கிறிஸ்து: நம் பிதாவானவர் நம் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை இப்பிரபஞ்சத்தில் வெளியரங்கமாக்க வேண்டும் என்று தீர்மானித்துள்ளார், திட்டமிட்டுள்ளார். இந்த நோக்கத்திற்காகவே, இந்த நோக்கத்தின்படியே, அவருடைய குமாரனுடைய சாயலுக்கு, அதாவது குணத்துக்கு, ஒத்தசாயலாக மாறுவதற்கு அவர் நம்மை அழைத்து, நீதிப்படுத்தியிருக்கிறார்; இப்போது பரிசுத்தமாக்கிகொண்டுமிருக்கிறார். நாம் அவரை அறிய வேண்டும் என்பதற்காகவும், அவருடைய தெய்வீக சுபாவத்தில் பங்குபெற வேண்டும் என்பதற்காகவும் அவர், கிறிஸ்து சிலுவையில் செய்து முடித்த மீட்பின் வேலையின்மூலம், தம் தெய்வீக ஜீவனை நமக்குத் தந்திருக்கிறார். தேவன் இந்தக் கிறிஸ்துவை நம்முடைய எல்லாத் தேவைக்கும் போதுமான, விவரிக்கமுடியாத, அற்புதமான ஈவாக, கொடையாக, நமக்குத் தந்திருக்கிறார்.