formulae. அன்பு என்னவென்று ஒருவேளை ஒரு நாய்க்குட்டியால் புரிந்துகொள்ள முடியும். ஆனால், மனிதனின் மனதில் உள்ள எல்லாவற்றையும் ஒரு நாய்க்குட்டி புரிந்துகொள்ளும்வண்ணம் சொல்ல முடியாது. ஆனால், “இந்த அன்பை என்னால் புரிந்துகொள்ளமுடிகிறது. அதனால் இந்த மனிதனுடைய மனதிலும், இருதயத்திலும் உள்ள எல்லாவற்றையும் என்னால் புரிந்துகொள்ள முடியும்,” என்று நாய்க்குட்டி நினைப்பதுபோலவே, மனிதர்களும் வேதாகமத்தைப்பற்றியும், இயேசுகிறிஸ்துவைப்பற்றியும் நினைக்கிறார்கள். “பைபிளில் internal contradictions நிறைய இருக்கிறது,iவெநசயெட உழவெ” என்று மனிதர்கள் சொல்வது ஒரு நாய்க்குட்டி, “மனிதனுடைய மனதிலே நிறைய internal contradictions இருக்கிறது,” என்று சொல்வதைப்போன்றது.

தேவன் மனிதனைப் படைத்ததின் நோக்கமும் அல்லது மனிதனுக்காகத் தேவனுடைய நித்திய நோக்கமும், நித்தியத் திட்டமும் ஆதியாகமத்திலே எழுதப்பட்டிருக்கிறது. தேவன் மனிதனைப் படைத்ததின் நோக்கம் என்ன? இது இரண்டு வாக்கியங்களில் விடையளிக்கிற கேள்வி இல்லை. ஒருவர் இப்படிச் சொல்வார். அவருடைP.hd vivaவில் ஒருவர் “Define God” என்று கேட்டாராம். அதற்கு இவர் இப்படிச் சொல்கிறார். “என்னய்யா இது? Define God. Give two examples” என்று சொல்லாத குறைதான். Define mother என்பதை இரண்டு வாக்கியங்களில் வரையறுக்க முடியாது.

தேவன் மனிதனைப் படைத்ததின் நோக்கம் என்னவென்று ஓரளவுக்கு நம்மால் சொல்லமுடியும். “படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக: மனுவை ஏன் படைத்தான்? தன்னை வணங்க,” என்று தமிழில் மக்கள் சொல்வார்கள். தன்னை வணங்குவதற்காகக் கடவுள் மனிதனைப் படைத்தார் என்று சொல்வார்கள். “வணங்கு” என்று சொன்னவுடனே மக்கள் ஒரு உருவப்பொம்மையைச் செய்துவைத்து, அதற்கு முன்னால் சாஷ்டாங்கமாய் விழுந்து, தோப்புக்கரணம் போட்டு, உருண்டுபுரண்டு, அதின்மேல் பாலை ஊற்றி, ஒரு மாலையைப் போட்டு மெழுகுதிரியைக் கொழுத்தி, ஊதுபத்தியைக் கொழுத்தி, கொட்டடித்து, தேங்காய் உடைத்து, பழத்தை வைத்து தடபுடலாக்கிவிடுவார்கள். ஏன்? “படைத்தான் படைப்பெல்லாம் மனுவுக்காக; மனுவை ஏன் படைத்தான்? தன்னை வணங்க என்று அவர் சொல்லிவிட்டாரே! நான் இப்போது அவரை வணங்கிவிட்டேன், வணங்கினபிறகு வெளியே போய் நான் சாராயம் குடிப்பேன், கொள்ளை அடிப்பேன். அவர் கேட்டதை நான் கொடுத்தேனா கொடுக்கவில்லையா?” என்பதுதான் அவர்களைப் பொறுத்தவரை வணக்கம் அல்லது ஆராதனை அல்லது தொழுகை அல்லது worship.

தேவன் மனிதனைப் படைத்ததின் நோக்கம்

நான் மிக விளக்கமாகச் சொல்லப்போவதில்லை. மூன்றே மூன்று குறிப்பை மட்டும் சொல்லிவிடுகிறேன். தேவன் மனிதனை என்ன நோக்கத்திற்காகவும், திட்டத்திற்காகவும் படைத்தார் என்ற கேள்வி தெள்ளத் தெளிவான அல்லது ஒரு முழுமையான பதிலைத் தராது. ஆனால், ஒரு சின்ன hintஐத் தரும். அந்த hintஐவைத்து நீங்கள் யோசித்துப் பார்க்கலாம். 1. ஒன்று, படைக்கப்பட்ட உயிரையல்ல, படைக்கப்படாத ஜீவனை மனிதன் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். அவன் படைக்கப்பட்டவன். எனவே, அவனுக்கு ஒரு மனித உயிர் இருக்கிறது. ஆனால், படைக்கப்பட்ட உயிரை அல்ல, படைக்கப் படாத அல்லது சிருஷ்டிக்கப்படாத (uncreated life) ஒன்றை அவன் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். முதலாவது To have not merely a created life but an uncreated life. 2. இரண்டாவது, படைப்பை அல்ல, படைத்தவரை இவன் அறிந்துகொள்ள வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். இரண்டாவது, Not to know the creation but to know the Creator. 3. மூன்றாவது Not to live by the created resources, but to live by uncreated resources. நான் சொல்லவேண்டிய காரியங்களைச் சொல்லிமுடித்து விட்டேன். இந்த மூன்றும் நாம் வாசித்த ஆதியாகமம் 3ஆம் அதிகாரம் 6ஆம் வசனத்தில் இருக்கிறது.

