Transcribed from a message spoken in April, 2013 in Chennai
By Milton Rajendram
நாமெல்லாரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைப்பற்றி அதிகமாக யோசிக்கின்றவர்கள், தியானிக்கின்றவர்கள். ஆனால், ஒருசில சூழ்நிலைவழியாக நான் போகும்போது, "இந்த ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து எவ்வளவு அற்புதமானவர் என்பதை நான் இன்னும் பார்க்கவில்லை அல்லது இன்னும் உணரவில்லை," என்கிற ஆழ்ந்த உணர்வு எனக்குள் வந்தது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மகா அற்புதமானவர்! பிரமிக்கத்sதக்கவர்! "இவர் எப்படிப்பட்ட நபர் என்று எனக்குத் தெரிந்தால், இந்தப் பூமியிலே அவரோடு ஒப்பிடத்தக்கது, அவருக்கு நிகரானது, அவருக்கு இணையானது வேறு எதுவும் இல்லை," என்பதை நாம் பார்ப்போம்.
நமக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவைத் தெரியும்; "தெரியாது" என்று நாம் யாரும் சொல்ல முடியாது. நாம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை அறிந்திருப்பதால்தான் நாம் அவரை நேசிக்கிறோம், அவரை விசுவாசிக்கிறோம், அவரைப் பின்பற்றுகிறோம். ஆனால், நமக்கு இதுவரைத் தெரிந்திருப்பதைவிட, நாம் இதுவரை அனுபவித்திருப்பதைவிட, இந்த ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பலகோடி மடங்கு அற்புதமான, வியக்கத்தக்க, பிரமிக்கத்தக்க ஒரு நபர்.
எனவே, கடந்த வாரத்திலே நான் ஜெபித்த ஒரு ஜெபம், "பிதாவே உம்முடைய குமாரனை அறிவதற்கு எனக்கு நீர் உதவிசெய்யும் . அவரை நான் மிக மிகக் குறைவாகத்தான் அறிந்திருக்கிறேன். அவர் எப்படிப்பட்ட மனிதர், எப்படிப்பட்ட நபர், அவருடைய எண்ணங்கள் என்ன? அவர் எண்ணுகிற விதம் என்ன? அவர் சிந்திக்கிற விதம் என்ன? அவர் தீர்மானிக்கிற விதம் என்ன? அவருடைய குணம் என்ன? கட்டமைப்பு என்ன? வழிகள் என்ன? இவைகள் எல்லாவற்றையும் நான் அறிந்துக்கொள்ள விரும்புகிறேன்," என்று நான் ஜெபித்தேன். நான் நினைக்கிறேன் இந்த ஜெபங்களுக்குத் தேவன் பதில் தருகிறார். இது மிகவும் பெரிய ஜெபம் என்பதால், இதற்கு விடையை அல்லது பதிலை உடனே தந்துவிட முடியாது. கொஞ்சம் கொஞ்சமாய், கொஞ்சம் கொஞ்சமாய் தேவன் இந்தப் பூமியிலே நாம் வாழ்கின்ற நாட்களிலெல்லாம் தருவார் என்று நான் விசுவாசிக்கின்றேன்.
தேவனுடைய நித்திய திட்டம் அல்லது தேவன் இந்த சிருஷ்டிப்பைப் படைத்ததிலே அவருடைய நித்திய நோக்கம் என்னவென்றால் அவருடைய குமாரனை இந்தப் பூமிலே வெளியாக்க வேண்டும், அவருடைய குமாரன் இந்தப் பூமியிலே புலப்படவேண்டும். நாம் technical words ஐ அதிகமாகப் பயன்படுத்துவதில்லை, ஆனால், உண்மையிலேயே நாம் பயன்படுத்துகிற வார்த்தைகள் மிக நேர்த்தியாக இருக்கின்றன. சில வார்த்தைகள் பயனுள்ள வார்த்தைகள்தான். தேவன் தம்முடைய குமாரனை வெளியாக்க வேண்டும் அல்லது புலப்படுத்த வேண்டும் என்று விரும்புகிறார். புலப்படுத்துவது என்றால் என்ன? தேவன் காணப்படாதவர். காண்கிற விதத்திலே, கேட்கிற விதத்திலே, தொடுகிற விதத்திலே தேவன் தென்பட விரும்புகிறார். இது அவருடைய நோக்கம், இது அவருடைய விருப்பம். இது அவருடைய வாஞ்சை. இதற்காகவே அவர் இந்தப் பூமியை சிருஷ்டித்தார் அல்லது மனிதனை சிருஷ்டித்தார் அல்லது இந்தப் பிரபஞ்சங்களையெல்லாம் சிருஷ்டித்தது எதற்காகவென்றால், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவை வெளியாக்குவதற்காக. மிகப் பெரிய உயிரியாகிய மனிதன் தொடங்கி, மிகச் சிறிய உயிரியாகிய புல்வரை தேவன் ஒரேவொரு குறிக்கோளுக்காகத்தான் உண்டாக்கியிருக்கிறார். அவருடைய குமாரனாகிய கிறிஸ்துவை காண்பிப்பதற்காக.
நீங்கள் இதைப்பற்றி, "சகோதரனே! எத்தனை தடவைதான் நீங்கள் இதைச் சொல்லுவீர்கள்? உங்களுக்கு சலிப்புத்தட்டவில்லையா? நீங்கள் ஆயிரம் தடவைகூட இதை ரொம்ப சுவாரஸ்யமாகச் சொல்கிறீர்களே? உங்களுக்கு சுவாரஸ்யமாக இருப்பதுபோல தோன்றலாம்," என்று ஆச்சரியப்படலாம். இதை ஆயிரம் தடவை சொல்வதற்குக் காரணம் என்னவென்று கேட்டால், இதை இன்னும் சொல்லவேண்டியவண்ணம் நாம் சொல்லிமுடிக்கவில்லை அல்லது அனுபவிக்கவேண்டியவண்ணம் இதை அனுபவித்து முடிக்கவில்லை என்று நான் உணர்கிறேன். இந்தப் பூமியிலே நாம் அறிய வேண்டிய மகா பெரிய அறிவு இது ஒன்றுதான். கர்த்தருக்குப் பயப்படுவதே ஞானத்தின் ஆரம்பம். பரிசுத்தரை அறிகிற அறிவே அறிவு.
தேவன் மூன்று காரியங்களை, மூன்று நோக்கம் என்று சொல்லமாட்டேன், தேவனுடைய நித்திய நோக்கத்திலே, நித்தியக் குறிக்கோளிலே, நித்திய உத்தேசத்திலே மூன்று காரியங்கள் உள்ளன.
மூன்றையும் சொல்லிவிடுகிறேன்.
கிறிஸ்துவாகிய நபர், கிறிஸ்துவின் குணம், கிறிஸ்து தரும் திருப்தி.
