Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் தேவனுடைய ஆதி நோக்கம்

Unedited transcript of a message spoken in September 2015 in Chennai 

By Sakaya Milton Rajendram

இன்றைக்கு நான் நடைமுறைக்குரிய காரியம் ஒன்றைப் பேசப்போவதில்லை. மிகவும் நேரடியாக நடைமுறையோடு தொடர்பில்லாத ஒரு காரியத்தைப்பற்றிப் பேசப்போகிறேன். புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் தேவனுடைய ஆதித் திட்டம், God’s Original purpose in the light of the New Testament. இது மிகவும் நடைமுறைக்குரிய காரியம் இல்லை. உறவுகள், சிலுவையைச் சகிப்பது, பிள்ளைகளை வளர்ப்பது - இவைகளெல்லாம் மிகவும் Intensely Practical matters.

தேவனுக்கு ஒரு ஆதித் திட்டம் உண்டு. In the fullness of times that original purpose will be carried out in full. Therefore, it is also the ultimate purpose. This is God’s original purpose and Ultimate purpose. தேவனுடைய ஆதித் திட்டமும் இதுதான். தேவனுடைய இறுதித் திட்டமும் இதுதான். இந்த ஆதித் திட்டத்தை அவர் காலங்கள் தோன்றுவதற்குமுன்பே வைத்திருந்தார். காலங்கள் முடிந்தபிறகு அது நிறைவேறியிருக்கும். ஆகவே, இதற்கு நித்தியத் திட்டம் அல்லது நித்திய நோக்கம் என்று பெயர். This is God’s eternal purpose, God’s original Purpose, God’s ultimate purpose.

1. ஆதியாகமத்தில் தேவனுடைய திட்டம்

தேவனுடைய ஆதித் திட்டம் என்றால் என்னவென்பதை ஆதியாகமம் 1, 2, 3 ஆகிய அதிகாரங்களிலே நாம் நிழலாகப் பார்க்க முடியும். நிழலாக என்றால், எல்லாவற்றையும் வெட்டு ஒன்று துண்டு இரண்டுபோல பட்டவர்த்தனமாக, பளிச்சென்று அதில் நாம் பார்க்க முடியாது. ஆனால், “தேவனுடைய ஆதி நோக்கம் என்ன, ஆதித் திட்டம் என்ன,” என்பதை நிழலாக அல்லது உருவகமாக ஆதியாகமத்தில் முதல் மூன்று அதிகாரங்களில் நாம் பார்க்க முடியும். “தேவன் தம்முடைய சாயலாக மனுஷனைச் சிருஷ்டித்தார், அவனைத் தேவசாயலாகவே சிருஷ்டித்தார்,” என்று ஆதியாகமம் 1ஆம் அதிகாரம் 27ஆம் வசனம் கூறுகிறது. இது மிக முக்கியமான வசனம். God created man in His image and His Likeness. ஏறக்குறைய இது எல்லா மனிதர்களுக்கும் தெரியும். மனிதனுக்குத் தேவனுடைய சாயல் உண்டு. இதை வெவ்வேறு மக்கள், வெவ்வேறு தத்துவ ஞானிகள் அல்லது வெவ்வேறு மதவாதிகள், வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்வார்கள். தேவன் மனிதனை அவருடைய சாயலிலே படைத்தார்.

சர்வ சிருஷ்டிக்கும் முதற்பேறானவர்

ஆனால், நான் முதலாவது சொன்னதுபோல புதிய ஏற்பாட்டின் வெளிச்சத்தில் நாம் ஆதியாகமத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆதியாகமத்தின் வெளிச்சத்திலும் புதிய ஏற்பாட்டைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆனால், புதிய ஏற்பாடு மிக வெளிச்சமாக இருக்கும். அதில் உருவகமாகவோ, மங்கலாகவோ, கருகலாகவோ இல்லை. திட்டவட்டமாக, தீர்க்கமாக புதிய ஏற்பாட்டில் எழுதியிருக்கும்.

அடுத்ததாக கொலோசெயர் 1ஆம் அதிகாரத்திலே வாசிக்கிறோம். இய‍ேசு கிறிஸ்துவைப்பற்றி கொலோசெயர் 1ஆம் அதிகாரத்தில் ஒரு பாடல் இருக்கிறது. இந்தப் பாடல் இப்படி ஆரம்பிக்கிறது. “He was the firstborn among the creation. அவர் சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.” He was the firstborn in the Creation. “அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்.” (கொலோசெயர் 1:15). இவைகளை வாசிக்கும்போது பொதுவாக நாம் நிறுத்தி, நிதானமாக வாசிப்பதில்லை. ஏனென்றால், இது புரிந்துகொள்வதற்கு கொஞ்சம் அரிதாக இருக்கும்.

மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர்

அடுத்து, He was the firstborn from among the dead. “அவரே ஆதியும் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறுமானவர்” (கொலோசெயர் 1:18) என்றும் அங்கிருக்கிறது. சிருஷ்டிப்பின் முதற்பேறானவர் என்றும் அங்கிருக்கிறது. மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர் என்றும் அங்கிருக்கிறது. மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர் என்றால் நமக்குப் புரியும். ஒரு மனிதன் மரணத்தினூடாகச் சென்று, மரணத்தை வென்று, மரணத்திலிருந்து வெளிவந்தான் என்றால், அந்த முதல் மனிதன் நம் ஆண்டவராகிய இய‍ேசு கிறிஸ்துவே. தேவன் என்ற முற‍ையில் இல்லை, மனிதன் என்ற முறையில். அதனால்தான் சொன்னேன். ஒரு மனிதன் மரணத்தினூடாய்ச் சென்று, மரணத்தைப் bypass பண்ணியில்லை, “முடிந்தால் இந்த மனிதனை நீ பிடித்து வைத்துக்கொள் பார்க்கலாம்,” என்று மூன்று நாள்கள் மரணத்திற்கு வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. அப்போஸ்தலர் இரண்டாம் அதிகாரத்தில் இருக்கிறது, “மரணக்கட்டுகள் அவரைப் பிடித்து வைத்துக்கொள்ள முடியவில்லை.”  இந்த மனிதனைப் பிடித்துவைத்துக்‍கொள்ளலாம் என்று மூன்று நாள் மரணம் முயற்சி செய்தது. இயேசு கிறிஸ்துவைப் பிடித்துவைத்துக்கொள்வதற்கு, எந்தப் பிடியும் மரணத்திற்கு அகப்படவில்லை. ஏனென்றால், ஆண்டவராகிய இய‍ேசு கிறிஸ்து ஒருமுறை சொல்கிறார், “இந்த உலகத்தின் அதிபதி வருகிறான், அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை. அவன் hold பண்ணுவதற்கு, there is no ground in me.” அந்த உலகத்தின் அதிபதியினுடைய ultimate weapon மரணம். அவன் மரணத்தின் அதிபதி என்று எபிரேயர் இரண்டாம் அதிகாரத்தில் வாசிக்கிறோம். அவனுடைய ultimate weapon மரணம். அந்த மரணமும் அந்த மனிதரைப் பிடித்துவைக்கமுடியவில்லை. ஆகவே, அவர் மரித்தோரிலிருந்து எழுந்த முதற்பேறானவர். கிறிஸ்தவ விசுவாசத்தின் ஆதாரங்களில் ஒன்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து உயிர்த்‍தெழுந்தார். அல்லேலூயா!