1. படைக்கப்படாத நித்திய ஜீவனை மனிதன் பெற்றுக்கொள்ள வேண்டும்

ஏதேன் தோட்டத்தில் ஆயிரக்கணக்கான மரங்கள் இருந்திருக்கும் என்று நான் நினைக்கிறேன். மூன்று காரியங்கள் அங்கு எழுதப்பட்டிருக்கின்றன. ஒன்று, அந்த மரத்தின் கனி புசிப்புக்கு நல்லது, இரண்டு, அது பார்வைக்கு இன்பம், மூன்றாவது, அது புத்தியைத் தெளிவிக்கிறது. இந்தக் கனியைச் சாப்பிட வேண்டும் என்ற ஆர்வம் அல்லது அடக்க முடியாத இச்சை இந்த மனிதனுக்கு ஏன் வந்தது? ஏனென்றால், இது புசிப்புக்கு நல்லது. சாத்தான் அவனுக்கு அப்படிப்பட்ட ஒரு hintஐக் கொடுத்தான். “இந்த மரத்தின் கனியைப் புசித்தால் நீங்கள் சாகவே சாகமாட்டீர்கள்,” என்று சொன்னான். “இந்த மரத்தின் கனியைப் புசித்தால் என்றைன்றுக்கும் நீங்கள் உயிரோடு வாழ்வீர்கள்,” என்றுகூட பிசாசு அவர்களை hint பண்ணியிருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். இரண்டாவது, “ஆ! நீங்கள் தேவனைப்போல் மாறிவிடுவீர்கள்.” மூன்றாவது, “உங்களுக்கு மகா பெரிய அறிவு இருக்கும்.” இந்த மூன்றையும் பிசாசு சொல்லியிருப்பான்.

ஒன்று, “சாகாத ஒரு உயிரை நீங்கள் பெறுவீர்கள்.” இந்த நாட்டில் சித்தர்களுடைய பெரிய தேடல் என்னவென்றால் சாகாத உயிர், சாகாவரம். தன் உயிரைப் பாதுகாக்கிறதற்காக மனிதன் எதை வேண்டுமானாலும் செய்வான். ஒருவன் தன் சிநேகிதருக்காகத் தன் உயிரையும் கொடுக்கத் துணிவான் என்று இயேசு கிறிஸ்துவைத்தவிர வேறு எந்த மனிதனும் சாட்சி கொடுக்க முடியாது.

இஸ்ரயேலில் எதிரிகள் எருசலேமை முற்றுகையிட்டபோது தாய்மார்கள் தங்கள் பிள்ளைகளை அறுத்து வெட்டித் தின்றார்கள் என்று வேதத்தில் எழுதியிருக்கிறது. பஞ்சம் அந்த அளவுக்குக் கொடிதாக இருந்தது. ஒருநாள் ஒரு தாய் தன்னுடைய பிள்ளையைக் கொடுக்கிறாள். அடுத்த நாள் இரண்டு பேரும் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். “ஏன் சண்டை போட்டுக்கொள்கிறீர்கள்?” என்று ராஜா அவர்களிடம் கேட்கிறான். அவள், “நேற்று என்னுடைய பிள்ளையை அறுத்து நாங்கள் சமைத்துச் சாப்பிட்டோம். எங்களுடைய உடன்படிக்கையின்படி இன்றைக்கு அவள் தன் பிள்ளையைத் தரவேண்டும். ஆனால், அவள் தரமாட்டேன் என்கிறாள்,” என்று பதில் சொல்லுகிறாள். மெல்லிய பண்பாட்டையுடைய ஸ்திரீகள் தங்களுடைய பிள்ளைகளை அடித்துத் தின்பார்கள். very fine women of tender character, they will kill their children and eat என்று எரேமியாவினுi;டய புலம்பலில் இருக்கிறது (புல. 4:10). அந்த அளவுக்கு இந்த நகரம் பாதிக்கப்பட்டிருக்கிறது. Did you read that it is happening in history?

ஆகவே சாகாத உயிர், என்றென்றைக்கும் இருக்கக்கூடிய உயிர், என்றால் மனிதர்கள் அதற்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள், எதை வேண்டுமானாலும் கொடுப்பார்கள். “இந்தப் பழத்தைச் சாப்பிட்டால் என்றைன்றைக்கும் நீ சாகமாட்டாய்,” என்று சொன்னால் போதும், அந்தப் பழத்தை அவர்கள் கண்டிப்பாகச் சாப்பிடுவார்கள். அது பேயினுடைய பொய். இது புசிப்புக்கு நல்லது; ஏனென்றால் இது எனக்கு என்றைன்றைக்கும் இருக்கக்கூடிய உயிரைத் தரும். ஏன் என்றென்றைக்கும் இருக்கக்கூடிய உயிர் வேண்டும்? ஏனென்றால் உயிர் என்று ஒன்று இருக்கும்வரை இன்புறமுடியும். உயிர் இருக்கிறதால்தான் பல்வேறு இன்பங்களை அவன் பெற்று மகிழ்கிறான். அந்த உயிர் எந்த அளவுக்கு உயர்வான உயிரோ அந்த அளவுக்கு அவர்கள் பெற்று அனுபவிக்கின்ற இன்பங்களும் உயர்வானது.

ஒரு மீனுக்கும் இன்பங்கள் உண்டு. ஒரு பறவைக்கும் இன்பங்கள் உண்டு. விலங்கினங்களுக்கும் இன்பங்கள் உண்டு. மனிதனுக்கும் இன்பம் உண்டு. ஒரு கவிதையைப் படித்து விலங்கினங்கள் இன்புறுவதில்லை. ஆனால், மனிதன் ஒரு கவிதையைப் படித்து இன்புறுகிறான். ஆகவே, எந்த அளவுக்கு அந்த உயிர் உயர்வானதோ, அந்த அளவுக்கு அவன் பெற்றனுபவிக்கின்ற இன்பங்களும் மிகவும்உயர்வானது. ஏன் உயிர் என்று ஒன்று இருக்கவேண்டும்? உயிர் என்று இருந்தால்தான் நாம் இந்த உலகத்திலே இன்புறமுடியும்; இன்பங்களைப் பெற்று அனுபவிக்கமுடியும்;. ஆனால், இன்புறுவதற்கு இந்த உலகத்திலே பல வளங்கள் வேண்டும். சாப்பாடு ஒரு வளம். காற்று ஒரு வளம். எதற்கு நாடுகளெல்லாம் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்?; இவர்களெல்லாம் நீதிக்காக சண்டை போடுகிறார்களா? பெட்ரோல் என்கிற வளத்திற்காக அவர்கள் சண்டைபோடுகிறார்கள்.

