"காலங்கள் நிறைவேறும்போது...பரலோகத்திலும் பூலோகத்திலும் இருக்கிற சகலமும் கிறிஸ்துவுக்குள் கூட்டிச்சேர்க்கப்பட வேண்டும்..." (எபேசியர் 1:9)
என்பது தேவனுடைய நித்தியத் திட்டம். இந்தத் திட்டத்தில் பாடல்களும் அடங்கும். நம் விசுவாசத்தின் மையமும், நம் வாழ்வின் மையமுமாகிய கிறிஸ்து என்ற நபரும், அவர் சிலுவையில் செய்துமுடித்த வேலையுமே நம் பாடல்களின் கருப்பொருள். அவரே எல்லா யுகங்களிலும், நாவுகளிலும் சபையின் பாடலாக இருந்திருக்கிறார். இன்றைக்கும் அவரே நம் பாடல்.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்மேல் அழியாத அன்பு கொண்டுள்ள அனைவரும் கிறிஸ்துவை மையமாகக் கொண்ட இந்தப் பாடல்களை நிச்சயமாக விரும்புவார்கள், வரவேற்பார்கள். ஏனென்றால், இந்தப் பாடல்கள் தேவமக்களைக் கிறிஸ்துவுக்குள் கட்டியெழுப்புவதற்கும், அவர்களுடைய ஆவிக்குரிய நரம்பைத் திடப்படுத்துவதற்கும் மிகவும் உதவியாக இருக்கும்.
எனவே, ஆண்டவராகிய இயேசுவை முகமுகமாய்க் கண்டு, நித்திய மீட்பின் பாடலைப் பாடும்வரை, இந்தப் பாடல்களின்மூலம் தேவனுடைய மக்கள் தங்களுடைய பரம பயணத்தில் உயிரடைவார்களாக, உற்சாகமடைவார்களாக, கிளர்ந்தெழுவார்களாக, களிகூர்வார்களாக, ஆறுதலடைவார்களாக. ஆமென்.