சிருஷ்டிப்பின் முதற்பேறானவர்

ஆனால், அவர் சிருஷ்டிப்பின் முதற்பேறானவர் என்றால் என்ன பொருள்? இது நமக்குப் புரிவது கொஞ்சம் கடினம். He was the firstborn of the creation. நமக்குத் தெரிந்து ஆதாம்தான் சிருஷ்டிப்பின் முதற்பேறு. ஆதாம்தான் படைக்கப்பட்ட முதல் மனிதன். அப்படியானால், கிறிஸ்துதான் படைப்பில் முதல் The firstborn என்று எப்படிச் சொல்ல முடியும் என்றால், தேவன் கடந்த நித்தியத்திலே படைப்பு என்று ஒன்று இல்லாதபோது என்று வைத்துக்கொள்வோம். அவர் படைப்பைப்பற்றிச் சிந்தித்தபோது, அவருடைய முதல் படைப்பு யார் என்றால் கிறிஸ்து. தேவன் படைப்பிலே பங்குபெற வேண்டும் என்று தீர்மானிக்கிறார். God decided to partake of the creaturehood. எபிரேயர் 2ஆம் அதிகாரத்திலே இதை நாம் வாசிக்கிறோம். “ஆதலால், பிள்ளைகள் மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவர்களாயிருக்க, அவரும் அவர்களைப்போல மாம்சத்தையும் இரத்தத்தையும் உடையவரானார்; மரணத்துக்கு அதிகாரியாகிய பிசாசானவனைத் தமது மரணத்தினாலே அழிக்கும்படிக்கும், ஜீவகாலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைபண்ணும்படிக்கும் அப்படியானார்.” அந்த எண்ணம் அதுதான். He partook of flesh and blood. இந்தத் தீர்மானம் எப்போது எடுக்கப்பட்டது என்றால், creation அல்லது படைப்பு என்பதைப்பற்றி தேவன் சிந்தித்தபோதே இந்தத் தீர்மானத்தை எடுத்துவிட்டார்.

தேவனுடைய படைப்பிலே மாம்சமும், இரத்தமும் படைக்கப்பட்டது. படைக்கப்படுவது ஒரு நாளிலே தோன்றும், படைப்பு ஒரு நாளிலே முடிவுக்கு வரும். அவர் வானங்களை ஒரு திரையைப்போல் சுருட்டுவார் என்று எழுதியிருக்கிறது. நாம் பார்க்கிற படைப்பு, எத்தனை Galaxies, எத்தனை milky waysஆக இருந்தாலும் சரி, அது யுகயுகமாய் இருக்கும் என்று எந்த உத்தரவாதமும் இல்லை.

1. கிறிஸ்து தேவனுடைய வரைபடம்

ஆக, தேவனுடைய முதல் எண்ணம், தேவன் படைப்பிலே பங்குபெறுகிறார். This is mind boggling. தொடக்கமும் முடிவும் இல்லாத தேவன் ஒரு தொடக்கமும், முடிவுமுள்ள ஒரு படைப்பிலே எப்படி பங்குபெற முடியுமென்றால் எபிரேயர் 2ஆம் அதிகாரத்திலே அந்த எண்ணம் இருக்கிறது. God decided to partake of flesh and blood.

யோவான் 1ஆம் அதிகாரத்திலே ஒரு ஆணித்தரமான வாக்கியம், The word became flesh. “அந்த வார்த்தை மாம்சமானது.” 1 தீமோத்தேயு 3ஆம் அதிகாரம் 16 ஆம் வசனம் சொல்கிறது, “Great is the mystery of Godliness, who was manifested in the flesh. God was manifested in the flesh.” “தேவ பக்திக்குரிய இரகசியமானது, யாவரும் ஒப்புக்கொள்கிறபடியே மகா மேன்மையுள்ளது. தேவன் மாம்சத்தில் வெளிப்பட்டார்.” He who was manifested in flesh and blood was none other than God.

படைப்பைப்பற்றிய அவருடைய முதல் Blueprint Christ. The Christ is the Blueprint. படைப்பு, அந்தப் படைப்பிலே ஒரு மனிதன், அந்த மனிதன் எப்படியிருக்க வேண்டுமென்று அவர் ஒரு design அல்லது Blueprint போட்டபோது, அந்த blueprint is Christ. மனிதனைப் படைத்துவிட்டு தேவன் அந்தப் படைப்பிலே பங்குறுவதைப்பற்றி யோசிக்கவில்லை. தேவன் அந்த படைப்பிலே பங்குறுவதைப்பற்றி யோசிக்கும்போது, அவர் கிறிஸ்து.

கிறிஸ்துவின் சாயலில் மனித இனம்

இந்தக் கிறிஸ்து - ஒரு தனி நபராக மட்டும் அல்ல, ஒரு மனித இனமே இவரைப்போல உண்டாக்கப்படும். அதே எபிரேயர் 2ஆம் அதிகாரத்தில், “பல மகன்களை மகிமையிலே கொண்டு வந்து சேர்க்கையில், அவருடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துவது அவருக்கு ஏற்றதாயிருந்தது,”என்று எழுதியிருக்கிறது. Not just God partaking of flesh and blood, Or God Partaking of Creaturehood. In this He brings many sons into glory. பல மகன்களை இப்படிப்பட்ட மகிமைக்குள் கொண்டுவர வேண்டும்.

இவ்வளவு எதற்கென்றால், what is the meaning of firstborn of Creation? Christ is the blueprint of man. இந்த blueprintஇன்படி அவர் மனிதனை உண்டாக்குகிறார். தேவன் மனிதனை அவருடைய சாயலில் படைத்தார் என்றால், கிறிஸ்துவின் சாயலின்படி மனிதனை படைக்கிறார் அல்லது உண்டாக்குகிறார்.

நான் புரிந்துகொண்டபடி, இவைகளெல்லாம் ஆணித்தரமானவைகள் என்று சொல்லமாட்டேன். தாராளமாய் சகோதரர்கள் இதைப்பற்றி சிந்திக்கலாம்.

புலப்படாத தேவன் புலப்பட வேண்டும்

புலப்படாத தேவன் புலப்பட வேண்டுமென்று விரும்புகிறார். ஒரு நாள் அதைத் தீர்மானிக்கிறார். God who is beyond senses, one day decides that He will make Himself manifest to senses, to faculties. இந்த senses, faculties, இந்த புலன்கள் இந்தப் படைப்புக்குரியவை. தேவனுடைய அன்பு, தேவனுடைய நீதி, தேவனுடைய பரிசுத்தம், தேவனுடைய ஒளி ஆகிய அற்புதமான தேவனுடைய குணாம்சங்களையெல்லாம் படைப்பு புரிந்துகொள்ள வேண்டும், படைப்பு அதை அறிந்துகொள்ள வேண்டும். The creation should know, the creation should see this is God என்று ஒருநாள் தேவன் சித்தம்கொள்கிறார் அல்லது தேவனுடைய அன்பு, தேவனுடைய நீதி, தேவனுடைய பரிசுத்தம் அல்லது தேவனுடைய ஒளி இவைகளெல்லாம் very hidden. They are not manifest.