தேவன் இந்தப் பூமியிலே எல்லாவற்றையும் சிருஷ்டித்தார். நான் சொன்னேன், எல்லாவற்றையும் சிருஷ்டித்ததற்கு ஒரேவொரு காரணம்தான் உண்டு. தேவனுடைய குமரனாகிய கிறிஸ்துவைப் புலப்படும்வண்ணம், தென்படும்வண்ணம், காண்பிக்க அவருக்கு ஒன்று தேவைப்பட்டது. அது சிருஷ்டி, அந்த சிருஷ்டிப்பினுடைய உச்சி மனிதன் என்று சொல்லலாம். அந்த மனிதனை தேவன் சிருஷ்டித்தபோது, அவனிடத்தில் எந்தக் குறைபாடும் இல்லை என்று சொல்லலாம். அவனிடத்தில் எந்தக் குறைபாடும் இல்லை. ஏறக்குறைய மனித வாழ்க்கை ஒரு பழுதில்லாத வாழ்க்கையாகக்கூட இருந்தது என்று சொல்லமுடியும். தேவன் ஆதாமை சிருஷ்டித்தபோது, அந்த மனித வாழ்க்கையில் ஏதாவது பழுது இருந்ததா? எந்தப் பழுதும் இல்லை. ஆதாமுக்காக, ஆதாம் என்று சொல்வதற்குப் பதிலாக முதல் மனிதன் என்று சொல்லுவோம். ஏனென்றால், முதல் மனிதனுக்கு எது பொருந்துமோ அது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். முதல் மனிதனுக்காகத் தேவனுடைய நோக்கம் என்ன? தேவனுடைய விருப்பம் என்ன? அது எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும். அது என்னவென்று கேட்டால் கிறிஸ்து என்கிற நபர். இவரை வெளியாக்குவதற்காகத்தான் இந்த சிருஷ்டிப்பு இருக்கிறது. எனவே, சிருஷ்டிப்பில் நாம் எதையெல்லாம் அனுபவிக்கிறோமோ அவைகளெல்லாம் கிறிஸ்து என்ற நபருக்குள் இருக்கிறது.
சிருஷ்டிப்பிலே பல நன்மைகளை அனுபவித்துமகிழ்கிற காரியங்களைப் பார்க்கிறோம். அவைகள் கிறிஸ்துவுக்கு வெளியே இருப்பதுபோல தோன்றுகிறது. ஆனால், உண்மை என்னவென்று கேட்டால் அவைகளெல்லாம் நிழல்கள்தான். அதனுடைய மெய்யான பொருள் கிறிஸ்துவில்தான் இருக்கிறது. மெய்யான உணவு கிறிஸ்து. மனிதனின் உணவு ஒரு நிழல்; புசிப்புக்கு அருமையான மரங்கள் அங்கு இருந்தன என்று சொல்லியிருக்கிறது. மெய்யான பானம் கிறிஸ்து. மனிதனுக்குத் தேவன் பல நிழலான பானங்களை கொடுத்திருந்தார். அது தண்ணீராக இருக்கலாம் அல்லது தோட்டத்தில் எவ்வளவோ இருந்திருக்கலாம். மெய்யான ஒளி கிறிஸ்து. அதனுடைய நிழலான ஒளி மனிதன் அனுபவிப்பதற்காக தேவன் கொடுத்திருந்தார். இன்னும் இந்த மனிதன் எவைகளையெல்லாம் மிகவும் நல்ல நன்மைகள் என்று அனுபவித்தானோ? முதல் மனிதன் பல நன்மைகளை அனுபவித்தான். நம் வாழ்க்கையிலே பல நன்மைகளை அனுபவிக்கிறோமா? பல நன்மைகளை அனுபவிக்கிறோம். இன்னும் நிறைய நன்மைகள் வேண்டுமென்று நாம் வாஞ்சிக்கிறோம். இதைப்பற்றி தேவனுடயை எண்ணம் என்னவென்று சொல்வது! பல நன்மைகளை மனிதன் அனுபவித்தான். ஆனால், அவன் என்ன நினைத்தான் என்றால், இந்த நன்மைகளெல்லாம் கிறிஸ்துவுக்கு வெளியே இருக்கிறது என்று நினைத்தான். நேர்மையாகப் பார்த்தால் எல்லா நன்மைகளும் எங்கே இருக்கிறது? உணவு, பானம், ஒளி எல்லாமே கிறிஸ்துவுக்கு வெளியேதான் இருந்தது. ஆனால் சத்தியம் என்னவென்று கேட்டால், இவைகளெல்லாம் வெறும் நிழல்கள்தான்; மெய்யான உணவு, மெய்யான பானம், மெய்யான ஒளி யாருக்குள்தான் இருக்கிறது? கிறிஸ்துவுக்குள்தான் இருக்கிறது.
இதைப் பேசுவதற்குமுன்பு நான் சற்று யோசித்துப்பார்த்தேன். தேவனுடைய மக்கள் எவ்வளவோ நடைமுறைப் பிரச்சினைகளிலே, சிக்கல்களிலே, இருக்கிறார்கள். ஆனால், நான் நிதானித்தபிறகு, இது மிகவும் நடைமுறைக்குரியது. நீங்கள், "சகோதரனே! உங்களுக்கு இது நடைமுறைக்குரியதுபோல் தோன்றுகிறது," என்று நினைக்கலாம். ஆகவேதான் அதற்குரிய முயற்சியை நான் செய்கிறேன். இவைகளை நடைமுறைக்கு தொடர்புபடுத்துவதற்கு. இவைகள் இந்த சரீரத்திற்குரியதவை இல்லையா? Physical things இவைகளெல்லாம்.பா
உடல் என்று ஒன்று இருப்பதால்தான் உணவு, பானம், ஒளி இவைகளையெல்லாம் அனுபவித்து மகிழ்கிறோம். கண் என்று ஒன்று இல்லையென்றால் ஒளியை அனுபவித்துமகிழ மாட்டோம் அல்லது நாவு, வயிறு என்று ஒன்று இல்லையென்றால் உணவு, பானம் இவைகளையெல்லாம் அனுபவித்து மகிழ மாட்டோம். அவைகளையும் கொடுத்து, அதை அனுபவித்து மகிழ்வதற்கு ஏற்றவாறு அவர் மனிதனை உண்டாக்கியிருக்கிறார். அது மட்டுமல்லாமல் மனிதனுடைய ஆத்துமாவுக்குரிய நன்மைகளையும் தேவன் கொடுத்திருக்கிறார். பறவைகள் பாடினதெல்லாம் முதல் மனிதனுக்கு மிகவும் இன்பமாக இருந்திருக்குமா என்று எனக்குத் தெரியாது. இன்பமாக இருந்திருக்கும். இன்னொரு மனுஷியினுடைய உறவும், நெருக்கமும் மனிதனுக்கு மகிழ்ச்சியாக இருந்திருக்குமா? நிச்சயமாக மகிழ்ச்சியாக இருந்திருக்கும்.
