Transcribed from a message spoken in June 2017 in Chennai
By Milton Rajendram
“This is the will of God, your sanctification. நீங்கள் பரிசுத்தமுள்ளவர்களாக வேண்டும் என்பதே தேவனுடைய சித்தமாயிருக்கிறது,” என்று 1 தெசலோனிக்கேயர் 4ஆம் அதிகாரம் 3ஆம் வசனம் கூறுகிறது. நீங்கள் பரிசுத்தமாக்கப்படுவதே தேவனுடைய சித்தம்.
வேதத்திலே இதுபோன்ற சில பகுதிகளை வாசிக்கும்போது, நாம் அதைக் குறித்துக்கொள்ளவேண்டும். வேதம் மிகப் பெரிய புத்தகம், மிக ஆழமான புத்தகம். தேவன் அதிலே ஆங்காங்கே சில கொடிகளை வைத்திருக்கிறார். இந்த முக்கியமான மைல் கற்களை நாம் குறித்துக்கொண்டால் முழு வேதாகமத்தையும் புரிந்துகொள்வதற்கு நமக்கு எளிதாக இருக்கும்.
“This is the will of God, your sanctification.” நீங்கள் பரிசுத்தமாக்கப்படுவது, இதுவே தேவனுடைய சித்தம். இன்னும் சொல்லப்போனால், நாம் பரிசுத்தமாக்கப்படுவதென்றால் நாம் தேவனுடைய பரிசுத்தத்தில் பங்குபெறுவதாகும்.
தேவன் இல்லாமல் மனிதன் ஒரு பரிசுத்தத்தை உற்பத்திசெய்ய முடியாது. என்னதான் அறநூல்களை, நீதி நூல்களை மனித சமுதாயங்கள் கண்டுபிடித்திருந்தாலும், அந்த அறநூல்களையும், நீதி நூல்களையும்வைத்து ஒரளவிற்கு அவர்கள் தங்கள் ஒழுக்கம், தங்கள் அறம், தங்கள் சீலம் ஆகியவைகளை உயர்த்துவதற்கு அவர்கள் முயன்றாலும், அது மிகவும் மட்டுப்பட்டது. ஏனென்றால், மனிதனுடைய இயற்கை அந்த நீதி நூல்களிலும், அறநூல்களிலும் சொல்லப்பட்டிருப்பவர்களுக்கு மிகவும் முரணானது. ஏறக்குறைய ஒரு நாய்க்குட்டியைப் பறக்கச் சொன்னால் அது எவ்வளவு திணறுமோ, அதுபோல நீதிநூல்கள், அறநூல்கள் ஆகியவைகளின்மூலமாக ஒரு மனிதனைப் பரிசுத்தமாகச்சொல்வது அவனைத் திணறடிக்கும். ஆனால், அவைகள் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் நடத்துகின்ற உபாத்தியாய் இருக்கின்றன. நியாயப்பிரமாணம் யூதர்களை கிறிஸ்துவினிடத்தில் நடத்துகின்ற ஆசிரியனாக, உபாத்தியனாக இருந்ததுபோல, புறவினத்தாரின் சான்றோர்கள் சொன்ன நீதி நூல்களும், அற நூல்களும் அவர்களைக் கிறிஸ்துவினிடத்தில் நடத்துகின்ற உபாத்தியாயிருக்கிறது.
“அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்; அப்படியே உங்கள் புலவர்களிலும் சிலர்: நாம் அவருடைய சந்ததியார் என்று சொல்லியிருக்கிறார்கள்,” என்று அப்போஸ்தலர் நடபடிகள் 17ஆம் அதிகாரத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் இரண்டு கிரேக்க புலவர்களை மேற்கோள் காட்டுகிறார். “நாம் அவருக்குள் இருக்கிறோம், அவருக்குள் பிழைக்கிறோம், அவருக்குள் அசைகிறோம்,” என்று சொன்னதாக ஒரு புலவரையும், “நாம் தேவனுடைய பிள்ளைகளாய் இருக்கிறோம், We are the children of God,” என்று சொன்னதாக இன்னொரு புலவரையும் மேற்கோள்காட்டுகிறார். அந்த இரண்டு புலவர்களுமே எந்தக் கடவுளைப்பற்றி பேசினார்கள் என்று சொல்லமுடியாது. ஆனால், மனித சமுதாயத்தின் எல்லா இடங்களிலும், எல்லாக் காலங்களிலும் ஒரு நீதியான, அறமான வாழ்க்கை வாழ்வதற்கு நல்ல மனமுள்ள சில சான்றோர்கள் முயன்றிருக்கிறார்கள். ஓரளவிற்கு வெற்றியும் பெறுவார்கள்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து செய்துமுடித்த இரட்சிப்பின் சிறப்பான பங்கு என்னவென்றால், அவர் மனிதனுடைய மிக உள்ளான இயற்கையை, மிக உள்ளான தன்மையை, மாற்றக்கூடிய ஒரு பணியைச் சிலுவையிலே செய்து முடித்திருக்கிறார். “பற” என்று சொல்லிவிட்டு, ஒரு பறவையின் உயிரைத் தரவில்லையென்றால், அது நற்செய்தி ஆகாது. அது நம்மால் சுமக்க முடியாத ஒரு பழுவாக மாறிவிடும். புதிய ஏற்பாட்டிலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கின்ற மத்தேயு 5, 6, 7 ஆம் அதிகாரங்களில் உள்ள கட்டளைகளின்படி வாழ்வது ஒரு மனிதனுக்கு பெரிய சுமையைத் தரும். மனிதன் தன்னுடைய இயற்கையின்படி, தன்னுடைய சொந்தத் தன்மையின்படி, வாழ்வான் என்றால் அது அவனுக்குப் பாரமாக இருக்கும். ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மத்தேயு 5, 6, 7இல் அல்லது முழுப் புதிய ஏற்பாட்டிலுள்ள மிக உயர்ந்த ஒழுக்கத்திற்கும், அறத்திற்கும், சீலத்திற்கும் (Morality, Ethic, Virtue) உரிய போதனைகளை மட்டும் தரவில்லை; அந்தப் போதனைகளின்படி நடப்பதற்குரிய உள்ளான ஜீவனையும் தந்திருக்கிறார். இது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியினுடைய மையப்பொருள்.
நித்திய ஜீவன் என்பது புதிய ஏற்பாட்டினுடைய ஒரு மையக் கருத்து. குறிப்பாக, யோவான் எழுதிய நற்செய்தியிலே, நித்திய ஜீவன் ஒரு மையமான ஆசீர்வாதமாய் இருக்கிறது. எந்த அளவிற்கு இது மையமான ஆசீர்வாதம் என்றால் “நித்தியஜீவனை அளிப்பேன் என்பதே அவர் நமக்குச் செய்த வாக்குத்தத்தம். This is the promise of God, Eternal life,” என்று 1 யோவான் 2:25இல் எழுதுகிறார். யோவான் எழுதியிருப்பது எப்படி இருக்கிறதென்றால், “இதைத்தவிர தேவன் வேறு எந்த வாக்குறுதியும் தரவில்லை,” என்பதுபோல அவர் அதை அழுத்தம், திருத்தமாக எழுதுகிறார். “இதுவே தேவனுடைய வாக்குத்தத்தம், நித்திய ஜீவன்.” “இதுவே தேவனுடைய சித்தம், நீங்கள் பரிசுத்தமாக்கப்படுவது”.
ஆகவே, இப்படிப்பட்ட வாக்கியங்களையெல்லாம் நாம் நம் இருதயத்திலே எழுதிக்கொள்ளவேண்டும். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தேவனாயிருந்தபோதும், மனிதனாக வந்து சிலுவையிலே அவர் சிந்தின இரத்தத்தினாலே, நம்முடைய பாவங்களை மன்னித்தார், நம்மை நீதிப்படுத்தினார், தேவனோடு ஒப்புரவாக்கினார். இடத்தைப் பொறுத்தவரை, தேவனுக்குமுன்பாக நாம் இருக்கிற இடத்தை, நம் நிலைப்பாட்டைப, பொறுத்தவரை, அவர் நம்மைப் பரிசுத்தமாக்கினார். பாவமன்னிப்பு என்பது மாபெரும் ஆசீர்வாதம். அதைத் தேடி, ஆறு, கடல், மலை என்று போகவேண்டிய அவசியமில்லை. அது முதல் பகுதி.