தேவன் மனுஷீகத்தில், மனிதன் தெய்வீகத்தில் பங்குறுதல்

இந்த blueprintஇலே இன்னொரு முக்கியமான பங்கு இருக்கிறது. எப்படி தேவன் இந்தப் படைப்பிலே பங்குற வேண்டுமென்று தீர்மானிக்கிறாரோ, எப்படி தேவன் மானிடத்தில் God decided to partake of creaturehood, அதுபோல அவருடைய படைப்பு, மிக முக்கியமாக, அவருடைய படைப்பின் மகுடமாகிய மனிதன் (நான் படைப்பு என்று சொல்வது மனிதன்) அவருடைய தெய்வீகத்தில் பங்குற தீர்மானித்தார்.

God decided to partake of humanity. humanity என்பதை மனுஷீகம் அல்லது மானிடம் என்று சொல்லலாம். தேவன் மானிடத்தில் பங்குற வேண்டும் என்று திட்டம் தீட்டினார், நோக்கம் கொண்டார், சித்தம் கொண்டார். அது மட்டுமல்ல, ஏனென்றால், மனிதன் தெய்வீகத்தில் பங்குற வேண்டும் என்பது அந்தத் திட்டத்தின் அடுத்த பக்கம். அந்தத் திட்டத்தின் ஒருபக்கம் தேவன் மனுஷீகத்தில் அல்லது மானிடத்தில் பங்குற வேண்டும். God should partake of humanity. The other side of God’s original purpose is man should partake of divinity.

இதைப்பற்றி நாம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். 2 பேதுரு 1ஆம் அதிகாரம் 4ஆம் வசனம், “நாம் அவருடைய திவ்விய சுபாவத்தில் பங்குள்ளவர்களாகும்பொருட்டு, இவ்வளவு மகா மேன்மையும், அருமையுமான வாக்குத்தத்தங்களும் நமக்கு அருளப்பட்டிருக்கிறது,” என்று கூறுகிறது. மிகவும் முக்கியமான வசனம்.

முதலில் நீங்கள் இதைக் கவனிக்க வேண்டும்இ நான் இப்படி ஒற்றை வசனத்தை மேற்கோள்காட்டுகிறேன் என்பதற்காக அதற்கு முந்தியுள்ள பத்து வசனங்களையும், பிந்தியுள்ள பத்து வசனங்களையும் வாசிக்காமல் மேற்கோள்காட்டவில்லை. இதை எல்லாம் ஞாபகத்தில் வைத்துக்கொள்ளவும். ஒரு வசனத்தை மேற்கோள்காட்டும்போது, context எடுத்துச் சொல்வதற்கு நமக்கு நேரம் போதாது. ஆனால், நாம் எப்போதுமே ஒரு வசனத்தை மேற்கோள் காட்டும்போது, பேசும்போது நம்முடைய studyஇல் வருகிற whole context we should know. otherwise sometimes it will be a lie. Taking a text out of context is a pretext.

We have been given exceedingly great promises that we may be partakers of the divine nature. நாம் தெய்வீக சுபாவத்தில் பங்குள்ளவர்களாகும் பொருட்டு, that is God’s intention, that is God’s purpose. மனிதன் தெய்வீகத்தில் பங்குற வேண்டும் என்பது புதிய ஏற்பாட்டு vocabulary. சொல்லாடல்.

புதுசு புதுசா vocabulary, Phraseology, Lexiconயைக் கண்டுபிடிக்க வேண்டிய அவசியமில்லை. எபிரேயர் 3ஆம் அதிகாரத்திலே, ஆசிரியர் இப்படி எழுதுகிறார். “பரம அழைப்புக்கு பங்குள்ளவர்களாகிய, பரிசுத்த சகோதரரே, holy brethren, partakers of a heavenly calling.” அதின் 2ஆம் அதிகாரம் 14ஆம் வசனத்திலே, you have been made partakers of Christ. “நீங்கள் கிறிஸ்துவில் பங்குள்ளவர்களானீர்கள்.” தமிழில் பங்குள்ளவர்கள் என்றால் ஒருமாதிரி இருக்கிறது. ஆனால் ஆங்கிலத்தில் நன்றாக இருக்கிறது. Partakers of a heavenly calling, partakers of Christ, partakers of divine nature. Christ became the Partaker of human nature; His intention is we may be partakers of divine nature. தமிழில் சொல்கிறேன், “தேவன் மானிடத்தில் பங்குற்றார் அது ஒரு பக்கம், இன்னொரு பக்கம் மனிதன் தெய்வீகத்தில் பங்குறும்பொருட்டு.”

நான்காம் நூற்றாண்டில் வாழ்ந்த அத்தனேசியஸ் என்ற ஒரு சப‍ைப் பிதா “God became man, that man may become God” என்று சொல்லியிருக்கிறார். ஆனால், இந்தச் சொல்லாடலை நான் அங்கீகரிப்பதில்லை. “தேவன் மனிதனானார்,” என்பதை நான் அங்கீகரிப்பேன், “மனிதனைத் தேவனாக்க” என்பதை நான் அங்கீகரிக்க மாட்டேன். “ஐயோ! அத்தனேசியஸ் போன்ற ஒரு சப‍ைப் பிதா, church father அப்படி சொல்லியிருக்கிறாரே!” ஐம்பது church fathers இருக்கின்றார்கள். அவர்கள் சொன்ன எல்லாவற்றையும் நாம் அப்படி ஏற்றுக்கொள்ளவேண்டிய அவசியம் இல்லை.. we don’t need to dot the I’s and cross the T’s in exactly the same way that they did. ஒரு சிலர், சில Argumentsஇல் They will go overboard.

Arius என்று ஒருவர் இருந்தார். அவர், “இயேசு கிறிஸ்து, மிக உயர்ந்த மனிதர், மனிதர்களிலெல்லாம் மிக உயர்ந்த மனிதர் இயேசு கிறிஸ்துதான். ஆனால், அவர் தேவனல்ல,” என்றார். இதுதான் ஏரியனிசம். அப்போது அந்த நூற்றாண்டிலே, சபையே கொந்தளிக்கிறது. “இய‍ேசு கிறிஸ்து, ஒரு மா மனிதர், மிக உயர்ந்த மனிதர், ஆனால் அவர் தேவனல்ல. தேவனுக்கு சற்றுக் குறைவானவர்,” என்ற வாக்குவாதம் இருப்பதினால்தான் அதை அடித்து நொறுக்குவதற்கு, அத்தனேசியஸ் ஒரு புத்தகம் எழுதுகிறார். அந்தப் புத்தகத்தில் ஒரு வாக்கியம், “தேவன் மனிதனானார், எதற்காக, மனிதனைத் தேவனாக்க.” தேவன் மனிதனானார்,” என்று சொல்கிற வீரியத்திலே, “மனிதனைத் தேவனாக்க” என்றும் கூடச்சேர்ந்துகொள்கிறது. மனிதனைத் தேவனாக்க அல்ல, ஆனால், மனிதன் தெய்வீகத்தில் பங்குபெறுகிறான். இப்படிப்பட்ட Phraseologyயைக்குறித்து நாம் மிகவும் எச்சரிக்கையாய் இருக்க வேண்டும்.

