Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

தேவனுடைய வழி - கிறிஸ்துவின் மேன்மை

Transcribed from a message spoken in May 2015 in Chennai 

By Milton Rajendram

நாம் காலையிலே, முதலாவது செய்தியாக தேவனுடைய நோக்கம் கிறிஸ்துவின் முதன்மையைப்பற்றியது என்று நாம் பார்த்தோம். நாம் அறிய விரும்புகிற, முதலாவது, முதன்மையான பொருள் கிறிஸ்து. நாம் ஆதாயம்பண்ண விரும்புகிற முதன்மையான பொருள் கிறிஸ்து. நம்மூலமாய்ப் பிறருக்கு வெளியாக்க விரும்புகிற முதன்மையான பொருள் கிறிஸ்து. இதுதான் தேவனுடைய திட்டத்தில், தேவனுடைய நோக்கத்தில் கிறிஸ்துவே முதன்மையாக இருக்கிறார் என்பதின் பொருள்.

மனிதர்களுடைய பிரச்சினைகளுக்குத் தேவன் ஒரு தீர்வு வைத்திருக்கிறார் என்பதல்ல நற்செய்தி. மனிதர்களுக்கு ஆயிரக்கணக்கான, ஆயிரம் விதமான பிரச்சினைகள் உண்டு. அந்தப் பிரச்சினைகளுக்கு எல்லாம் தேவன் ஒரு தீர்வு வைத்திருக்கிறார் என்பது நற்செய்தி அல்ல. இப்படிச் சொல்லும்போது இது மனிதர்களுக்கு மிகவும் மனச்சோர்வை ஏற்படுத்திவிடும். ஒரு கூடுகைக்குப் போகிறோம் என்றால், "அங்கே என் பிரச்சினைக்கு ஒரு தீர்வு வரவேண்டும், ஒரு விடிவு காலம் வரவேண்டும், விடைவேண்டும்," என்பது மனிதர்களுடைய இருதயத்தின் வாஞ்சை.

தேவன் உண்மையிலேயே விடுவிக்கிறார், தீர்க்கிறார். ஆனால், மனிதர்கள் விரும்புகிற வழியில் அவர் தீர்ப்பதுமில்லை, விடுவிப்பதுமில்லை, அவருடைய திட்டங்களை வகுப்பதுமில்லை. தேவன் தம்முடைய வழியில் மனிதர்களுடைய தேவைகளைப் பூர்த்திசெய்கிறார், கட்டுகளை அவிழ்க்கிறார், சிறையிருப்புகளிலிருந்து அவர்களை விடுதலையாக்குகிறார். ஆனால் அதிலே மனிதனுக்கு ஈடுபாடு இல்லை. "என்னுடைய வழியிலே எனக்கு, என்‍ தேவைகளுக்கு நிரப்பீடும், என்னுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வும், என்னுடைய கேள்விகளுக்குப் பதிலும் வேண்டும்," என்பது மனிதர்களுடைய வழி.

நாம் வாழ்கின்ற காலங்களை நாம் அறிவோம். தேவனற்ற மக்கள் எப்படி வாழ்கின்றார்கள், தேவனுடைய பெயரை, கிறிஸ்துவின் பெயரை, தரித்திருக்கின்ற தேவனுடைய மக்கள் எப்படி வாழ்கின்றார்கள் என்று நமக்குத் தெரியும். நாம் அவர்களைவிட உயர்ந்த வகுப்பினர் என்று நான் கருதவுமில்லை அல்லது கோரவுமில்லை. ஆனால், தேவனுடைய மக்கள் தேவனுடைய நித்தியத் திட்டத்தையும், தேவனுடைய நித்திய நோக்கத்தையும் பெருவாரியாகத் தவறவிடுகிறார்கள் என்பதை நாம் அன்பினால் சொல்ல வேண்டும். அதற்குப் பல காரணங்கள் உண்டு. இந்தச் செய்தி‍யிலே நாம் அதைப் பார்க்கப்போகிறோம்.

தேவன் தம்முடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கு ஒரு வழி வைத்திருக்கிறார். தேவனுடைய வழி. தேவனுடைய திட்டத்திலே மனிதன் ஒரு பங்காக இருப்பதால், மனித வாழ்க்கைக்கும் தேவன் ஒரு வழி வைத்திருக்கிறார். தேவனுடைய திட்டமும், மனித வாழ்க்கையும் ஒன்றுக்கொன்று முரணானதல்ல. தேவனுடைய திட்டம் மனிதனுடைய வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது. மனிதனுடைய வாழ்க்கை தேவனுடைய திட்டத்தோடும், தேவனுடைய நோக்கத்தோடும் பின்னிப்பிணைந்தது. "தேவனுடையத் திட்டம் வேறு, என்னுடைய மனித வாழ்க்கை வேறு, என் மனித வாழ்க்கையைத் தேவன் ஆசீர்வதிக்க வேண்டும், அப்போது நான் ஒரு deal செய்துகொள்வேன். அது என்னவென்றால், தேவனுடைய திட்டம் நிறைவேறுவதற்கு நான் உதவி செய்வேன்," என்று அர‍சியல் கட்சிகள் ஒருவருக்கொருவர் உடன்பாடு செய்துகொள்வதுபோல் நாம் தேவனோடு உடன்பாடு செய்துகொள்வதில்லை. அது, "நீர் என்னை ஆசீர்வதித்தால், நான் திரும்பி வரும்போது, உமக்குத் தசமபாகம் கொடுப்பேன்," என்று வாழ்ந்த யாக்கோபின் மனப்பாங்கு. "என்னை நீர் பாதுகாப்பாக என்னுடைய தகப்பனுடைய வீட்டிற்குக் கொண்டு வந்து சேர்த்தால் நான் உமக்குத் தசமபாகம் தருவேன்," என்று சொல்வது தேவனுக்குப் பொருளாதாரத்தின்மேல் அளவுகடந்த ஆசையிருப்பதுபோலவும், தேவன் ஒரு வங்கிக் கணக்கு வைத்திருப்பதுபோலவும், அந்த வங்கிக் கணக்கில் பணத்தை அதிகரிக்க வேண்டும் என்று ஆசைப்படுவதுபோலவும் சொல்வதற்குச் சமானம். யாக்கோபு தசமபாகம் தருகிறேன் என்று சொன்னதால் தேவன் மனமகிழ்ந்து, கொண்டாடிவிட்டாரா? பரலோகங்கள் குதுகலித்ததா? அது அப்படியல்ல.

தேவனுடைய திட்டம் மனிதனுடைய வாழ்க்கையோடு தொடர்புடையது, பின்னிப்பிணைந்தது. தேவனுடைய திட்டத்தைப்பற்றிய அக்கறையோ, அறிவோ, அனுபவமோ இல்லாத தேவனுடைய மக்கள் தங்கள் வாழ்க்கையிலே ஒரு பேரிழப்பை அடைகிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை பொருளற்றதும், கனியற்றதும், வியர்த்தமுமாய் மாறுகிறது. தேவன் தம்முடைய நோக்கத்தையும், திட்டத்தையும், நிறைவேற்றுவதற்கு ஒரு வழி வைத்திருக்கிறார். தேவனுடைய அந்த வழி கிறிஸ்துவின் மேன்மை அல்லது கிறிஸ்துவின் மகத்துவம். The greatness of Christ and the Excellency of Christ. தேவனுடைய வழி ஒரு உபாயமோ, ஒரு யுக்தியோ, ஒரு தந்திரமோ, ஒரு எந்திரமோ, ஒரு மதமோ, ஒரு ஸ்தாபனமோ, ஒரு நிறுவனமோ, ஒரு அமைப்புமுறையோ, ஒரு தத்துவமோ அல்ல. இந்தப் பட்டியலை நீங்கள் நீட்டித்துக்கொண்டே போகலாம். தேவனுடைய வழி ஒரு உபாயமோ, யுக்தியோ, தந்திரமோ, எந்திரமோ, மந்திரமோ இல்லை.

திருமூலருடைய திருமந்திரத்திலே இந்த வார்த்தைகளெல்லாம் பயன்படுத்தப்பட்டுள்ளன. மந்திரம், எந்திரம், தந்திரம். கை வைத்தியம் படித்தவர்கள் எல்லாம் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்துவார்கள். "என்று உங்கள் புலவர்களிலும் சிலர் சொல்லியிருக்கிறார்கள்."

தேவனுடைய வழி ஒரு மதமோ அல்லது ஒரு அமைப்புமுறையோ அல்லது ஒரு தத்துவமோ அல்ல. தேவன் தம் திட்டத்தை நிறைவேற்றுவதற்கு அல்லது மனித வாழ்க்கையைப் பொருள்நிறைந்ததாய் மாற்றுவதற்கு அது தேவனுடைய வழியல்ல. தேவனுடைய வழி கிறிஸ்துவாகிய நபரும், அவருடைய பணியும். God’s solution to all man's problems is not a method, not a Technique, not a system and not a philosophy. God’s solution to all man's problems is a person, The Lord Jesus Christ. "இது உங்களுக்குப் பரவசத்தை உண்டுபண்ணுகிறதா, இல்லையா" என்று எனக்குத் தெரியவில்லை. ஒரு நோய்க்கு உலகமெங்கும் தேடி ஒரு மருந்து கிடைக்கவில்லை. ஆனால், அந்த நோய்க்கு "நான் ஒரு மருந்து வைத்திருக்கிறேன்" என்று சொன்னால், மக்களெல்லாம் பரவசப்பட்டுவிடுவார்கள். அதற்கு சாட்சிகொடுப்பதற்கு இரண்டு பேர‍ைக் கூட்டிக்கொண்டு போனால் போதும். விளம்பரத்துக்கு. அவ்வளவுதான்.

தேவனுடைய மக்களாகிய நாம் ஆவிக்குரிய அறிவுக்கூர்மையுள்ளவர்களாக இருக்க வேண்டும். தேவன் அவருடைய திட்டத்தை நிறைவேற்றுவதற்கும், மனித வாழ்க்கையின் நிறைவிற்கும் இயேசு கிறிஸ்துவின் மகத்துவத்தையும், இயேசு கிறிஸ்துவின் மேன்மையையும் வழியாக வைத்திருக்கிறார்.

உங்களுடைய மனதிலே பதியவைப்பதற்காக நான் மூன்று குறிப்புகளைப் தரப்போகிறேன்.

  1. முதலாவது கிறிஸ்துவாகிய நபர். The Person of Christ.
  2. இரண்டாவது கிறிஸ்துவின் பணி, The work of Christ
  3. மூன்றாவது கிறிஸ்துவுக்குப் பதிலீடுகள் அல்லது பிரதியீடுகள். The substitutes of Christ. கிறிஸ்துவினுடைய மேன்மைக்கும், மகத்துவத்திற்கும் எதிர் இருக்கின்றன, கிறிஸ்துவுக்கு Substitutes, பிரதியீடுகள் அல்லது பதிலீடுகள் இருக்கின்றன.