அது மட்டுமல்ல. ஆவிக்குரிய நன்மைகள் இருக்கிறது. உண்மையான அன்பு இன்னதென்று முதல் மனிதனுக்குத் தெரியுமா, தெரியாதா? தெரியும். அவன் தன் மனைவியிடம், மனைவியின்மூலம் அன்பு இன்னதென்று அனுபவித்திருப்பானா? அனுபவித்திருப்பான். முதல் மனுஷி அன்பு என்றால் இன்னதென்று அனுபவித்திருப்பாளா? அனுபவித்திருப்பாள். அன்பு என்றால் என்ன? நீதி என்றால் என்ன? பரிசுத்தம் என்றால் என்ன என்பதுபற்றி ஓரளவிற்கு அறிந்திருப்பார்களா? ஓரளவிற்கு அறிந்திருப்பார்கள். ஏனென்றால், தேவன் அவர்களைத் தம்முடைய சாயலின்படியும், ரூபத்தின்படியும் உண்டாக்கினார். இவைகளைப்பற்றி நிழலான கருத்து அவர்களுக்கு இருந்தது. ஆனால், உண்மையான அன்பு, மெய்யான அன்பு, மெய்யான பரிசுத்தம், மெய்யான நீதி, மெய்யான ஒளி, மெய்யான தாழ்மை, மெய்யான பொறுமை, மெய்யான தைரியம், மெய்யான நம்பிக்கை இவைகளெல்லாம் யாரிடத்தில்தான் இருக்கிறது? கிறிஸ்துவினிடத்தில்தான் இருக்கிறது. எல்லா நன்மைகளின் மெய் கிறிஸ்துவினிடத்தில்தான் இருக்கிறது. எல்லா நன்மைகளின் மெய் யாரிடத்தில்தான் இருக்கிறது? கிறிஸ்துவினிடத்தில்தான் இருக்கிறது. இதை மனிதன் விசுவாசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார். The Reality, கொலோசெயர் இரண்டாம் அதிகாரத்தில் நாம் இதை வாசித்திருப்போம். "அவைகள் வருங்காரியங்களுக்கு நிழலாயிருக்கிறது; அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது." அந்த இடஅமைப்பு என்னவென்று நம் எல்லோருக்கும் தெரியும். இடஅமைப்பில் வைத்துப் பார்த்தாலும் சரி, இடஅமைப்புக்கு வெளியேயிருந்து பார்த்தாலும் சரி. படைக்கப்பட்ட உலகத்திலே நாம் பார்க்கின்ற எல்லா நன்மைகளும் நிழல்தான். அவைகளின் பொருள் கிறிஸ்துவைப்பற்றினது. The substance is of Christ, the body is of Christ. அவர்தான் அந்த மெய்யானவர். அவர்மேல் ஒரு ஒளிபட்டு, நிழலாக விழுந்தால். அந்த நிழல்தான் உணவாக இருக்கிறது, பானமாக இருக்கிறது, ஒளியாக இருக்கிறது, அன்பாக இருக்கிறது, பரிசுத்தமாக இருக்கிறது, நீதியாக இருக்கிறது. இன்னும் மனிதர்கள் எவைகளைலெல்லாம், தனக்கு மகிழ்ச்சியையும், இன்பத்தையும் தருகிறது என்று எந்த நன்மைகளை, நாடுகிறார்களோ அந்த எல்லா நன்மைகளும் கிறிஸ்து என்கிற மெய்ப்பொருளின் நிழல்தான். இந்தக் கருத்தில் நாம் எல்லோரும் தெளிவாக இருக்கிறோமா? எல்லாம் கிறிஸ்து என்ற மெய்ப்பொருளின் நிழல்தான். "நானே வழியும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்," என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சொன்னார் என்று நமக்குத் தெரியும். "I am the Way, the Truth, and the Life." The Truth என்கிற வார்த்தையை The Reality என்றும் மொழிபெயர்க்கலாம். எனவே, "நானே வழியும், மெய்யும், ஜீவனுமாக இருக்கிறேன்," என்று இயேசு கிறிஸ்து சொன்னார். மனிதனுக்குப் புலப்படுகிற எல்லா நன்மைகளின் மெய்ப்பொருள் கிறிஸ்துதான். திருவெளிப்பாட்டிலே அவர் அதை இன்னும் ஆணித்தரமாகப் பேசுகிறார். "நானே அல்பாவும் ஒமேகாவுமாக இருக்கிறேன். நானே முந்தினவரும், பிந்தினவருமாய் இருக்கிறேன்." பிந்தினவர் என்றால் latecomerபோல ஒரு அர்த்தத்தைத் தரும். "நானே முதலாகவும், கடைசியாகவும் இருக்கிறேன்." "I am the First, and the Last." "I am the beginning and the end."
"நானே தொடக்கமும், முடிவுமாக இருக்கிறேன்." எல்லாச் சொற்களும், எல்லா வாக்கியங்களும், எல்லா எண்ணங்களும், எல்லாக் கருத்துக்களும், எல்லா எழுத்துக்களும், அமுதல் னகரம் வரை, A முதல் Zவரை உள்ள இந்த எழுத்துக்களாலே தொகுக்கப்பட்டிருப்பதுபோல இந்த எல்லா நன்மைகளும் இந்தக் கிறிஸ்துவைக்கொண்டுதான் துவக்கப்பட்டுள்ளது. கிறிஸ்துவுக்கு வெளியே எந்த நன்மையும் இல்லை. இதை மனிதன் விசுவாசிக்க வேண்டும் என்று தேவன் விரும்புகிறார்.
புதிய ஏற்பாட்டில் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து பல சவால்களைச் சந்தித்தார். பல எதிர்ப்புகளைச் சந்தித்தார். ஆனால், முதன்மையான சவால், தலையாய எதிர்ப்பு, என்ன தெரியுமா? "இவர் யார்? இவர் யார்? இவர் யார் என்று மனிதர்கள் சொல்லுகின்றார்கள்?" அவர் தம் சீடர்களைப் பார்த்துக் கேட்கின்றார்: "நீங்கள் என்னை யாரென்று சொல்லுகிறீர்கள்?" அதற்கு பேதுருவின் பதில்: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து. பல எதிர்ப்புக்களை, பல சவால்களை, பல போராட்டங்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சந்தித்தார். ஆனால், தலையாய போராட்டம் "இயேசு கிறிஸ்து என்ற நபர் யார்?" அவர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து அல்லது அவர் 1 தீமோத்தேயு 3:16இல் வாசிப்பதுபோல "அவர் மாம்சத்தில் வெளிப்பட்ட தேவன்." He is God manifest in the flesh அல்லது அவர் புலப்படுகிற தேவன். தேவன் மனிதனுக்குப் புலப்பட வேண்டுமென்றால் இயேசு கிறிஸ்துவுக்கு வெளியே தேவன் புலப்படுவது இல்லை அல்லது மனிதனுடைய புலன்களுக்கு, அவனுடைய எண்ணங்களுக்கு, அவனுடைய சிந்தனைகளுக்கு, அவன் தொடுவதற்கு, பார்ப்பதற்கு, கேட்பதற்கு இயேசு கிறிஸ்துவுக்கு வெளியே தேவன் இல்லை.
எனவே, முதலாவது "மனிதனிடத்தில் தேவன் எதிர்பார்த்தது என்ன? மனிதனை எதற்காக உண்டாக்கினார்?" என்று கேட்டால், நான் இப்போது சொல்கிறேன், "தேவனை வெளியாக்குவதற்கு" என்று நாம் எல்லோரும் பதில் சொல்வோம். தேவனை வெளியாக்குவதற்கு என்று தேவன் மனிதனை உண்டாக்கினார் என்று பதில் சொல்வோம். இது சரிதானா? இதற்குமுன்பு நாம், "படைத்தான் படைப்பெல்லாம் மனிதனுக்காக, மனுவை ஏன் படைத்தான்? தனை வணங்க," என்று சொன்னோம். "ஓ ! அப்படியெல்லாம் இல்லை. தேவனைத் தொழுதுகொள்வதற்காக தேவன் மனிதனை உண்டாக்கவில்லை," என்று ஒரு அதிர்ச்சி அடி ஒன்று நாம் கொடுப்போம். நான் கொடுத்திருக்கிறேன். பிறகு, "தேவன் மனிதனை எதற்காக உண்டாக்கினார்? மனிதன் தேவனை வெளியாக்க வேண்டும் என்பதற்காக உண்டாக்கினார்," என்று நாம் சொல்லுவோம்.