ஏனென்றால், நிறைய இந்து குருமார்கள் “I am God” என்று சொல்லுவார்கள். சடை சடையா மீசையும், தாடியும் வைத்துக்கொண்டால், சாமியாகிவிடலாம். That is the shortest route to become God. அப்புறம் பொதுவாக மனிதர்கள், normal sense உள்ள மனிதர்கள், செய்யாத ஏதாவது ஒரு கிறுக்குத்தனத்தை செய்ய வேண்டும்.

Jesus Christ was a perfectly normal man. இது என்னுடைய முதல் குறிப்பு. கிறிஸ்து தேவனுடைய வரைபடம்.

2. தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே

1 தீமோத்தேயு 2ஆம் அதிகாரத்திலே கிறிஸ்து தேவனுக்கும் மனிதனுக்கும் நடுவிலே மத்தியஸ்தர் என்று எழுதியிருக்கிறது. “தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது.” Christ is the mediator between God and Man. மனிதனைத் தெய்வீகத்தில் பங்குறச் செய்வதற்கு, தேவன் ஒரு படி எடுக்க வேண்டியிருந்தது. அது என்ன படி என்றால், அவர் தேவனாய் இருந்தபோதும், மனுஷீகத்தில் அல்லது மானிடத்தில் பங்குற்றார்.

தேவனும், மனிதனும்

1 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 5ஆம் வசனம் முக்கியமான வசனம். ஏன் முக்கியமான வசனம் என்றால், பொதுவாக, மிஞ்சிப்போனால் இரண்டுபேர் சண்டைபோட்டால் reconcile பண்ணிவைப்பதற்கு, “இரண்டு பேர் பேசிக்கொள்ளுங்கள், நீ பார்த்து சிரி, நீ பார்த்து சிரி,” என்று சின்னப் பிள்ளைகள் சொல்வார்கள். இல்லையா? அதுபோல இயேசு கிறிஸ்து, தேவனுக்கும் மனிதனுக்கும் நடுவில், “நீ தேவனைப் பார்த்து சிரி,” அப்படியல்ல, அப்படியல்ல, மனிதன் தெய்வீகத்தில் பங்குறவேண்டும் என்றால், அவன் என்ன முயற்சி செய்தாலும், தெய்வீகத்தில் பங்குற முடியாது. என்ன முயற்சி செய்தாலும், ஒரு நாய்க்குட்டி பறக்க முடியாது. என்ன முயற்சி செய்தாலும் ஒரு மீன் பறக்க முடியாது. என்ன முயற்சி செய்தாலும், அவனுடைய கல்வி, அவனுடைய மதம், அவனுடைய ஒறுத்தல்கள் என்று மனிதன் என்னதான் கழுத்துவரை தண்ணீரில் காலையில் 4 மணியிலிருந்து 6 மணிவரை மந்திரம் ஓதினாலும், மனிதன் தெய்வீகத்தில் பங்குற முடியாது. அவன் மனிதன் மனிதன்தான். மனிதன் தெய்வீகத்தில் பங்குறுவதற்கு, தேவன் முதல்படி எடுக்க வேண்டும். தேவன் மனுஷீகத்தில் அல்லது மானிடத்தில் பங்குற்றார், அந்த மனிதன்தான், அந்த நபர்தான் தேவனென்றும் சொல்லலாம், மனிதன் என்றும் சொல்லலாம். அதற்குப் புதிய ஏற்பாடு பயன்படுத்துகிற வார்த்தை மத்தியஸ்தர், நடுவர். அவர் தேவனும், மனிதனும் ஆனவர்.

இதைவிட விவரிப்பதற்கு புதிய ஏற்பாட்டில் எந்த வார்த்தைகளும் இல்லை. சிலபேர், அவர் He is a God-man என்று பயன்படுத்துவார்கள். அவர் தேவன்-மனிதர் என்பார்கள். நான் அச்சத்தோடும், நடுக்கத்தோடும் அந்த வார்த்தையைப் பயன்படுத்துவேன். ஆனால், எல்லோரும் பயன்படுத்துவதை நான் பயன்படுத்த மாட்டேன், விளக்குவதற்காக சில வார்த்தைகளைப் பயன்படுத்தும்போது, Jesus Christ is God-Man. He is both God and man. ஒருவேளை God-man என்கிற வார்த்தையைக் coin பண்ணுவதற்கு யோவானுக்கோ, பவுலுக்கோ, ப‍ேதுருவுக்கோ ரொம்ப நேரம் ஆகியிருக்குமா என்ன? அவர்களெல்லாம் நல்ல vocabulary, நல்ல Language எல்லாம் richஆக இல்லாத காலத்தில் வாழ்ந்தார்களா? Greek was a very rich language. அவர்கள் நினைத்திருந்தால், Jesus Christ is a God-Man என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருக்க முடியுமா முடியாதா? முடியும். ஆனால் அவர்கள் பயன்படுத்தவில்லை. He is the mediator between God and Man, that is the closest Paul could come. நாம் இன்றைக்கு, 21ஆம் நூற்றாண்டில் விளக்குவதற்குத் தேவன்-மனிதன் என்று பயன்படுத்தலாம். ஆனால் “நான்தான் கண்டுபிடித்தேன்,” “அவர் முதல் தேவமனிதன், நாம் மனித தேவர்கள்,” என்று இதுபோல் விளையாட்டுத்தனமாகப் பேசக்கூடாது. அது சிறுபி‍ள்ளைகளின் மொழி. ஏனென்றால், “He was the first God man, we are the many men - gods. என்ன மாதிரி அழகாய்ப் பேசுகிறார் பாருங்கள்!” என்று சொல்லும்போது ஒரு Kick நமக்கு இருக்கும். No, no, no, no, we should not play with the things of God.

ஜீவ மரம்

ஆண்டவராகிய இய‍ேசு கிறிஸ்து தேவனை மனிதனிடத்தில் கொண்டுவருகிறார். இப்போது என்னுடைய புரிந்துகொள்ளுதல் தேவனுக்கும், மனிதனுக்கும் நடுவராக இருக்கிற இவரைத்தான் ஆதியாகமத்தில் ஜீவ விருட்சம் குறிக்கிறது என்று நான் கருதுகிறேன். நான் ஆதியாகமத்திலிருந்து புதிய ஏற்பாட்டுக்கு வரவில்லை. நான் முதலில் என்ன சொன்னேன், புதிய ஏற்பாட்டு வெளிச்சத்தில் ஆதித்திட்டம். புதிய ஏற்பாட்டு வெளிச்சத்தில் இந்த நபர், இந்த விந்தையான நபர், விந்தைக் கிறிஸ்து, இந்த விந்தையான நபர் Amazing person, marvelous person, wonderful person.