ஆனால், இரண்டாவது பகுதி அவருடைய சிலுவை மரணம், உயிர்த்தெழுதல்மூலமாக, அவருடைய நித்திய ஜீவனை நமக்குத் தந்தருளியிருக்கிறார். “இவரே மெய்யான தேவனும், நித்திய ஜீவனுமாயிருக்கிறார்,” என்று யோவான் எழுதுகிறார். இயேசு பாவ மன்னிப்பைத் தந்தார், நித்திய ஜீவனைத் தந்தார். அதுமட்டுமல்ல அந்த நித்திய ஜீவன் நமக்குள் வளர்ந்து, முழுவளர்ச்சியும், பக்குவமும், முதிர்ச்சியும், தேர்ச்சியும் பெறுவதற்காக பரிசுத்த ஆவியாய் அவர் நமக்குள்ளே வாழ்கிறார். இப்படி பாவ மன்னிப்பு, நித்திய ஜீவன், பரிசுத்த ஆவி - ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின் நற்செய்திமூலமாய் நாம் பெற்றிருக்கிற ஆசீர்வாதங்கள். ஆண்டவராகிய இயேசு நம்முடைய இரட்சிப்பிற்காக, இரட்சிப்பு என்றால் மனிதனுடைய விடுதலை, மனிதனுடைய மீட்பு, தேவன் எதற்காக மனிதனை உண்டாக்கினாரோ அந்த நோக்கம் அவனுடைய வாழ்க்கையிலே நிறைவேறுவதற்காக எதைச் செய்ய வேண்டுமோ அதைச் சிலுவையிலே, உயிர்த்தெழுதலிலே செய்து முடித்தார். Praise the Lord. இரட்சிப்பை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையிலே செய்து முடித்துவிட்டார். ஆனால், “இந்த இரட்சிப்பை நீங்கள் செயல்படுத்துங்கள்,” என்று பிலிப்பியர் 2ஆம் அதிகாரம் 12, 13 ஆம் வசனங்கள் கூறுகின்றன. Very important words. “Work out your salvation with fear and trembling,” என்று பிலிப்பியர் 2 :12 சொல்கிறது. “Because God is at work in you,” என்று 13ஆம் வசனம் கூறுகிறது. இரண்டு வேலைகள்: you work and God is at work in you or God is working in you என்றும் எழுதியிருக்கிறது; You work out your salvation என்றும் எழுதியிருக்கிறது. தேவன் உங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் என்றும் எழுதியிருக்கிறது. ஆகவே நீங்கள் செயல்படுத்துங்கள் என்றும் இருக்கிறது.
ஆகவே நம்முடைய முழுமையான இரட்சிப்புக்கு இரண்டு பக்கங்கள் உள்ளன. ஒன்று தேவன் செய்து முடிப்பது, இன்னொன்று நாம் செயல்படுத்துவது. சபையினுடைய வரலாற்றைப் பார்த்தால், 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்தி, “நீங்கள் செயல்படுத்த வேண்டியதை” மிகவும் வலியுறுத்தினார்கள். 16ஆம் நூற்றாண்டுத் தொடங்கி, “தேவன் செய்து முடித்ததை” மிகவும் வலியுறுத்தினார்கள். அந்த 16ஆம் நூற்றாண்டு என்னவென்று உங்களுக்குத் தெரியும். 16ஆம் நூற்றாண்டுக்கு முந்தி “நீங்கள் எப்படி செயல்படுத்தவேண்டும்” என்பதை அதிகமாக வலியுறுத்தினார்கள். ஒரு சிலர். பொதுவாக சபை இருளடைந்து காணப்பட்டாலும், சீரழிந்து காணப்பட்டாலும் தேவனை உண்மையாய் நேசித்தவர்கள் “நாம் இரட்சிப்பை எப்படி செயல்படுத்த வேண்டும்” என்பதை வலியுறுத்தினார்கள். 16ஆம் நூற்றாண்டுத் தொடங்கி, “தேவன் இரட்சிப்பை எப்படி செயல்படுத்திக்கொண்டிருக்கிறார்” என்று அவர்கள் வலியுறுத்தினார்கள். ஆனால் நம் முழுமையான இரட்சிப்பைப் பெறுவதிலே இரண்டு பக்கங்களும் உள்ளன. “தேவன் உங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். நீங்கள் உங்கள் இரட்சிப்பை செயல்படுத்த வேண்டும்.” நல்ல தமிழாக்கம் இப்படித்தான் சொல்கிறது. தமிழில் “அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும் உங்கள் இரட்சிப்பு நிறைவேற பிரயாசப்படுங்கள்,” என்று எழுதப்பட்டிருக்கிறது. “உங்கள் இரட்சிப்பை செயல்படுத்துங்கள், அதிக பயத்தோடும், நடுக்கத்தோடும்,” என்று நான் மொழிபெயர்க்கிறேன்.
ஏன்? ஏனென்றால், தேவன் தம்முடைய நல்லின்பத்தின்படி உங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். God is working in you according to His good pleasures. தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே. எதற்கு செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்? To both will and do. நீங்கள் விரும்பவும், செய்யவும் தேவன் தம்முடைய நல்லின்பத்தின்படி, உங்களில் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார். இன்று தேவனுடைய மக்களிடையே, இந்த இரண்டாவது பக்கம் அசட்டைப்பண்ணப்படுகிறது அல்லது அதைப்பற்றிய போதுமான அறிவு, புரிந்துகொள்ளுதல், அதனுடைய முக்கியத்துவம் என்ன என்பதைப்பற்றிய போதுமான அறிவு அல்லது புரிந்துகொள்ளுதல் இல்லை.
நன்றாகக் கவனிக்க வேண்டும். தேவனுடைய மக்கள் இரட்சிக்கப்படுகிறார்கள், வேதம் வாசிக்கின்றார்கள், சிலர் பரிசுத்த ஆவியினால் நிறைவதாகச் சொல்கிறார்கள். சிலர் உண்மையாகவே பரிசுத்த ஆவியினால் நிரம்பின வாழ்க்கை வாழ்கின்றார்கள், கர்த்தருக்காகப் பணிவிடை செய்கிறார்கள், சேவை செய்கிறார்கள், ஊழியம் செய்கின்றார்கள். இவைகளெல்லாம் இருந்தபோதும்கூட தாங்கள் பெற்ற இரட்சிப்பை எப்படிச் செயல்படுத்துவது என்பதைப்பற்றிய தெளிவான அறிவும், புரிந்துகொள்ளுதலும் குறைவுபடுகிறது; அதன் முக்கியத்துவம் என்ன, அதை எப்படி நடைமுறையில் செயலாக்குவது என்பதைப்பற்றி ஒரு குறைபாடு இருக்கிறது. There is a lack. There is a definite lack. தேவனுடைய மக்கள் என்று சொல்லும்போது, எங்கேயோ அவர்கள் இருக்கின்றார்கள் என்று நினைத்துக்கொண்டு, “எங்களிடத்தில்அப்படிக் குறையில்லை,” என்று நம்மை நாமே முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டிக்கொள்ளக் கூடாது. “நாங்களெல்லாம் அப்படியில்லை,” என்று நினைக்கக்கூடாது.
ஞாயிறு பள்ளி வகுப்பு ஆசிரியர் ஆயக்காரன் பரிசேயன்பற்றிய கதையில் சொன்னதுபோல, “நான் வாரத்திற்கு இரண்டு முறை உபவாசிக்கிறேன், என் சம்பாத்தியத்தில் தசமபாகம் கொடுக்கிறேன். நான் அந்த ஆயக்காரனைப்போலில்லை என்று சொன்ன அந்தப் பரிசேயனைப்போல் இல்லை” என்று சொல்லும்போது, நாம் பரிசேயனுக்கெல்லாம் பரிசேயனாக மாறிவிடுகிறோம்.
தேவனுடைய மக்கள் மத்தியிலே இப்படிக் குறைபாடு இருக்கிறது. “நம் மத்தியில் அப்படிப்பட்டக் குறைபாடு இருக்கிறது.” நாம் எச்சரிக்கையாக இல்லையென்றால், நாம் அதின் குறைபாட்டின் பலாபலன்களை அனுபவிப்போம். ## தேவனுடைய பரிசுத்தத்தில் பங்குபெறுவதற்கு - சிலுவை “இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார்” (எபிரேயர் 12:10). நீங்கள் அவருடைய பரிசுத்தத்தில் பங்குபெறுவதற்கென்றே, that you may partakers of holiness. நம்முடைய பரிசுத்தம் நாம் உற்பத்திசெய்கிற பரிசுத்தம் அல்ல. அது கிறிஸ்துவில் தேவனுடைய பரிசுத்தமே. நாம் கிறிஸ்துவில் பங்குறுகிறோம், பரம நன்மைகளில் பங்குறுகிறோம், நித்திய ஜீவனில் பங்குறுகிறோம், தேவனுடை தெய்வீக சுபாவத்தில் பங்குறுகிறோம், தேவனுடைய பரிசுத்தத்தில் பங்குறுகிறோம். இந்த எல்லா சொற்றொடர்ககளும் புதிய ஏற்பாட்டில் உள்ளன. Think of that. கிறிஸ்துவில் நாம் பங்குறுகிறோம், தேவனுடைய தெய்வீக சுபாவத்தில் பங்குறுகிறோம், தேவனுடைய பரிசுத்தத்தில் பங்குறுகிறோம். நாம் மறுரூபமாவது அல்லது பரிசுத்தமாக்கப்படுவதென்பது தேவனுடைய பரிசுத்தத்திலேயே நாம் ஒவ்வொரு நாளும் அதிகமாய், அதிகமாய், அதிகமாய் பங்குறுவதே ஆகும். It is the very Holiness of God in which we are progressively and increasingly partaking. அதைத்தான் நாம் Sanctification அல்லது transformation என்று சொல்லுகிறோம். பரிசுத்த ஆவியானவர் நம்முடைய வாழ்க்கையிலே சும்மா இல்லை.