இல்லை அதைவிட மேலானது. மனிதன் தேவனை அறியவேண்டும் என்பதற்காகத் தேவன் அவனை உண்டாக்கினார். ஆ! இது எவ்வளவு பெரிய விஷயம் தெரியுமா! தேவன் தான் அறியப்பட வேண்டும் என்று விரும்பினார். தம்முடைய குமாரனில்தான் அறியப்பட வேண்டும். God wants to be known. God wants to be touched, seen, heard, tangible. தான் இப்படிப்பட்டவர் என்று தன்னை ஒரு சிருஷ்டி அறிந்துகொள்ள வேண்டும் என்று தேவன் விரும்பினார். நான் சொல்வதுபோல புல் முதற்கொண்டு பெரிய உயிரிவரை எல்லாவற்றையும் அதற்காகவே உண்டாக்கினார். மிக முக்கியமாக அவருடைய சாயலிலும், அவருடைய ரூபத்திலும் மனிதனை உண்டாக்கியதற்குக் காரணம் மனிதன் தேவனை அறிந்துகொள்ளத்தக்க திராணி உள்ளவனாக, capacity உள்ளவனாக, தேவன் மனிதனை உண்டாக்கினார். மனிதன் ஒருவனைத்தவிர மற்ற சிருஷ்டிகளுக்குத் தேவனை அறிந்துகொள்கிற அந்த capacity இல்லை. அவைகள் தேவனுடைய அன்பை ருசிக்கின்றன. ஆனால், மனிதன் தேவனை அறிந்துகொள்ள முடியும். தேவன் மனிதனை அறிந்துகொள்ளும்போது, அவன் தேவனை வெளியாக்குவான். That is almost spontaneous. நம்முடைய கண், நம்முடைய கருத்து எதில் இருக்க வேண்டும் என்றால், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து எப்படிப்பட்டவர் என்பதை அறிவதில், அனுபவிப்பதில், ருசிப்பதில்தான் நம்முடயை கண்ணும் கருத்தும் இருக்க வேண்டுமேதவிர வேறெதிலும் இருக்கக்கூடாது. குமாரனாகிய கிறிஸ்து, இவர் மெய்யான உணவாக இருக்கிறார் என்பதை அறியும்போது, தேவனுக்குரிய ஏதோவொன்று மனிதனிலிருந்து வெளியாகும். கிறிஸ்து மெய்யான பானமாக இருக்கிறார் என்பதை நான் அனுபவிக்கும்போது இந்த மனிதனிடத்திலிருந்து ஏதோவொன்று வெளியாகும். கிறிஸ்து மெய்யான அன்பாக இருக்கிறார், மெய்யான பரிசுத்தமாக இருக்கிறார் என்பதை அனுபவிக்கும்போது இந்த மனிதனிடத்திலிருந்து ஏதோவொன்று வெளியாகும். அப்பொழுது இந்த சிருஷ்டிக்கப்பட்ட உலகம் தேவனைக் காணும்.
தேவனற்ற மனிதன் தேவனை வெளியாக்க முடியுமா? தேவனை எந்த மனிதனும் வெளியாக்க முடியாது? வெளியாக்கலாம், எப்போது வெளியாக்கலாம் என்றால் தேவன் அவருடைய குமாரனில் தன்னை யார் என்று காண்பிக்கும்போது, நாம் அதை அறிவோம், அதை நாம் அனுபவிக்கிறோம். அதை நாம் ருசிக்கிறோம். அப்பொழுது தேவன் நம்மூலமாக வெளியாவார்.
அந்த ஏதேன் தோட்டத்திலே முதல் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட பரீட்சை என்ன தெரியுமா? "எல்லா மரத்தின் கனியையும் நீ புசிக்கலாம். இந்த மரத்திலிருந்து மட்டும், இந்த விருட்சத்திலிருந்து மட்டும், நீ புசிக்கக்கூடாது." பரீட்சை இதுதான். அடையாளங்கள்மூலமாக தேவன் சொல்கிறார். அறிவு விருட்சம், ஜீவ விருட்சம் என்று. ஆனால், உண்மை. இந்த அடையாளங்களுக்குப் பின்னால் இருக்கிற சத்தியம் அல்லது உண்மை என்னவென்று கேட்டால், "எல்லா நன்மைகளும் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவில் இருக்கிறது என்று நீ விசுவாசிக்க முடியுமா?" என்பதுதான் முதல் மனிதனுக்குக் கொடுக்கப்பட்ட பரீட்சை. இன்றும் எல்லா மனிதர்களுக்கும் கொடுக்கப்படுகிற பரீட்சை இதுதான். தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவில் எல்லா நன்மைகளும் ஊனுருக்கொண்டுள்ளன. Embodied அல்லது மெய்யாக வாசம்பண்ணுகின்றன. இந்த வசனம் கொலோசெயர் இரண்டாம் அதிகாரத்தில் இருக்கிறது. "தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது." இது நமக்கு அவ்வளவு பரவசமாகத் தோன்றாது. இரண்டு விருட்சங்கள் அல்ல பரீட்சை. கிறிஸ்துவில் எல்லா நன்மைகளும் இருக்கின்றன. ஆ! அந்த முதல் மனிதனுக்குள் ஓர் எண்ணம் வந்தது; "இன்னும் ஏதோவொன்று எனக்குள் குறைவுபடுகிறது," என்ற உணர்வு அவனுக்கு இருந்தது. இல்லாவிட்டால் அவன் அதைத் தேடப்போவதில்லை. முதல் மனிதனுக்கு வந்த குறை என்ன? அவனுக்கு வந்த அந்த குறைபாடு என்கிற உணர்வு என்ன? எல்லாம் இருக்கிறது. அவனுக்கு எந்தக் குறையும் இல்லை. நமக்கு இருக்கிற ஏதாவது ஒரு பிரச்சினை ஆதாமுக்கு இருந்ததா? நோய் ஒரு பெரிய பிரச்சினை. அவனுக்கு நோய் இருந்ததா?. சாப்பாட்டிற்காக நாம் கவலைப்பட வேண்டும். அந்தப் பிரச்சினை அவனுக்கு இருந்ததா? படிப்பது, வேலைக்குப்போவது, அந்தப் பிரச்சினை இருந்ததா? ஒரேவொரு ஆளோடு உள்ள உறவை மட்டும்தான் நிர்வகிக்க வேண்டும். நாம் எதிர்கொள்கிற ஏதாவது ஒரு பிரச்சினை ஆதாமுக்கு இருந்ததா? சரி மேற்போக்காக பதில் சொல்வோமே. ரொம்ப ஆழமாக யோசிக்க வேண்டாம். நாம் எதிர்கொள்கிற ஏதாவது ஒரு பிரச்சினை ஆதாமுக்கு இருந்ததா? ஆனாலும் அவனுக்குள் ஒரு உணர்வு இருந்தது. ஏதோவொன்று குறைவுபடுகிறது. அது உண்மைதான். என்ன குறைவுபடுகிறது. தான் அனுபவிக்கின்ற எல்லா நன்மைகளும் நிழல்தான்.
ஓ! இப்படிப்பட்ட வார்த்தைகளெல்லாம் முதல் மனிதனுக்குத் தெரியுமா? முதல் மனிதனுக்குத் தெரியாது. அதற்கு நான் சொல்கிற உவமை இதுதான்: பசிக்கிறது என்பது ஓர் உணர்வு. அது அவனுக்குத் தெரியும். பசிக்கும்போது ஏதோவொன்று குறைவுபடுகிறது. அதுபோல அனுபவிப்பதில் ஒரு குறைவு இருக்கிறது. அளவில் அல்ல, தரத்தில் ஒரு குறைவு இருக்கிறது. நான் அன்பை அனுபவிக்கிறேன், உணவை அனுபவிக்கிறேன், ஆனால் ஏதோவொன்று, மேலானதொன்று, உயர்வானதொன்று, மேன்மையானதொன்று இருக்கிறது என்ற உணர்வு. ஆனால் அவன் எடுத்த வழி தவறு. உணர்வு சரி, அந்த உணர்வை தேவனே மனிதனுக்குள் வைத்திருக்கிறார். ஏதோவொன்று குறைவுபடுகிறது.