உனக்கு சாகாத உயிர் கிடைக்கும். அந்த உயிர் இருந்தால் நீ பல இன்பங்களைப் பெற்று அனுபவிக்க முடியும். புசிப்புக்கு நல்லதும், பார்வைக்கு இன்பமும்–பார்வைக்கு இன்பம், கேட்பதற்கு இன்பம், தொடுவதற்கு இன்பம், மனதிற்கு இன்பம், இருதயத்திற்கு இன்பம். இசை ஒரு பெரிய தொழில். Software industryயிலேயே பெரிய industry gaming. ஒரு game develop செய்து அது விற்காமல் போனது என்று சொல்வதற்கு ஒருவருமே கிடையாது. என்ன game develop செய்தாலும் அதை விளையாடுவதற்கு ஆட்கள் இருக்கிறார்கள்.There are addicts. அதற்கு எத்தனையோ ரூபாய் கொடுத்து வாங்குவதற்குaddicts இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை எல்லாப் புலன்களுக்கும் இன்பம் வேண்டும். எந்தப் புலன்களுக்கும் இன்பம் குறைந்துவிடக்கூடாது.

அப்புறம் இந்த மாபெரும் படைப்பைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்த உலகம் எப்படி உண்டானது, black hole எப்படி உண்டானது, galaxy எப்படி உண்டானது, milky way எப்படி உண்டானது. So that I have to rule out God. பேயினுடைய வாக்குறுதி இதுதானே! உங்களுக்கு அறிவு உண்டாகும். இதற்குப் பெயர் அறிவு விருட்சம். நீங்கள் யாரைப்போல் மாறிவிடுவீர்கள்? தேவனைப்போல் மாறிவிடுவீர்கள். இவைகளையெல்லாம் நான் கற்பனை செய்து சொல்வதாக நினைக்கமாட்டீர்கள். இந்த எண்ணங்கள் அங்கு இருக்கிறதா இல்லையா? சாத்தானுடைய ஆலோசனையில் இந்த எண்ணம் இருக்கிறது. ஆதியாகமம் மூன்றாம் அதிகாரம் ஆறாம் வசனத்திலேயும் இந்த எண்ணம் இருக்கிறது.

ஒன்று, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவன் அல்ல, சிருஷ்டிக்கப்படாத ஒரு ஜீவன் எனக்கு வேண்டும். எனக்கு என்றென்றும் உள்ள ஒரு ஜீவன் வேண்டும். இரண்டு, இந்தப் படைப்பை நான் புரிந்துகொள்ளவேண்டும். மூன்று, தீர்ந்துபோகாத வளங்கள் வேண்டும். இது இந்த முழு மனுக்குலத்தையும் பல்லாயிரம் ஆண்டுகளாக இன்றைக்குவரை ஓட்டிக்கொண்டிருக்கிறது.

தேவன் மனிதனைப் படைத்ததின் நோக்கம்

ஆனால், மனிதனைப் படைத்ததிலே தேவனுடைய நோக்கம் என்னவென்றால் அவன் இந்த சிருஷ்டிக்கப்பட்ட மனித உயிரால் அல்ல, சிருஷ்டிக்கப்படாத ஒரு ஜீவனைப் பெற்று வாழ வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். அந்த சிருஷ்டிக்கப்படாத ஜீவனுக்கு ஜீவன் அல்லது தேவனுடைய ஜீவன் அல்லது தெய்வீக ஜீவன் என்று பெயர். சிருஷ்டிக்கப்படாத ஜீவன் இந்தப் பிரபஞ்சத்திலே ஒன்றேவொன்றுதான் உண்டு. அது தேவனுடைய ஜீவன். தேவனுடைய நோக்கம் மனிதனுக்காக எவ்வளவு உயர்ந்தது என்றால், அவன் வெறுமனே மனிதனுடைய உயிரால் வாழ்வது அல்ல, தேவனுடைய ஜீவனைப்பெற்று அவன் வாழ வேண்டும் என்பது நம்மைச் சிருஷ்டித்த தேவனுடைய நோக்கம், பிதாவினுடைய நோக்கம். ஏன் இப்படிப்பட்ட ஒரு நோக்கத்தோடு அவர் மனிதனை வடிவமைத்தார் அல்லது சிருஷ்டித்தார் என்று எனக்குத் தெரியாது. ஆனால், ஆதியாகமம் முதல் திருவெளிப்பாடுவரை இந்த எண்ணம் இழையோடுகிறது. மிகக் குறிப்பாக புதிய ஏற்பாட்டிலே; அதிலும் மிகவும் குறிப்பாக யோவானுடைய எழுத்துக்களிலே இது இருக்கிறது. “நானோ என் ஆடுகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கவும் அந்த ஜீவன் பரிபூரணப்படவும் வந்தேன்…அவருக்குள் ஜீவன் இருந்தது. அந்த ஜீவன் மனிதருக்கு ஒளியாயிருந்தது” (யோவான் 10:10É 1:4) அல்லது யோவான் இருபதாம் அதிகாரம் கடைசி வசனத்திலே, “இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ளும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது,” (யோவான் 20:31) என்று வேதத்திலே இந்த உண்மை மிகத் தெளிவாக இருக்கிறது.