How can be a person both God and man? He is man, it is not wonderful. He is God, even that is not wonderful. God is wonderful but He is just God. That is not wonderful. How can be a person be God and Man? Therefore, Jesus Christ is a wonderful person. இந்த அற்புத நபரைக் குறிப்பதுதான் ஆதியாகமத்தில் நாம் பார்க்கிற ஜீவ விருட்சம். ஜீவ விருட்சம் பார்க்கிறதற்கு அப்படி பளபளவென்று மின்னிக்கொண்டு இருந்திருக்குமா அல்லது ரொம்ப unattractiveஆக மற்ற எல்லா மரங்களைப்போல் ஒரு மரமாக இருந்திருக்குமா? உங்கள் கருத்து என்ன? நீங்கள் அறிந்துகொண்ட கிறிஸ்துவை நான் அறிந்துகொள்ள விரும்புகிறேன். தோட்டத்துக்குள் வந்தவுடனே கண்னைப் பறிக்கிறதுபோல அந்த மரம் இருந்திருக்குமா அல்லது பார்ப்பதற்கு ஒரு சர்வ சாதாரண மரம்போல இருந்திருக்குமா? அருகில் இன்னொரு மரம் இருந்தது, பகட்டு மரம். Fleshy, flashy tree, the tree of knowledge of Good and evil. நன்மை தீமை அறியத்தக்க அறிவு மரம். “அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது”ஏசாயா 53. அவரிடத்தில் அழகுமில்லை, செளந்தரியமும் இல்லை.

இயேசு கிறிஸ்துவைக் குறிக்கின்ற அடையாளமாகிய இந்த Tabernacle, ஆசாரிப்புக் கூடாரம் அல்லது சாட்சியின் கூடாரம் வெளியேயிருந்து பார்ப்பதற்கு வெறும் கருப்புத் தோல்தான் தெரியும். ஆனால் அந்தக் கூடாரத்தின் உள்‍ளே சென்று பார்த்தால் பொன் சரிகைகள், வெள்ளி சரிகைகள், இரத்தாம்பர நூல்கள், இளநீல நூல்கள் என்று மிக அழகாக இருக்கும்.

பார்ப்பதற்கு அது சாதாரண மரம்போல் தோன்றும். இயேசு கிறிஸ்து என்கின்ற (Blueprint) வரைபடத்தின்படி தேவன் மனிதனைப் படைத்தார். படைத்து, கடைசிப் படியாய இந்த வரைபடத்தின்படி மனிதன் தெய்வீகத்தில் பங்குற வேண்டும். மனிதனைப் படைத்துவிட்டு, அந்த தெய்வீகத்தில் பங்குறுகிற கடைசிப் படியை யார் எடுக்க வேண்டும்? Okay, இப்படிச் சொல்வோமே, மனிதனைப் படைத்துவிட்டு, தேவன் ஒரு படியை எடுத்துவிட்டார். தேவன் மானிடத்தில் பங்குற்றார். அதைக் குறிப்பதுதான் ஜீவ மரம். இதிலிருந்து நீங்கள் சிந்திப்பதற்கும், கேள்வி கேட்பதற்கும், நிறைய இருக்கிறது. “ஆதியாகமம் இரண்டாம் அதிகாரத்துக்கும் 1 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 5, 6 ஆம் வசனங்களுக்கும் எப்படி இப்படி ஒரு பெரிய connectionஐ நீங்கள் கண்டுபிடித்தீர்கள்?” என்று நீங்கள் கேட்கலாம். “நாம் இப்படி இஷ்டம்போல connection கண்டுபிடிக்கலாமா?” என்று நீங்கள் கேட்கலாம். இஷ்டம்போல் connection பண்ணக்கூடாது. But you have to keep this whole bible before you.

இந்த இயேசு கிறிஸ்துவை எப்புடிப் புரிந்துகொள்வது? தேவன் ஒரு படி எடுத்துவிட்டார். அதற்கு மாறுத்தரமாக, in response மனிதன் ஒரு படி எடுக்க வேண்டும். அவன் தெய்வீகத்தில் பங்குற வேண்டும். தேவன் தம்மை ஜீவனாக, available ஆக்குகிறார். God made Himself as life in this mediator. நடுவராக இருக்கின்ற இந்தத் தேவனும் மனிதனுமான நபரிலே, தேவன் தம்முடைய ஜீவனை மனிதனுக்கு available ஆக்குகிறார். Symbolized by the Tree of Life. Tree of Life எப்படி இருக்கும் என்பதை நான் கற்பனை செய்யவிரும்பவில்லை. it is a symbol. அது எப்படி இருக்கும் என்பத‍ைப்பற்றி நான் கற்பனைசெய்ய விரும்பவில்லை. எப்படி நம் breadம், cupம் ஒரு symbolலோ, அதுபோல Tree of Life is a symbol. ஜீவ மரம் என்பது ஒரு அடையாளம்‍ அல்லது ஒரு குறியீடு. மனிதன் இப்படிப்பட்ட நபரிலே பங்குற வேண்டும். அவன் முன்வந்து பங்குறும்போது, அந்தத் தெய்வீக ஜீவனை அல்லது தேவனுடைய ஜீவனை, நித்திய ஜீவனை பெற்றுக்கொள்ளும்போது, அவன் தெய்வீகத்தில் பங்குறுகிறான். 99 சதவிகிதம் தேவன் தன்னுடைய படைப்பை, மனிதன் என்கிற படைப்பை, முடித்து வைத்துவிட்டார். அந்த 1 சதவிகிதம் யார்தான் செய்ய வேண்டும்?

Suppose ஒரு car 99 percent manufacture முடிந்துவிட்டது. “ஒரேவொரு பாகத்தை மட்டும் நீயேதான் fix பண்ணிக்கொள்ள வேண்டும்,” என்று சொல்லிவிட்டார்கள் - brake. இது மிகவும் அற்புதமான படைப்பா அல்லது ரொம்ப ஆபத்தான படைப்பா? ஒரு car 99 விழுக்காடு உண்டாக்கியாயிற்று. ஒரேவொரு சதவிகிதம் brakeஐ மட்டும் மாட்டவில்லை. இது ரொம்ப அற்புதமான சிருஷ்டிப்பா அல்லது ரொம்ப ஆபத்தான சிருஷ்டிப்பா? இது அற்புதமான, ஆபத்தான சிருஷ்டிப்பு. It is a wonderful dangerous creation.