இந்த உணவு நிழல். மெய்யான உணவு எங்கேயோ இருக்கிறது? இந்த அன்பு நிழல், மெய்யான அன்பு எங்கேயோ இருக்கிறது? அது தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து அல்லது அவரை அடையாளப்படுத்துகிற அந்த ஜீவ விருட்சம் என்று அவனால் விசுவாசிக்க முடியவில்லை. தேவனுடைய எதிரியாகிய சாத்தான், அவனை என்ன விசுவாசிக்க வைத்தான் என்றால், "குறைவுபடுகிறது உண்மைதான். அது ஒன்றுமில்லை. நீயே உன்னைக் கொஞ்சம் Develop பண்ணிக்கொண்டால் போதும், குறைவுபடுகிறது நிறைவாகிவிடும்."
மனிதனுடைய சவால்கள் இரண்டு. ஒன்று என்ன தெரியுமா? "அது உனக்குள்ளேயே இருக்கிறது என்கிற பொய்." பெரிய சவால். அதைவிட இன்னொரு பெரிய சவால் என்ன தெரியுமா? "அது தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவுக்குள் இல்லை." இந்த இரண்டு பொய்களும் சேர்ந்தால், மனிதர்கள் உற்பத்திசெய்த ஆயிரக்கணக்கான மதங்கள் உண்டாகிவிடும். "உனக்குள் என்ன குறைவுபடுகிறதோ அது இங்கேதான் இருக்கிறது. உன்னையே நீ அறிவாய். அது உனக்குள் இருக்கிறது. நீயும் உன்னை கொஞ்சம் develop பண்ணிக்கொண்டு, develop பண்ணிக்கொண்டு, develop பண்ணிக்கொண்டு, develop பண்ணிக்கொண்டே போனால் ஒரு நாளைக்கு உனக்கு எது குறைவுபடுகிறது என்று தோன்றுகிறதோ அது நிறைவாகிவிடும்." இது முதல் பொய். ஆனால், சில மனிதர்களுக்குத் தோன்றும், "அது எனக்குள் இல்லை" என்று. அவர்களுக்கு சத்துரு கொடுக்கின்ற, தொன்றுதொட்டு இன்றுவரை சொல்கிற பொய் என்னவென்று கேட்டால், "தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவில் அது இல்லை."
இது முதலாவது பரீட்சை. முதலாவது பரீட்சை என்று சொல்வதில் கிறிஸ்து என்ற நபர், இந்த நபர் யார்? இவர் நிறைவானவர், இவருக்குள் சகல நன்மைகளும் வாசமாயிருக்கிறது. நான் நன்மைகள் என்று சொல்லும்போது, எல்லா நன்மைகளின் மெய்யும் இவருக்குள் வாசமாயிருக்கிறது. கொஞ்சம் நடைமுறைப்படுத்துகிறேன். ஆரோக்கியமும், சுகமும் இந்த நபரில் இருக்கிறதா?. அப்படி என்றால் மாத்திரை எல்லாம் எடுக்க வேண்டாமோ?அப்படியானால் நாமெல்லாரும் தொண்ணூறு வயதுவரை இருப்போமோ? இப்படி மடக்குகிற கேள்வி கேட்போமா? கேட்கமாட்டோமா?
A.B. சிம்சனைப்பற்றி இப்படி ஒரு சாட்சி கொடுக்கிறார்கள். இவர் இருதய வியாதியினால் மிகவும் கஷ்டப்பட்ட தேவனுடைய மனிதன். கொஞ்சம் உயரமான, மலைமாதிரி இருக்கிற இடத்திலிருந்து ஒரேவொரு அடி எடுத்து வைத்தாலும் அவ்வளவு வலிக்குமாம். அவர் எண்பது வயது கடந்துதான் இறந்தார். அவர் சொல்லுகிறார், "ஒவ்வொரு மூச்சும், நான் இயேசு கிறிஸ்துவின் ஜீவனால் வாழ்கிறேன்." Mrs. Annie Johnson Flintனின் பாடல்களைப் படித்திருக்கிறோமா? Not I but Christ be Honored, Loved and Exalted. என்னுடைய favorite பாட்டுகளில் அதுவும் ஒன்று. இந்த பாட்டை நூறுமுறை படித்தால்கூட திகட்டாது. Not I but Christ be honored, Loved and Exalted. அவருக்குள் சுகம், ஆரோக்கியம் இருக்கிறது. இயேசு கிறிஸ்து பலரை சுகமாக்கினார். அவரைத் தொட்டு சுகமடைந்த ஒரு பெண்ணைப்பற்றிய சம்பவத்தை நீங்கள் நற்செய்தியில் வாசித்திருக்கிறீர்களா? அவருடைய சீடர்கள் அவரைக் கொஞ்சம் ஒரு மாதிரியாகக்கூட பேசுகிறார்கள். "நீர் என்ன இப்படிக் கேட்கிறீர்? யார் என்னைத் தொட்டது?" என்று. "மக்கள் எல்லாரும் உம்மை நெருக்குவதை நீர் பார்க்கிறீர். இதில் யார் என்னைத் தொட்டது? என்று கேட்கிற கேள்வி அவ்வளவு அர்த்தமுள்ளதுபோல் தெரியவில்லை.." "நீர் கேட்கிற கேள்வி அவ்வளவு சரியாக இல்லை." ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் சுகம் இருக்கிறது. ஆரோக்கியம் இருக்கிறது. அது மிகவும் physical ஆனது. கிறிஸ்துவுக்குள் இது இருக்கிறது.
இரண்டாவது, அதை எப்படிப் பெறுவது என்கிற கேள்வி வரும். கிறிஸ்துவுக்குள் இதெல்லாம் இருக்கிறது. இந்த நன்மையை, மெய்யான நன்மையை, நாம் பெறவேண்டும். முதல் மனிதன் ஒரு போரைச் சந்தித்ததுபோல் இரண்டாம் மனிதனும் ஒரு போரைச் சந்திக்கிறார். "சோதனைக்காரன் அவரிடத்தில் வந்து: நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி சொல்லும் என்றான்." அவர் பிரதியுத்தரமாக: மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே என்றார்." இது கொஞ்சம், ரொம்ப too much ஆகக்கூடத் தோன்றும். எனக்குத் தேவை சாப்பாடு, இயேசு கிறிஸ்து பதில் சொல்கிறார். "தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்." இந்த வசனம் பழைய ஏற்பாட்டிலே உபாகமத்திலே 8ஆம் அதிகாரத்தில் இருக்கிறது. இந்த வசனத்தினுடைய பொருள் என்னவென்று கேட்டால், மெய்யான உணவு தேவன். தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்து மெய்யான உணவு. அவருக்குள் மெய்யான உணவு இருக்கிறது. அவருக்கு வெளியே கல்லுகளை அப்பங்களாக மாற்ற வேண்டிய அவசியம் இல்லை. இந்த உலகத்திலிருந்து நாம் அதைப் பெற வேண்டிய அவசியம் இல்லை. இரண்டாவது, தேவனுடைய எதிரி மனிதனுக்குக் கொடுத்த பெரிய சோதனை என்னவென்று கேட்டால், கிறிஸ்துவினுடைய குணத்தின்மேல், அவருடைய characterமேல் சந்தேகத்தை விதைக்கிறான். "அவர் நம்பத்தக்கவரா?" அவருடைய முழு characterமேலேயே அவன் சந்தேகத்தை விதைக்கிறான். "தேவன் எல்லா மரத்தையும் புசிக்கலாம் என்று சொல்லியிருக்கிறாரா?" "ஆம், சொல்லியிருக்கிறார். ஒரேவொரு மரத்தை மட்டும் புசிக்கவேண்டாம் என்று சொன்னார்." " ஆ! ஏன் தெரியுமா? அதைப் புசித்தால் நீங்கள் நன்மை தீமை அறியத்தக்க அறிவை அடைந்து தேவனைப்போல் மாறிவிடுவீர்கள்." தேவன் எப்படிப்பட்ட ஒரு மண்டலத்திலே வாழ்ந்துகொண்டிருக்கிறாரோ, எந்த ஜீவனால் வாழ்கிறாரோ, அதே ஜீவனால், அதே மண்டலத்திலே, மெய்யான நன்மைகளை அனுபவித்து வாழவேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கம். ஆனால், தேவனுடைய குணத்தின்மேல், தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்துவின் குணத்தின்மேல், அவநம்பிக்கையை, அவிசுவாசத்தை, விதைப்பதுதான் தேவனுடைய எதிரியினுடைய தந்திரம். "பார், உனக்கு அவர் தருவதில்லை."