1. கிறிஸ்துவாகிய நபர் - இயேசு கிறிஸ்து புலப்படும் தேவன்

மத்தேயு 16 ஆம் அதிகாரம் 13 முதல் 20 ஆம் வசனத்திலே "பின்பு, இயேசு பிலிப்பு செசரியாவின் திசைகளில் வந்தபோது, தம்முடைய சீஷரை நோக்கி: மனுஷகுமாரனாகிய என்னை ஜனங்கள் யார் என்று சொல்லுகிறார்கள் என்று கேட்டார். அதற்கு அவர்கள்: சிலர் உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் எலியா என்றும், வேறு சிலர் எரேமியா, அல்லது தீர்க்கதரிசிகளில் ஒருவர் என்றும் சொல்லுகிறார்கள் என்றார்கள். அப்பொழுது அவர்: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். மேலும், நான் உனக்குச் சொல்லுகிறேன், நீ பேதுருவாய் இருக்கிறாய், இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும் என்றார். அப்பொழுது, தாம் கிறிஸ்துவாகிய இயேசு என்று ஒருவருக்கும் சொல்லாதபடிக்குத் தம்முடைய சீஷர்களுக்குக் கட்டளையிட்டார்," என்று வாசிக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னுடைய சீடர்களிடம், "மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" என்று ஒரு கேள்வி கேட்கிறார். இருபது நூற்றாண்டுகளுக்குப்பிறகும் இந்தக் கேள்வி இன்னும் புயல் வீசிக்கொண்டிருக்கிறது. "மக்கள் என்னை யார் என்று சொல்லுகிறார்கள்?" இந்த ஒரு கேள்வி இந்தப் பிரபஞ்சத்தில் ஒரு சூறாவழியையே உண்டாக்கி வைத்திருக்கிறது. ஆயிரக்கணக்கான பதில்கள் உள்ளன. அவர்களில் சிலர், "உம்மை யோவான் ஸ்நானன் என்றும், சிலர் உம்மை எலியா என்றும், சிலர் உம்மை எரேமியா என்றும், சிலர் உம்மை தீர்க்கத்தரிசி என்றும், சிலர் உம்மை காஷ்மீர் மலைக்குப் போய் ஏகமும் கற்றுக் கொண்டு வந்தவர் என்றும், சிலர் உம்மை அரேபியாவுக்குப் போய் அதைக் கற்றுக்கொண்டு வந்தவர் என்றும், சிலர் உம்மை இது என்றும், சிலர் உம்மை அது என்றும் சொல்லுகிறார்கள்." இய‍ேசு கிறிஸ்து இந்தக் கேள்வியை அறியாதவர் அல்ல. "இப்படியா என்னைப்பற்றி சொல்லிவிட்டார்கள். ரொம்ப அதிர்ச்சியாக இருக்கிறது எனக்கு," என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அதிர்ச்சியடைந்துவிடவில்லை. அப்பொழுது அவர் ஒரு கேள்வி கேட்கிறார். "நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள். Who do you say that I am?" வரலாற்றில் பொன் எழுத்துக்களிலே பொறிக்கப்படவேண்டிய ஒரு பதிலை பரவச நிலையில் பேதுரு அறிவிக்கிறார். "நீர் ஜீவனு‍ள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து." ஆண்டவர் மனம் மகிழ்ந்து விடுகிறார். "யோனாவின் குமாரனாகிய சீமோனே மாம்சமும், இரத்தமும், இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்தில் இருக்கிற என் பிதாவே இதை உனக்கு வெளிப்படுத்தினார்."

இயேசு கிறிஸ்து யார்? இவர் ஒரு சிறப்பான ஒரு உலகம். இந்த உலகத்தை இந்த மனித வாழ்க்கையைக் கொண்டும், நித்திய நித்தியமாய் வருகின்ற யுகங்களைக் கொண்டும்கூட நாம் ஆராய்ந்து, அறிந்து, தீர்த்துவிட முடியாது. அப்பேர்ப்பட்ட ஒரு அற்புத உலகம் இவர். "ஜீவிக்கும் தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து. You are the Christ, the Son of the Living God. Simon, son of Jonah! Flesh and blood has not revealed to you, my Father who is in heaven that has revealed to you." இறையியலில் முனைவர் பட்டம் வாங்கினாலும் "இயேசு கிறிஸ்து யார்?" என்கிற இந்த வெளிப்பாடும், இந்த வெளிச்சமும் ஒருவனுக்குக் கிடைக்காது. "சகலமும் என் பிதாவினால் எனக்கு ஒப்புக்கொடுக்கப்பட்டிருக்கிறது; பிதா தவிர வேறொருவனும் குமாரனை அறியான்; குமாரனும், குமாரன் எவனுக்கு அவரை வெளிப்படுத்தச் சித்தமாயிருக்கிறாரோ அவனும் தவிர, வேறொருவனும் பிதாவை அறியான்" (மத்தேயு 11:27). "இந்தக் கல்லின்மேல் என் சபையைக்கட்டுவேன்; பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை" (மத்தேயு 16:18). இந்த வெளிப்பாட்டைத்தான் அவர் கல் என்று சொல்கிறார்.

இது இன்னொன்று, இருபது நூற்றாண்டுகள் இதைப்பற்றியும் ஒரு சூறாவளி வீசிக்கொண்டிருக்கிறது. "பேதுருதான் அந்தக் கல், முதல் கல்; அப்புறம் இரண்டாவது கல் யார் என்று தெரியாது. அப்புறம் மூன்றாவது கல், நான்காவது கல். அப்புறம் ரோமன் கத்தோலிக்க மத அமைப்பு முறையின் தலைவர்தான் அந்த கல்," என்ற ஒரு மூட நம்பிக்கை தேவனுடைய மக்களிடையே இருக்கிறது. இது அவர்களுடைய மனதைப் புண்படுத்தும். ஆனால், கணக்கிட்டு கொஞ்சம் மனம் புண்படுத்தலை நாம் செய்யலாம். கணக்கிடாமல் நாம் மனம் புண்படுத்தக் கூடாது. இது தவறு.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து குறிப்பிட்ட கல் இந்த வெளிப்பாடு. "இயேசு! இவர், இந்த நபர் யார்?" என்ற கேள்விக்கு மிகத் துல்லியமான, மிகத் தீர்க்கமான பதில், ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து. "இந்தக் கல்லின் மேல் என் சபையைக் கட்டுவேன். பாதாளத்தின் வாசல்கள் அதை மேற்கொள்வதில்லை. எந்த ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அல்லது எந்த ஒரு கூட்டத்தினுடைய வாழ்க்கையில், "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து," என்ற நம்பிக்கையின்மேலும், விசுவாசத்தின்மேலும், பற்றுறுதியின்மேலும் commitment (or committal) ஒப்புவித்தல், தத்தம்செய்தல், கையளித்தல் இருக்கிறதோ அந்த வாழ்க்கையைப் பாதாளத்தின் வாசல்கள் அல்லது தேவனுடைய பகைவனாகிய சாத்தானுடைய எந்த சக்திகளும் அழிக்க முடியாது. "பரலோகராஜ்யத்தின் திறவுகோல்களை நான் உனக்குத் தருவேன்; பூலோகத்திலே நீ கட்டுகிறது எதுவோ அது பரலோகத்திலும் கட்டப்பட்டிருக்கும், பூலோகத்திலே நீ கட்டவிழ்ப்பது எதுவோ அது பரலோகத்திலும் கட்டவிழ்க்கப்பட்டிருக்கும்." "இயேசு என்கிற நபர் யார்" என்கிற வெளிப்பாடு இந்த முழுப் பிரபஞ்சத்திலம் மகா வல்லமையும், சக்தியும், ஆற்றலும் உள்ளது.

யோவான் இதே கேள்வியை, "இயேசுவானவர் தேவனுடைய குமாரனென்று விசுவாசிக்கிறவனேயன்றி உலகத்தை ஜெயிக்கிறவன் யார்?" என்று கேட்கிறார் (1 யோவான் 5:5).

"தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்" (யோவான் 1:18). No one has seen God, Only He that is in the bosom of God, has expressed Him. இயேசு கிறிஸ்து யார் என்கிற கேள்விக்கு "அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபமும், சர்வ சிருஷ்டிக்கும் முந்தின பேறுமானவர்," என்று கொலோசெயர் 1:15இல் வாசிக்கிறோம். He is the very image of the invisible God.

என்னோடு வேலைபார்த்த ஒரு பேராசிரியர், "இயேசு கிறிஸ்து ஒரு முறைகூடத் தன்னைக் கடவுள் என்று சொன்னதில்லை," என்று கூறுவார். இப்படிப்பட்ட சூறாவளிகளினூடாய் நாங்கள் வாழ்ந்து வந்திருக்கிறோம். இந்த சூறாவளிகளுக்காகக் கர்த்தரைத் துதிக்கிறேன். ஏனென்றால் ஒருவன் கேள்வி எழுப்பும்போதுதான் நாம் அதைப்பற்றி சிந்திக்கிறோம்.

சகோதரி மரியாள், "நான் தேவனுடைய தாய்," என்று பறைசாற்றவில்லை. "அவர் தேவனுடைய தாய்" என்று இன்று சொல்பவர்கள் சகோதரி மரியாளைச் சந்திக்கும்போது, "என்னவோ என்னை மகிழ்விக்கிறதாக நினைத்து நீங்கள் அப்படிப்பட்ட கருத்துக்களை உடையவர்களாக இருந்தீர்கள். எனக்கு ஆதரவாகப் பேசுவதாக நீங்கள் நினைத்தீர்கள். அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள் என்றுதானே நான் சொன்னேன்," என்று பதில் கூறுவார்.

நான் உண்மையிலேயே மரியாளுடைய அடிச்சுவடின்படி நடக்கிற மனிதன். எப்படியென்றால் "அவர் உங்களுக்கு என்ன சொல்லுகிறாரோ, அதின்படி செய்யுங்கள்," என்று அவர் சொன்னார். இயேசு என்ன சொல்கிறாரோ அதின்படி நான் செய்கிறேன்.

"தேவனை ஒருவனும் ஒருக்காலும் கண்டதில்லை." பூமியிலே அவர் மனித வாழ்க்கை வாழ்ந்த நாட்களிலே பட்டவர்த்தனமாக, வெளிப்படையாக, பகிரங்கமாக, அவர் "நான் தேவன்" என்று சொல்லவில்லை. ஆனால் "நான் தேவன்" என்பதற்குச் சமானமான எல்லாவற்றையும் அவர் செய்தார். பிலிப்பு ஒருநாள் இயேசுவிடம், "ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்," என்றான். தவிப்பினுடைய எல்லைக்கே பிலிப்பு வந்துவிட்டார். "இவர் ஓயாமல் பிதா என்ன சொல்கிறாரோ அதையே நான் செய்கிறேன், பிதா சொல்வதைத்தவிர எதையும் செய்வதில்லை. பிதா எதைக் கட்டளையிடுகிறாரோ அதைச் செய்கிறேன். பிதாவைக் கனம் பண்ணுகிறவன் என்னைக் கனம் பண்ணுகிறான். என்னைக் கனம் பண்ணுகிறவன் பிதாவைக் கனம் பண்ணுகிறான்' ஓ! யார் அந்தப் பிதா?" ஏறக்குறைய கேள்வி அப்படியாயிருக்கிறது. அதற்கு இயேசு: பிலிப்புவே, இவ்வளவுகாலம் நான் உங்களுடனேகூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னைக் கண்டவன் பிதாவைக் கண்டான்; அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்? நான் பிதாவிலும், பிதா என்னிலும் இருக்கிறதை நீ விசுவாசிக்கிறதில்லையா? நான் உங்களுடனே சொல்லுகிற வசனங்களை என் சுயமாய்ச் சொல்லவில்லை; என்னிடத்தில் வாசமாயிருக்கிற பிதாவானவரே இந்தக் கிரியைகளைச் செய்துவருகிறார். நான் பிதாவிலும் பிதா என்னிலும் இருக்கிறதை நம்புங்கள்; அப்படியில்லாவிட்டாலும் என் கிரியைகளினிமித்தமாவது என்னை நம்புங்கள்," என்றார்.

தேவன் தன்னை மனிதர்களுக்குப் புலப்படும் வண்ணம் வெளிப்படுத்தினார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. தேவன் தம்மை ஊனுருவில், மனித உருவில், மாம்சத்திலும், இரத்தத்திலும் எவ்வளவு வெளிப்படுத்த முடியுமோ அவ்வளவு வெளிப்படுத்தினார் - ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில். ஆகவே, தேவன் தன்னுடைய முழு மொத்தத்தையும் ஊனுருவில், மனித உருவில், மாம்சத்திலும், இரத்தத்திலும் வைத்தால் அதனுடைய விளைவு என்னவாக இருக்குமோ அந்த விளைவுதான் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இதைத்தவிர "ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து யார்? இந்த நபர் யார்?" என்பதற்குத் தெளிவான பதில் நான் வேதத்திலே காணவில்லை. திரித்துவம், திரியேகத்துவம், Trinity, Unity இது போன்ற பல்வேறு கேள்விகளை இந்த இருபது நூற்றாண்டுகளாகத் தேவனுடைய மக்கள் எழுப்பி அதற்கு பல்வேறுவிதமான பதில்களைக் கூற முயற்சி செய்திருக்கிறார்கள். ஆனால், நான் நம்முடைய வாழ்க்கைக்கு, நம்முடைய அனுபவ வாழ்க்கைக்கு, தேவனுடைய நோக்கமும், திட்டமும் நிறைவேறுவதற்கு நாம் "ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்ற நபர் யார்" என்ற கேள்விக்கு இதற்கு மிஞ்சி நாம் போகவேண்டிய அவசியமில்லை. "அவர் அதரிசனமான தேவனுடைய தற்சுரூபம்."