“ஜென்ம சுபாவமான மனிதன் தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ள மாட்டான். The natural man does not receive the things of the Spirit of God.” ஜென்ம சுபாவம். இயற்கையான சுபாவம். இயற்கையான மனிதன், The Soulish Man. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய மக்கள் பரிசுத்தமாகுதலில் பங்குறுவதற்கு, படிப்படியாய் முன்னேறி பரிசுத்தமாக்கப்படுவதற்கு, ஒரு திட்டவட்டமான வழியை வைத்திருக்கிறார். ஒரு சுருக்கமான சொல்லில் அதைச் சொல்வதானால், அதற்குப் பெயர் சிலுவை. பரிசுத்த ஆவியானவர் தேவனுடைய மக்களைப் பரிசுத்தமாக்குவதற்கு தெரிந்துகொள்கிற, பயன்படுத்துகிற வழியை புதியஏற்பாடு சிலுவை என்றழைக்கிறது. இதைப்பற்றிய ஆழமான புரிந்துகொள்ளுதல் நம்மிடத்தில் இன்னும் வேண்டும். சிலுவை என்பது ஒரு சின்னமோ அல்லது குறியோ மட்டுமில்லை. “சிலுவை நிழலில் வந்திருக்கிறோம்” என்று சொல்லுவார்கள். சில பேர் “சிலுவையின் அடியில் வந்திருக்கிறோம்” என்று சொல்லுவார்கள். இப்படிப்பட்ட கவிதை நயம் பொருந்தின வார்த்தைகளை நான் குறிப்பிடவில்லை. “நீங்கள் கவிதை நயம் பொருந்தின வார்த்தைகளைப் பயன்படுத்துகிறீர்கள்,” என்று நான் அவர்களைக் கண்டனம் பண்ணவில்லை.
சிலுவை என்பது ஒரு வழி. தேவனே இந்தச் சிலுவையை நம்முடைய வாழ்க்கையிலே பிரயோகிக்கும்போது, அதை நாம் சிட்சை என்று சொல்லலாம். நாமே சிலுவையை நம்முடைய வாழ்க்கையில் பிரயோகிக்கும்போது அதை பயிற்சி என்று சொல்லலாம். நமக்குமேல் நம்மை நடத்துகின்றவர்கள் சிலுவையை நம்மேல் பிரயோகிக்கும்போது அதை நாம் கீழ்ப்படிதல் என்று சொல்லலாம்.
ஆகவே, சிலுவை தேவனுடைய பரிசுத்தமாக்குதலில் பங்குபெறுவதற்கான, பங்குறுவதற்கான, வழி மூன்று குறிப்புக்களாக விளக்க நான் முயல்கிறேன்.
ஒன்று, தேவனுடைய சிட்சை. இரண்டு நமக்கு நாமே எடுத்துக்கொள்கிற சிட்சை. மூன்று ஆவிக்குரிய நடத்துகிறவர்களுடைய சிட்சை.
இந்த மூன்றிலுமே தேவனுடைய மக்கள் குறைவுபடுகிறார்கள். சிலுவையைப்போலவே சிட்சை என்பதும் ஒரு ஆழமான வார்த்தை. இன்றைக்கு அந்த ஆழமான வார்த்தையினுடைய எல்லா கனபரிமாணங்களையும் முடித்துவிடப் போவதில்லை. ஆனால் இந்த மூன்று குறிப்புக்களையும் மட்டும் சுருக்கமாய் சொல்லிவிடுகிறேன்.
எபிரேயர் 12 அம் அதிகாரம் 5 முதல் 14 ஆம் வசனங்களை நீங்கள் பொறுமையாக வாசிக்க வேண்டும். “அன்றியும்: என் மகனே, கர்த்தருடைய சிட்சையை அற்பமாக எண்ணாதே, அவரால் கடிந்துகொள்ளப்படும்போது சோர்ந்துபோகாதே. கர்த்தர் எவனிடத்தில் அன்புகூருகிறாரோ அவனை அவர் சிட்சித்து, தாம் சேர்த்துக்கொள்ளுகிற எந்த மகனையும் தண்டிக்கிறார் என்று பிள்ளைகளுக்குச் சொல்லுகிறதுபோல உங்களுக்குச் சொல்லியிருக்கிற புத்திமதியை மறந்தீர்கள். நீங்கள் சிட்சையைச் சகிக்கிறவர்களாயிருந்தால் தேவன் உங்களைப் புத்திரராக எண்ணி நடத்துகிறார்; தகப்பன் சிட்சியாத புத்திரனுண்டோ? எல்லாருக்கும் கிடைக்கும் சிட்சை உங்களுக்குக் கிடையாதிருந்தால் நீங்கள் புத்திரராயிராமல் வேசிப்பிள்ளைகளாயிருப்பீர்களே. அன்றியும், நம்முடைய சரீரத்தின் தகப்பன்மார்கள் நம்மைச் சிட்சிக்கும்போது, அவர்களுக்கு நாம் அஞ்சி நடந்திருக்க, நாம் பிழைக்கத்தக்கதாக ஆவிகளின் பிதாவுக்கு வெகு அதிகமாய் அடங்கி நடக்கவேண்டுமல்லவா? அவர்கள் தங்களுக்கு நலமென்று தோன்றினபடி கொஞ்சக்காலம் சிட்சித்தார்கள்; இவரோ தம்முடைய பரிசுத்தத்துக்கு நாம் பங்குள்ளவர்களாகும்பொருட்டு நம்முடைய பிரயோஜனத்துக்காகவே நம்மைச் சிட்சிக்கிறார். எந்தச் சிட்சையும் தற்காலத்தில் சந்தோஷமாய்க் காணாமல் துக்கமாய்க் காணும்; ஆகிலும் பிற்காலத்தில் அதில் பழகினவர்களுக்கு அது நீதியாகிய சமாதான பலனைத் தரும். ஆகையினால், நெகிழ்ந்த கைகளையும் தளர்ந்த முழங்கால்களையும் நீங்கள் திரும்ப நிமிர்த்தி, முடமாயிருக்கிறது பிசகிப்போகாமல் சொஸ்தமாகும்படிக்கு, உங்கள் பாதங்களுக்கு வழிகளைச் செவ்வைப்படுத்துங்கள். யாவரோடும் சமாதானமாயிருக்கவும், பரிசுத்தமுள்ளவர்களாயிருக்கவும் நாடுங்கள்; பரிசுத்தமில்லாமல் ஒருவனும் கர்த்தரைத் தரிசிப்பதில்லையே.”
அருமையானவர்களே, தயவுசெய்து நன்றாய்க் கவனியுங்கள்; 45 நிமிடத்தை எப்படியாவது கடத்த வேண்டும் என்பதற்காகப் பேசுகிறவன் நானல்ல. 45 நிமிடம் கதாகாலச்சேபம் பண்ண முடியும். எனக்கு அதிலே பெரிய ஈடுபாடு இல்லை.
தேவன் தம்முடைய பிள்ளைகளை சிட்சிக்கிறார் என்று இந்தப் பகுதி கூறுகிறது. நீங்கள் 5 முதல் 14 வரை மட்டும் வாசித்தால் போதாது. நீங்கள் 12 ஆம் அதிகாரம் 1 முதல் அந்த அதிகாரத்தையே வாசிக்க வேண்டும். எப்போதுமே சுருக்கமான ஒரு செய்தியைக் கேட்கும்போது, இருபது வசனங்களை மேற்கோள் காட்டுகிறார்கள் என்றால் அந்த 20 வசனங்களை மட்டும் வாசித்து நிறுத்திவிடக்கூடாது. பெரும்பாலும் ஒரு வசனத்தை வாசிக்கும்போது 5முதல் 10 வசனங்கள் அதன் சூழமைப்பாக contextஆக இருக்கலாம். எனவே, நாம் அவைகளை எடுத்து வாசிக்க வேண்டும். அப்போது ஓர் இறையியல் கல்லூரியில் படிக்கின்ற மாணவன் எந்த அறிவடைவானோ அதைவிட உயர்ந்த அறிவை நாம் அடைவோம். That comes at a cost. வேதத்தை வெறுமனே மேற்கோள்கள் காட்டுகிற ஒரு புத்தகமாகப் பயன்படுத்தினால் நாம் ஒன்றும் பெரிய ஞானிகளாக மாறிவிடப் போவதில்லை. We have to immerse in God’s word.
எபிரேயர் நிருபத்தின் ஆசிரியர் “தேவன் சிட்சிக்கிறார்” என்று நீதிமொழியிலிருந்து ஒரு வசனத்தை மேற்கோள் காட்டுகிறார். “தகப்பன் சிட்சியாத புத்திரன் உண்டோ” என்று பழைய ஏற்பாட்டிலிருந்து ஒரு மேற்கோள் காட்டுகிறார்கள். எந்தத் தகப்பனும் தான் வளர்க்கிற மகன்களை, மகள்களை, பிள்ளைகளை சிட்சிப்பதுபோல தேவன் தம்முடைய பிள்ளைகளை சிட்சிக்கிறார். அவருடைய பரிசுத்தத்தில் நாம் பங்குபெற வேண்டுமென்றால் நாம் சிட்சிக்கப்பட வேண்டும்.
தமிழ் வார்த்தை ஒன்று நான் கண்டுபிடித்திருக்கின்றேன். நெறிப்படுத்துதல். கண்டிப்பது, கற்பிப்பது, பயிற்றுவிப்பது, பழக்குவிப்பது, போதிப்பது, திருத்துவது, கண்டனம்பண்ணுவது, மட்டுப்படுத்தவது, கட்டுப்படுத்துவது இப்படிப் பல வார்த்தைகளைக் கோர்த்துத்தான் இந்த சிட்சை அல்லது discipline என்கிற வார்த்தைக்கு வரமுடியும். நல்ல தமிழ் வார்த்தை நெறிப்படுத்துவது. The closest word I found was நெறிப்படு.