இரண்டாம் மனிதனாகிய இயேசுகிறிஸ்துவிடமும் அதே தந்திரத்தின்படி செய்தான். "ஓ! தேவனுக்குள் எல்லாம் இருக்கிறது. அவர்தான் மெய்யான உணவு என்று நினைக்கிறாயா? அப்படியானால் தேவன் ஒரு வார்த்தை சொல்லியிருக்கிறார். ' உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது.' நீர் தேவனுடைய குமாரன்தானே? நீர் மேசியாதானே; தேவனால் அபிஷேகம் பண்ணப்பட்டவர்தானே? அதை நிரூபிப்பதற்கு நான் வழி சொல்லுகிறேன்: ஆசாரியன் ஆலயத்தில் பலி செலுத்திக்கொண்டிருக்கும்போது, மக்களெல்லாரும் வெளிப்பிராகாரத்தில் நின்று ஜெபித்துக்கொண்டிருக்கும்போது, தேவனுடைய வார்த்தையின்படி, நீர் நேராக தேவாலயத்தின் உச்சிக்குச் சென்று, ஒரு விமானத்திலிருந்து கீழே இறங்குவதுபோல், அப்படியே நீர் அவர்கள் நடுவிலே இறங்கினால் எல்லாரும் ஒத்துக்கொள்வார்கள். நீர் யார்தான்? கிறிஸ்து, கிறிஸ்து, கிறிஸ்து, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து, தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து, இதற்கு அப்புறம் என்ன வேண்டும்?" ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதை ஒத்துக்கொள்ளவில்லை. அவர் மேசியாதான், கிறிஸ்துதான், இரட்சகர்தான். ஆனால், இவர் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து, அபிஷேகிக்கப்பட்ட மேசியா என்று இஸ்ரயேலுக்குக் காட்டுவதற்கு தேவன் வைத்திருந்த வழி அதுவல்ல.
சுகம் வேண்டும், ஆரோக்கியம் வேண்டும் அல்லது பணம் வேண்டும், அது வேண்டும், இது வேண்டும் என்று உலகப்பிரகாரமாக நாம் எதையாவது கேட்கலாம். அன்பு வேண்டும், பரிசுத்தம் வேண்டும், தாழ்மை வேண்டும், துணிவு வேண்டும் என்றும் கேட்கலாம். தேவன் ஒரு வழி வைத்திருக்கிறார். அந்த வழி தேவனுடைய குணத்திற்கு ஒத்த வழி. கிறிஸ்துவின் குணம் அல்லது அவரது குணத்திற்கு ஒத்த வழியை ஒரு வார்த்தையில் வர்ணிப்பதானால் எப்படி வர்ணிக்கலாம்? கொஞ்சம் கஷ்டமான கேள்வி. பதில் ஒரு வார்த்தையாக இருக்கும். ஆனால், தேவனைப்பற்றிய ஒரு நல்ல அறிவு இருந்தால்தான் பதில் சொல்ல முடியும். கிறிஸ்துவின் குணத்திற்கு ஏற்ற வழி, கிறிஸ்து என்ற நபருக்குள் எல்லா நன்மைகளின் மெய்ப்பொருள் வாசமாய் இருக்கிறது. இது மனிதன் அனுபவிப்பதற்கு என்று தேவன் வைத்திருக்கிறார். ஆனால், அவைகளை தேவன் மனிதனுக்கு கொடுக்கிற வழி. கிறிஸ்துவினுடைய குணத்திற்கு ஒத்தவிதத்தில்தான் அதைக் கொடுப்பார். அவருடைய குணத்திற்குமுரணாக, வேறுபாடானதைக் கொடுக்க மாட்டார். கிறிஸ்துவின் குணத்தை வர்ணிப்பதற்கு அல்லது அவருடைய குணத்திற்கு ஏற்ற வழியை வர்ணிப்பதற்கு, சித்தரிப்பதற்கு, ஒரு வார்த்தையை நீங்கள் பயன்படுத்தமுடியுமா? சிலுவை. நூறு விழுக்காடு சரி.
கிறிஸ்துவின் குணத்தை வர்ணிப்பதற்கு ஒரு வார்த்தைதான் பயன்படுத்த வேண்டுமென்றால் அதை தான் பயன்படுத்தலாம், சிலுவை. தேவன் இந்த நன்மைகளைத் தருவதற்கென்று நியமித்திருக்கிறார். ஆனால், எல்லா நன்மைகளையும், மெய்யான எல்லா நன்மைகளையும், தேவன் ஒரேவொருவழியின்மூலமாகத்தான் தருவார். நான் கொஞ்சம் dramaticஆகச் சொல்கிறேன். இந்த நாற்காலியில் ஏறி நின்று நான் சொல்கிறேன். All Good things, the real good things that God has ordained to give to man, He will give it through only one way -Cross.
அவரை மேசியா என்று இந்த உலகத்திற்கு, இஸ்ரயேல் மக்களுக்கு வெளிப்படுத்தப் பிதாவானவர் சித்தங்கொண்டிருந்தார். ஆனால், அந்த வழி பிலிப்பியர் இரண்டாம் அதிகாரத்தின் வழி. சிலுவையின் வழியாகக் கீழே, கீழே, கீழே, கீழே, கீழே என்று இறங்கி, தம்மைத் தாழ்த்திக் கீழ்ப்படிந்து, தாழ்த்திக் கீழ்ப்படிந்து, தாழ்த்திக் கீழ்ப்படிந்து, தாழ்த்திக் கீழ்ப்படிந்து. "அவர் மாம்சத்திலிருந்த நாட்களில், தம்மை மரணத்தினின்று இரட்சிக்க வல்லமையுள்ளவரை நோக்கி, பலத்த சத்தத்தோடும் கண்ணீரோடும் விண்ணப்பம்பண்ணி, வேண்டுதல்செய்து, தமக்கு உண்டான பயபக்தியினிமித்தம் கேட்கப்பட்டு, அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு,தாம் பூரணரானபின்பு, தமக்குக் கீழ்ப்படிகிற யாவரும் நித்திய இரட்சிப்பை அடைவதற்குக் காரணரானார்." இயேசு கிறிஸ்து பலத்த சத்தத்தோடும், கண்ணீரோடும், ஜெபித்தார். நான் நினைக்கிறேன் பல நாட்கள் ஜெபித்திருக்கலாம், பயந்து அல்ல; குறைந்தபட்சம் கெத்செமெனேயிலே பலத்த சத்தத்தோடும், கண்ணீரேடும் ஜெபித்தார் என்று நான் நம்புகிறேன். நான் நினைக்கிறேன். தொலைக்காட்சியில் நம்முடைய சின்னப்பிள்ளைகள் பார்ப்பதுபோல, superman, batmanபோல அவர் சிலுவையின் ஊடாய்க் கடந்துபோகவில்லை. அவர் சிந்தின வியர்வை இரத்தத்தின் பெருந்துளிகளாய்க் கீழே விழுந்தது. இதை சில சீடர்கள் வந்து பார்த்திருப்பார்கள். பிதாவானவருக்குக் கீழ்ப்படிவது என்பது just like that என்பதுபோல் கீழ்ப்படிந்து விட்டார் என்பதல்ல. "பட்ட பாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்," என்று எபிரேயருக்கு எழுதின கடிதத்தின் ஆசிரியர் சொல்லும்போது, தேவன் ஒரு நன்மையை நமக்குத் தருவார். சாதாரண நன்மையல்ல. ஒரு நன்மையை நாம் உலகத்திலிருந்தும் பெறலாம். தேவனிடமிருந்தும் பெறலாம். ஒரு laptopயைத் தேவனுடைய கையிலிருந்தும் பெறலாம், உலகத்திலிருந்தும் பெறலாம். ஒரு நன்மையை நாம் தேவனுடைய கையிலிருந்தும் பெற்றுக்கொள்ளலாம், சிலுவையின்வழியாகச் சென்று it should come in resurrection. மேலேயிருந்து அப்படியே show காட்டிக்கொண்டு குதிப்பதல்ல."Oh! Behold, I am the Messiah."
