Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

"ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லாவற்றையும் நிரப்ப வேண்டும் என்பதும், எல்லாம் கிறிஸ்துவைக்கொண்டு நிரப்பப்பட வேண்டும் என்பதுமே முதலிலிருந்து கடைசிவரை பிதாவின் நோக்கமாகும். ஒரு காரியத்தில் கிறிஸ்து எந்த அளவுக்கு வெளியரங்கமாக்கப்படுகிறார் என்பதை வைத்துத்தான் தேவனுடைய பார்வையில் அதற்கு மதிப்பு உண்டா இல்லையா என்பது கணக்கிடப்படுகிறது. தேவனுடைய பார்வையில் எல்லாவற்றின் மதிப்பும் அதில் கிறிஸ்து எந்த அளவுக்கு வெளியரங்கமாக்கப்படுகிறார் என்பதையே சார்ந்திருக்கிறது. அந்தக் கண்ணோட்டத்திலிருந்துதான் தேவன் எல்லாவற்றின் முக்கியத்துவத்தையும் தீர்மானிக்கிறார். 

நாம் நம் முழுக் கவனத்தையும் அவர்மேல் குவித்துவிட்டால், அது ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும். அப்போது, இன்று நம்மிடம் இருக்கும் தேவையற்ற நிறைய காரியங்கள் போய்விடும். ஏனென்றால், அவை ஆண்டவராகிய இயேசுவை வெளியரங்கமாக்கவில்லை. பிதாவானவர் நம் ஆண்டவராகிய இயேசுவையே நம் கண்களுக்குமுன்பாக வைத்திருக்கிறார் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். பிதாவின் கண்களும், இருதயமும் ஒரேவொரு நபரால் மட்டுமே நிறைந்திருக்கிறது. அவர் எந்த அளவுக்கு வெளியரங்கமாக்கப்படுகிறார், வெளியாக்கப்படுகிறார், மகிமைப்படுத்தப்படுகிறார் என்பதிலேயே அவர் குறியாக இருக்கிறார். அதுவே  அவருடைய இலக்கு, அதுவே அவருடைய குறிக்கோள்." T.A.S

இங்குள்ள கட்டுரைகள் தேவனுடைய இருதயத்தில் இருக்கும் இந்த ஆசையின் எதிரொலிகளாகும். அது  உங்கள் இருதயங்களிலும் எதிரொலிக்கட்டும்.