தேவனுடைய நோக்கம், மனிதன் தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்ளவேண்டும் அல்லது மனிதனுக்கு தேவனுடைய ஜீவனை வழங்க வேண்டும்; மனிதன் தேவனுடைய ஜீவனில் பங்கடைய வேண்டும்; மனிதன் தேவனுடைய ஜீவனில் பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். என்னைப் பொறுத்தவரை, தேவன் ஏன் இப்படிப்பட்ட ஒரு நோக்கத்தை வைத்தார் என்பது amazing, mind boggling. சாதாரணமான மனிதன் தன்னை உண்டாக்கின தேவனுடைய ஜீவனில் பங்கடைய வேண்டுமா, பங்கடைய முடியுமா என்றால் பங்கடைய முடியும். அந்த ஜீவன் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் இருக்கிறது.

தேவனை அறிய தேவனுடைய ஜீவன் வேண்டும்

மனிதன் ஏன் தேவனுடைய ஜீவனில் பங்கடைய வேண்டும் என்று தேவன் திட்டமிட்டார் என்றால், நாம் எந்த ஜீவனை உடையவர்களாக இருக்கிறோமோ, அந்த ஜீவனுடைய மக்களைத்தான் நாம் அறிய முடி யும், அவர்களுடைய அனுபவங்களைத்தான் நாம் பெறமுடியும். ஒரு குருவியினுடைய அனுபவத்தை நாம் பெற முடியுமா? முடியாது. ஏனென்றால், குருவியினுடைய ஜீவன் இருந்தால்தான் குருவியினுடைய அனுபவத்தை பெற முடியும் அல்லது அறிந்துகொள்ள முடியும். அதனுடைய எண்ணங்கள் என்ன, உணர்ச்சிகள் என்ன, குருவியினுடைய உலகத்திலே எப்படிப்பட்ட இன்ப துன்பங்கள் உண்டு என்பதை ஒரு குருவிதான் புரிந்துகொள்ளமுடியும். மனிதனுடைய உலகிலே எப்படிப்பட்ட எண்ணங்களும், இன்பங்களும், துன்பங்களும் உண்டு என்பதை இன்னொரு மனிதன் புரிந்துகொள்ளமுடியும்.

தேவனுடைய உயர்ந்த நித்திய நோக்கம், நித்தியத் திட்டம் என்னவென்றால், மனிதன் வெறுமனே படைக்கப்பட்ட இந்த physical worldயையோ அல்லது biological worldயையோ மட்டுமல்ல, தேவனை அறிந்துகொள்ள வேண்டும். தேவனுடைய எண்ணத்தை, தேவனுடைய மனதை, தேவனுடைய இருதயத்தை, தேவனுடைய வழிகளை, தேவனுடைய குணத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பது தேவனுடைய மிக உயர்ந்த எண்ணம். “இது எப்படி உங்களுக்குத் தெரியும்?” என்று யாராவது கேட்டால், “ஒன்றான மெய்த் தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்,” என்று (யோவான் 17:3) ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார். இது நித்திய ஜீவனுடைய வரையறையல்ல, இது நித்திய ஜீவனுடைய நோக்கம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. ஏன் தேவனுடைய ஜீவனை மனிதர்கள் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்றால், அப்பொழுதுதான் “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அவர்கள் அறிந்துகொள்ளமுடியும்.” தேவனுடைய ஜீவன் இன்றி ஒரு மனிதன் தேவனை அறிந்துகொள்ளமுடியாது அல்லது இயேசு கிறிஸ்துவை அறிந்துகொள்ள முடியாது.

நிக்கொதேமு ஒரு இரவிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைச் சந்திக்க வருகிறார். நிக்கோதேமு ஒரு பக்தியுள்ள யூதன். யூதர்களுக்குள் அவர் ஒரு தலைவன். யூதர்களுக்குள் அவர் ஒரு ஆசிரியர். அவர் இயேசுவிடம், “ரபீ, நீர் தேவனிடத்திலிருந்து வந்த போதகர் என்று அறிவேன். ஏனென்றால் தேவன் ஒரு மனிதனோடு இல்லாவிட்டால் நீர் செய்கிறதுபோல வல்லமையான காரியங்களைச் செய்யமுடியாது,” என்று சொல்லுகிறார் இப்படிப்பட்ட ஒரு உயர்ந்த மனிதனிடத்தில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்கிறார், “நிக்கோதேமு, நீ மறுபடியும் பிறவாவிட்டால் (அல்லது தேவனுடைய ஜீவனை நீ பெறாவிட்டால) தேவனுடைய இராஜ்ஜியத்தை நீ காணவும் மாட்டாய், அதற்குள் நுழையவும்மாட்டாய், அதற்குரிய காரியங்களெல்லாம் உன்னால் புரிந்துகொள்ளவோ, அறிந்துகொள்ளவோ முடியாது.” அவன் நல்ல மனிதன், உயர்ந்த மனிதன், சிறந்த மனிதன். ஆனாலும் தேவனுடைய ஜீவன் இல்லையென்றால், அவன் தேவனுக்குரிய காரியங்களைப் புரிந்துகொள்ளமாட்டான்.