மூன்றாவது, கிறிஸ்து திருப்தியானவர். இந்தப் பூமியிலே பல விஷயங்கள் நம்மை மிகவும் மகிழ்ச்சியாக்கும். மத்தேயு 4ஆம் அதிகாரத்தில் எழுதப்பட்டிருக்கிற சோதனைகள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அப்போதுதான் சந்தித்த சோதனைகளா அல்லது 30 ஆண்டுகள் சந்தித்த சோதனைகளா? ஆ! அன்றைக்குத்தான் புதிதாக வந்த மூன்று சோதனைகளை அவர் சந்தித்தார் என்று நாம் நினைத்துக்கொண்டிருக்கிறோம், இல்லை. அவர் தம் 30 ஆண்டுகளும் இந்த சோதனைகளைச் சந்தித்தார். அன்றைக்கு மட்டும்தான் அவர் சாப்பாடு இல்லாமல் தேவன் அவரை சோதித்தார் என்று நினைக்கிறீர்களா?. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம் வாழ்நாள் முழுவதும் அந்தச் சோதனைகளைச் சந்தித்தார்; சோதிக்கப்பட்டும், ஒருமுறைகூட தோற்கவில்லை. அவர், "என் உடல் நலம் என் பிதாவின் கைகளில் இருக்கிறது," என்ற நிலையில்தான் அவர் வாழ்ந்தார். அப்பம் கிடைத்தாலும் சரி, நல்ல அப்பம் கிடைத்தாலும் சரி, கெட்ட அப்பம் கிடைத்தாலும் சரி, கொஞ்சம் லேசா கெட்டுப்போகப்போகிறது, காலையில் வைத்த காய், சாயங்காலம் சாப்பிடும்போது முகத்திலோ அல்லது கண்ணிலோ அல்லது வார்த்தைகளிலோ எந்த முறுமுறுப்பும் இல்லாமல் சாப்பிட முடியுமா? நான் சொல்வது கொஞ்சம் அதிகம் என்று தோன்றலாம். சாப்பாடு கொஞ்சம் கெட்டுப்போகிற நிலைமையில் இருந்தால் நீங்கள் எப்படி சாப்பிட வேண்டும்? மகிழ்ச்சியோடு, "பிதாவே ! நீர் தந்த இந்த ஆகாரத்திற்காக நன்றி. நீரே மெய்யான போஜனம். You are the True food, and you are sufficient."
பல காரியங்கள் இந்தப் பூமியிலே நம்மைத் திருப்தியாக்கும். மத்தேயு நான்காம் அதிகாரத்திலே, வனாந்திரத்திலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சந்தித்தது போர். ஆனால், அதற்குமுன்பு அவர் பல போராட்டங்களைச் சந்தித்திருந்தார். சாத்தான் வந்து, " அவரை மிகவும் உயர்ந்த மலையின்மேல் கொண்டுபோய், உலகத்தின் சகல ராஜ்யங்களையும் அவைகளின் மகிமையையும் அவருக்குக் காண்பித்து: நீர் சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னைப் பணிந்துகொண்டால், இவைகளையெல்லாம் உமக்குத் தருவேன்," என்றான். இந்தப் பூமியிலுள்ள எல்லா இராஜ்ஜியங்களையும், அதின் மகிமையையும் அவருக்குக் காட்டி, "தாழ பணிந்துகொள்ளும், இவைகளையெல்லாம் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஒருமுறை தாழ பணிந்துகொள்ளும். இவையெல்லாவற்றையும் நான் உமக்குத் தருவேன்," என்றால் இவைகளைப் பார்க்கும்போது ஒரு திருப்தி வருமா, வராதா?. தேவனுடைய எதிரி இவையெல்லாவற்றையும் ஒரு panoramic view காட்டும்போது, நமக்கு ஒரு திருப்தி வருமா, வராதா? தேவன் மனித வடிவம் எடுத்தார் இல்லையா? மாம்சமும், இரத்தமும் இருப்பதால் தான் போடுகிற தூண்டிலில் அந்த மீன் சிக்கும் என்று அவன் நினைத்தான்.
பல காரியங்கள் நம் வாழ்க்கையில் திருப்தியைத் தருகிறதா? ஒரு நல்ல உணவு, ஒரு பொழுதுபோக்கு. உங்கள் இருதயத்தைத் தொட்டுச்சொல்லுங்கள். ஒரு நல்ல திரைப்படம் பார்த்தால் திருப்தியாக இருக்கிறதா, இல்லையா? நாம் எப்படி நடிக்கமுடியும்? எப்படி நாம் திருப்தியாக இல்லை என்கிறமாதிரி நடிக்க முடியும்?
நான் தேவனிடத்தில் ஜெபிக்கிற ஒரு ஜெபம் என்ன தெரியுமா? "ஆண்டவரே, அது தருகிற திருப்தியைவிட நீர் தருகிற திருப்தி அதிகமாகவும், திடமாகவும் இருக்க வேண்டும். should be more concrete." சங்கீதத்தில் இந்த வசனத்தை 100 தடவை மேற்கோள் காட்டியிருப்பேன். மீண்டும் ஒரு முறை மேற்கோள் காட்டுகிறேன். "அவர்களுக்குத் தானியமும் திராட்சரசமும் பெருகியிருக்கிற காலத்தின் சந்தோஷத்தைப்பார்க்கிலும், அதிக சந்தோஷத்தை என் இருதயத்தில் தந்தீர். சமாதானத்தோடே படுத்துக்கொண்டு நித்திரைசெய்வேன்; கர்த்தாவே, நீர் ஒருவரே என்னைச் சுகமாய்த் தங்கப்பண்ணுகிறீர்."
பல கிறிஸ்தவர்கள் இயேசு கிறிஸ்துவைப் போதுமானவர் என்று சொல்வதில்லை. இதுபோன்ற ஒரு satisfaction. பிலிப்பியர் 4ம் அதிகாரத்தில் I am able to do all things through Him Who strengthens me. பிலிப்பியர் 4ம் அதிகாரம் 100 தடவை வாசிக்கவேண்டிய ஓர் அதிகாரம். "என் குறைச்சலினால் நான் இப்படிச் சொல்லுகிறதில்லை; ஏனெனில் நான் எந்த நிலைமையிலிருந்தாலும் மனரம்மியமாயிருக்கக் கற்றுக்கொண்டேன்.தாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும், வாழ்ந்திருக்கவும் எனக்குத் தெரியும்; எவ்விடத்திலும் எல்லாவற்றிலும் திருப்தியாயிருக்கவும் பட்டினியாயிருக்கவும், பரிபூரணமடையவும் குறைவுபடவும் போதிக்கப்பட்டேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு." "எந்த நிலையிலும் மனரம்மியமாய் இருக்கக் கற்றுக்கொண்டேன்," என்று பல்லைக் கடித்துக்கொண்டு அப்போஸ்தலனாகிய பவுல் சொல்கிறாரா அல்லது பூமியில் என்னைப்போலத் திருப்தியானவன் இந்த உலகத்தில் உண்டா என்ற மனப்பாங்கோடு சொல்கிறாரா? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? "இந்தப் பூமியில் என்னைப்போல் திருப்தியாயிருக்கிற ஒரு மனிதன், என்னைப்போல் மனோரம்மியமாய் இருக்கிற ஒரு மனிதன் வேறு யாராவது உண்டா?" என்பதுபோல் கேட்கிறார். Contented man. Is there any man on the earth as contented as I am, as satisfied as I am! நான் அப்படித்தான் நினைக்கிறன்.