"இவர் அவருடைய மகிமையின் பிரகாசமும், அவருடைய தன்மையின் சொரூபம். He is the impress of His substance and the effulgence of His Glory," என்று எபிரேயர் 1:3இல் வாசிக்கிறோம். எதை மனதில் வைத்து பரிசுத்த ஆவியானவர் இப்படிப்பட்ட வார்த்தைகளை எழுதினார் என்று தெரியவில்லை. ஒருவேளை தேவனை மாம்சமும், இரத்தமும் என்கிற ஒரு அச்சில் வைத்து, பதித்து எடுத்தால் என்ன காண்பமோ அது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. He is the impress of His substance and the effulgence or the radiance of His glory.

"சகோதரனே, எங்களுக்கு இதைப்பற்றி எந்தச் சந்தேகமும் இல்லை. நாங்கள் அப்படியெல்லாம் ஒரு சந்தேகத்தைக்கூட எழுப்புவதில்லை. பேதுருவோடு சேர்ந்து நாங்களும் 'நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து,' என்று சொல்ல ஆயத்தமாயிருக்கிறோம். இதில் எங்களுக்கு எந்த மாற்றுக் கருத்தும் இல்லை,:" என்று நாம் சொல்லலாம். ஆனால், இதன் விளைவுகள் என்னவென்பதை நாம் சிந்திக்க வேண்டும். ஆகவே, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து (நான் பயன்படுத்துகிற வார்த்தை) புலப்படும் தேவன், Tangible God or God who has made Himself tangible. "ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது," என்று யோவான் 1:1ம் " அந்த வார்த்தை மாம்சமாகி, கிருபையினாலும் சத்தியத்தினாலும் நிறைந்தவராய், நம்மிடையே கூடாரமடித்தார்; அவருடைய மகிமையைக் கண்டோம்; அது பிதாவுக்கு ஒரே பேறானவருடைய மகிமைக்கு ஏற்ற மகிமையாகவே இருந்தது," என்று 14யிலும் வாசிக்கிறோம். The word was with God, the word became flesh and tabernacled among us full of grace and reality, and we behold His glory, the glory as of the only begotten of God.

"என்னுடைய வாழ்க்கையில் ஒரு நோய் இருக்கிறது, ஒரு பொருளாதார நெருக்கடி இருக்கிறது, குடும்பத்தில் பிரச்சினைகள் இருக்கின்றன. அதற்கும் இதற்கும் என்ன தொடர்பு?" என்ற கேள்வி எழும். மனிதனுக்குமுன்பாக தேவன் மாபெரும் ஒரு தரிசனத்தை வைத்தாலும், "இதில் எனக்கு என்ன இலாபம்" அல்லது "அதில் எனக்கு என்ன கிடைக்கும்," என்பதுதான் அவனுடைய கேள்வி. நம்மால் பொறுக்க முடியாது. முதலில் எனக்கு என்ன கிடைக்கும் என்று சொல்லும். அப்புறம் மீதி காரியத்தை எல்லாம் பார்த்துக்கொள்ளலாம்," என்றுதான் சொல்வோம்.

முதலாவது தேவனுக்கு என்ன கிடைக்கும் என்று பார்ப்போம். பிறகு மனித வாழ்க்கைக்குப் பார்க்கலாம். இது முதல் குறிப்பு: அவர் புலப்படும் தேவன். முதலாவது குறிப்பு இயேசு கிறிஸ்து புலப்படும் தேவன். God, manifest in flesh. "தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார். God was manifest in flesh" (1 தீமோத்தேயு 3:16). ஓரிடத்தில் தோமா நேரடியாகவே இயேசுவை நோக்கி, "என் ஆண்டவரே! என் தேவனே! My Lord! My God!" என்றார். இயேசு கிறிஸ்து தோமாவின் ஆராதனையை, வழிபாட்டை, தொழுகையை, ஏற்றுக்கொள்கிறார். "ஓ நான் ஒரு தீர்க்கதரிசிதான், நான் ஒரு கிறிஸ்துதான், நான் ஒரு மேசியாதான். உன்னைப்போல் நானும் பாடுள்ள மனிதன்தான். ஆகையால், என்னை வீழ்ந்து கும்பிடாதே," என்று இயேசு சொல்லவில்லை. He is God Manifest in flesh.

உங்களுக்கு ஒரு கதை சொல்ல வேண்டும். சுருக்கமான கதை. சபை வரலாற்றில் ஒரு காலக்கட்டத்திலே, ஏரியஸ் என்ற நபருக்கும், அத்தனேசியஸ் என்ற நபருக்கும் இடையே ஒரு பெரிய கருத்து வேறுபாடு ஏற்பட்டது. ஏரியஸ், "இயேசு கிறிஸ்து ஒரு மனிதர், மிக உயர்ந்த மனிதர். எல்லா மனிதர்களிலும் மிக உயர்ந்த மனிதராக இருக்கலாம். அவரை விட உயர்ந்த மனிதர் இந்தப் பூமியிலே வாழ்ந்ததில்லை," என்றார். இது எவ்வளவோ பெரிய சான்றிதழ் இல்லையா? இயேசுவைப்பற்றி ஒரு மனிதர் இப்படி சொன்னால், நான் அவரைக் கிறிஸ்தவர் என்றே சொல்லிவிடுவேன். ஏரியஸ் அந்தியோக்கியா இறையியல் தத்துவத்தைச் சேர்ந்தவர். அத்தேனிசியஸ், " இல்லை, இயேசு கிறிஸ்து வெறுமனே மனிதர்களிலே மிக உயர்ந்த மனிதர் மட்டுமில்லை. இயேசு கிறிஸ்து தேவனுமாவார்," என்று சொன்னார். ஏரியஸ் ஒரு பரிசுத்தவான், தூய்மையான மனிதன். அவருடைய வாழ்க்கையினால் பலர் ஈர்க்கப்பட்டார்கள். இன்னும் சொல்லப்போனால், பல பரிசுத்தவான்கள் அவர் சொல்வதை சரி என்று சொன்னார்கள். ஆகவே, அத்தேனிசியஸை அவர்கள் நெருக்கினார்கள். நெருக்கி, "அத்தேனிசியஸ் இந்த முழு உலகமும் உன்னை எதிர்க்கிறது. உனக்கு எதிராக இருக்கிறது. இயேசு கிறிஸ்து மிக உயர்ந்த, தலைசிறந்த மனிதர், எல்லா மனிதர்களிலும் தலைசிறந்த மனிதர் அவர். ஆனால் அவர் தேவனில்லை," என்றார்கள். அதற்கு அத்தனேசியஸின் பதில் மிகவும் பிரபலமான பதில். "அப்படியானால் அத்தனேசியஸ் இந்த முழு உலகத்திற்கும் எதிராக நிற்கிறான்," என்றார். Athanasius contra mundum என்பது மிகவும் பிரபலம். "Athanasius against the world".

நான் ஒரு அத்தனேசியஸ் அல்ல. அத்தனேசியஸ் எதைச் சொன்னார் என்று பின்னர் அறிந்துகொள்ளலாம். Athanasius contra mundum. Milton contra mundum. நாமெல்லாரும் contra mundum. இது ஏதோ இருபதாம் நூற்றாண்டிலே தேவனுடைய மக்களாகிய நாம் எதிர்கொள்கிற கேள்வி அல்ல. இருபது நூற்றாண்டுகளாய் இயேசு கிறிஸ்து என்ற நபர்மேல் இந்தத் தாக்குதல் தொடுக்கப்பட்டிருக்கிறது.

2. இயேசு கிறிஸ்து ஒரு மாதிரி-மனிதன்

இரண்டாவது குறிப்பு: இயேசு கிறிஸ்து ஒரு மனிதன்.

இரண்டாவது குறிப்பு இயேசு கிறிஸ்து ஒரு மாதிரி மனிதன். He is the model, Pattern, Prototype of the man as God intended Him to be. மனிதன் என்பவன் எப்படி இருக்க வேண்டும் என்று தேவன் குறிக்கோள் கொண்டிருந்தாரோ, நோக்கம் கொண்டிருந்தாரோ, திட்டம் தீட்டியிருந்தாரோ, அந்த மனிதன் யார்? அந்த மனிதனுடைய மாதிரி, model, Pattern, Prototype, (இது எதற்குமே தமிழ் இல்லாததினால் நான் சுருக்கமாய் இப்படி சொல்லிவிடுகிறேன்) மாதிரி ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. இது மிக முக்கியமான உண்மை. இயேசு கிறிஸ்து என்ற நபர் யார் என்ற கேள்விக்குப் பதில் He is the prototypical man; He is the pattern man; He is the model man. Behold the man. "Behold the man!" என்று சொன்னவர் யார்? Behold the man. "இதோ! இந்த மனிதன்!" என்று சொன்னவர் யார்? தேசாதிபதியாகிய பிலாத்து யூதர்களுக்குமுன்பாக இயேசு கிறிஸ்துவை முன்னிருத்தும்போது, "Behold this man. இந்த மனிதனைப் பாருங்கள்!" என்று சொன்னான். பிலாத்து பெரிய தீர்க்கத்தரிசி அல்ல. This statement is a marvelous statement.Behold this man.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஞானஸ்நானம் பெற்று கரையேறுகையில் வானங்கள் திறந்து, ஆவியானவர் ஒரு புறாவைப் போல் அவர்மேல் இறங்கினார். அப்போது வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகி, "இவர் என்னுடைய நேசகுமாரன், இவரில் பிரியமாயிருக்கிறேன் என்று உரைத்தது" (மத். 3:17). He is the Son of my love in whom I am delighted, I am well pleased. இந்த முழுப் பிரபஞ்சத்திலும் தேவன் "நான் பிரியமாயிருக்கிறேன், நான் மகிழ்ச்சியடைகிறேன், நான் பூரிப்படைகிறேன்" என்று சொல்லத்தக்க ஒரேவொரு மனிதன்தான் உண்டு. அவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. எல்லாவிதத்திலும் பிதாவினுடைய இருதயத்துக்கு ஒத்த மனிதனாய் வாழ்ந்த ஒரு மனிதன் உண்டு என்பதுதான் நம்முடைய இரட்சிப்பின் ஆதாரம். "இவர் என் அன்பின் மகன், இவரில் நான் முற்றுமுடிய absolutely, utterly, I am well pleased. இவரிடத்தில் நான் புண்படுவதற்கென்று, துக்கப்படுவதற்கு என்று ஒரு நிழல்கூட இல்லை" என்று சொல்லத்தக்க ஒரேவொரு மனிதன்தான் படைக்கப்பட்ட இந்த வரலாற்றிலே, இந்தப் பூமியிலே, வாழ்ந்திருக்கிறார். அது நமது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. அப்படிவொரு மனிதன் கிடைக்கின்றவரை மனிதர்களுடைய பிரச்சினைகளுக்கு தீர்வு இல்லை.

எல்லாவிதத்திலும் தேவனைப் பிரியப்படுத்தின ஒரு மனிதன் வாழ்ந்தார், அப்படிப்பட்ட ஒரு மனிதன் உண்டு என்ற நிலையை எட்டாமல், மனிதனுக்கு மீட்போ, இரட்சிப்போ அல்லது அவனுடைய பிரச்சினைகளுக்கு தீர்வோ, அவனுடைய தேவைகளுக்கு நிரப்பீடோ ஒரு நாளும் இல்லை. இதைத்தான் நான் முதலாவது சொன்னேன். தேவனுடைய வழி ஒரு உபாயமோ, ஒரு யுக்தியோ, ஒரு மந்திரமோ, ஒரு தந்திரமோ, எந்திரமோ, அமைப்பு முறையோ தத்துவோமோ இல்லை. மாறாக தேவனுடைய வழி ஒரு நபர். God’s way or God’s method is a man, is a person.