நம்முடைய இயற்கை, நம்முடைய கட்டமைப்பு இவைகளை தேவன் அறிவார். Our nature, our constitution, our character, இதை நான் பத்து, பன்னிரெண்டு வார்த்தைகளில் சொல்வேன். நம்முடைய சாய்வுகள், நம்முடைய வளைவுகள், நம்முடைய நாட்டங்கள், நம்முடைய தேட்டங்கள், நம்முடைய ஈர்ப்புகள், நம்முடைய இழுப்புகள் அப்படியே விட்டால் நான் எங்கு போய்ச் சேருவோம். அது நம் Constitution. இவைகளை தேவன் அறிவார்.
சங்கீதம் 139இல் நாம் வாசிப்பதுபோல நம்முடைய மிக நுணுக்கமான பகுதிகளை தேவன் அறிவார். ஆனால் நமக்குத் தெரியாது. உபாகமம் 8 ஆம் அதிகாரம் 2 முதல் 5 இந்த வசனங்களை நாம் அடிக்கடி மேற்கோள் காட்டியிருக்கிறோம். “உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிறுமைப்படுத்தும்படிக்கும், தம்முடைய கட்டளைகளை நீ கைக்கொள்வாயோ கைக்கொள்ளமாட்டாயோ என்று அவர் உன்னைச் சோதித்து, உன் இருதயத்திலுள்ளதை நீ அறியும்படிக்கும், உன்னை இந்த நாற்பது வருஷமளவும் வனாந்தரத்திலே நடத்திவந்த எல்லா வழியையும் நினைப்பாயாக. அவர் உன்னைச் சிறுமைப்படுத்தி, உன்னைப் பசியினால் வருத்தி, மனுஷன் அப்பத்தினால் மாத்திரம் அல்ல, கர்த்தருடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்பதை உனக்கு உணர்த்தும்படிக்கு, நீயும் உன் பிதாக்களும் அறியாதிருந்த மன்னாவினால் உன்னைப் போஷித்தார். இந்த நாற்பது வருஷமும் உன்மேலிருந்த வஸ்திரம் பழையதாய்ப் போகவும் இல்லை, உன் கால் வீங்கவும் இல்லை. ஒருவன் தன் புத்திரனைச் சிட்சிக்கிறதுபோல உன் தேவனாகிய கர்த்தர் உன்னைச் சிட்சிக்கிறார் என்று நீ உன் இருதயத்தில் அறிந்துகொள்வாயாக.” இந்த வசனங்களை வாசிக்கும்போது, நமக்கு மனம் விட்டு போகிறது. ஆனால் உண்மை என்னவென்றால், அந்த இஸ்ரயேல் மக்களைவிட நாம் எதிலும் வித்தியாசமானவர்களோ, உயர்ந்தவர்களோ, சிறந்தவர்களோ இல்லை. இஸ்ரயேல் மக்களுடைய வாழ்க்கையை நாம் பார்க்கும்போது, இந்த வசனங்களை வாசிக்கும்போது ஒரு கண்ணாடியிலேயே நம்முடைய வாழ்க்கையை பார்ப்பதுபோல் இருக்கிறது. எத்தனை முறை எத்தனை பரிசுத்தவான்கள் நமக்காகத் திறப்பின் வாசலிலே நின்று, “உக்கிரத்தை மாற்றிப்போடும், என்பெயரைக் கிறுக்கிப்போடும்,” என்று சொன்னார்களோ என்று எனக்குத் தெரியவில்லை. “உன் இருதயத்தை நீ அறிந்துகொள்ளும்படி நான் உன்னை சிட்சித்தேன்,” என்றே சொல்கிறார். அவர் அதை சிட்சை என்றே சொல்லுகிறார்.
40 வருடம் ஒரேஉணவு. உணவுக்காக அவர்கள் போராடுகிற போராட்டங்களைப் பாருங்கள். “இந்த உணவைச் சாப்பிட்டு எங்களுக்கு வெறுப்பாய் இருக்கிறது,” என்று சொல்கிறார்கள். வயிறு நிறைந்தால் மட்டும் போதாது. அது எப்படி இருக்க வேண்டும்? ருசியாக இருக்க வேண்டும். No monotony.
“இன்றைக்கும் இட்லியா?” நான் ஒரு பயிற்சிசெய்து பார்க்க விரும்புகிறேன். ஒரே உணவை மூன்று வேளையும் 40 நாள்கள் சாப்பிட்டுப் பார்க்க வேண்டும். ஒரு காலம் வாய்க்கும்போது, when there is favorable time, I want to undertake this exercise. வயிறு நிறைகிறது. ஆனால், எப்படிப்பட்ட உணவு? ஒரே உணவு. கறி என்றுகூட வைத்துக்கொள்வோமே; மூன்று வேளையும் கறிதான். ஆனால், 40 நாள்களுக்குஒரே கறி. எப்படியிருக்கும்? “உன் இருதயத்தை நீ அறியும்படிக்கு,” என்று எழுதியிருக்கிறது. நம்முடைய இருதயம் நமக்குத் தெரியாது? ஒவ்வொருவரும் தன்னைப்பற்றி மிக உயர்வாகவே கருதுகிறார்கள்.
தேவன் முதலாவது தன்னுடைய வார்த்தையைக்கொண்டு நம்மை சிட்சிக்கிறார் என்று சங்கீதம் 50:17இல் எழுதியிருக்கிறது. “சிட்சையை நீ பகைத்து, என் வார்த்தைகளை உனக்குப் பின்னாக எறிந்துபோடுகிறாய்”. தேவனாயிருந்தாலும் சரி, மூத்தவர்களாய் இருந்தாலும் சரி, பெற்றோர்களாயிருந்தாலும் சரி, ஆசிரியர்களாய் இருந்தாலும் சரி எப்பொழுதும் முதலாவது போதனையின்மூலமாகத்தான் சிட்சிக்கிறார்கள், நெறிப்படுத்துகிறார்கள். “இப்படிச் செய்ய வேண்டும், இப்படிச் செய்யக்கூடாது, நேரத்திற்கு வரவேண்டும், நேரந்தாழ்த்தி வரக்கூடாது,” என்று ஒரு ஆசிரியர் தன்னுடைய மாணவர்களுக்குச் சொல்லுகிறார். அது சிட்சை. ஆனால் பொதுவாக நாம் வார்த்தைக்கு அவ்வளவு சீக்கிரத்தில் செவிகொடுக்க மாட்டோம். ஏனெனில் நம் இயற்கை அவ்வளவு வலுவானது, நம் உள்ளமைப்பு, கட்டமைப்பு அவ்வளவு வலுவானது.
நம்முடைய முழுக்கதையையும் எடுத்துக்கொள்வோம். ஒருவன் 40 வருடங்களாய்ப் ஒரே போக்கில் போய்க் கொண்டிருக்கிறான்ன். ஒரு வார்த்தையின்முலமாக அவனுடைய கட்டமைப்பையும், தன்மையையும், குணத்தையும் மாற்றிவிடுவது சற்றுக் கடினம். “அடிமையானவன் வார்த்தைகளினாலே அடங்கான்; அவைகளை அவன் அறிந்தாலும் உத்தரவுகொடான்.” இது நீதிமொழிகள் 29:19. வெறுமனே வார்த்தைகளினால் ஒருவனை மாற்றிவிட முடிவதில்லை. அதனால், என்ன தேவைப்படுகிறது? சிட்சை. இது நீதிமொழிகளின் வார்த்தை.
எனவே வாழ்க்கை சூழ்நிலைகள் மூலமாக தேவன் நம்மை சிட்சிக்கிறார். அது தான் நான் சொல்ல விரும்புகிற பாடம், சொல்ல விரும்புகிற கருத்து. வெறுமனே வார்த்தைகளைக்கொண்டு மட்டும் தேவன் நம்மை சிட்சிப்பதும், நெறிப்படுத்துவதும் இல்லை. நம்முடைய வாழ்க்கை சூழ்நிலைகளைக்கொண்டு அவர் நம்மை சிட்சிக்கிறார், நம்மை நெறிப்படுத்துகிறார். காரணம் நம்முடைய இயற்கை. சில வேளைகளில் வார்த்தையின் சிட்சையை நாம் ஏற்றுக்கொள்கிறோம். சில வேளைகளில் வார்த்தையின் சிட்சையை, வார்த்தைகளால் தரப்படுகிற நெறிப்படுத்தலை, நாம் ஏற்றுக்கொள்வதில்லை.
வகுப்பிற்கு நேரத்திற்கு வரவேண்டும் என்று என்னுடைய மாணவனுக்குச் சொல்லுகிறேன். அவன் வரவில்லை. கடைசியாக, பல்கலைக்கழகத் தேர்வு எழுதும் தருவாயில் Lack of attendance வருகிறது. அந்தப் பருவத்தில் தெரிவு எழுதக்கூடாது என்று நிறுத்துகிறார்கள். இதை நாம் தண்டனை என்றும் சொல்லலாம். ஆனால் நான் சொன்னதுபோல சிட்சை அல்லது நெறிப்படுத்துதலில் பல காரியங்கள் அடங்கியுள்ளன. It is an extreme situation. “என்னைப்போல இருபது பேருக்கு attendance குறைவாக இருக்கிறது. அதனால் நான் தப்பித்துக்கொள்வேன்,” என்பது அவனுடைய கருத்து. பத்தொன்பது பேர் தப்பித்துக்கொண்டார்கள். இவனை நிறுத்திவிட்டார்கள். நடக்கிறது அப்படி.