கட்டளைகளின்படியல்ல, ஜீவனின்படி

ஒரு குறிப்பிட்ட சூழ்நிலையில், ஒரு காரியத்தில், மனிதன் இப்படித்தான் வாழவேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்று எப்படி அறிந்துகொள்வது? பத்துக்கட்டளைகள் அல்லது நூறுகட்டளைகள் அல்லது ஆயிரம் கட்டளைகள் கொடுத்தாலும் அது மனிதனுக்கு ஒரு தீர்வாக மாறிவிடமுடியுமா? பத்துக் கட்டளைகள் அல்லது நூறு கட்டளைகள் அல்லது ஆயிரம் கட்டளைகளை எழுதி மோசேக்குக் கொடுத்துவிட்டாலும், நம்முடைய வாழ்க்கையின் எல்லாவிதமான சூழ்நிலைகளையும் இது cover பண்ணமுடியுமா? அவர் ஆயிரம் கட்டளைகள் கொடுக்கலாம். ஆனால், வாழ்க்கையில் பல்லாயிரம் சூழ்நிலைகளின்வழியாய் நாம் போகிறோம். ஒவ்வொரு சூழ்நிலையிலும் தேவன் என்ன செய்ய விரும்புகிறார் என்று can we refer to the law book and find out what the law says? கிறிஸ்தவன் இதைச் செய்யலாமா, செய்யக்கூடாதா என்பதற்கு நாம் நம்முடைய சட்டப்புத்தகத்தை refer பண்ணவேண்டுமென்றால் நாம் கிறிஸ்தவ வாழ்க்கை வாழவே முடியாது. இன்னும் சொல்லப்போனால் கிறிஸ்தவ வாழ்க்கை மிகவும் சோகமான வாழ்க்கையாக மாறிவிடும்.

நம்முடையreference எந்த சட்டப் புத்தகமும் அல்ல. நம்முடைய reference, there is a spontaneous knowledge of God. தேவனுடைய ஜீவன் நமக்குள் இருப்பதால், இந்த இடத்தில் இந்தச் சூழ்நிலையில் இந்தக் காரியத்தில் நான் இப்படித்தான் நடக்கவேண்டும், அப்படி நடக்கக்கூடாது என்று தேவன் விரும்புகிறார் என்ற இயல்பான ஒரு அறிவு தேவனுடைய பிள்ளைகளுக்கு உண்டு. தேவனை அறியும்போது மட்டுமே நாம் தேவனை வெளியாக்கமுடியும்.

2. படைப்பையல்ல, படைத்தவரை அறிய வேண்டும்

படைப்பை அல்ல, படைத்தவரை நாம் அறிய வேண்டும். அறிவதின் ஒரு விளைவாக நாம் தேவனை வெளியாக்குவோம். When we know God, we will express God. 2 கொரிந்தியர் 3ஆம் அதிகாரம் 17, 18ஆம் வசனங்களிலே இவைகள் எழுதப்பட்டிருக்கின்றன. மிகவும் அருமையான வசனம். “கர்த்தரே ஆவியானவர், கர்த்தருடைய ஆவி எங்கேயோ அங்கே விடுதலையுமுண்டு. நாமெல்லாரும் திறந்த முகமாய்க் கர்த்தருடைய மகிமையைக் கண்ணாடியைப்போலக் கண்டு, ஆவியாயிருக்கிற கர்த்தரால் அந்தச் சாயலாகத்தானே மகிமையின்மேல் மகிமையடைந்து மறுசாயலாக்கப்படுகிறோம்.” இந்த வசனத்தில் மனிதன் ஒரு கண்ணாடிக்கு ஒப்பிடப்பட்டிருக்கிறான். நம்முடைய இருதயம் ஒரு கண்ணாடியைப்போன்றிருக்கிறது. அந்த கண்ணாடிக்குமுன்பு பல திரைகள் அல்லது பல முக்காடுகள் இருக்கின்றன. இந்த முக்காடுகள் நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப் பார்க்கமுடியாதவாறு தடுக்கின்றன. ஆனால், எப்போதெல்லாம் நம்முடைய இருதயம் அவரிடத்தில் திரும்புகிறதோ அப்போதெல்லாம் இந்த முக்காடு எடுபட்டுப்போகும். அப்போது நாம் கண்ணாடியைப்போல இயேசுகிறிஸ்துவைக் கண்டு பிரதிபலிப்போம்.

இந்த வசனத்தைப் புரிந்துகொள்வதற்குக் கொஞ்சம் நாம் கவனமாக இருக்கவேண்டும். இதில் object என்ன, mirror என்ன என்பதை நாம் தெளிவுபடுத்திக்கொள்ளவேண்டும். Object மனிதன் அல்ல, Object கிறிஸ்து. மனிதன் ஒரு கண்ணாடி. எப்படி ஒரு கண்ணாடி ஒரு பொருளை நோக்கிப் பார்க்கும்போது, அந்தப் பொருளைப் பிரதிபலிக்குமோ, அதுபோல நம்முடைய இருதயங்கள் இயேசு கிறிஸ்துவை நோக்கிப்பார்க்கும்போது, நாம் அவரைப் பிரதிபலிப்போம்.

நீங்கள் இதை யோசித்துப் பாருங்கள். எந்த அளவுக்கு நாம் கிறிஸ்துவை அறிந்துகொள்கிறோமோ அந்த அளவுக்கு நாம் அவரை வெளியாக்குவோம். கிறிஸ்துவை நாம் சிறிதளவு அறிந்திருந்தால், சிறிதளவு வெளியாக்குவோம். சற்று அதிகமாக அறிந்திருந்தால் நாம் அதிகமாக வெளியாக்குவோம். இந்த அறிவு கல்லூரியிலோ, பள்ளியிலோ கற்ற அறிவு அல்ல, நூல்நிலையத்தில் புத்தகத்தைப் படித்து நாம் பெறுகிற அறிவு அல்ல. நம்முடைய அனுபவ வாழ்க்கையில் பல்வேறு சூழ்நிலைகள் வழியாய் நாம் போகும்போது, ஒரு உயிரோட்டமான விதத்திலே spontaneousஆகin a living way we come to know this is God’s heart; this is the character of God, this is the character of Lord Jesus Christ.