தேவன் என்ன நோக்கத்திற்காக முதல் மனிதனாகிய ஆதாமை உண்டாக்கினாரோ அந்த நோக்கத்தை அவன் தவற விட்டான். ஆகவே தேவன் மீண்டும் ஒருமுறை தம்முடைய இருதயத்துக்கு முற்றிலும் ஒத்த ஒரு மனிதனைப் பெற வேண்டியிருந்தது. முதல் மனிதனாகிய ஆதாம் தேவனுடைய நோக்கத்தையும், திட்டத்தையும் இழந்துபோனான் அல்லது தேவனுடைய நோக்கத்தையும், திட்டத்தையும் தவறவிட்டான். தேவன் தம்முடைய நோக்கத்தையும், திட்டத்தையும் நிறைவேற்றுவதற்கு இன்னொரு‍ மனிதனைப் பெற வேண்டியிருந்தது. அந்த இன்னொரு மனிதன் தேவனுடைய இருதயத்துக்கு முற்றிலும் ஒத்த மனிதன். என்ன? According to God’s own heart. இந்த வசனம் பழைய ஏற்பாட்டிலே தாவீதைப்பற்றி எழுதியிருக்கிறது. புதிய ஏற்பாட்டிலே அப்போஸ்தலர் நடபடிகள் 13 ஆம் அதிகாரத்தில் தாவீதைப்பற்றிச் சொல்லும்போது, இது இருக்கிறது. தாவீதைப் பற்றி என்ன சொல்கிறார்? "பின்பு அவர் அவனைத் தள்ளி, தாவீதை அவர்களுக்கு ராஜாவாக ஏற்படுத்தி, ஈசாயின் குமாரனாகிய தாவீதை என் இருதயத்துக்கு ஏற்றவனாகக் கண்டேன்; எனக்குச் சித்தமானவைகளையெல்லாம் அவன் செய்வான் என்று அவனைக்குறித்துச் சாட்சியுங் கொடுத்தார்." அவன் என் இருதயத்துக்கு ஏற்ற தாசன். A Man of my own heart. என்னுடைய இருதயத்துக்கு ஒத்த ஒரு மனிதன். ஆகவே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவில் தேவன் எதைப் பெற, எதை அடைய, எதை சாதிக்க முயன்றார் என்றால், மனிதனுக்கு ஒரு மாதிரியை, ஒரு Pattern ஐ, ஒரு Prototype ஐ அடைவதற்கு, பெறுவதற்கு தேவன் முயற்சி செய்கிறார். இந்த மாதிரி-மனிதனை அவர் பெற்றுவிட்டால், இந்த மாதிரி-மனிதனிடமிருந்து இவரைப்போன்ற பல்லாயிரம், பல கோடி அவருடய இருதயத்துக்கு ஒத்த மனிதர்களை அவரால் பெற முடியும், அடைய முடியும், உருவாக்க முடியும். Praise the Lord. இந்த மாதிரி-மனிதனை அவர் பெறவில்லை, அல்லது அடையவில்லை என்றால் இந்த மாதிரி-மனிதனைப்போன்ற பல்லாயிரம், பல இலட்சம், பலகோடி, மனிதர்களை அவரால் ஒருக்காலும் பெற முடியாது. அவர் நியாயப்பிரமாணத்தை, பத்துக் கட்டளைகளை அல்ல பத்தாயிரம் கோடி கட்டளைகளை வைத்துக்கொண்டு அவருடைய நோக்கத்திற்கும், திட்டத்திற்கும் ஒத்த, ஏற்ற, உகந்த மனிதர்களை ஒருக்காலும் தேவனால் பெற முடியாது. அப்படிப்பட்ட மனிதர்களைப் பெற வேண்டும் என்பது மனிதனுடைய இருதயத்தின் துடிப்பல்ல. முதலாவது யாருடைய இருதயத்தின் துடிப்பு? தேவனுடைய இருதயத்தின் துடிப்பு, தேவனுடைய இருதயத்தின் வாஞ்சை, தேவனுடைய இருதயத்தின் ஏக்கமும், கதறுதலுமாய் இருக்கிறது. The longing and the thirst of God, the passion of God to get man according to His planned purpose of God. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய பிறப்பு, மனித வாழ்க்கை, மரணம், உயிர்த்தெழுதல்மூலமாக தேவன் எதை செய்கிறார் என்றால் அப்படிப்பட்ட ஒரு மாதிரி-மனிதனை அவர் பெறுகிறார். நேராக தேவன் மனிதனாக வந்து, சிலுவை மரணத்தில் மரித்து, உயிர்த்தெழுந்தால், இந்த உலகத்திலே, படைக்கப்பட்ட உலகத்திலே, தேவனுடைய நோக்கம் நிறைவேறாதவாறு மனிதன் உருவாக்கின பிரச்சினை தீர்ந்துவிடுமா? தீர்ந்து விடாது. அவர் இந்தப் பூமியிலே மனிதனாக வந்து, ஒரு மனிதனுடைய முழு வாழ்க்கையையும் வாழ்ந்தார். அல்லது ஒரு மனிதன் சந்திக்கிற எல்லாச் சோதனைகளையும், அவர் சந்தித்து, பாவம் இல்லாதவராய் இருக்கிறார்.

அல்லேலூயா! ஏன் நான் அல்லேலூயா சொல்லுகிறேன் என்றால், ஆசுவாசப்படுத்திக்கொள்வதற்காக அல்ல. அல்லது ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை Praise the Lord, ஒரு அல்லேலூயா சொல்லவில்லை என்றால் "இவர்களெல்லாம் என்ன ஆவிக்குரியவர்கள்!" என்று பிறர் நினைக்கக்கூடும் என்பதற்காக அல்ல. உண்மையிலேயே நம்முடைய இருதயத்தின் ஆழத்திலிருந்து Such a Joy. நாம் இதைச் செய்ய முடியாது.

ஆனால், தேவனால் ஒரு மாதிரி-மனிதனைச் செய்து, அந்த மாதிரி-மனிதனுக்கு ஒத்த மனிதனாய் என்னை மாற்ற முடியும். இன்று நாம் எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் ஒரு மாபெரும் மகிழ்ச்சியான செய்தி நமக்கு உண்டு. That is truly Good News, Glad tidings. ஏதோ செய்தி கொடுக்க வேண்டும் என்பதற்காக இந்த மாதிரி technical words ஐ நான் பயன்படுத்தவில்லை. இது தேவனுடைய மக்களுடைய நடைமுறை அனுபவ வாழ்க்கையோடு பின்னிப்பிணைந்தது. ஆகவே, இப்படிப்பட்ட வார்த்தைகளை நான் பயன்படுத்துகிறேன்.

இதுவரை நாம் இரண்டு குறிப்புகளைத்தான் தான் நாம் பார்த்திருக்கிறோம். ஒன்று கிறிஸ்து புலப்படும் தேவன். இரண்டாவது கிறிஸ்து மாதிரி-மனிதன்.

சரி, பிலிப்பியர் இரண்டாம் அதிகாரம் 5 முதல் 11 ஆம் வசனத்தை நாம் வாசிக்கலாம். " கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி, இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும், பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்."

இந்தப் பகுதியை doxology என்று சொல்லுகிறார்கள். அவர் தேவனுடைய ரூபமாய் இருந்தும். He was in the form of God; He did not consider equality with God to be something to be grasped. But He emptied, divested Himself of every privilege of God for the time being and took the form of a slave. இய‍ேசு கிறிஸ்துவினுடைய மனித வாழ்க்கையை நாம் சித்தரிக்க வேண்டும் என்றால் அவர் தாழ்ந்தார், மேலும் தாழ்ந்தார், மேன்மேலும் தாழ்ந்தார், தாழ்வதற்கு இனி கீழே ஒன்றுமில்லை என்னும் அளவிற்கு அவர் தாழ்ந்தார். என்னைப் பற்றியும், உங்களைப் பற்றியும், நீங்கள் அப்படிச் சொல்ல முடியாது. தாழ்வதற்கு இனிமேல் கீழே ஒன்றுமில்லை என்னும் அளவிற்கு நாம் யாரும் தாழ்ந்துவிடுவதில்லை. ஒருவன் இப்போது நாம் இருக்கிற இடத்திலிருந்து ஒரு micron அளவுக்கு நம்மைக் கீழே தாழ்த்தினால், நாம் உடனே நடவடிக்கை எடுத்துவிடுவோம். நம் மனம் புண்படும். இயேசு தாழ்ந்தார், மேலும் தாழ்ந்தார், மேன்மேலும் தாழ்ந்தார், இ‍னிமேல் தாழ்வதற்குக் கீழே ஒன்றும் இல்லை என்னும் அளவிற்கு அவர் தாழ்ந்தார். அவர் தேவன். அவர் மனிதனாகத் தோன்றியது தாழ்ந்தார்; தேவனுக்கும், தேவன் நிமித்தம் மனிதர்களுக்கும் அவர் அடிமையானார். "ஓ! அவர் ஒன்றும் அடிமை இல்லை. அவர் Hero மாதிரி வாழ்ந்தார்," என்று யாராவது நினைத்தால் அது தவறு. அப்படியல்ல.

மனிதர்கள் எந்தவிதத்திலும் தமக்கு நன்றியுள்ளவர்களாய் இருப்பார்கள் என்று அவர் நம்பவில்லை. மனிதர்கள் நன்றியறியாதவர்கள் என்று அவருக்குத் தெரியும். "ஓசன்னா, கர்த்தருடைய நாமத்தினாலே வருகிற இவர் ஸ்தோத்தரிக்கப்பட்டவர்! என்று சொல்கின்ற அதே மனிதர்கள் - அதே மனிதர்களாக இருக்கலாம் அல்லது அவர்களுடைய கூட்டத்தைச் சேர்ந்தவர்களாகளாகவும் இருக்கலாம் - இன்னும் ஓரிரு நாளில் 'இவனைச் சிலுவையில் அறையும், இவனைச் சிலுவையில் அறையும்,' என்னும் அளவிற்கு மாறுவார்கள் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை. என் மனம் உடைந்துபோய்விட்டது," என்று இயேசு கிறிஸ்து அதிர்ச்சியடையவில்லை. பத்து தொழுநோயாளிகளைக் குணமாக்கினார். ஒரேவொருவன் திரும்பி வந்து அவருக்கு நன்றி சொன்னான். "குணமானவர்கள் பத்து பேர் இல்லையா? மீதி 9 பேர் எங்கே?" என்று அவர் கேட்டார். அடுத்த தடவை பத்துப் பேர் வரும்போது, "பார், ஒரேவொருவனைத்தான் குணமாக்குவேன்," என்று அவர் சொல்லவில்லை. 5000 பேர், 4000 பேர் சாப்பிட்டார்கள். "இவர்களையெல்லாம் திரட்டி ஒரு உலகளாவிய சபையாக மாற்றி, படையோடு நாம் எருசலேமை முற்றிகையிட வேண்டும். எந்தப் பிரதான ஆசாரியன் வந்து நம்மேல் கைபோடுவான் பார்த்து விடலாம்," என்று அவர் நினைத்தாரா?

அவர் மனிதனாய்த் தாழ்ந்தார்; அடிமையாய் மேலும் தாழ்ந்தார்; இழிவான, கேவலமான, மரணபரியந்தம் அவர் தாழ்ந்தார்; அவர் மரணபரியந்தம், கீழ்படிந்தவராகி, அதுவும் சிலுவையின் மரணபரியந்தம் கீழ்படிந்து. He obeyed to the point of death, death on the cross. அவ்வளவுதான் எழுத முடியும். Death on the cross. சிலுவையின் மரணம் என்றால் இழிவான, கேவலமான, அவமதிக்கப்பட்ட, தோற்றுப்போன ஒரு மனிதனாய் அவர் மரித்தார். இப்போது பவுல் ஆரம்பிக்கிறார். "ஆகையால், அல்லேலூயா, தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தினார்."