அடிமையானவன் வெறுமனே வார்த்தையின் நெறிப்படுத்துதலை ஏற்றுக்கொள்வதில்லை. அவனுக்கு சூழ்நிலைகளைக்கொண்டு அவனை நெறிப்படுத்ததல் அவசியமாக இருக்கிறது. அதைத்தான் நீதிமொழிகள், “பிள்ளையின் நெஞ்சில் மதியீனம் ஒட்டியிருக்கும்,” என்று சொல்லுகிறது. எந்தப் பிள்ளை? நாமெல்லோருமே தேவனுடைய பிள்ளைகள்தான். அந்த வார்த்தை ரொம்பக் கடினமானது. மதியீனம் ஒட்டியிருக்கும், “தண்டனையின் பிரம்பு அதை அகற்றும்”. நம்முடைய வாழ்க்கையிலே போதுமான சிடை்சகளை தேவன் அனுமதிப்பது மட்டுமல்ல, அவரே அமைப்பார். இதை நீங்கள் நன்றாய் குறித்துக்கொள்ள வேண்டும். நம்முடைய உள்ளான நிலையையும், தன்மையையும், கட்டமைப்பையும் தேவன் அறிந்ததினால், அதற்கு ஏற்றவாறு நாம் அவருடைய பரிசுத்தத்தில் பங்குபெறுவதற்கு நம்முடைய வாழ்க்கையிலே சிட்சைகளை அமைப்பார்.
அதை நாம் சிலுவை என்று சொல்லுகிறோம். அது உடல் நலக்குறைவாக இருக்கலாம், பொருளாதார குறைவாக இருக்கலாம், குடும்பச் சூழ்நிலையாக இருக்கலாம், வேலைச் சூழ்நிலையாக இருக்கலாம். தேவன் தம் மக்கள் அனைவருக்கும் இப்படிப்பட்ட சிட்சைகளை அனுமதிக்கிறார். அப்போஸ்தலனாகிய பவுல் தன்னுடைய உடல்நலக்குறைவை “என் உடலிலே கொடுக்கப்பட்ட முள்”என்று சொல்கிறார். ஆனாலும் அதை அவர் அடிபணிந்து ஏற்றுக்கொள்கிறார். பிலிப்பியர் 4 ஆம் அதிகாரத்திலே “என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை,” என்கிறார். அப்படியானால், அவர் குறைச்சலிலே இருந்தார். ஆனால் குறைச்சல் என்கிற சிட்சைக்கு, சிலுவைக்கு, தன்னை உட்படுத்தி, பணிந்தடங்கி, கீழ்ப்படிந்து வாழ அப்போஸ்தலனாகிய பவுல் கற்றுக்கொண்டார்.
2 கொரிந்தியர் 4 ஆம் அதிகாரத்தில், “கர்த்தராகிய இயேசுவினுடைய ஜீவனும் எங்கள் சரீரத்திலே விளங்கும்படிக்கு, இயேசுவின் மரணத்தை எப்பொழுதும் எங்கள் சரீரத்தில் சுமந்து திரிகிறோம்,” என்று சொல்லுகிறார். என்றைக்கோ ஒரு நாள் சிலுவையைச் சுமப்பது இல்லை. “We go about carrying the death of Jesus in our body.” We go about என்றால் என்ன அர்த்தம்? 24 மணி நேரமும், 7 நாட்களும், 365 நாட்களும் சிலுவையைச் சுமக்கிறோம் என்று பொருள். அதிலிருந்து எந்த ஒய்வு நாளும், இளைப்பாறுதலும் இல்லை. We go about carrying the death of Jesus in our body, that the life of Jesus may also be manifested in our body. அதனால், “ஓ ! கிறிஸ்தவ வாழ்க்கை இப்படிப்பட்ட வாழ்க்கையா!” என்று வருந்த வேண்டாம்.
எபிரேயர் 12 ஆம் அதிகாரம் 2ஆம் வசனத்தில் வாசிப்பதுபோல “அவர் தமக்குமுன் வைத்திருந்த சந்தோஷத்தின்பொருட்டு, அவமானத்தை எண்ணாமல், சிலுவையைச் சகித்து, தேவனுடைய சிங்காசனத்தின் வலதுபாரிசத்தில் வீற்றிருக்கிறார்.” ஒரு மாபெரும் மகிமையான சந்தோஷம் இருக்கிறது. நித்தியத்தில் தரப்படும் சந்தோஷம் இல்லை, இந்த உலகத்திலேயே தேவனுடைய சிட்சைக்கு தங்களை உட்படுத்திக் கீழ்ப்படிபவர்களை தேவன் ஆசீர்வதிக்கிறார். என்றைக்கோ, நித்தியத்திலே தரப்போகிற சந்தோஷத்திற்காக தேவன் இன்றைக்கு நம்மை சிட்சித்து சிலுவைக்கு உட்படச் சொல்லவில்லை.
இரண்டாவது தேவன் நம்மை சிட்சிப்பதுதவிர நம்மை நாமே சிட்சித்துக் கொள்வது என்று ஒன்று உண்டு. இதை பண்டைய பரிசுத்தவான்கள் mortification என்று சொல்லுவார்கள் அல்லது Spiritual discipline, Spiritual exercise என்றும் சொல்வதுண்டு. ரோமன் கத்தோலிக்க சபை வரலாற்றிலே இது அதிகமாக உண்டு. அவர்கள் ஓர் அற்றத்துக்கெல்லாம் போவார்கள். முடிகளாலான சட்டை அணிந்துகொள்வார்கள் அல்லது தங்களைத் தாங்களே சாட்டைகளால் அடித்துக்கொள்வார்கள். இதெல்லாம் ரொம்ப extreme. அவர்களை விட்டுவிடுவோம். ஆனால், எல்லாப் பரிசுத்தவான்களும் ஒரு ஆவிக்குரிய சிட்சையை, ஆவிக்குரிய பயிற்சியை, ஆவிக்குரிய நெறிப்படுத்துதலை, தங்களுக்குத் தாங்களே வருவித்துக்கொள்வார்கள். நம்முடைய நாவைப்பற்றி, தொண்டையைப் பற்றி, கண்களைப்பற்றி, இருதயத்தைப்பற்றியெல்லாம் எச்சரிப்புக்ளை நாம் தேவனுடைய வார்த்தையில் வாசிக்கிறோம். நான் அதை சொல்லப்போவதில்லை. “என் உதடுகளுக்கு நான் காவல் வைத்தேன்.” “என் கண்களோடு நான் உடன்படிக்கைப்பண்ணிக்கொண்டேன்.” “உன் தொண்டையிலே கத்தியை வை.” இதையெல்லாம் நாம் எப்படி எடுத்துக்கொள்கிறேம்? எல்லாவற்றிற்கும்மேலாக மத்தேயு 5 ஆம் அதிகாரத்தில், “உன் வலது கண் உனக்கு இடறலுண்டாக்கினால், அதைப் பிடுங்கி எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும். உன் வலது கை உனக்கு இடறலுண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்து போடு; உன் சரீரம் முழுவதும் நரகத்தில் தள்ளப்படுவதைப்பார்க்கிலும், உன் அவயவங்களில் ஒன்று கெட்டுப்போவது உனக்கு நலமாயிருக்கும்,” என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்லுகிறார்.
இதன் பொருள் என்ன? சில சிட்சைகளை, சில நெறிப்படுத்துதல்களை, நமக்கு நாமே வைத்துக்கொள்ள வேண்டும் என்பது தான் இதன் பொருள். தேவன் என்னுடைய கண்ணைப் பிடுங்கி எடுத்து, “உன் பார்வை தவறாக இருக்கிறது, உன்னை நான் சிட்சிப்பதற்காக ஒரு கண்ணை நான் அவித்துப்போடப் போகிறேன், எடுத்துப்போடப்போகிறேன்,” என்று சொல்வதில்லை. 1 கொரிந்தியர் 11 ஆம் அதிகாரத்திலே இப்படி ஒரு வசனம் உண்டு. அது பந்தியைப் பற்றி வருகிறது. I am slightly quoting out of context. ஆனால் அதில் சொல்கிறார் “நம்மை நாமே நிதானித்து அறிந்தால் நாம் நியாயந்தீர்க்கப்படோம். நாம் நியாயந்தீர்க்கப்படும்போது உலகத்தோடே ஆக்கினைக்குள்ளாகத் தீர்க்கப்படாதபடிக்கு, கர்த்தராலே சிட்சிக்கப்படுகிறோம்,” என்று எழுதியிருக்கிறது. கர்த்தருடைய சரீரம் இன்னதென்று நிதானிக்காததால் “உங்களில் அநேகர் பலவீனரும் வியாதியுள்ளவர்களுமாயிருக்கிறார்கள்; அநேகர் நித்திரையும் அடைந்திருக்கிறார்கள்,” என்று எழுதுகிறார். மிகக் கடினமான பகுதி. இதைவைத்து, “நீ ஒழுங்காக இந்தப் பந்தியில் பங்குபெறவில்லையென்றால் உனக்குப் பலவீனம் உண்டு, வியாதி உண்டு, செத்துப் போய்விடுவாய்” என்று மக்களைப் பயமுறுத்தலாம். அந்த உபதேசம் மிகவும் ஆபத்தான உபதேசம்.
