இது அறிவைப் பெறவோ அல்லது பெருக்கவோ அல்ல, இது தகவல்களைத் தேடவோ அல்லது விவரங்களைச் சேகரிக்கவோ அல்ல; மாறாக, புத்தியுள்ள ஐந்து கன்னிகைகள் மணவாளனைச் சந்திக்கச் சென்றதுபோல, வாழும் கிறிஸ்துவைக் காண, சத்தியத்தால் மருவுருவாக்கப்பட, விசுவாசத்தில் வளர, முதிர, தேற வேதாகமத்தை ஆராயும் பயணம். இது தேவனுடைய வார்த்தையில் தேவனைத் தேடும் பயணம். நீங்கள் புதியவராக இருந்தாலும் சரி, பல ஆண்டுகள் கிறிஸ்தவ வாழ்வில் பயணித்தவராக இருந்தாலும் சரி, அடிப்படைச் சத்தியங்களைத் தேடுகிறவராக இருந்தாலும் சரி, வேதாகமத்தின் ஆழமான சத்தியங்களை நாடுகிறவராக இருந்தாலும் சரி, இந்த வளங்கள் உங்கள் வாழ்வை வளமாக்கும், வாழ்வுக்கு வழிகாட்டும்.