தேவனுக்கு ஒரு மனிதன் தேவைப்பட்டார்; அவர் தேவன் என்பதினால் தேவன் அவரை உயர்த்தவில்லை. அவர் தேவனுடைய ரூபமாய் இருந்தார் என்பதால் தேவன் அவரை உயர்த்தவில்லை. ஆண்டவரகிய இயேசு கிறிஸ்து தம் முப்பத்து மூன்றரை ஆண்டுகள் முழுவதும் மனிதன் என்ற ஸ்தானத்திலேயே, மனிதன் என்ற தளத்திலேயே, வாழ்ந்தார். He took the position of Man and lived in the plain of Man. மனிதன் என்ற ஸ்தானம், The position of, முப்பத்து மூன்றரை ஆண்டுகள் பிசாசு அவருக்குக் கொண்டு வந்த மிகப் பெரிய சோதனை என்ன? "நீர் மனிதன் என்ற தளத்தில் வாழ வேண்டாம். நீர் தேவன் என்ற தளத்தில் வாழலாம். நீர் மனிதன் என்ற ஸ்தானத்தை விட்டு விடும். நீர் தேவன் என்ற ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளும். இந்த ஸ்தானத்தை எடுத்துக்கொள்ளும். நீர் தேவனுடைய குமாரனேயானால், இந்தக் கல்லுகள் அப்பங்களாகும்படி செய்யும்," என்று பிசாசு அவரை சோதிக்கிறான். அதன் பொருள் என்னவென்றால், "நீர் தேவன், காணப்படுகிறவை, காணப்படாதவைகள், பரலோகத்தில் உள்ளவைகள், பூலோகத்தில் உள்ளவைகள், துரைத்தனங்கள், அதிகாரங்கள் எல்லாவற்றையும், எல்லாமும், உம்மாலும், உம்மைக்கொண்டும், உமக்கென்றும் படைக்கப்பட்டிருக்கிறது."

"ஓ ! பேய்க்கு இவ்வளவு வசனம் தெரியாது," என்று சொல்லாதீர்கள். "நீர் தேவனுடைய குமாரனேயானால் தாழக்குதியும்; ஏனெனில், தம்முடைய தூதர்களுக்கு உம்மைக்குறித்துக் கட்டளையிடுவார்; உமது பாதம் கல்லில் இடறாதபடிக்கு, அவர்கள் உம்மைக் கைகளில் ஏந்திக்கொண்டு போவார்கள் என்பதாய் எழுதியிருக்கிறது," என்று பிசாசு வேதாகமத்திலிருந்து மேற்கோள் காட்டுகிறான்.

வேதாகமத்திலிருந்து ஒருவன் அநேக மேற்கோள்கள் காட்டுவதால் பரவசமடைந்து, கரவொலி எழுப்பி, "ஆஹா! ஹா! இவருடைய வேத அறிவைப் பாருங்கள். இவர் ஒரு ," என்று வியக்க வேண்டாம். இவர் நடமாடும் வேதாகமா இல்லையா என்பதை அவருடைய வீட்டிற்குப் போய்ப் பார்க்க வேண்டும், அவர் தொழில் செய்கிற, வேலை‍ பார்க்கிற இடத்திற்குப் போய் பார்க்கவேண்டும், அவர் பயணம் பண்ணும்போது பார்க்க வேண்டும், பகலில் பார்க்க வேண்டும், இரவில் பார்க்க வேண்டும், மேன்மையில் பார்க்க வேண்டும், தாழ்மையில் பார்க்கவேண்டும்; அதன்பிறகு அவர் ஒரு நடமாடும் வேதாகமமா இல்லையா என்று நாம் முடிவுபண்ணலாம்.

ஆனால், கர்த்தர் பதில் அளிக்கிறார். "மனுஷன் அப்பத்தினாலேமாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான் என்று எழுதியிருக்கிறதே." அவர் மனிதனுடைய இடத்தை எடுத்துக்கொண்டார். அவர் மனிதனுடைய இடத்தை எடுத்துக்கொண்டவுடனே, சாத்தான், "ஓ ! நீர் ஒரு சாதாரண மனிதன்தானே. அப்படியானால், நீர் தாழ விழுந்து என்னைக் கும்பிடும், இந்த உலகத்தையும், அதினுடைய எல்லா மகிமையையும் நான் உமக்குக் கொடுத்துவிடுவேன். எதுக்கு இவ்வளவு நீண்ட வழிமுறையினூடாய்ப் போக வேண்டும். தாழ்ந்து, மேலும் தாழ்ந்து, மேன்மேலும் தாழ்ந்து, தாழ இனிமேல் இடமே இல்லாத அளவிற்குத் தாழ்ந்து, இப்படிப்பட்ட ஒரு வேதனை நிறைந்த பாதையின் வழியாய்ப் போய் நீர் ஏன் மகிமைப்பட வேண்டும்?" "இன்று குலுக்கல், நாளை இலட்சாதிபதி" என்ற சுலோகத்தை உருவாக்கியவன் சாத்தான்தானோ!

"தாழப் பணிந்துக் கொள்ளும். பூமியின் எல்லா மகிமையையும் நான் உமக்குத் தருவேன்," என்றான். You will get all the glories of the world. In a snapshot I will give them off. All that I need is one bowing down before me.

"நம்முடைய பலவீனங்களைக்குறித்துப் பரிதபிக்கக்கூடாத பிரதான ஆசாரியர் நமக்கிராமல், எல்லாவிதத்திலும் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும், பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரே நமக்கிருக்கிறார்" (எபிரேயர் 4:15). ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து எல்லா விதத்திலும் சோதிக்கப்பட்டார். He was tested, tempted in all points as we are, yet without sin. இந்த சோதனைகளை ஆண்டவராகிய இய‍ேசு கிறிஸ்துவுக்கு அமைத்தவர் யார்? பிதாவானவர் அமைத்தார். "அவர் குமாரனாயிருந்தும் பட்டபாடுகளினாலே கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டார்," (எபிரேயர் 5:8). ஏனென்றால், தேவனுக்கு ஒரு மாதிரி-மனிதன் தேவைப்பட்டான். மனித வாழ்க்கையின் எல்லாத் தாக்குதல்களையும், எல்லாப் போர்களையும், எல்லாச் சூறாவளிகளையும், எல்லா சோதனைகளையும், எல்லாவற்றையும் எதிர்கொண்டு, வெற்றிபெற்ற ஒரு மாதிரி-மனிதன் தேவைப்பட்டார்.

"Behold! I don’t see a flaw in this man - இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றமும் காணேன்," என்று சொன்னவன் பிலாத்து. பிலாத்து ஒரு நல்ல நற்செய்தியாளன்போல் தோன்றுகிறது. காய்பா ஒரு தீர்க்கதரிசிபோல் தோன்றுகிறது. "ஜனங்களெல்லாரும் கெட்டுப்போகாதபடிக்கு ஒரே மனுஷன் ஜனங்களுக்காக மரிப்பது நமக்கு நலமாயிருக்குமென்று நீங்கள் சிந்தியாமலிருக்கிறீர்கள்" என்று அவன் தீர்க்கதரிசனம் உரைத்தான். தேவனுடைய வழிகளை நாம் பார்க்க வேண்டும். "இதை அவன் சுயமாய்ச் சொல்லாமல், அந்த வருஷத்துப் பிரதான ஆசாரியனானபடியினாலே இயேசு யூதஜனங்களுக்காக மரிக்கப்போகிறாரென்றும், அந்த ஜனங்களுக்காகமாத்திரமல்ல, சிதறியிருக்கிற தேவனுடைய பிள்ளைகளை ஒன்றாகச் சேர்க்கிறதற்காகவும் மரிக்கப்போகிறாரென்றும், தீர்க்கதரிசனமாய்ச் சொன்னான்," என்று யோவான் எழுதுகிறார்.

தீய மனிதர்கள் தீர்க்கதரிசனம் உரைக்க முடியுமா? இதோ ஓர் எடுத்துக்காட்டு. உரைக்க முடியும். பழைய ஏற்பாட்டில் ஒரு தீர்க்கத்தரிசி பிலேயாம்.

"தேவன் அவருடைய மரண உபாதிகளின் கட்டை அவிழ்த்து, அவரை எழுப்பினார்; அவர் மரணத்தினால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது," என்று அப்போஸ்தலர் நடப்படிகள் 2:24இல் வாசிக்கிறோம். அவர் மரணத்தால் கட்டப்பட்டிருக்கக்கூடாதிருந்தது. death could not hold Him back in the grave. மரணம் அவரைக் கவ்விப்பிடித்துவைக்க முயற்சிசெய்து, வழுக்கி, வழுக்கிக் கீழே விழுந்துவிட்டது. இந்தக் கற்பனையை நீங்கள் வைத்துக்கொள்ளலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. மரணம் இயேசு கிறிஸ்துவைக் கல்லறைக்குள்ளேயே பிடித்துவைக்க முயற்சிசெய்தது. ஆனால், மரணத்தால் அவரைக் கவ்விப்பிடித்துவைக்க முடியவில்லை, ஏன்? அவர் தேவன் என்பதாலா? இல்லை, ஏன்? மனிதன் என்ற முறையில் மரணம் கால் பதிப்பதற்கு அல்லது கை வைப்பதற்கு அல்லது பற்றிக்கொள்வதற்கு அல்லது இறுக்குவதற்கு அல்லது கவ்விக்கொள்வதற்கு அவரிடத்தில் ஒன்றுமில்லை. "இந்த உலகத்தின் அதிபதி வருகிறான். அவனுக்கு என்னிடத்தில் ஒன்றுமில்லை" The prince of this world is coming. But he has nothing in me. (யோவான் 14:30). The Marvelous statement of the Lord Jesus Christ.

ஆகவே, தேவன், "I am well pleased with this Man," என்று சொல்லுகிறார். அவர் முப்பது ஆண்டுகள் மனித வாழ்க்கை வாழ்ந்து, அதன்பின் பொது வாழ்க்கைக்கு வரும்போது, "இவர் என்னுடைய நேச குமாரன்," என்று தேவன் சொல்லுகிறார். அவருடைய மனித வாழ்க்கையின் முடிவு நேரத்திற்கு வரும்போதும் தேவன், "இவர் என் அன்பின் குமாரன், இவரிடத்தில் நான் பூரிப்படைகிறேன். பிரியமாயிருக்கிறேன்," என்று மீண்டும் சான்று பகர்கிறார். பிரியமாயிருக்கிறேன் என்றால் "நான் காயப்படுவதற்கு, புண்படுவதற்கு இவரிடத்தில் ஒன்றுமில்லை," என்று பொருள்.

எப்படி? நன்றாய்க் கவனிக்க வேண்டும். "ஓ! நான் பற்றிப்பிடிப்பதற்கு இந்த மனிதனிடத்தில் ஒன்றுமில்லை," என்று எப்படி சாத்தான் சொல்ல முடியுமோ, அதுபோல, "நான் காயப்படுவதற்கு இந்த மனிதனிடத்தில் ஒன்றுமில்லை. He is such a perfect man," என்று தேவனால் சொல்ல முடியும். எனவே, இயேசு He’s complete God and Perfect Man என்று ஒரு சகோதரன் சொல்லுகிறார்.That’s a good statement. அவர் முழுமையான தேவனும், பூரணமான மனிதனுமாவார்.

நான் இதை சற்று மாற்றிச்சொல்கிறேன். He’s tangible God and Prototypical man. ஆகவேதான், 1 கொரிந்தியர் 15ஆம் அதிகாரம் 47 ம் வசனம் அவரை "இரண்டாவது மனிதன்" என்றழைக்கிறது. முதல் மனிதன் ஆதாம். இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு பெயர் இரண்டாம் மனிதன்.