3. படைக்கப்பட்ட வளங்களால் அல்ல, படைக்கப்படாத வளங்களால் வாழ்தல்

மூன்றாவது, படைக்கப்பட்ட வளங்களால் அல்ல, படைக்கப்படாத வளங்களைக்கொண்டு மனிதன் வாழ வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். எனக்கு ஒரு உயிர் இருக்கிறது. அந்த உயிரைவைத்து நான் இந்த உலகத்தைப் புரிந்துகொள்ளவேண்டும். இந்த உயிர் இன்புறுவதற்கும், இந்த உயிரைப் பாதுகாப்பதற்கும் எனக்குப் பல வளங்கள் வேண்டும். என்ன வளங்கள் வேண்டும்? எனக்கு உணவு வேண்டும், காற்று வேண்டும், தண்ணீர் வேண்டும், பணம் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும், அல்லது சில உறவுகள் வேண்டும். இதெல்லாம் இருந்தால் இந்த உயிர் வாழ்க்கை மிகவும் இன்பமாக இருக்கும்.

அதுதான் எல்லாப் பாவங்களின் பின்னணி. ஒரு குறிப்பிட்ட பொருள் அல்லது காரியம் கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காகத்தான் மனிதன் பாவம் செய்கிறான். கொள்ளையடிப்பது எதற்காக? பொருள் வளங்கள் கிடைக்காமல் போய்விடுமோ என்பதற்காகக் கொள்ளையடிக்கிறார்கள். கொள்ளையடிப்பதாக இருந்தாலும் சரி, அல்லது கொலைசெய்வதாக இருந்தாலும் சரி, “குறிப்பிட்ட இந்த வளம் எனக்குக் கிடைக்காமல் போய்விடுமோ! அதனால் இந்த வளத்தை, resource, எப்படியாவது நான் பெற்றுக்கொள்ள வேண்டும்,” என்பதுதான் எல்லாப் பாவங்களுக்கும் பின்புலம்.

ஒரு சகோதரன் இப்படிச் சொல்லி நான் கேள்விப்பட்டிருக்கிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை ஒரு விதத்தில் அறியாததன்மைதான் எல்லாப் பாவத்திற்கும் காரணம்.Behind every sin there is some aspect of Christ which we have not known. If only I know Christ in this aspect, I will not make the sin.

வனாந்தரத்தில் மன்னா

ஒரு எடுத்துக்காட்டு சொல்கிறேன். இஸ்ரவேல் மக்கள் நாற்பது ஆண்டுகள் வனாந்தரத்திலே நடந்து வந்தார்கள். ஒவ்வொரு நாளும் தேவன் அவர்களுக்கு ஒரே விதமான உணவைத்தான் கொடுத்தார். ஒரே விதமான உணவை நாற்பது ஆண்டுகள் சாப்பிட்டால் எப்படியிருக்கும் என்று நாம் பரீட்சித்துப்பார்க்கவே வேண்டாம். ஒரே விதமான உணவை மூன்று நாட்கள் கொடுத்துப் பாருங்கள். மூன்று நாள் சிற்றுண்டியாக இட்லி மட்டும் கொடுத்துப்பாருங்கள். அந்த வீடு எப்படி இருக்கும் தெரியுமா? இஸ்ரவேல் மக்களை மிகவும் தரக்குறைவாகப் பேசக்கூடாது. நாம் குறைந்த பட்சம் இருபத்தோரு நாட்களாவது அந்த மாதிரி சாப்பிட்டுப் பார்த்துவிட்டு அதன்பின் நாம் பேசலாம்.

அவர்கள் முறுமுறுக்க ஆரம்பித்தார்கள். That is very natural. It is monotonous food. “எங்களுக்கு வேறு ஒரு இன்பமான, சுவையான உணவு வேண்டும்,” என்று கேட்டார்கள். ஆனால், தேவன் அவர்களுக்குச் சுவையான, விதவிதமான உணவுகள் கொடுக்காததற்குக் காரணம் என்னவென்று உபாகமம் 8ஆம் அதிகாரம் 4ஆம் வசனத்திலே எழுதியிருக்கிறது. “மனிதன் அப்பத்தினால் மட்டுமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும்” என்னுடைய வியாக்கியானம் “தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற கிறிஸ்துவினுடைய ஒவ்வொரு அம்சத்தாலும் அவன் பிழைப்பான், வாழ்வான் என்பதை நீங்கள் அறிந்துகொள்ளும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் அவர் உங்களைப் போஷித்தார்.”* அந்த மரம் புசிப்புக்கு நல்லது; பார்வைக்கு இன்பமானது; எனக்கு இன்பத்தைத் தரவல்லது. ஆனால், அந்த மரம் தரவல்ல இன்பத்தைவிட பல கோடி மடங்கு இன்பம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் உள்ளது. இதற்கு நிரூபணம் யோவான் 6ஆம் அதிகாரம்.

இயேசு எல்லா நன்மைகளின் மெய்

அந்த அதிகாரத்தை நீங்கள் நன்றாக வாசித்துப் பாருங்கள். “நானே வானத்திலிருந்து இறங்கி வந்த உணவு… நானே வெளிச்சம்… நானே மேய்ச்சல்…நானே தண்ணீர்…நானே சுவாசம்… நானே ஜீவன்,” என்று ஆண்டவராகிய இயேசு சொல்கிறார். எந்த ஒரு மனிதனாவது “நானே ஜீவன், நானே வழி, நானே சத்தியம், நானே சுவாசம், நானே காற்று, நானே ஒளி,” என்று சொல்லியிருந்தால் ஒன்று அவன் பைத்தியக்காரன் அல்லது அவன் கர்வம் பிடித்தவன். இந்த நபர் கடவுள் இல்லை. ஆனால், அவன் இப்படிப் பட்ட வார்த்தைகளைப் பேசுகிறானென்றால், நான் இரண்டே இரண்டு முடிவுக்குத்தான் வருவேன். ஒன்று இவன் ஜீவனோ வழியோ இல்லை. ஆனால் பைத்தியத்திலே தான் ஜீவனும் வழியும் சத்தியமும் என்று பேசுகிறான் என்று முடிவுக்கு வருவேன் அல்லது இப்படி கர்வம் பிடித்த ஒரு மனிதனை நான் பின்பற்றக்கூடாது என்று தீர்மானிப்பேன்.