ஆனால் இதில் நம்மை நாமே நிதானித்தல் என்ற ஒரு நல்ல குறிப்பு இருக்கிறது. If we discern ourselves, if we judge ourselves, we will not be judged. இது எதைக் குறிக்கிறது என்றால், நாம் நம்மை என்ன செய்ய முடியும் என்றால் நிதானிக்க முடியும். என்னுடைய நிலை என்ன, என் கண்கள் எப்படிப்பட்டது, என்னுடைய நாவு எப்படிப்பட்டது, என்னுடைய தொண்டை எப்படிப்பட்டது, என்னுடைய இருதயம் எப்படிப்பட்டது என்பதை தேவன் மட்டுமல்ல, யாரும் தீர்க்கலாம்? நானும் தீர்க்கலாம். எப்படியாவது நம்மில் ஒரு குற்ற உணர்ச்சியைச் சுமத்தி விடுவதைப்பற்றி நான் பேசவில்லை.எடுத்துக்காட்டாக நான் ஒரு கல்லூரியில் வேலை செய்கிறேன். ஒரு சக ஆசிரியரையோ, ஆசிரியையோ பார்க்கும்போது நகைச்சுவையாக பேசுவதென்றால் நமக்கு இயற்கையாகவே வரும். ஏனென்றால் நம் நிலைமை நமக்குத் தெரிகிறது. 30 நொடிகளிலே அந்த இடத்தை விட்டுப் போகவேண்டிய நான் 5 நிமிடம் செலவழிக்கிறேன். ஒரு தேநீர் குடிக்கப்போனால் 20 நிமிடம் போகிறது. 20 நிமிடம் மட்டும் போகவில்லை’ தேநீர் குடிக்கும்போது நாம் பேசுகிற உரையாடல்கள் எல்லாம் நமக்குப் பக்திவிருத்தியும், கட்டியெழுப்புவதுமான உரையாடல்கள் இல்லை. பக்திவிருத்தி அடையாமல்போனால்கூட பரவாயில்லை. அது நம்மைக் கெடுக்கின்ற உரையாடல்களாகக் கூட இருக்கலாம். கல்லூரி முதல்வரைப்பற்றி, நிர்வாகத்தைப்பற்றி, பல துறைகளைப்பற்றி பேச வேண்டும். நான் இப்படிச் சொல்லுவதைக் கேட்கும்போது, “brother, இப்படியெல்லாம் பேசவில்லையென்றால் வாழ்க்கையில் நாம் எப்படித்தான் வேலைசெய்து வாழ முடியும்? நீங்கள் சொல்வதைப் பார்த்தால் நாங்கள் மெளனசாமியார் ஆக வேண்டும் போலிருக்கிறதே!” என்று கேட்கக்கூடும். நான் கேட்கிறேன், “மௌன சாமியார் ஆனால்தான் என்ன? என்ன இழந்துவிடப்போகிறோம்?” என்னுடைய நிலை, என்னுடைய நாவு, எனக்கு கட்டுப்பட்டதில்லை என்று தெரிவதால், நான் என்னுடைய உதடுகளுக்குக் காவல் வைத்துக்கொள்கிறேன். “நான் இன்றைக்குக் காபி குடிக்கப்போவேன், ஆனால் நான் ஒன்றும் தப்பிதமாய் பேசமாட்டேன்,” என்று நான் ஒரு காவல் வைத்துக்கொண்டு போகிறேன். ஆனால் போய்வந்த பிறகு பார்க்கிறேன்; நான் தப்பிதமாய் நிறைய காரியங்களைப் பேசியிருக்கிறேன். இப்போது அடுத்து என் நிலைமை என்ன? இன்னும் கொஞ்சம் மேலே போய் என்னை சிட்சிக்கிறேன். எப்படி சிட்சிக்கிறேன்? “இனிமேல் காபி குடிக்கவே போகக்கூடாது.”
ஒருவர் வருகிறார். “sir, வாங்க, காபி குடிக்கப் போகலாம்,” என்று கூப்பிடுகிறார். “I am very busy.” “பத்து நிமிடத்தில் என்ன ராக்போகிறது? வாங்க” என்று வற்புறுத்துகிறார். “sir, I am very busy.” “ரொம்பத்தான் பிகு பண்ணுகிறீர்கள்,” என்று அவர் சொல்லவில்லை, ஒருவேளை நினைத்திருக்கலாம். “எனனமோ ஊரில் இல்லாத busy இவருக்கு,” என்றுகூட நினைத்திருக்கலாம். ஆனால் busy அல்ல காரணம், என்னுடைய நிலை எனக்குத் தெரியும்.
இவ்வாறு, தேவனுடைய வார்த்தையிலே போதுமான அளவிற்கு நமக்குப் பாடங்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. காலையில் எழுந்து ஜெபிப்பது ஒரு பயிற்சி. ஜெபிக்காவிட்டால் என்ன ஆகிவிடும் என்றால் நறுமணம் வீசுகின்ற பூவை ஒருவன் தொட்டால், அந்த நறுமணமானது அந்த நாள் முழுவதும் இருக்கும்; அதுபோல குறைந்தபட்சம் தேவனை காலையில் நாம் தொடுவோமானால் அவருடைய முகத்தின் ஒளி நம்மேல் ஒளிருமானால், அவருடைய அமர்ந்த மெல்லிய சத்தத்தை நாம் கேட்போமானால், அவருடைய துல்லியமான தொடுதல் நம்மைத் தீண்டுமானால், அவருடைய நறுமணம் நம்மேல் வீசுமானால், அந்த நாள் முழுவதும் அது ஒருவிதமான தாக்கத்தை நம்மேல் உண்டாக்கும். எனக்கு அது தேவைப்படுகிறது. இதைப் பொறுத்தவரை எல்லாருக்கும் அது தேவைப்படுகிறது. கூடுதலாகவோ, குறைவாகவோ இருக்கலாம்.
1 கொரிந்தியர் 6: 12, 10:23 ஐ மட்டும் நீங்கள் வாசிக்க வேண்டும். இந்த நமக்கு நாமே இட்டுக்கொள்கிற நெறிப்படுத்துதல், சிட்சையைப்பற்றி இந்த இரண்டு வசனங்களும் முக்கியமான வசனங்கள். 1 கொரிந்தியர் 6;12, 10: 23 முக்கியமான குறிப்பு. “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் நான் ஒன்றிற்கும் அடிமைப்படமாட்டேன்.” காபி குடிக்கப்போக எனக்கு அதிகாரம் உண்டு. ஆகிலும் எல்லாம் தகுதியாய் இராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. ஆகிலும் ஒன்றிற்கும் நான் அடிமைப்பட மாட்டேன். நான் காபி குடிக்கப்போகிற பழக்கம் உள்ளவன் அல்ல. ஆனால் ஒரு மாதம் போனேன். அதற்கு அப்புறம் என்னவாகி விட்டதென்றால், ஒரு குறிப்பிட்ட நேரம் வந்தவுடன், ஒரு urge வந்துவிடும். இது நானே பழகிக்கொண்டது. “இது தீய பழக்கம் ஒன்றுமில்லை,” என்று நீங்கள் சொல்லலாம். “இது என்ன தீய பழக்கமா?” தேவனுடைய மக்கள் இப்படித்தான் வாக்குவாதம் செய்வார்கள். “எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் எல்லாம் தகுதியாய் இராது. எல்லாவற்றையும் அனுபவிக்க எனக்கு அதிகாரம் உண்டு. ஆனால் ஒன்றிற்கும் நான் அடிமைப்பட்டவன் அல்ல.” ஒரு காரியம் என்னையோ மற்றவர்களையோ கட்டியெழுப்பாத்து என்றால் அதற்கு நான் அடிமைப்பட மாட்டேன். இது என்னை அடிமைப்பட நடத்துமென்றால் முதல் படியிலேயே அதை நிறுத்தி விடுவது நல்லது.
10:23ஐயும் வாசிப்போம். “எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் தகுதியாயிராது; எல்லாவற்றையும் அநுபவிக்க எனக்கு அதிகாரமுண்டு, ஆகிலும் எல்லாம் பக்திவிருத்தியை உண்டாக்காது.” ”அப்படியானால் வாழ்க்கையில் என்னதான் சந்தோஷப்படுவது, ஒரு காபி குடிக்கிறதைப்பற்றி இவ்வளவு fuss பண்ணுகிறீர்கள் நீங்கள்,” என்ற எண்ணம் வரும். நான் இதை உங்களுக்குச் சட்டமாகச் சொல்லவில்லை. தயவுசெய்து காபி குடிக்கிற சகோதர, சகோதரிகளெல்லாம் குற்ற உணர்ச்சிக்கு ஆளாக வேண்டும் என்பதற்காக நான் இதை உங்களுக்குச் சொல்லவில்லை. “அதிகக் கல்வி உனக்குப் பைத்தியம் உண்டாக்கிற்று,” என்று சொல்வதுபோல் “அதிக பக்தி உமக்குப் பைத்தியம் உண்டாக்குகிறது சகோதரனே” என்று நீங்கள் சொல்வீர்கள்.