உண்மையில் அவருக்கு இரண்டு அடைமொழிகள் உள்ளன. கடைசி ஆதாம், இரண்டாம் மனிதன். கடைசி ஆதாம் என்ற முறையிலே, முதல் மனுக்குலம் அல்லது முதல் மனித இனம் அவரோடு முடிவுற்றது. இரண்டாம் மனிதன் என்ற முறையிலே ஒரு புதிய மனித இனம் அவருக்குள் உருவானது. அல்லேலூயா! இது என்னுடைய இரண்டாவது குறிப்பு.

முதலாவது குறிப்பு அவர் புலப்படும் தேவன்; இரண்டாவது குறிப்பு கிறிஸ்து மாதிரி-மனிதன்; மூன்றாவது குறிப்பு கிறிஸ்துவினுடைய நபர், கிறிஸ்துவினுடைய பணி என்றுகூடச் சொல்லலாம். கிறிஸ்துவினுடைய பணி என்ன? அவருடைய மரணம், உயிர்த்தெழுதல்; அவர் மனிதனானார், மனித வாழ்வின் எல்லாப் பாடுகளையும், சோதனைகளையும், எதிர்கொண்டும் அவரிடத்தில் ஒரு பழுதும் இல்லை. தேவன் மட்டும் சொல்லவில்லை. பிசாசு மட்டும் சொல்லவில்லை. பிலாத்து, ஒரு சாதாரண அரசியல்வாதிகூட, சொல்லும் அளவிற்கு அவர் குற்றமற்றவர். "நான் இந்த மனிதனை விசாரித்துப்பார்த்தேன், இவரிடத்தில் மரணத்திற்கேதுவான ஒரு குற்றமும் நான் காணேன்," என்று சொன்னான். அந்த அரசியல்வாதியினுடைய மனைவி ஆள் அனுப்பி, "நீர் அந்த நீதிமானை ஒன்றும் செய்யவேண்டாம்," என்று சொல்லச் சொன்னாள்.

எல்லாவிதத்திலும், அரசியல்வாதி சோதித்துப் பார்த்து, அரசியல்வாதி மனைவி சோதித்துப் பார்த்து, பிரதான ஆசாரியன் சோதித்துப் பார்த்து, சாத்தான் சோதித்துப் பார்த்து, தேவன் சோதித்துப் பார்த்து, Behold the Lamb of God. He’s perfectly the Lamb of God. இப்படிப்பட்ட மனிதன்தான் நம்முடைய இரட்சிப்பின் அதிபதி. இதை நான் பின்பு சொல்லப்போகிறேன்.

கிறிஸ்தவ நற்செய்தி, The Christian gospel அல்லது கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஒரு சில அறநெறிகளை அல்லது ஒரு மதத்தை, மதக்கட்டளைகளை, மதச்சடங்குகளை, மதஆச்சாரங்களை அடிப்படையாகக்கொண்டு வாழ்கிற வாழ்க்கை அல்ல. நாம் இந்தப் புலப்படும் தேவனோடு அல்லது மாதிரி-மனிதனோடு ஒன்றாக இணைக்கப்பட்டிருக்கிறோம். இரண்டாவது மனிதன் என்ற முறையில் நாம் இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின்மூலமாக இந்தப் புதிய மனித இனத்தில் நாம் கொண்டுவரப்பட்டிருக்கிறோம். We have been transferred from the old mankind to the new mankind by our believing into the Lord Jesus Christ. இவ்வளவு போதும். நாம் ஆண்டவராகிய இய‍ேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதின்மூலமாக முதல் பழைய மனித இனத்திலிருந்து இரண்டாவது புதிய மனித இனத்திற்குள் நாம் கடத்தப்பட்டிருக்கிறோம். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்முடைய சிலுவை மரணம், உயிர்த்தெழுதல் மூலமாக நம்மை நாடு கடத்தவில்லை, இனம் கடத்தியிருக்கிறார்கள். அல்லேலூயா! நாமெல்லாம் இனம் கடத்தப்பட்டவர்கள். "உங்களைப் பார்த்தால் அப்படி தெரியவில்லையே!" என்று சிலர் சொல்லலாம். பார்த்தால் அப்படி தெரியாது. ஆனால் உள்ளாக நாங்கள் ஒரு தேசத்திலிருந்து இன்னொரு தேசத்திற்கு வந்தவர்கள். நாங்கள் கல்தேயருடைய தேசத்திலிருந்து கானான் தேசத்திற்கு வந்தவர்கள். எங்களைப் பார்த்தால், மேற்போக்காக பார்த்தால், நாங்கள் அப்படித் தெரியாது. ஆனால், உள்ளாக நாங்கள் we have snapped our ties with the old mankind. Not we have snapped but the Lord Jesus Himself has snapped our ties and that is the meaning of baptism.

ஞானஸ்நானம் என்பது நீங்கள் குழ‍ந்தையாக இருக்கும்போது கொடுக்கிறீர்களா? வயதானபிறகு கொடுக்கிறீர்களா? தெளித்துக் கொடுக்கிறீர்களா? முழுகிக் கொடுக்கிறீர்களா? குளத்தில் கொடுக்கிறீர்களா? ஆற்றில் கொடுக்கிறீர்களா? வெந்நீரில் கொடுக்கிறீர்களா? குளிர் நீரில் கொடுக்கிறீர்களா? அதுவல்ல ஞானஸ்நானம். திருமுழுக்கு என்பது ஒரு மனித இனத்திலிருந்து இன்னொரு மனித இனத்துக்குள் நாம் இனம் கடத்தப்பட்டிருக்கிறோம். நாம் ஆதாமின் பழைய மனித இனத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல, கிறிஸ்து உண்டாக்கின புதிய மனித இனத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கிறிஸ்து மாதிரி-மனிதனாய், தலை-மனிதனாய் இருக்கிறார். நாம் எல்லோரும் பல சகோதரர்களாய் இருக்கிற‍ேம். அவருக்குள் இருந்த அதே ஜீவனை நமக்கும் தந்து அந்த ஜீவனில் அவர் நம்மைப் பங்குபெறச் செய்திருக்கிறார். Praise the Lord!

ஒரேவொரு வசனத்தை மட்டும் நான் மேற்கோள் காட்ட விரும்புகிறேன். யோவான் 12 ஆம் அதிகாரம் 24 ஆம் வசனம். இதைச்சுற்றி, நீங்கள் வாசிக்க வேண்டும். பண்டிகைக்கு வந்திருந்த சில கிரேக்கர்கள், பிலிப்புவைச் சந்தித்து, "ஐயா, நாங்கள் இயேசுவைக் காண விரும்புகிறோம்," என்றார்கள். பிலிப்பு அந்திரேயாவினிடத்தில் வந்து, "சில கிரேக்கர்கள் நம்முடைய ஆண்டவரைக் காண விரும்புகிறார்கள். என்ன செய்யலாம்?" கேட்கிறார். பிலிப்புவும், அந்திரேயாவும் இயேசுவினிடத்தில் வந்து, "சில கிரேக்கர்கள் உம்மைக் காண விரும்புகிறார்கள்," இயேசு சொன்னார்கள். அவர் சொன்ன பதில், ஏறக்குறைய, "அவர்கள் என்னைக் காண முடியாது." அதற்கு இரண்டுக் காரணங்கள் உண்டு. ஒன்று "நான் சிலுவையில் அறையுண்டு, உயிர்த்தெழுந்தபிறகுதான் என்னை அவர்கள் காணமுடியும். அதற்கு முந்தி என்னைக் காண்பது பயனற்றது." இன்னொன்று, "அவர்களும் ஒரு வழிமுறையினூடாய்ச் சென்றுதான் என்னைக் காணமுடியும்," என்பதற்குச் சாமானமாக ஒரு பதிலைச் சொன்னார். இது மிக முக்கியமான பதில். யோவான் 12:24 ஆம் வசனம். "மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும். செத்ததேயாகில் மிகுந்த பலனைத் தரும்." அதனுடைய பொருள் என்னவென்றால், அவருடைய மரணம், உயிர்த்தெழுதல்மூலமாக ஒரு கோதுமை மணிக்குள் இருந்த ஜீவனை பல கோதுமை மணிகளுக்குள் அவர் கொண்டுவந்தார். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து மாதிரி-மனிதன் என்ற முறையில் ஒரு கோதுமை மணி, நாம் அவருடைய பல கோதுமை மணிகள். ஏதோ ஒரு விதத்தில் அவருடைய ஜீவனை அல்லது அவரை நமக்கு ஜீவனாகவும், வித்தாகவும், அவர் நமக்குள் தந்திருக்கிறார்.

3. கிறிஸ்துவுக்குப் பதிலீடு.

முதல் குறிப்பு கிறிஸ்துவாகிய நபர், இரண்டாவது குறிப்பு கிறிஸ்துவின் பணி, மூன்றாவது குறிப்பு கிறிஸ்துவுக்குப் பதிலீடு. இப்படிப்பட்ட ஒரு மாபெரும் நிறைவான தீர்வை, நிறைவான பதிலை, நிறைவான விடையை தேவன் மனிதர்களுக்குத் தந்திருக்க, சாத்தான் மூன்று காரியங்களைச் செய்வான். உபகுறிப்புக்கள் மூன்று. ஒன்று, "இவர் புலப்படும் தேவனுமல்ல, மாதிரி-மனிதனும் அல்ல" என்று கிறிஸ்துவை அவன் நேர்முகமாக எதிர்ப்பான். மனிதர்களுடைய அப்படிப்பட்ட இருளான எண்ணங்களைப்பற்றி நான் எந்த முக்கியத்துவமும் கொடுக்க விரும்பவில்லை. அவர்கள் செய்தித்தாள்களில் எழுதுவார்கள், பத்திரிகைகளில் எழுதுவார்கள், புதினங்கள் எழுதுவார்கள், திரைப்படங்கள் எடுப்பார்கள். I say gushes out the trash that doesn't even merit my pausing and responding. சில தேவனுடைய மக்கள் அதற்கென்று அழைக்கப்பட்டிருக்கிறார்கள்.

இதற்குப் பதில் அளிக்கும் தேவ மக்கள் இருக்கிறார்கள். தன்விளக்கவாதிகள் அதற்குப் பதில் அளிப்பார்கள். என்னுடைய அழைப்பு அதுவல்ல. ஆனால் நான் அதைப் படித்து மனம் பு‍ண்படுவதும் இல்லை. எப்படியாவது நான் இவர்களுக்கு ஒரு பதில் கொடுக்கப்போகிறேன் என்று கங்கணங்கட்டிக் கொண்டு, ஆராய்ச்சி செய்வதுமில்லை. I have seen the Lord Jesus Christ. He was the lamb. நீங்களும், "I also want to see Jesus Christ," என்று சொல்லலாம். கிரேக்கர்களும், "நாங்களும் கிறிஸ்துவைக் காண விரும்புகிறோம்," என்று சொல்லலாம். You go to the cross and resurrection. He will also go to the cross and resurrection. You can meet. முதலாவது, "அவர் தேவனுமல்ல, மனிதனுமல்ல" என்று பிசாசு இயேசு கிறிஸ்துவை நேரடியாக எதிர்ப்பான். இரண்டாவது, "இயேசு கிறிஸ்து வேண்டும். ஆனால் இய‍ேசு கிறிஸ்துவோடுகூட கூடுதலாக சில காரியங்களும் வேண்டும்." மூன்றாவது "இயேசு கிறிஸ்துவைப்போன்ற சில பிரதியீடுகள் அல்லது பதிலீடுகளை வைத்துக்கொள்வது."

