Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

இவர் நற்செய்தி அறிவித்து ஆத்துமாக்களை ஆதாயம்பண்ணும், வேதவாக்கியங்களை நிதானமாய்ப் பகுத்துப் போதிக்கும் கிருபைபெற்ற நற்செய்தியாளர், ஆசிரியர். கிறிஸ்துவுக்குள் இவர் பெற்று, வளர்த்த நூற்றுக்கணக்கான பரிசுத்தவான்கள் இதற்குச் சான்று, நிரூபணம். கல்லூரியில் மாணவப்பருவத்திலிருந்து, முனைவர் பட்டம் பெற்று கல்லூரியில் பேராசிரியராகி, கடந்த, ஏறக்குறைய, நாற்பது ஆண்டுகால ஊழியத்தில் இவர் ஏற்படுத்திய தாக்கமும், கொடுத்த ஊக்கமும் கொஞ்சம் அல்ல. வாலிபர்கள் கூட்டமோ, சபைக் கூட்டமோ, மாநாடுகளோ-எல்லாக் கூட்டங்களிலும் எல்லாராலும் விரும்பப்பட்டவர், வரவேற்கப்பட்டவர்.

இந்தச் செய்திகள் தேவனுடைய நித்திய நோக்கத்தின் வெளிப்பாடாகும். இவைகள் பெரிய மேடை போட்டு, கூட்டம் கூட்டி, ஒலி பெருக்கிகள் வைத்து முறைப்படுத்தப்பட்ட கூட்டங்களில் பேசப்பட்டவை அல்ல. மாறாக, ஒரு குடும்பச் சூழலில், வாரக் கூட்டங்களில், ஒரு சிறு கூட்டம் தேவ மக்களுக்குப் பேசப்பட்டவை. ஆனாலும், தேவனை உண்மையாய்த் தேடும் மக்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு இவை நிச்சயமாக ஜீவ ஓட்டமாக இருக்கும்.

பேசிய செய்திகளை அப்படியே கேட்டுப் படியெடுத்திருக்கிறோம். அச்சிடப்படுவதற்கென்று வகுத்து, தொகுத்து, திருத்தி, சரிசெய்யப்படவில்லை. எனவே, தவறுகள் இருக்க வாய்ப்புண்டு. திருத்தம் செய்யாததால் “இறைச்சியை எடுத்துவிட்டு எலும்பை எறிந்து விடுங்கள்.” இந்தச் செய்திகளைக் கேட்கும்போது, சகோதரன் மில்டன் உங்களுக்குமுன்னால் நின்று பேசுவதாக நினைத்துக்கொள்ளுங்கள்.

தேவன் தம் குமாரனை நமக்குள் வெளிப்படுத்தப் பிரியமாயிருக்கிறார். ஆமென்