இது புதிய ஏற்பாடு என்று என்னால் உங்களுக்கு அறுதியிட்டுச் சொல்ல முடியும். தேவன் போதுமான மகிழ்ச்சியையும், உவகையையும், களிப்பையும், இன்பத்தையும் நமக்குத் தருகிறார். அடிக்கடி மேற்கோள் காட்டுகிற வசனம், “அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர்” (சங்கீதம் 4:7). இது தாவீது சொல்கிற பக்தி நிறைந்த பொய் அல்ல. நான் என்னைக் கொஞ்சம் ஒறுத்து, வருத்து, மறுத்து, நிறுத்தேன். நிறு என்றால் எடைபோட்டுப்பார்ப்பது. மறு என்றால் Deny. ஒறு என்றால் கட்டுப்படுத்துவது, மட்டுப்படுத்துவது, எல்லைபோடுவது, வருத்துவது, சுருக்குவது.
மூன்று காபியை இரண்டு காபியாகக் குறைத்துப்பாருங்கள். இரண்டு காபியை ஒன்றாய் குறைத்துப் பாருங்கள். இதினால் நீங்கள் பரிசுத்தமாகப் போகிறீர்களா? நீங்கள் கொசு இல்லாதபடி வடிகட்டி ஒட்டகத்தை விழுங்குகிறவர்களாக இருக்கிறீர்கள். மூன்று காபி இல்லாதபடி இரண்டு காபியாக குறைத்து, வேற major matterல் நீங்கள் பாவம் பண்ணப்போகிறீர்கள். அந்த எச்சரிப்பையும் நான் அறிவேன். நன்றாய் கவனிக்க வேண்டும். தேவனுடைய சிட்சைக்குக் கீழ்ப்படியாத ஒரு மனிதன் தனக்குத் தானே இட்டுக்கொள்கிற ஒரு சிட்சை அதிக பயனுள்ளது அல்ல. இதை நன்றாய் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய குடும்பத்திலும், நம்முடைய வேலைபார்க்கிற இடத்திலும் , நம்முடைய சமுதாயத்திலும், நம்முடைய ஆவி, ஆத்துமா, உடலிலும் தேவனே ஏற்படுத்துகிற, தேவனே அமைக்கிற சிட்சைகளுக்கு, பணிந்து, அடங்கி கீழ்ப்படியாத ஒரு மனிதன், தனக்குத் தானே இட்டு கொள்கிற சிட்சைகளினாலே பெரிய பலன் இல்லை. முதலாவது தேவன் தருகிற சிட்சை. இரண்டாவது என்னுடைய நிலையை நிறுத்துப்பார்த்து, சில காரியங்களை நான் மறுக்கிறேன். ஆத்துமாவை மறுத்துப்பாருங்கள். துடித்துப்போவார்கள். “இதனால் என்ன நட்டம் brother?” என்று கேட்பார்கள். அதனால்தான் பவுல் இது பக்திவிருத்தியை உண்டாக்குமா?” என்று கேட்கிறார். “எல்லாவற்றையும் அனுபவிக்க உங்களுக்கு அதிகாரம் உண்டு, ஆனால் எல்லாம் தகுதியாய் இராது” என்பதைச் சொல்லிவிட்டு நாம் என்ன சொல்ல வேண்டும். “இதை ஏற்க மனதாய் இருந்தால் நீ ஏற்றுக் கொள்ளலாம்,” என்று அண்ணகர்களைப்பற்றி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொல்வதுபோல, “He who has the ability to receive it, let him receive it,” என்று சொல்லியிருக்கலாம். ஆனால், பவுல் அப்படிச் சொல்லவில்லை.
நம்முடைய தேவனுக்கும், மற்ற மனிதர்களுக்கும், நம்முடைய பயன்பாடு இதைப் பொறுத்தது.
கடைசியாக, 1 கொரிந்தியர் 9ஆம் அதிகாரம் 24 முதல் 27ம் வசனங்களைக் குறித்துக்கொள்ளுங்கள். “பந்தயச் சாலையில் ஓடுகிறவர்களெல்லாரும் ஓடுவார்கள்; ஆகிலும், ஒருவனே பந்தயத்தைப் பெறுவானென்று அறியீர்களா? நீங்கள் பெற்றுக்கொள்ளத்தக்கதாக ஓடுங்கள். பந்தயத்திற்குப் போராடுகிற யாவரும் எல்லாவற்றிலேயும் இச்சையடக்கமாயிருப்பார்கள். அவர்கள் அழிவுள்ள கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறார்கள், நாமோ அழிவில்லாத கிரீடத்தைப் பெறும்படிக்கு அப்படிச் செய்கிறோம். ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன்; ஆகாயத்தை அடிக்கிறவனாகச் சிலம்பம்பண்ணேன். மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்.”
How to read the bible for all its worth என்ற தன் புத்தகத்தில் 1 கொரிந்தியருக்கு Gordon D. Fee, நான் கொடுக்கிற இந்த பொருள் விளக்கத்திற்கு அவர் உடன்படவில்லை. நன்றாய்க் கவனிக்க வேண்டும். சில காரியங்களில் நாம் ஒரு நிலைப்பாடு எடுக்கும்போது, நம்மைவிட அறிஞர்களும், சான்றோர்களும், இதைவிட வேறுபாடான நிலைப்பாடு உடையவர்கள் என்பதை அறிந்திருக்க வேண்டும். அறிந்தும், நான் என்னுடைய நிலைப்பாட்டை இப்பொழுது மாற்றுவது இல்லை. எந்தச் சூழமைப்பிலே, எந்தப் பின்னணியிலே, எந்தப் பின்புலத்திலே பவுல் இதை எழுதுகிறார் என்பது ஒருபுறம் இருக்க, கண்டிப்பாக “மற்றவர்களுக்குப் பிரசங்கம்பண்ணுகிற நான்தானே ஆகாதவனாய்ப் போகாதபடிக்கு, என் சரீரத்தை ஒடுக்கிக் கீழ்ப்படுத்துகிறேன்,” என்கிற உண்மை இருக்கிறது. இதைப்பற்றி நீங்கள் சிந்தித்துப்பாருங்கள்.
முதலாவது தேவனுடைய சிட்சை; இதற்குப் பெயர் சிலுவை, இரண்டாவது நமக்கு நாமே இட்டுக்கொள்கிற சிட்சை; இதற்குப் பெயர் பயிற்சி. மூன்றாவது நடத்துகிறவர்கள் தருகிற சிட்சை; இதற்குப் பெயர் கீழ்ப்படிதல். கீழ்ப்படிதல்கூட சரியான வார்த்தை இல்லை. கீழ்ப்படிதல் என்றால் obedience. ஆனால் நான் பயன்படுத்துகிற வார்த்தை submission. பணிந்தடங்குதல்.
இது இன்றைய தேவனுடைய மக்களிடத்திலே மிகவும் குறைவாக காணப்படுகிற ஒன்று. 16 ஆம் நூற்றாண்டு தொடங்கி, குறிப்பாக, 16 ம் நூற்றாண்டு தொடங்கி பல நன்மைகளை நாம் பெற்றிருக்கிறோம். But we have also thrown the baby with the bathwater. தீமைகளைக் களையும்போது சில நன்மைகளையும் எறிந்துவிட்டோம்; ஏனென்றால், தேவனுடைய மக்கள் மத்தியிலே அதிகமாய்த் துஷ்பிரயோகம்பண்ணப்படுகிற ஒன்று ஆவிக்குரிய நடத்துபவர்கள், Spiritual Guides, Spiritual counselors, Spiritual directors. மக்கள்மேல் அதிகாரம் செலுத்துவது. ஆனால் நிச்சயமாக தேவனுடைய மக்களுக்கு ஆவிக்குரிய வழிகாட்டிகளும், ஆவிக்குரிய நடத்துனர்களும், ஆவிக்குரிய மூத்தவர்களும் அவசியம் என்பதை முழு வேதாகமமும், புதிய ஏற்பாடும் சான்றுபகர்கிறது. இதில் எனக்கு எந்தச் சந்தேகமும் இல்லை. எபிரேயர் 13 ஆம் அதிகாரம் 7ஆம் வசனம். *“தேவவசனத்தை உங்களுக்குப் போதித்து உங்களை நடத்தினவர்களை நீங்கள் நினைத்து, அவர்களுடைய நடக்கையின் முடிவை நன்றாய்ச் சிந்தித்து, அவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்.” **“உங்களை நடத்துகிறவர்கள், உங்கள் ஆத்துமாக்களுக்காக உத்தரவாதம்பண்ணுகிறவர்களாய் விழித்திருக்கிறவர்களானபடியால், அவர்கள் துக்கத்தோடே அல்ல, சந்தோஷத்தோடே அதைச்செய்யும்படி, அவர்களுக்குக் கீழ்ப்படிந்து அடங்குங்கள்; அவர்கள் துக்கத்தோடே அப்படிச் செய்தால் அது உங்களுக்குப் பிரயோஜனமாயிருக்கமாட்டாதே” *(எபி. 13:17). Imitate என்று எழுதியிருக்கிறது. “நான் தேவனை நேரடியாக imitate பண்ணுவேன்” என்பது ஒரு புறம் இருக்க, புதிய ஏற்பாட்டில் பவுல் “என்னை நீங்கள் imitate பண்ணுங்கள். நான் கிறிஸ்துவை imitate பண்ணுவதுபோல,” என்று சொல்லுகிறார். தேவனுடைய மக்கள மத்தியில் நாம் imitate பண்ணுவதற்கென்று ஒரு சில ஆவிக்குரிய பெரியவர்கள், ஆவிக்குரிய மூத்தவர்கள், ஆவிக்குரிய வழிகாட்டிகள், ஆவிக்குரிய நடத்துனர்கள் அவசியம். சிலருக்கு நான் முன்நடப்பவனாக இருக்கலாம், சிலரோடு நான் உடன் நடப்பவனாக இருக்கலாம், சிலருக்கு நான் பின்நடப்பவனாக இருக்கிறேன். சிலரோடு நான் முன்நடப்பவனாகவும், உடன் நடப்பவனாகவும், பின் நடப்பவனாகவும் இருக்கிறேன். இதை நான் சொன்னதை கவனிக்கீறிர்களா? அப்படிப்பட்ட ஆவிக்குரிய பெரியோர்களும், மூத்தவர்களும், வழிகாட்டிகளும், ஆலோசகர்களும் இல்லையென்றால், பொதுவாக என்னை நான் நிதானித்து, தீர்த்து, நெறிப்படுத்துவது சமநிலை தவறியதாக இருக்கும். ஒன்று அளவுக்குக் குறைவாக நான் என்னை நெறிப்படுத்துவேன் அல்லது அளவிற்கு மிஞ்சி என்னை நான் நெறிப்படுத்துவேன். சமநிலை பேணுவதற்கு ஆவிக்குரிய பெரியவர்கள், ஆவிக்குரிய மூத்தவர்கள், ஆவிக்குரிய வழிகாட்டிகள் அவசியம். குறைந்தது ஒருவராவது, உங்களுக்கு அப்படிப்பட்ட ஆவிக்குரிய மூத்தவனாக, ஆவிக்குரிய வழிகாட்டியாக இருக்க வேண்டும்.