முதலாவது இயேசு கிறிஸ்துவை நேரடியாக எதிர்ப்பது, இரண்டாவது இயேசு கிறிஸ்துவோடுகூட வேறு சில வேண்டும். மத்தேயு 17ஆம் அதிகாரத்தில் இதற்கு எடுத்துக்காட்டு இருக்கிறது. இயேசு கிறிஸ்து யோவானையும், யாக்கோபையும், பேதுருவையும் அழைத்துக்கொண்டு மறுரூப மலைக்குக் கூட்டிக்கொண்டு போனார். அவர்களுக்குமுன்பாக அவர் உருமாறினார். அவருடைய வஸ்திரம் சூரியனைவிட வெளிச்சமாய் இருந்தது. எலியாவும், மோசேயும், அவரோடுகூடப் பேசுகிறவர்போல் காணப்பட்டார்கள். அந்தப் பக்திப் பரவசத்திலே, பேதுரு பேசுகிறார். "ஆண்டவரே, நாம் இங்கேயே இருந்து விடுவது நல்லது. உமக்குச் சித்தமானால் உமக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும் ஆக மூன்று கூடாரங்களைப் போடுவோம்," என்று அவர் பேசிக்கொண்டிருக்கையில் தேவன், "பேதுரு, நீ பேசுவதை நிறுத்துவது நல்லது, நீ பேசுவது பொருளற்றது, எதை நீ காண வேண்டுமோ அதைக் காண தவறிவிட்டாய்," என்று சொல்வதுபோல் வானத்திலிருந்து ஒரு சத்தம் உண்டானது. பேதுரு பேசி முடிப்பதற்காகத் தேவன் காத்திருக்கவில்லை.

சில சமயம் தேவன் பொறுமையாக 41 அதிகாரம் காத்திருக்கிறார். சில சமயங்களில் குறுக்கிட்டு, "your point is well taken. I think you should rather listen than speak. இவர் என் அன்பின் குமாரன், இவரில் நான் பூரிப்படைகிறேன். இவருக்கு செவிக்கொடுங்கள். இயேசு கிறிஸ்துவுக்குக் கூடுதலாக ஒரு எலியாவின் கூடாரமும், ஒரு மோசேயின் கூடாரமும் அவசியமில்லை," என்று சொல்லிவிடுகிறார்.

A.W.Tozer என்ற பரிசுத்தவான், "என்றைக்கு Jesus Christ Plus X என்று ஒன்று போடுகிறோமோ, Jesus Christ Plus X என்று ஒன்று போடுகிறோமோ, அந்தப் Plusக்கு முன்னாலிருந்து அவர் நகர்ந்து விடுவார்," என்று சொன்னார். Keep your plus X. "நம்முடைய இரட்சிப்பிற்கும், நம்முடைய வாழ்க்கைக்கும், நம்முடைய நித்தியத்திற்கும் இயேசு கிறிஸ்து போதுமானவர் இல்லை. எனவே கூடுதலாக இந்தப் பக்திமார்க்கம் வேண்டும், இந்த ஞானமார்க்கம் வேண்டும், இந்தக் கர்மமார்க்கம் வேண்டும்," என்றால் இயேசு போய்விடுவார். எனக்குத் தெரிந்து, ஒரேவொரு மார்க்கம்தான் உண்டு. இயேசு கிறிஸ்து, "நானே மார்க்கமும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்" என்றார். Praise the Lord! அந்த ஒரு மார்க்கம் தெரிந்தால் இந்த மார்க்கம் எல்லாம் தேவைப்படாது. அப்போது இயேசு கிறிஸ்து நமக்கு ஞானமும், கர்மமும், பக்தியுமாய் இருக்கிறார் என்று 1 கொரிந்தியர் 1 ஆம் அதிகாரம் 31 வது வசனம் சொல்கிறது. அப்படியா? உண்மையிலே அப்படித்தான். வாசித்துப் பாருங்கள்.

கலாத்தியருக்கு எழுதின கடிதத்திலே, கொலோசியருக்கு எழுதின கடிதத்திலே, நான் குறிப்பிட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறேன். நமக்குக் காலம் போதாது. கலாத்தியருக்கு எழுதின கடிதத்தின் போராட்டம் என்னவென்றால், "கிறிஸ்துவை நாங்கள் வைத்துக் கொள்கிறோம். கிறிஸ்துவோடுகூட எங்களுக்கு நியாயப்பிரமாணமும் வேண்டும், விருத்தசேதனமும் வேண்டும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நீங்கள் விருத்தசேதனமும் பண்ணவேண்டும்," என்றார்கள். நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள். தேவனுடைய மக்களுக்கு கிறிஸ்து Plus கூட கொஞ்சம் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஜெபகோபுரம் வேண்டும், தவக்கோபுரம் வேண்டும், இந்தக் கோயில் வேண்டும், இந்தப் பூசாரி வேண்டும், இந்தத் திருவிழாக்கள் வேண்டும். அப்போதுதான் ஒரு safety and security இருக்கும். அப்போதுதான் ரொம்ப பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் பவுல் அதற்காகப் போராடுகிறார். "நீங்கள் விருத்தசேதனம் பெற்றால் கிறிஸ்துவால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை." விருத்தசேதனத்தைப்பற்றி மட்டும் இப்படிச் சொல்லவில்லை. நியாயப்பிரமாணத்தைப்பற்றியும் சாடுகிறார். கலாத்தியர் 3 ஆம் அதிகாரத்தில், "நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் நடத்துகிற உபாத்தியாயிருந்தது. கிறிஸ்து வந்தபிறகு உபாத்தி நமக்கு அவசியமில்லை. The Law was the tutor who led us to Christ. After Christ has come, there is no need for law," என்று சொல்லுகிறார்.

ஓ ! Christians are Lawless Peopleஆ? அப்படியல்ல. நீங்கள் கலாத்தியர் 3 ஆம் அதிகாரம் 4 ம் அதிகாரத்தைப்பிறகு படியுங்கள். நான் அடிக்கோடிட்டு மட்டும்தான் காட்டுகிறேன். அதேபோல் கொலோசியரிலும் அதே பிரச்சினைதான். படிப்படியாய் பல தூதர்கள் இருக்கின்றார்கள். அதிலே மேல் படியில் இருக்கின்றவர் யார்? கிறிஸ்து. எனவே கொலேசெயர் 2 ஆம் அதிகாரத்திலே பவுல் எழுதுகிறார். அவருக்குள் ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்கள் எல்லாம் அடங்கியிருக்கிறது. கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல், மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்." Christ is sufficient. அதே கொலோசெயர் 2 ஆம் அதிகாரத்திலே தொடர்ந்து "தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது," என்று எழுதுகிறார். The fullness of Godhead dwells in Him in bodily form.

என்னுடைய 3வது குறிப்பை நான் முடித்துவிடுகிறேன். மூன்றாவது குறிப்பிலே, கிறிஸ்துவுக்கு கூடுதல்கள் வேண்டும். Plus. கடைசியாக கிறிஸ்துவுக்குப் பதிலீடுகள். முழு எபிரேயருக்கு எழுதின கடிதத்தையும் நான் உங்களுக்குத் தருகிறேன். வாசிப்பதற்கு நமக்கு நேரமில்லை. எபிரேயருக்கு எழுதிய கடிதத்தின் பாரம் என்னவென்றா கிறிஸ்து தேவதூதர்களைவிட மேன்மையானவர், கிறிஸ்து மோசேயைவிட மேன்மையானவர், கிறிஸ்து யோசுவாவைவிட மேன்மையானவர், கிறிஸ்து ஆ‍ரோனைவிட மேன்மையானவர், கிறிஸ்துவினுடைய ஆசாரியத்துவம் ஆரோனுடைய ஆசாரியத்துவத்தைவிட மேன்மையானது. கிறிஸ்துவாகிய பலி எந்த ஆசாரியரும் செலுத்துகிற பலியைவிட மேன்மையானது. கிறிஸ்து ஆசரிப்புக் கூடாரத்தைவிட மேன்மையானவர். எபிரேயருக்கு எழுதின கடிதத்தின் பின்னணி என்னவென்றால் பல யூத மக்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை தங்கள் இரட்சகராக, மேசியாவாக ஏற்றுக் கொண்டுள்ளார்கள். உரோம சாம்ராஜ்யத்தில் யூதமதம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதம். அவர்கள் கிறிஸ்தவத்தை யூத மதத்தின் ஒரு உட்பிரிவாகக் கருதினார்கள். ஆனால் யூதர்களுக்கு ஜெப ஆலயங்கள் உண்டு. ஆராதனை ஸ்தலங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், கோவில்கள் உண்டு. கிறிஸ்தவர்களுக்கு கோவில்கள் இல்லை, குளங்கள் இல்லை. அவர்கள் வீடுகளில் கூடி வந்தார்கள். ஆகவே கிறிஸ்தவர்கள்மேல் சாட்டப்பட்ட ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், நீங்களும், "I also want to see Jesus Christ," என்று சொல்லலாம். கிரேக்கர்களும், "நாங்களும் கிறிஸ்துவைக் காண விரும்புகிறோம்," என்று சொல்லலாம். You go to the cross and resurrection. He will also go to the cross and resurrection. You can meet. முதலாவது, "அவர் தேவனுமல்ல, மனிதனுமல்ல" என்று பிசாசு இயேசு கிறிஸ்துவை நேரடியாக எதிர்ப்பான். இரண்டாவது, "இயேசு கிறிஸ்து வேண்டும். ஆனால் இய‍ேசு கிறிஸ்துவோடுகூட கூடுதலாக சில காரியங்களும் வேண்டும்." மூன்றாவது "இயேசு கிறிஸ்துவைப்போன்ற சில பிரதியீடுகள் அல்லது பதிலீடுகளை வைத்துக்கொள்வது."

முதலாவது இயேசு கிறிஸ்துவை நேரடியாக எதிர்ப்பது, இரண்டாவது இயேசு கிறிஸ்துவோடுகூட வேறு சில வேண்டும். மத்தேயு 17ஆம் அதிகாரத்தில் இதற்கு எடுத்துக்காட்டு இருக்கிறது. இயேசு கிறிஸ்து யோவானையும், யாக்கோபையும், பேதுருவையும் அழைத்துக்கொண்டு மறுரூப மலைக்குக் கூட்டிக்கொண்டு போய், அவர்களுக்குமுன்பாக அவர் உருமாறினார். அவருடைய வஸ்திரம் சூரியனைவிட வெளிச்சமாய் இருந்தது. எலியாவும், மோசேயும், அவரோடுகூடப் பேசுகிறவர்போல் காணப்பட்டார்கள். அந்தப் பக்திப் பரவசத்திலே, பேதுரு பேசுகிறார். "ஆண்டவரே, நாம் இங்கேயே இருந்து விடுவது நல்லது. உமக்குச் சித்தமானால் உமக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும் ஆக மூன்று கூடாரங்களைப் போடுவோம்," என்று அவர் பேசிக்கொண்டிருக்கையில் தேவன், "பேதுரு, நீ பேசுவதை நிறுத்துவது நல்லது, நீ பேசுவது பொருளற்றது, எதை நீ காண வேண்டுமோ அதைக் காண தவறிவிட்டாய்," என்று சொல்வதுபோல் வானத்திலிருந்து பேசுகிறார். பேதுரு பேசி முடிப்பதற்காகத் தேவன் காத்திருக்கவில்லை.

சில சமயம் தேவன் பொறுமையாக 41 அதிகாரங்கள் காத்திருக்கிறார். சில சமயங்களில் குறுக்கிட்டு, "your point is well taken. I think you should rather listen than speak. இவர் என் அன்பின் குமாரன், இவரில் நான் பூரிப்படைகிறேன். இவருக்கு செவிக்கொடுங்கள். இயேசு கிறிஸ்துவுக்குக் கூடுதலாக ஒரு எலியாவின் கூடாரமும், ஒரு மோசேயின் கூடாரமும் அவசியமில்லை," என்று சொல்லிவிடுகிறார்.