பலவீனத்தில் பலம்

உண்மையிலேயே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் உள்ள சிருஷ்டிக்கப்படாத வளங்களால் தேவனுடைய மக்கள் வாழமுடியும். 2 கொரிந்தியர் 12ஆம் அதிகாரம் 9ஆம் வசனம் தேவனுடைய மக்கள் எல்லோருக்கும் தெரியும். “ஒரு முள் என்னுடைய சரீரத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அந்த முள் என்னைக் குட்டும் சாத்தானுடைய தூதனாயிருக்கிறது,” என்று பவுல் சொல்கிறார். “இந்த முள் என்னை விட்டு நீங்கும்படி நான் கர்த்தரிடத்தில் மூன்றுதரம் ஜெபித்தேன். அவர் எனக்குப் பதில் கொடுத்துவிட்டார். என் கிருபை உனக்குப் போதும்; பலவீனத்தில் என் பலன் பூரணமாய் விளங்கும்.” 

என்னைப் பொறுத்தவரை இதெல்லாம் பதிலேயில்லை. “முள்ளைப்பற்றி என்ன சொல்லுகிறீர்? இந்த மாதிரியெல்லாம் பேசாதேயும். முள்ளை எடுப்பீரா எடுக்கமாட்டீரா? ஆம் அல்லது இல்லை என்று சொல்லும்,” என்று நாம் தேவனிடத்தில் எதிர்பார்க்கக்கூடும். தேவன் நாம் எதிர்பார்ப்பதுபோல், நமக்கு ஏற்றாற்போல் ஆட வேண்டும் என்று நாம் எதிர்பார்க்கிறோம். ஆனால் தேவனுடைய பதில்களெல்லாமே எப் ழுதுமே அப்படியிருக்காது. பல்கலைக்கழகத் தேர்வு வினாத்தாள்களில் இருப்பதுபோல் கேள்வி கேட்டு பதில் சொல்ல முடியாது. வினாத்தாள்களில் இடம் விட்டிருப்பார்கள். அதில் பதில் எழுதினால் போதும். அதுபோல நாம் தேவனுக்குக் கோடுபோட்டுக் கொடுத்து, கோடு போட்ட இடத்தில்தான் எழுத வேண்டும் என்று நாம் அவரை நிர்ப்பந்திக்க முடியாது. தேவன் நம் கேள்வித்தாள்களையும், பதில்தாள்களையும் தள்ளிவைத்துவிடுவார். அவர் பதில் தருவார். ஆனால் நாம் கோருவதுபோல் தரமாட்டார். ஏனென்றால் அவர் தேவன்.

“என் கிருபை உனக்குப் போதும். உன் பலவீனத்திலே என் பலன் பூரணமாய் விளங்கும்.” இதுபோன்ற முரண்பாட்டை இந்த முழு வேதாகமத்தில் வேறு எங்கும் இல்லை. அது எப்படி பலவீனத்திலே பலன் விளங்கமுடியும்? பவுலுடைய இருதயம் எப்படிப்பட்டது பாருங்கள். “ஆகவே, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் களிகூர்ந்து, மேன்மைபாராட்டுகிறேன்.” இந்த வசனத்தை நான் இன்றுவரை புரிந்துகொள்ளவில்லை. என்னால் நம்பமுடியவில்லை. ஒன்று பவுல் பொய் சொல்கிறார்; இயேசு கிறிஸ்துவுக்காகப் பொய்ச்சாட்சி சொல்கிறார் அல்லது பவுல் இருந்த நிலைமைக்கு அல்லது தளத்திற்கு நான் இன்னும் வரவில்லை. இரண்டாவதைத்தான் நான் செய்யவேண்டும் என்று நான் நினைக்கிறேன். பவுல் பொய்ச்சாட்சி சொல்லவில்லை. ஏதோ ஒரு நிலைமையில் அல்லது ஒரு மண்டலத்தில், உண்மையாகவே என்னிடத்தில் பலவீனமும் இருக்கிறது. ஆனால் அவருடைய கிருபை எனக்குப் போதுமானதாகவும் இருக்கிறது என்பது உண்மை. தேவனுடைய மக்கள் எல்லாரும் அப்படிப்பட்ட தளத்தில்தான் வாழவேண்டும்.

இயேசு என்ற நபரே நம் நற்செய்தி

ஆகவே, கிறிஸ்தவம் அல்லது சுவிசேஷம் என்பது ஒரு மதத்தைப்பற்றியதல்ல. அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்கிற நபரைப்பற்றியது. அந்த நபரோடு என்னுடைய உறவு என்ன, இந்த நபரைப்பற்றி நீ என்ன சொல்கிறாய் என்பதுதான் சுவிசேஷம். இந்த நபர் நம்முடைய நம்பிக்கைக்கும் நம்முடைய விசுவாசத்திற்கும் நம்முடைய அர்ப்பணத்திற்கும் நம்முடைய அன்பிற்கும் He is worthy. There is only one person who is worthy of our trust, faith, love and consecration, the Lord Jesus Christ. If this person is not worthy, I don’t think anyman in the history of mankind is ever of worthy of our devotion.