ஒரு உதாரணம், தேவனுடைய மக்கள் எல்லோரும் இருக்கிறார்கள், ஆனால் குறைந்தது ஒருவன் அல்லது இரண்டுபேர் நம்முடைய ஆவிக்குரிய மூத்தவனாக, ஆவிக்குரிய வழிகாட்டியாக இருக்க வேண்டும். தந்தையின் இருதயமும், குணமும், பக்குவமும் உள்ளவனாக இருக்க வேண்டும், அப்போஸ்தலனாகிய பவுல் 1 கொரிந்தியர் 4ஆம் அதிகாரத்தில், “கிறிஸ்துவுக்குள் பதினாயிரம் உபாத்தியாயர்கள் உங்களுக்கு இருந்தாலும், தகப்பன்மார் அநேகர் உங்களுக்கு இல்லையே,” என்று கூறுகிறார். “எல்லாரும் ஒன்றுதான்,” என்று சிலர் சொல்வார்கள்.
எண்ணாகமத்தில் அதைப்பற்றி சிக்கல் வருகிறது. “ஆரோன் மட்டும்தான் பரிசுத்த ஸ்தலத்தில் நுழைந்து தேவனுக்குப் பணிவிடை செய்ய முடியுமா? நாங்கள் தேவனுடைய பரிசுத்த ஸ்தலத்தில் நுழைந்து, ஆரோன் செய்கிற அதே பணிவிடையை செய்ய முடியாதா?” என்று கோராகு, தாத்தான், அபிராம் என்ற மூன்றுபேர் கேட்கிறார்கள். இந்தப் பிரச்சினை மூன்று அதிகாரங்களில் ஓடுகிறது. தேவன் அதைச் சுத்தம் செய்கிறார். “எனக்கு முன்பாக பணிவிடை செய்வதற்குரிய அளவுகோல் என்னவென்றால், காய்ந்தவனுடைய கோல் பூ பூக்க வேண்டும், துளிர்க்க வேண்டும், பூக்கவேண்டும், கனி தரவேண்டும்,” என்று தேவன் தம் அளவுகோலைக் கொடுக்கிறார். அந்த இரவிலே ஆரோனுடைய வறண்ட, காய்ந்த, கோல் துளிர்த்து, பூத்து, வாதுமைப் பழங்களைக் கொடுத்தது. ஒரு மனிதன் சிலுவையினூடாய் எந்த reservation னும் இல்லாமல் வாழ்ந்து, போய் சென்று உயிர்த்தெழுதலில் வாழ்கிற மனிதனாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட மனிதர்கள் தேவனுக்குத் தேவை. “M.A. Spiritual Direction என்ற ஒரு course படித்துவிட்டேன்,” என்று சொன்னவுடன் அவர்கள் ஆவிக்குரிய பெரியவர்கள், ஆவிக்குரிய மூத்தவர்கள், ஆவிக்குரிய வழிகாட்டிகள், ஆவிக்குரிய நடத்துனர்கள், Spiritual Directorகள் என்ற நிலைய எட்டிவிடுவதில்லை. Man should live in subjection to the cross and live into direction. ஆவிக்குரிய தலைவர்களை எப்படிக் கண்டுபிடிப்பது? கண்டு பிடிப்பது ஒன்றும் பெரிய கடினம் இல்லை. அவருடைய வாழ்க்கை திறந்த புத்தகமாக இருக்க வேண்டும், அவரிடத்தில் கிறிஸ்துவின் நறுமணம் வீச வேண்டும்.
ஜாண் ரூட்டே என்ற ஒரு மனிதரைப்பற்றி வாசித்துக்கொண்டிருந்தேன். அவர் கடைக்குப்போக மாட்டாராம். Nuns அவருக்காக போய் பொருள்களை வாங்கிக்கொண்டு வரும்போது, அவருடைய வீட்டிற்கு வந்து தர முடியாதாம், கதவுக்குக் கீழே ஒரு வண்டியிலேத் தள்ளி விட்டுவிடுவார்களாம், அவ்வளவுதான். கர்த்தருக்கு முன்பாக மட்டும் அல்ல, மனிதர்களுக்கு முன்பாகவும் யோக்கியமானவைகளைச் செய்ய நாடுகிற ஒரு மனிதன். சங்கீதம் 141:5 ஐ நீங்கள் குறித்துக்கொள்ள வேண்டும். “நீதிமான் என்னைத் தயவாய்க்குட்டி, என்னைக் கடிந்துகொள்ளட்டும்; அது என் தலைக்கு எண்ணெயைப்போலிருக்கும்; என் தலை அதை அல்லத்தட்டுவதில்லை; அவர்கள் இக்கட்டுகளில் நான் இன்னும் ஜெபம்பண்ணுவேன்.”
தேவனுடைய பரிசுத்தமாகுதலில் பங்குபெறுவதற்கு பரிசுத்த ஆவியானவர் கையாளுகிற வழி சிலுவை. மூன்று விதங்களில் தேவன் சிலுவையை நம் வாழ்க்கையில் பயன்படுத்துகிறார். ஒன்று தேவனுடைய சிட்சை, இரண்டு நமக்கு நாமே எடுத்துக்கொள்கிற சிட்சை, மூன்று நடத்துபவர்கள் தருகிற சிட்சை. பொதுவாக அதை நாம் சிட்சை என்றும், பயிற்சி என்றும், பணிந்தடங்குதல் என்றும் சொல்கிறோம். வெவ்வேறு பெயர்களில் போகலாம், ஆனால் essence இதுதான். ஒரு நடத்துகிற சகோதரர் இருக்கும் போது, அவருக்கு என்னுடைய நிலை தெரியும். என்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை, என் குடும்ப வாழ்க்கை, என்னுடைய போக்குவரத்து, என்னுடைய வேலை பார்க்கும் இடம், எல்லாம் தெரியும். “சொல், சொல்” என்று அவருடைய காரியங்களை தோண்டித் துருவி, விசாரிப்பதில்லை. ஆனால் என்னுடைய நிலை தெரிந்திருப்பதினால், “சகோதரனே ஒரு நிலைமைக்கு இப்படிப்பட்ட சில பயிற்சிகளையும், சிட்சைகளையும், நீங்கள் சுமத்திக்கொள்ளுங்கள், அது உங்களுக்கு ஆசீர்வாதமாக இருக்கும்,” என்று அவர்கள் சொல்வார்கள். இந்தக் காரியங்களிலே நாம் உண்மையுள்ளவர்களாக இருப்போம் என்றால் தேவனுடைய பரிசுத்தத்தில் உண்மையாகவே நாம் பங்குபெறுவோம். “ஓ! இது ரொம்ப கடினமான வார்த்தையாக இருக்கும்” என்று ஒரு சிலருடைய மனம் இதில் இளைத்துப்போக வேண்டாம். தேவன் எந்த மனிதனுக்கும் கடன்பட்டவர் அல்ல. அவருடைய வழிகளில் நடப்பது என்பதற்கு ஒரு விலைக்கிரயம் கொடுக்க வேண்டும். விலைக்கிரயம் கொடுக்கிற மனிதனுக்கு தேவன் நிச்சயமாகக் கொடுக்கிற reward வெகுமதி மிகப் பெரிதாக இருக்கும். இதை நான் பொய்யாகச் சொல்லவில்லை. அப்படியல்ல. சிலுவையைத் தொடர்ந்து மகிமையான சந்தோஷம் உண்டு. நமக்கு மட்டுமல்ல, நம்மை சுற்றியிருக்கிற பல மக்களுக்கு நாம் ஆசீர்வாதத்தின் வாய்க்கால்களாய் இருப்போம். நாம் இழந்த இந்த பூமிக்குரிய அல்லது சுயத்துக்குரிய, பாவத்துக்குரிய, மாம்சத்துக்குரிய காரியங்களேடு ஒப்பிடும்போது நாம் பெறுகின்ற அந்த ஆசீர்வாதங்களுடைய மகிமை பெரிதாய் இருக்கும். ஆமென். Praise the Lord.