மனிதன் முன்வந்து தெரிந்தெடுத்தல்

தேவன் அந்த வாய்ப்பை, சந்தர்ப்பத்தை, மனிதனுக்கு விட்டுவிடுகிறார். தேவனே தெய்வீக ஜீவனை மனிதனுக்குள் வைத்துவிட்டால், அது எப்படியிருக்கும் என்றால்….சோதிக்கப்படாத ஒரு அன்பை, சோதிக்கப்படாத ஒரு நீதியை, சோதிக்கப்படாத ஒரு பரிசுத்தத்தை, தேவன் ஒருநாளும் அங்கீகரிப்பதில்லை. அதாவது தேவன்மேல் அன்புகூராதிருக்க வாய்ப்பேயில்லை என்று வைத்துக்கொள்வோமே, அறிவு மரத்தில் பங்குபெறுகிற ஒரு வாய்ப்பையே, ஒரு சாத்தியக்கூறையே மனிதனுக்குக் கொடுக்கவில்லை என்று வைத்துக்கொள்வோமே. ஆகவே மனிதன் அறிவு மரத்தில் பங்குபெறவில்லை என்றால், அதற்குப் பெயர் பரிசுத்தமல்ல. பொய் சொல்லுகிற வாய்ப்பே இல்லாததுபோல் தேவன் மனிதனை உண்டாக்கிவிட்டால், அதனால் மனிதர்கள் யாரும் பொய் சொல்லவில்லை. இது ரொம்ப virtueஆ? பொய் சொல்லுகிற வாய்ப்பு இருக்கிறது. ஆனால், பொய் சொல்லவேண்டாம் என்று அந்த மனிதன் தீர்மானித்தான், That is virtue. எனவே, தேவன் வடிவமைத்துள்ள தெய்வீகத்தில் பங்குறுகிற அந்த மனிதன் எப்படிப்பட்ட மனிதன் என்றால், He chooses to love God. ஒரு வசனத்தை நான் வேதத்தைத் திறந்து வாசிக்க வேண்டும் என்று விரும்புகிறேன். மிக முக்கியமான வசனம் உபாகமம் 30:15, 19 ஆகிய இரண்டு வசனங்கள். “இதோ ஜீவனையும், நன்மையையும், மரணத்தையும், தீமையையும் இன்று உனக்கு முன்னே வைத்தேன். நான் ஜீவனையும், மரணத்தையும், ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு முன் வைத்தேன் என்று உங்கள்மேல் வானத்தையும், பூமியை‍யும் இன்று சாட்சி வைக்கிறேன். ஆகையால், நீயும் உன் சந்ததியும் பிழைக்கும்படிக்கு நீ ஜீவனைத் தெரிந்துக்கொள்.” இந்தக் கோட்பாட்டில் எந்த மாற்றமுமில்லை, Choose Life. ஜீவனையும் மரணத்தையும், உனக்கு முன்பாக வைத்தேன். ஆசீர்வாதத்தையும், சாபத்தையும் உனக்கு மன்பாக வைத்தேன். I call heaven and earth to bear witness to this. நீயும், உன் சந்ததியும் வாழ்ந்து பிழைக்கும்படிக்கு ஜீவனை தெரிந்துக்கொள். “தெரிந்துகொள்கிற ஒரு வாய்ப்பே இல்லை, உனக்காக நானே உன்னை அன்புகூருகிற machineஆக, நீதியுள்ள machineஆக, பரிசுத்தமுள்ள machineஆக உண்டாக்கிவிட்டேன்.” ஒரு பெண் ஒரு மனிதனைக் கத்திமுனையில், “நானே அன்புகூர வைத்துவிடுகிறேன்,” என்று சொல்லுகிறாள் என்று வைத்துக்கொள்வோம். ஒருவன் ஒரு பெண்ணைக் குதிரையில் வைத்துத் தூக்கிக்கொண்டு போய்விடுகிறான். கத்தி முனையில் கடத்திக்கொண்டு போய், குகையில் வைத்து, “நீ எனக்கு மனைவியாக வேண்டும்,” என்று சொல்லுகிறான். அவள் மனைவியாகி விடுகிறாள். அது அன்பல்ல. எந்த மனிதனும் அப்படிப்பட்ட அன்பை விரும்பமாட்டான். நம்முடைய சாதாராண அறிவே அதைப் போதிக்கிறது. ஆகவே, தேவன் ஜீவ மரத்தின் கனியை, ஜீவ மரத்திலிருந்து, புசிக்கலாம் என்று வைக்கிறார். அறிவு மரத்திலிருந்து புசிக்க வேண்டாம் என்கிறார். “அறிவு மரத்தில் நீ பங்குபெற வேண்டாம். பங்குபெறும் நாளிலே நீ சாவாய்.” ஜீவ மரம் எனக்கு விளங்குகிறது. தேவனும், மனிதனுமான ஒரு நபரிலே தேவன் தன்னுடைய ஜீவனை மனிதனுக்கு available ஆக்கியிருக்கிறார். மனிதன் பங்குறும் வண்ணம் தேவன் available ஆகயிருக்கிறார்.

சிலுவை

இன்னொன்றை சொல்ல நான் மறந்து விட்டேன். That is cross. தேவன் மனுஷீகத்தில் பங்குறுகிறார் என்பது தேவனுக்கு ஒரு சிலுவை. அவர் சிலுவையினூடாகத்தான் தன்னை மானிடத்திலே வெளிப்படுத்துகிறார். தன்னை மானிடத்திலே தன்னுடைய ஜீவனை மனிதனுக்கு available ஆக்குகிறார். இதைவிட என்ன alternative இருக்கிறது? இதை விட்டால் என்ன மாற்று இருக்கிறது மனிதனுக்கு? அவன் தெய்வீக ஜீவனிலே பங்குற்று வாழலாம் அல்லது அவனுக்கு ஒரு மாற்று இருக்கிறது. என்ன மாற்று என்றால், நீ அந்த ஒரு கடைசி படி எடுக்காமல், 99 சதவிகிதம் முடித்து வைக்கப்பட்ட சிருஷ்டி, படைப்பு, மனித படைப்பு இருக்கிறதல்லவா அந்தப் படைப்பே ரொம்ப அற்புதமான படைப்புதான். அதை வைத்தும் நீ வாழ்ந்துகொள்ளலாம். தேவனுடைய ஜீவனில் பங்குபெறாமல், தேவனுடைய ஜீவன் மட்டும் இல்லாத, தேவனுடைய ஜீவன் மட்டும் குறைவுபடுகிற ஒரு மனிதன். அந்த மனிதன் தன்னைக்கொண்டு மட்டுமே வாழ்ந்துகொள்ளலாம். ஏன் அந்த மரத்திற்கு அறிவு மரம் என்று பெயர்? ஆதியாகமம் 3ஆம் அதிகாரத்தில் வாசிக்கும்ப‍ேது, அது பார்வைக்கு நல்லதும், புசிப்புக்கு இன்பமும், மனிதனுடைய புத்தியைத் தெளிவிக்கிறதற்கு இச்சிக்கப்படத்தக்கதுமான விருட்சம் என்று மூன்று காரியங்கள் இருக்கிறது.

