Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

பாடல் வரிகள்

பாடல்கள் கிறிஸ்துவின் அனுபவங்களால் நிறைந்திருக்க வேண்டும்; அவரை உயர்த்தவும், மேன்மைப்படுத்தவும் வேண்டும்; மக்களை அவரிடம் ஈர்க்க வேண்டும்; எளிமையாக இருக்க வேண்டும்; தேவனுடைய மக்கள் எளிதில் பாடத்தக்கவைகளாக இருக்க வேண்டும். அவைகள் வெறுமனே கொள்கைப்பரப்புப் பாடல்களாகவோ, உரைநடையாகவோ இருக்கக் கூடாது. ஒரு கட்டிடத்துக்குப் பூமிக்குக்கீழே அடித்தளமும், பூமிக்குமேலே மாடிகளும் இருப்பதுபோல, ஒவ்வொரு பாடலுக்கும் அடித்தளமும்,  மாடியும் உள்ளன. கட்டிடத்திற்கு அடித்தளம் உறுதியாக வேண்டும். அதுபோல, பாடலின் அடித்தளமாகிய கருப்பொருள் வேதவாக்கியங்களின்படி சரியாக இருக்க வேண்டும். அடித்தளம் சரியாக இல்லையென்றால், இசை, கவிதை, உருவகம், உணர்ச்சி, இயற்றியவர், இசையமைத்தவர், பாடியவர் என்ற மாடிகளெல்லாம் பொருளற்றவை. பாத்திரத்தின்  புறஅழகைப் பார்த்து மயங்கிவிடக்கூடாது. பாத்திரத்துக்குள்  இருக்கும் அரும்பொருளைப் பார்க்க வேண்டும். அதுவே தாகமுள்ள ஆத்துமாவுக்கு ஜீவத் தண்ணீரை வழங்கும்.

இந்த அடிப்படையில் நாங்கள் தெரிந்தெடுத்த நான்குவகைப் பாடல்களை இங்கு வழங்குகிறோம்.  

  • முதல் வகை பாரம்பரியப் பாடல்கள். 

பாரம்பரியப் பாடல்கள் - இதோ இங்கே.

  • இரண்டாவது வகை திருத்தப்பட்ட பாரம்பரியப் பாடல்கள். 

திருத்தப்பட்ட பாரம்பரியப் பாடல்கள் - இதோ இங்கே.

  • மூன்றாவது வகை மொழிபெயர்க்கப்பட்ட பாடல்கள். 

மொழிபெயர்க்கப்பட்ட பாடல்கள் - இதோ இங்கே.

  • நான்காவது வகை எங்கள் பாடல்கள். 

எங்கள் பாடல்கள் - இதோ இங்கே.