இரண்டாவது, தேவன் மனிதனை சிருஷ்டித்ததிலே அவருடைய நோக்கம் இது. அதை மூன்று குறிப்புகளாகச் சொல்லலாம். 1. ஒன்று, சிருஷ்டிக்கப்பட்ட ஜீவனால் அல்ல, மாறாக சிருஷடிக்கப்படாத ஜீவனாகிய தேவனுடைய ஜீவனை அவன் பெற்றுக்கொள்ளவேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். 2. இரண்டாவது, சிருஷ்டிப்பை அறிந்துகொள்ளவேண்டும் என்பதல்ல, சிருஷ்டிகரை அறிந்து, அவரை வெளியாக்கவேண்டும் என்பது தேவனுடைய நோக்கம். அந்த நோக்கத்திற்காகவே அவருடைய ஜீவனை, நமக்கு அவர் அருளியிருக்கிறார். 3. மூன்றாவது சிருஷ்டிகரை அறிவது என்பது சிருஷ்டிக்கப்பட்ட வளங்களைக்கொண்டு வாழ்வது அல்ல, ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவில் உள்ள பரம வளங்களால் தேவனுடைய மக்கள் வாழவேண்டும் என்பது அவருடைய நோக்கம். இயற்கையான வளங்களால் அல்ல, கிறிஸ்துவில் உள்ள பரம வளங்களால் வாழமுடியும் என்று நிரூபிப்பதே விசுவாசியின் வாழ்க்கை. இயற்கையான வளங்களால் அல்ல, கிறிஸ்துவில் உள்ள அளவற்ற boundless, unlimited, infinite வளங்களால்…எபேசியர் 3ஆம் அதிகாரம் 8ஆம் வசனம் அது. The unsearchable riches of Christ. கிறிஸ்துவின் அளவற்ற, ஆராய்ந்துமுடியாத, எல்லையற்ற, மட்டற்ற வளங்களால் வாழமுடியும் என்று நிரூபிப்பதே விசுவாசியின் வாழ்க்கை.

குமாரனோடு ஐக்கியம்

நாம் இப்பேர்ப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்காக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவால் அழைக்கப்பட்டிருக்கிறோம். இப்பேர்ப்பட்ட வாழ்க்கை வாழ்வதற்காக ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல் நம்முடைய விசுவாசத்தையும், அன்பையும் வைத்திருக்கிறோம். 1 கொரிந்தியர்1ஆம் அதிகாரம் 9ஆம் வசனம் இப்படிக் கூறுகிறது, “தம்முடைய குமாரனோடு ஐக்கியமாயிருப்பதற்கு உங்களை அழைத்த தேவன் உண்மையுள்ளவர்’ God is faithful who has called you into the fellowship of His Son. அப்படியென்றால் என்னவென்று தெரியுமா? அவருடைய குமாரனோடு ஐக்கியமாய் இருப்பதென்றால், அவருடைய குமாரன் என்னவாக இருக்கிறாரோ அவை எல்லாவற்றிலும் நாம் பங்குபெறுவதற்குப் பேர்தான் குமாரனோடு நாம் கொண்டுள்ள ஐக்கியம். All that Christ is, all that Christ has, all that Christ has accomplished God has called us to participate, to partake. And that verse says God is faithful. அவர் எதற்காக நம்மை அழைத்தாரோ, அதை நம்முடைய வாழ்க்கையிலே நிறைவேற்றுவதற்கு உண்மையுள்ளவராயிருக்கிறார். நாம் உண்மையற்றவர்களாயிருக்கலாம், பலவீனர்களாயிருக்கலாம். ஆனால், தேவன் நம்மை என்ன நோக்கத்திற்காக இந்த உலகத்தைவிட்டு அழைத்தாரோ, அதை தம்முடைய உண்மையினாலே நிறைவேற்றுவார். தேவனுடைய மக்கள் என்ற முறையில், கிறிஸ்தவர்கள் என்ற முறையிலே பல வேளைகளிலே நம்முடைய நிலைமை எப்படியிருக்குமென்றால் we don’t belong to this world at all. We just cannot go along with this world. அதற்காக வேண்டுமென்று நாம் நம்மை நூதனமாய்க் காட்டிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. எல்லாரும் வண்ண உடை உடுத்துகிறார்கள் என்றால் நாங்கள் காவிதான் உடுத்துவோம் என்றோ அல்லது வெள்ளைதான் போடுவோம் என்றோ அல்லது எல்லாரும் நல்ல முடி வைத்துக்கொண்டார்களென்றால் நாங்கள் மொட்டைதான் அடிப்போம் என்று வேண்டுமென்றே நம்மை நூதனமாகக் காட்டிக்கொள்வதில்லை. அப்படி நாம் காட்டிக்கொள்கின்ற மக்கள் அல்ல.

The way we live we know that we don’t belong to this world. God’s ways are completely different from the ways of this world. But we know God fills our heart with such a joy that no man, no woman, in the world can ever experience. இதற்கு ஆதாரமாய் நாம் சங்கீதத்திலே அடிக்கடி ஒரு வசனத்தைக் காட்டுவோம். “அவர்களுக்குத் தானியமும் திராட்சை ரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப் பார்க்கிலும் அதிகமான சந்தோஷத்தை என் இருதயத்தில் வைத்தீர்” (சங். 4:7). That is God’s promise that He will fill our heart with a joy that the people of the world can not even imagine. It is not a false promise just to deceive us for the time being so we will be attracted to follow the Lord. But he said It is a promise of our Father Who is faithful to keep the promise. நம்மை அவருடைய குமாரனோடு ஐக்கியமாயிருப்பதற்கு அழைத்த நம் முடைய தந்தையினுடைய வாக்குறுதி. இந்த வாக்குறுதியை நிறைவேற்ற அவர் உண்மையுள்ளவராயிருக்கிறார்.

இதை முடிக்கும்போது, ஆகவே நீங்கள் இதைச் செய்யுங்கள், அதைச் செய்யுங்கள் என்று நான் எதையும் உங்களைக் கேட்கவில்லை. I would say let us relax in such a calling and faithfulness of our Father. செய்தி முடிக்கும்போது. ஆகவே நீங்கள் எல்லாம் இதைச் செய்தாக வேண்டும் என்று எல்லாச் செய்தியையும் முடிக்க வேண்டிய அவசியமில்லை. நீங்கள் ஒன்றும் செய்யவேண்டாம். நம்முடைய தந்தையினுடைய இப்பேர்ப்பட்ட அழைப்பிலும், இப்பேர்ப்பட்ட உண்மையிலும் நாம் இளைப்பாறுவோமாக. ஆமென்!