திறந்த அமைப்புமுறை

இதை ஏற்கெனவே நான் குறிப்பிட்டிருக்கிறேன். அதை மீண்டும் சொல்லுகிறேன். அந்தப் படைப்பு ஒரு closed system என்றால், அதாவது அது அடைக்கப்பட்ட ஒரு அமைப்புமுறை என்றால் அங்கு மனிதனுக்கு ஒரு பெரிய sense of security, a sense of safety, இருக்கிறது. இது அடைக்கப்பட்ட ஓர் அமைப்புமுறையாக இருந்தால், நாம் இந்த அமைப்புமுறையிலே நம் வாழ்க்கையை மிக இன்பமாக வாழ்ந்துவிடலாம். ஆனால், இந்தப் படைப்பு ஒரு Closed system இல்லை. இது ஒரு Open system. தேவன் எந்தக் கணத்திலும் இந்த அமைப்புமுறைக்குள் வேல‍ைசெய்ய முடியும். இந்த உலகத்திலே, இந்தப் படைப்பிலே, அற்புதங்களும் அடையாளங்களும் எப்படி நடக்கின்றன? அவர் எப்படி வானத்திலிருந்து மன்னாவைக் கொடுக்க முடியும்? அவர் எப்படி உயிர்த்தெழ முடியும்? அவர் எப்படிக் கடலிலே நடக்க முடியும்? அவர் எப்படி பார்வையற்றவர்களுக்குப் பார்வை கொடுக்க முடியும்? In a closed system, that is not possible. But in an Open system, that is possible. open to God. தேவன் இந்தப் படைப்பை Closed systemஆக, மூடி அடைக்கப்பட்ட் ஒரு அமைப்பாக வைத்து, அதை மனிதனுடைய கைகளிலே கொடுத்திருந்தால் மனிதனுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும். மனிதன் அதை அக்குவேர், ஆணிவேராக ஆராய்ந்து பார்த்து, அவனுடைய வாழ்க்கையை அதன்படி அமைத்துக்கொள்வான். He will be very content with that. மனிதனுக்கு அதிலே பெரிய பாதுகாப்பு, பெரிய திருப்தி இருக்கும். ஆனால், தேவன் அதை அப்படி விடவில்லை. தேவன் இந்த அமைப்பு முறைக்குள் நுழைவதற்கும், இந்த அமைப்பு முறையோடு இடைப்படுவதற்குமுரிய அதிகாரத்தை வைத்திருந்தார். “வானங்கள் கர்த்தருடையவைகள்; பூமியையோ மனுபுத்திரருக்குக் கொடுத்தார்,” (சங்கீதம் 115:16). இந்த படைக்கப்பட்ட பூமியை அல்லது இந்தப் படைப்பை தேவன் மனிதனுக்குக் கொடுக்கின்றார். ஆனால், தேவன் முற்றுமுடிய மனிதனுடைய கையிலே ஒப்புக்கொடுத்துவிட்டு செய்வதறியாது திகைத்து நிற்கவில்லை. “ஐயோ! மனிதன் கையில் கொடுத்துவிட்டேனே, இப்போது நான் என்ன பண்ணுவது?” என்று தன்னுடைய கையைப் பிசைந்துகொண்டு தேவன் இருக்கப்போவதில்லை.

அறிவு மரத்தைச் சார்ந்து வாழ்வதென்றால், I want this system to be a closed system; The creation is to be a closed system. I want God out of it. தேவன் இந்த அமைப்போடு, இந்தப் படைப்பின் அமைப்போடு இடைப்படுவதை இந்த closed systemஇல் அனுமதிக்கமுடியாது. மூடி அடைக்கப்பட்ட இந்த அமைப்பிலே மனித உயிருக்கு மிஞ்சி வேறு ஒன்றுமில்லை. நித்தியமான ஜீவன் என்று அங்கு ஒன்று கிடையாது. என்றைக்கு மனிதன் மரிக்கிறானோ, அன்றைக்கு மனித உயிர் அல்லது மனித வாழ்க்கை முடிவுபெறுகிறது; அன்றைக்கு மனித வாழ்க்கை முடிவடைந்துவிடுகிறது, மனித உயிர‍ைக்கொண்டு அவன் எவைகளை அனுபவிக்கிறானோ, எவைகளில் இன்புறுகிறானோ, அவ்வளவுதான் அவன் பெற்று அனுபவிக்கிற இன்பங்கள். தன்னுடைய மனித உயிர‍ைக்கொண்டு, அவன் இந்தப் படைப்பை எந்த அளவிற்கு அறிந்துகொள்கிறானோ அதுதான் அவனுடைய காரியம். அந்த அறிவுமரத்தைத் தெரிந்துகொள்ள வேண்டாம் என்று தேவன் சொல்லுகிறார். மனிதனுக்காக தேவனுடைய திட்டம் அவனுடைய மனித உயிர் மட்டும்தான் என்பதில்லை. அவன் வெறுமனே மனித வாழ்க்கைக்குரிய தேவைகளையும், வளங்களையும் வைத்துத்தான் வாழவேண்டும் என்பதில்லை. It is not that he must live only by the resources which are needed for enjoyment of this human life. அவன் தெய்வீக ஜீவனில் பங்குற வேண்டும்; அவன் நித்திய ஜீவனைப் பெற வேண்டும்; அந்த நித்திய ஜீவனால் அவன் பெற்று அனுபவிக்கக்கூடிய வளங்கள் உண்டு.

தேவனை அறிதல்

கடைசியில் ஒரு shocking newsயைச் சொல்லி என்னுடைய புரிந்துகொள்ளுதலை முடித்துக்கொள்கிறேன். There are heavenly resources which are needed for this eternal life, and which can be enjoyed by this eternal life, heavenly resources, அதுபோல, அதனுடைய ultimate என்னவென்றால், To have eternal life, to enjoy the heavenly resources by the eternal life, should come to the knowledge of God. தேவனை அறிவது, His love, His righteousness, His holiness, His light. யோவான் 17ஆம் அதிகாரம் 3ஆம் வசனத்தை நாம் அடிக்கடி மேற்க்கோள் காட்டுவோம். “ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன்.” “This is eternal life to know you, you only true God and Jesus Christ whom you have sent.” Without eternal life there is no way man can come to an experiential, intimate, real knowledge of who God is, God’s Love, God’s righteousness, God’s holiness, God’s life and all those inexpressible attributes and characteristics of God. அதனால் மனிதனுக்கு முன்பாக அவர், don’t choose to live just by a closed system, shutting out God. தேவனை வெளியேற்றிவிட்டு, உன்னுடைய அமைப்பை நீ மூடி அடைத்துக்கொண்டு, “இவைகள்தான் என்னுடைய வாழ்க்கை” என்பதை நீ தெரிந்துகொள்ளாதே. You are a wonderful creation, provided you partake of eternal life.

நான் காலையில் யோசித்த உவமை அதுதான். ஒரு கார். wonderful creation, how miserable that creation would be without that one element, brake. அதனால், கிறிஸ்தவர்கள் யோசிக்கக்கூடாது என்று சொல்லுகிற ஆட்கள் உண்டு என்று எனக்குத் தெரியும். அப்படியல்ல, தெய்வீக ஜீவனில் பங்குற்ற ஒரு மனிதனுடைய சிந்தனையைப்போல ஒரு அருமையான சிந்தனை வேறெதுவும் இந்த உலகத்திலே இல்லை.