சரியான ஆராதனை, தொழுகை, என்றால் என்ன தெரியுமா? "Lord you are my satisfaction" என்பதை வெறும் வார்த்தைகளில் அல்ல, "I know you are my satisfaction" என்பதை வெறும் வார்த்தைகளில் அல்ல. "I know you are the satisfaction". திராட்சை ரசமும், பொழுது போக்கும் அல்லது இந்தப் பூமியிலே நம் புலன்களும் நாம் அனுபவிக்கின்ற பல காரியங்கள் தருகின்ற எல்லாத் திருப்தியையும்விட தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து திருப்தியானவர். இதை நாம் திடுத்திடுப்பென்று அறியமாட்டோம். ஒன்று சொல்லிவிடுகிறேன். ஒரு நாள் இந்தக் கர்த்தர் எவ்வளவு திருப்தியானவர் என்பதை அறியும்போது அந்த நளதக்குப்பியை எடுத்து. உடைப்போம்.
பாவங்களை நாம் உடனடியாக விடவேண்டும். எடுத்துக்காட்டாக, ஒருவர் மது அருந்துகிறார் என்றால் அவர் அதை உடனடியாக விட வேண்டும். மதுபானத்தைவிட கர்த்தர் அதிகமான திருப்தி தருபவர் என்று அவர் அறியும்போது அவர் மதுவை நிறுத்திவிடுவார் என்று நாம் நினைக்கக்கூடாது. ஒருநாள் அவர் அப்படி உணர்வார். ஆனால், இப்போது அவர் தன உடல்நலத்தைக் கெடுத்துக்கொண்டிருக்கிறாரே! அதுபோல விபச்சாரத்தில் வாழ்கிற ஒருவன், நாளடைவில் இயேசு கிறிஸ்து எவ்வளவு மனரம்மியமானவர் என்று பார்க்கும்போது அந்தப் பாவத்திலிருந்து அவர் விடுதலை பெறுவார் என்று சொல்ல முடியாது.
ஒன்று சொல்கிறேன், நான் வாலிபனாக இருந்தபோது, ஓர் ஊழியக்காரரோடு சேர்ந்துபோய் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமை சாயங்காலம்தோறும் ஒரு வீட்டில் போய் கூட்டம் நடத்தினோம். அவர்கள் வீட்டில் சாராயம் வடிப்பார்கள். இதை நான் புரிந்துகொள்ளவில்லை. கரங்களைத் தட்டி, "வருவாய் தருணமிதுவே, அழைக்கிறாரே!" என்று மிகவும் உற்சாகமாய்ப் பாடியிருக்கிறேன். நாம் கூட்டம் நடத்திக்கொண்டேயிருப்போம். அவர்கள் தங்கள் வீட்டில் சாராயம் வடித்துகொண்டேயிருப்பார்கள் என்பது தேவனுடைய நோக்கம் அல்ல. அவர்கள் அதைப்பற்றி வருத்தப்பட்டதுபோல் தெரியலில்லை. அந்தச் சூழ்நிலையை என்னால் நிதானிக்க முடியவில்லை. என்னுடைய அனுமானம், positiveஆன பாவங்களை நாம் உடனடியாக விடச் சொல்ல வேண்டும். ஆனால், சிலர் நளத தைலத்தை வைத்திருப்பார்கள்; கழுத்தில் கட்டிக்கொண்டு.
The Life and times of Jesus the Messiah என்ற புத்தகத்தில் அதன் ஆசிரியர் Alfred Edersheim இவ்வாறு கூறுகிறார். யூதப் பெண்கள் வாசனைத்திரவியத்தை அதிகமாக விரும்புவார்களாம். 300 வெள்ளிப்பணத்துக்கும் அதிகமான விலை மதிப்புள்ள நளதத்தை அந்த ஒரு சின்ன கண்ணாடிபோன்ற ஒரு குப்பியில் வைத்து அதைக் கழுத்தில் தொங்கும் சங்கிலியில் மாட்டி வைத்திருப்பார்களாம். ஏனென்றால், அதிலிருந்து நறுமணம் எப்போதுமே வந்துகொண்டிருக்கும். சரி, மரியாள் இதை எப்போது வாங்கியிருப்பாள்? பிற யூதப் பெண்களைப்போல அவள் இயேசு கிறிஸ்துவை அறிவதற்குமுன்பே அந்த நளதக் குப்பியை வாங்கி வைத்திருப்பாள். ஒரு வருட சம்பாத்தியத்தில் வாங்கியது 300 தினாரி. ஆனால், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய மரணத்தைப்பற்றி சொன்னதை அவள் புரிந்துகொண்டவுடனே அவள் உடைத்து அவருடைய மரணத்திற்கு அடையாளமாக அவருடைய சரீரத்தை அபிஷேகித்தாள்.
The Blessedness of the Unoffended என்ற சகோதரர் T. Austin Sparksஇன் செய்தியில் நாம் ஏற்கெனவே படித்திருக்கிறோம். The Blessedness of the Unoffended. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கடைசிவரை யோவான் ஸ்நானனைச் சென்று சந்திக்கவே இல்லை. ஒரேவொருமுறை தான் சந்தித்தார். ஞானஸ்நானம் எடுத்தபோது. அதற்குப்பின்பு யோவான் ஸ்நானனை இயேசு கிறிஸ்து போய் சந்திக்கவே இல்லை. ஒருவேளை நான் கணிப்பில் தவறு செய்துவிட்டேனோ என்று யோவான் ஸ்நானனன் எண்ணும் அளவிற்கு. அவருடைய குணத்தில் அப்படிப்பட்ட ஒரு நம்பிக்கையும், அசைக்கமுடியாத விசுவாசமும் வேண்டும். ஒரு வருடம் இருட்டறையில் போட்டு அடைத்து வைத்திருக்கிறார்கள். யாருக்காக? இயேசு கிறிஸ்துவுக்காக. அந்த மனிதனை இயேசு கிறிஸ்து சந்திக்கவே இல்லை. வேறு எல்லாரையும் போய் சந்திக்கிறார். அது மட்டும் அல்ல, "இவர் பாவிகளோடும், வரிவசூலிப்பவர்களோடும் போய் நல்லா விருந்து சாப்பிடுகிறார், பிரியாணி சாப்பிடுகிறார்," என்று கேள்விப்படுகிறார். இவர் இயேசு கிறிஸ்துவுக்காக சிறைச்சாலையில் இருக்கிறார். எப்படியிருக்கும் அப்போது! "உண்மையிலேயே நாம் பின்பற்றுகிற இயேசு கிறிஸ்து உண்மையான கர்த்தர்தானா? இவர் நம்பத்தக்கவரா?" என்ற எண்ணம் வரும். இதுதான் சிலுவையின் வழியாகச் சென்று உயிர்த்தெழுதலில் கொண்டு வருகிற குணம்.