Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

எபிரெயர் புத்தகம் தீர்க்கதரிசிகளைவிட, தூதர்களைவிட, மோசேயைவிட, யோசுவாவைவிட, ஆரோனைவிட மேன்மையான, முதன்மையான, நம் எல்லாத் தேவைகளுக்கும், எல்லா நேரத்திலும், எல்லாச் சூழ்நிலைகளிலும் போதுமான இயேசுவை நோக்கி நம் கண்களைத் திருப்புகிறது, உயர்த்துகிறது.  கிறிஸ்துவே தேவனுடைய நித்தியத் திட்டத்தின் மையம் என்பதை இந்தப் புத்தகம் திரைநீக்கிக் காண்பிக்கிறது. சித்திரவதையின் காரணமாகக் கிறிஸ்துவைவிட்டு விலகி மீண்டும் யூதமதத்துக்குத் திரும்பிக்கொண்டிருக்கிற யூதக் கிறிஸ்தவர்களுக்கு இயேசுவே நம் மகா பிரதான ஆசாரியர், சூறாவளியில் நம் நம்பிக்கையின் நங்கூரம், கலங்கித் தவிக்கும் ஆத்துமாவுக்கு இளைப்பாறுதல் என்று எடுத்துரைத்து, விசுவாசத்தைத் துவக்கி நிறைவாக்குகிற கிறிஸ்துவின்மேல் கண்களைப் பதித்து, அவரை நோக்கி முனைப்புடன் செல்ல  அழைப்பு விடுக்கிறது.