நான் 3 காரியங்களை உங்களோடு பகிர்ந்துகொண்டேன்.

** 1, தேவனுடைய சாயலில் படைக்கப்படுவது என்றால் என்ன?  2. ஜீவ மரம் என்றால் என்ன?  3. நன்மை, தீமை அறியத்தக்க மரம் என்றால் என்ன?**

கடைசியாக இதைச் சொல்லி முடித்துவிடுகிறேன். ஆனால் அவன் நன்மை, தீமை அறியத்தக்க இந்த அறிவு மரத்தில் மனிதன் பங்குற்றான். அவனுடைய கண்கள் திறக்கப்பட்டன. அவன் நிர்வாணி என்று தன்னை அறிந்துகொண்டான். ஆகவே, அவன் அத்தி இலைகளால் தன்னை முடிக்கொண்டான். தேவன் அவனுக்கு தோல் உடையை உடுத்தினார் என்று ஆதியாகமம் 3ஆம் அதிகாரம் நிறைவடைகிறது.

இப்போது நான் சொல்வதை நீங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. நானே இதை ரொம்ப convictionனோடு சொல்லவில்லை. ஆனால் ஒரு சின்ன, may be இப்படி இருக்கலாம் என்று யோசிக்கிறேன். ஆதியாகமம் 1, 2, 3யைப் புரிந்துகொள்வது மிகவும் கடினமானது. “வீழ்ச்சிக்கு முன்பும் அவர்கள் நிர்வாணிகளாகத்தான் இருந்தார்கள். ஆனால், நிர்வாணம் என்று அவர்களுக்கு தெரியவில்லை,” என்று மக்கள் சொல்வார்கள். ஆனால் என்னால் அப்படி யோசிக்க முடியவில்லை. வீழ்ச்சிக்கு முந்தி அவர்கள் உடை உடுத்தியிருந்தார்கள். ஆனால், அது பூமிக்குரிய உடையல்ல, அது பரத்திற்குரிய ஒரு உடை. அவ்வளவுதான் நான் சொல்லுவேன். என்றைக்கு பரத்திற்குரிய, நித்தியத்திற்குரிய, ஆவிக்குரிய, தேவனுக்குரிய ஜீவன், வளங்கள், அறிவு இவைகள் எல்லாம் வேண்டாம் என்று மனிதன் தீர்மானித்தானோ, அன்றைக்கு Those heavenly resources are withdrawn from man. அவ்வளவுதான். The moments these heavenly resources அதாவது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, “நீங்கள் அறியாத போஜனம் உண்டு,” என்று சீடர்களிடம் சொன்னதுபோல, “நீங்கள் அறியாத போஜனம், நீங்கள் அறியாத உடை உண்டு, நீங்கள் அறியாத ஒரு நபர் உண்டு, நீங்கள் அறியாத பல பரம வளங்கள் உண்டு.” மறுபடியும் சொல்கிறேன், இதை நான் ஆணித்தரமாக “கர்த்தர் எனக்கு வெளிப்படுத்தினார்,” என்று அந்த மாதிரி‍யெல்லாம் சொல்லவில்லை. இப்படி இருக்கலாம்.

அறிவுமரத்தில் பாங்குற்றபின் அவன் இந்தப் பூமிக்குரிய வளங்களால் மட்டுமே வாழ வேண்டும். ஆனால், அவன் தன் வேர்வையினாலேதான் பூமிக்குரிய வளங்களைப் பெற்று அனுபவிக்க முடியும். பரம வளங்கள் அவனுக்குரியதில்லை. Those heavenly resources were shut out from man. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவிலே நித்திய ஜீவன் மட்டும் அல்ல; தேவனுடைய எல்லாப் பரம வளங்களையும் அவர் நமக்குத் தருகிறார்.

நாம் இன்று காலையில் சொன்னோம் இல்லையா? கிருபை. Grace is making those heavenly resources available to man. கிருபை என்பது தேவனுடைய பரம வளங்களை மனிதனுக்கு தேவன் available ஆக்குவது. இவ்வாறு I am weak, yet I am strong. நான் பலவீனன், ஆனாலும் பலமுள்ளவனாய் இருக்கிறேன். “அதற்கு அவர்: என் கிருபை உனக்குப்போதும்; பலவீனத்திலே என் பலம் பூரணமாய் விளங்கும்” என்றார் (2 கொரி. 12:9). அதற்கு பவுல், “ஆகையால், கிறிஸ்துவின் வல்லமை என்மேல் தங்கும்படி, என் பலவீனங்களைக்குறித்து நான் மிகவும் சந்தோஷமாய் மேன்மைபாராட்டுவேன். அந்தப்படி நான் பலவீனமாயிருக்கும்போதே பலமுள்ளவனாயிருக்கிறேன்; ஆகையால் கிறிஸ்துவினிமித்தம் எனக்குவரும் பலவீனங்களிலும், நிந்தைகளிலும், நெருக்கங்களிலும், துன்பங்களிலும், இடுக்கண்களிலும் நான் பிரியப்படுகிறேன்,” என்று பதில் சொல்லுகிறார். Was it a fake joy? “Actual ஆக நான் சந்தோஷமாக இல்லை, ஆனால் நான் ஒரு அப்போஸ்தலனாக இருக்கிறேன், அதனால் நான் சந்தோஷமாக இருப்பதுபோல் பாவலா காட்டவேண்டும், பாவுலா காட்ட வேண்டும்,” ஏற்று உ சொன்னாரா? Was it a counterfeit fake joy? I don’t think so. It was a genuine, authentic joy of a man who knew experientially, really the heavenly resources which are available to a Christian.

இன்று நான் பேசியது நடைமுறைக்கு நேரடியாக தொடர்புடையதில்லை என்று நான் சொன்னபோதிலும்கூட தேவன் இந்த வார்த்தைகளை நடைமுறைகளில் நமக்குப் பயனுள்ளதாய் மாற்றுவாராக. தேவனுடைய சாயலிலே சிருஷ்டிக்கப்பட்டது என்றால் அதிலே தேவனுடைய திட்டம் என்ன? ஜீவ மரத்திலே மனிதன் பங்குற வேண்டும் என்றால் அதிலே தேவனுடைய திட்டம் என்ன? அறிவு மரத்திலே பங்குறக் கூடாது என்று தேவன் எச்சரித்தார். அறிவு மரத்திலே அவன் பங்குற்றதால் அவன் இழந்து போனது என்ன? போன்ற காரியங்களை நாம் சிந்தித்தால், நாம் தேவனுடைய நற்செய்தியை சொல்லும்போதும் நம்முடைய வாழ்க்கையில் நாம் அந்த நற்செய்தியால் வாழும்போதும், பரிசுத்த ஆவியானவர் நமக்குத் துண‍ை செய்வார்! Praise the Lord!