A.W.Tozer என்ற பரிசுத்தவான், "என்றைக்கு Jesus Christ Plus X என்று ஒன்று போடுகிறோமோ, அப்போது அவர் Keep your plus X என்று சொல்லிவிட்டு அந்தப் Plusக்கு முன்னாலிருந்து நகர்ந்து விடுவார்," என்று சொன்னார். . "நம்முடைய இரட்சிப்பிற்கும், நம்முடைய வாழ்க்கைக்கும், நம்முடைய நித்தியத்திற்கும் இயேசு கிறிஸ்து போதுமானவர் இல்லை. எனவே கூடுதலாக இந்தப் பக்திமார்க்கம் வேண்டும், இந்த ஞானமார்க்கம் வேண்டும், இந்தக் கர்மமார்க்கம் வேண்டும்," என்றால் இயேசு போய்விடுவார். எனக்குத் தெரிந்து, ஒரேவொரு மார்க்கம்தான் உண்டு. இயேசு கிறிஸ்து, "நானே மார்க்கமும், சத்தியமும், ஜீவனுமாய் இருக்கிறேன்" என்றார். Praise the Lord! அந்த ஒரு மார்க்கம் தெரிந்தால் வேறு எந்த மார்க்கமும் தேவைப்படாது. அப்போது இயேசு கிறிஸ்து "தேவனால் நமக்கு ஞானமும் நீதியும் பரிசுத்தமும் மீட்புமானார்" என்று 1 கொரிந்தியர் 1 ஆம் அதிகாரம் 31 வது வசனம் சொல்கிறது. அப்படியா? உண்மையிலே அப்படித்தான். வாசித்துப் பாருங்கள்.

கலாத்தியருக்கு எழுதின கடிதத்தையும், கொலோசெயருக்கு எழுதிய கடிதத்தையும் குறிப்பிட்டுவிட்டு நகர்ந்துவிடுகிறேன். நமக்குக் காலம் போதாது.

கலாத்தியருக்கு எழுதின கடிதத்தின் போராட்டம் என்னவென்றால், "கிறிஸ்துவை நாங்கள் வைத்துக்கொள்கிறோம். கிறிஸ்துவோடுகூட எங்களுக்கு நியாயப்பிரமாணமும் வேண்டும், விருத்தசேதனமும் வேண்டும். கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டால் மட்டும் போதாது, கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு நீங்கள் விருத்தசேதனமும் பண்ணவேண்டும்," என்றார்கள். நாம் இயேசு கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டவர்கள். தேவனுடைய மக்களுக்கு கிறிஸ்து Plus கூட கொஞ்சம் இருக்க வேண்டும். அவர்களுக்கு ஜெபகோபுரம் வேண்டும், தவக்கோபுரம் வேண்டும், இந்தக் கோயில் வேண்டும், இந்தப் பூசாரி வேண்டும், இந்தத் திருவிழாக்கள் வேண்டும். அப்போதுதான் ஒரு safety and security இருக்கும். அப்போதுதான் ரொம்ப பாதுகாப்பாக இருப்பார்கள். ஆனால் பவுல் அதற்காகப் போராடுகிறார். "நீங்கள் விருத்தசேதனம் பெற்றால் கிறிஸ்துவால் உங்களுக்கு எந்தப் பயனும் இல்லை." விருத்தசேதனத்தைப்பற்றி மட்டும் இப்படிச் சொல்லவில்லை. நியாயப்பிரமாணத்தைப்பற்றியும் சாடுகிறார். கலாத்தியர் 3 ஆம் அதிகாரத்தில், "நியாயப்பிரமாணம் நம்மைக் கிறிஸ்துவினிடத்தில் நடத்துகிற உபாத்தியாயிருந்தது. கிறிஸ்து வந்தபிறகு உபாத்தி நமக்கு அவசியமில்லை. The Law was the tutor who led us to Christ. After Christ has come, there is no need for law," என்று சொல்லுகிறார்.

அப்படியானால், Christians are Lawless Peopleஆ? அப்படியல்ல. நீங்கள் கலாத்தியர் 3 ஆம் அதிகாரம் 4 ம் அதிகாரத்தைப்பிறகு படியுங்கள். நான் அடிக்கோடிட்டு மட்டும்தான் காட்டுகிறேன். அதேபோல் கொலோசியரிலும் அதே பிரச்சினைதான். படிப்படியாய் பல தூதர்கள் இருக்கின்றார்கள். அதிலே மேல் படியில் இருக்கின்றவர் யார்? கிறிஸ்து. எனவே கொலோசெயர் 2 ஆம் அதிகாரத்திலே பவுல் எழுதுகிறார். "அவருக்குள் ஞானம், அறிவு என்பவைகளாகிய பொக்கிஷங்கள் எல்லாம் அடங்கியிருக்கிறது. கணுக்களாலும் கட்டுகளாலும் உதவிபெற்று இணைக்கப்பட்டு, தேவவளர்ச்சியாய் வளர்ந்தேறுகிற சரீரமுழுவதையும் ஆதரிக்கிற தலையைப் பற்றிக்கொள்ளாமல், மாயமான தாழ்மையிலும், தேவதூதர்களுக்குச் செய்யும் ஆராதனையிலும் விருப்பமுற்று, காணாதவைகளிலே துணிவாய் நுழைந்து, தன் மாம்சசிந்தையினாலே வீணாய் இறுமாப்புக்கொண்டிருக்கிற எவனும் உங்கள் பந்தயப்பொருளை நீங்கள் இழந்துபோகும்படி உங்களை வஞ்சியாதிருக்கப்பாருங்கள்." Christ is sufficient. அதே கொலோசெயர் 2 ஆம் அதிகாரத்திலே தொடர்ந்து "தேவத்துவத்தின் பரிபூரணமெல்லாம் சரீரப்பிரகாரமாக, அவருக்குள் வாசமாயிருக்கிறது," என்று எழுதுகிறார். The fullness of Godhead dwells in Him in bodily form.

என்னுடைய 3வது குறிப்பை நான் முடித்துவிடுகிறேன். மூன்றாவது குறிப்பிலே, கிறிஸ்துவுக்கு கூடுதல்கள் வேண்டும். Plus. கடைசியாக கிறிஸ்துவுக்குப் பதிலீடுகள். முழு எபிரேயருக்கு எழுதின கடிதத்தையும் நான் உங்களுக்குத் தருகிறேன். வாசிப்பதற்கு நமக்கு நேரமில்லை. எபிரேயருக்கு எழுதிய கடிதத்தின் பாரம் என்னவென்றால் கிறிஸ்து தேவதூதர்களைவிட மேன்மையானவர், கிறிஸ்து மோசேயைவிட மேன்மையானவர், கிறிஸ்து யோசுவாவைவிட மேன்மையானவர், கிறிஸ்து ஆ‍ரோனைவிட மேன்மையானவர், கிறிஸ்துவினுடைய ஆசாரியத்துவம் ஆரோனுடைய ஆசாரியத்துவத்தைவிட மேன்மையானது. கிறிஸ்துவாகிய பலி எந்த ஆசாரியரும் செலுத்துகிற பலியைவிட மேன்மையானது. கிறிஸ்து ஆசரிப்புக் கூடாரத்தைவிட மேன்மையானவர். எபிரேயருக்கு எழுதின கடிதத்தின் பின்னணி என்னவென்றால் பல யூத மக்கள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை தங்கள் இரட்சகராக, மேசியாவாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள். உரோம சாம்ராஜ்யத்தில் யூதமதம் சட்டத்தால் அங்கீகரிக்கப்பட்ட ஒரு மதம். அவர்கள் கிறிஸ்தவத்தை யூத மதத்தின் ஒரு உட்பிரிவாகக் கருதினார்கள். ஆனால் யூதர்களுக்கு ஜெப ஆலயங்கள் உண்டு. ஆராதனை ஸ்தலங்கள், வழிபாட்டு ஸ்தலங்கள், கோவில்கள் உண்டு. கிறிஸ்தவர்களுக்கு கோவில்கள் இல்லை, குளங்கள் இல்லை. அவர்கள் வீடுகளில் கூடி வந்தார்கள். ஆகவே கிறிஸ்தவர்கள்மேல் சாட்டப்பட்ட ஒரு குற்றச்சாட்டு என்னவென்றால், "இவர்கள் நாத்தீகர்கள். இவர்களுக்குக் கோயில் இல்லை," நீங்கள் சபை வரலாற்றை வாசித்துப் பார்க்கவேண்டும். ஆகவே, கிறிஸ்தவம் அல்லது கிறிஸ்தவர்கள் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்ட மக்கள் இல்லை. யூதர்கள்மேல் இந்த கிறிஸ்தவர்களுக்கு மகாப் பொறாமை. ஏனென்றால், ஜெப ஆலயத்திலிருந்து பக்தியுள்ள பல மக்கள் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசித்து, அன்புகூர்ந்து, நம்பி அவரை ஏற்றுக்கொண்டு வெளியேறினார்கள். ஆகவே, கிறிஸ்தவர்களுக்கு எதிராக யூத ஜெப ஆலயத்தலைவர்கள் ஒரு சித்திரவதையை எழுப்பினார்கள். தேவனுடைய மக்களுடைய பொருட்கள் கையகப்படுத்தப்பட்டன. அவர்கள் மிகவும் துன்பத்திற்கு ஆளானார்கள். எனவே அந்தத் துன்பத்திலிருந்து தப்புவதற்காக அவர்கள் மீண்டும் யூதர்களுடைய ஜெப ஆலயங்களுக்கு அல்லது யூத மதத்திற்குத் திரும்பிப்போனார்கள். அவர்கள் யூத மதத்திற்குத் திரும்பிப்போகும்போது, ஜெப ஆலயத்திற்கு முன்னின்று, "இயேசு கிறிஸ்து அல்ல, இயேசு மேசியா இல்லை," என்று அவர்கள் சொல்ல வேண்டுமாம், அறிக்கையிட வேண்டுமாம். அவர்கள் அப்படி அறிக்கையிட்டால்தான் அவர்கள் மீண்டும் ஜெப ஆலயங்களுக்குள் சேர்த்துக்கொள்ளப்படுவார்கள். அந்த நிலையிலே தேவனுடைய மக்கள் பலர் பின்வாங்கிப்போனார்கள். அவர்களுக்காக எழுதப்பட்ட புத்தகம்தான் எபிரேயருக்கு எழுதின கடிதம். அதைத்தான், "நீங்கள் மெய்ப்பொருள், நிஜம், வந்தபிறகு மீண்டுமா அந்த நிழல்களுக்கு போகிறீர்கள்? அருமையான தேவனுடைய மக்களே, தேவனுடைய வழி கிறிஸ்துவாகிய மேன்மையான ஒரு நபர். கிறிஸ்து புலப்படும் தேவன் என்று முதலாவது நாம் பார்த்தோம் இரண்டாவது கிறிஸ்து மாதிரி-மனிதன் என்ற முறையிலே மாபெரும் ஒரு இரட்சிப்பின் ஒரு பணியை அவர் நிறைவேற்றி முடித்தார். புதிய மனித இனத்தை அவர் படைத்திருக்கிறார், உண்டாக்கியிருக்கிறார். மூன்றாவது, இந்தக் கிறிஸ்து போதுமானவர். ஆனால் மாறாக கிறிஸ்துவுக்கு எதிராக, அல்லது கிறிஸ்து போதுமானவர் என்று நாம் அனுபவிப்பதற்கு எதிராக மூன்று இருக்கிறது. ஒன்று கிறிஸ்துவை முகமுகமாய் எதிர்க்கின்ற தத்துவங்கள் உண்டு. இரண்டு கிறிஸ்துவோடு, கிறிஸ்துவுக்குக் கூடுதலாக சேர்க்கப்படுகின்ற காரியங்கள் உண்டு. மூன்றாவது கிறிஸ்துவுக்குப் பதிலீடுகளாக உள்ள நிழல்கள் உண்டு. நாம் இந்த எதிர்ப்புக்களிலும், கூடுதல்களிலும், பிரதியீடுகளிலும் வாழ்ந்துகொண்டிருப்போமென்றால், தேவனுடைய வழியை நாம் தவறவிட்டுவிடுவோம். இந்த இயேசு கிறிஸ்து என்கின்ற மகத்துவமான, மேன்மையான நபரை நாம் அறிந்துக்கொள்வோமென்றால், உண்மையிலேயே தேவனுடைய நோக்கமும், திட்டமும் நம் வாழ்க்கையிலே நிறைவேறும். நம்முடைய வாழ்க்கை கனிநிறைந்த, பொருள் நிறைந்த வாழ்க்கையாக இருக்கும். Praise the Lord!