Preloader
சாட்சியின் கூடாரம்
8 Mar 2025 : தேவ அறிவு Read More
5 Mar 2025 : இயேசுவை நோக்கி Read More

கிறிஸ்துவைச் சுதந்தரித்தல்

Transcribed from a message spoken in August 2014 in Chennai

By Milton Rajendram

நாம் இயேசுகிறிஸ்துவை விசுவாசிக்கும்போது, தேவன் நம்மைத் தம் பிள்ளைகளாக மாற்றுகிறார் என்று புதிய ஏற்பாடு சொல்லுகிறது. “அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார்” (யோவான் 1:12). நாம் எல்லாரும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசிக்கிற தேவனுடைய மக்கள் என்று நான் அனுமானித்துக்கொள்கிறேன். புதிய ஏற்பாட்டிலே தேவனுடைய மக்கள் என்ற வார்த்தைக்குக்குப் பயன்படுத்தப்பட்டிருக்கிற துல்லியமான வார்த்தை பரிசுத்தவான்கள், Saints. எனவே, சில சமயங்களில் நாம் தேவனுடைய மக்களை address பண்ணும்போது சகோதர சகோதரிகள் என்போம்; வேறு சில சமயங்களிலே பரிசுத்தவான்கள் என்போம். Saints என்றால் அது வேறு யாரோ என்று நினைக்க வேண்டாம்.

தேவ மக்களுடைய இலக்கும், பரிசும்

தேவன் தம் மக்களை ஓர் இலக்கோடு அழைத்திருக்கிறார். தேவனுடைய மக்களுடைய வாழ்க்கை ஒரு செக்குமாடு ஒரு வட்டத்திலே சுற்றிச்சுற்றி வருவதைப்போல் வாழ்கிற வாழ்க்கை அல்ல. மாறாக, அது ஓர் இலக்கை நோக்கி நேர்கோட்டில் முனைப்பாய்ச் செல்கிற ஒரு வாழ்க்கை. தேவன் நமக்கு ஓர் இலக்கைக் குறித்திருக்கிறார். நம் வாழ்க்கை அந்த இலக்கை நோக்கி, குறிபார்த்து முனைப்பாகச் செல்கிற ஒரு வாழ்க்கை. தேவன் தம் பிள்ளைகளுக்காக ஓர் இலக்கையும், அந்த இலக்கை எட்டும்போது ஒரு பரிசையும் குறித்திருக்கிறார். தேவனுடைய மக்கள் அந்த இலக்கை எட்ட வேண்டும், பரிசைப் பெற வேண்டும் என்பது தேவனுடைய இருதய விருப்பம். தேவனை அறிந்த அவருடைய மக்கள் எல்லாருடைய இருதயத்தின் வாஞ்சையும், விருப்பமும், கதறுதலும், தவிப்பும் அதுவாகவே இருக்கிறது. தேவன் அழைத்த அந்த இலக்கை நாம் எட்ட வேண்டும், பரிசை அடைய வேண்டும்.

நம்முடைய வாழ்க்கை பல சாதாரணமான காரியங்களால் தொகுக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் நாம் dramaticஆன, spectacularஆன, காரியங்களைச் செய்யவில்லை. சாப்படு;கிறோம், குடிக்கிறோம், துணிதுவைக்கிறோம், காயப்போடுகிறோம், துணிகளை மடித்து வைக்கிறோம், துணிகளைத் தேய்க்கிறோம், படிக்கப் போகிறோம், வேலைக்குப் போகிறோம், சமைக்கிறோம், பாத்திரங்களைக் கழுவுகிறோம். நம்முடைய வாழ்க்கை இதுபோன்ற மிகச் சாதாரணமான காரியங்களால் ஆனபோதிலும்கூட, அந்தச் சாதாணமான காரியங்களுக்குப்பின்னால் தேவன் ஒன்றைச் செய்துகொண்டிருக்கிறார். அது என்னவென்றால் தேவன் எந்த இலக்கிற்காகத் தம் மக்களை அழைத்தாரோ அந்த இலக்கை நோக்கி நாம் முன்னேறிக்கொண்டிருக்கிறோம், முன்னேறிக்கொண்டிருக்க வேண்டும். மேலோட்டமாகப் பார்த் தால் நாம் சாப்பிட்டுக்கொண்டிருப்பதுபோல, படிப்பதுபோல, வேலைக்குப்போவதுபோல, பணம் சம்பாதிப்பதுபோல, பணம் செலவழிப்பதுபோல, துணி துவைப்பதுபோல, துணி மடிப்பதுபோல, துணி தேய்ப்பதுபோலத் தோன்றலாம். ஆனால் இவை எல்லாவற்றி;ற்கும்பின்னால் தேவன் தம்முடைய இலக்கை நோக்கித் தம் பிள்ளைகளை நடத்திக்கொண்டிருக்கிறார்.

தேவனுடைய மக்கள் கிறிஸ்துவை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய மக்களுக்காக அவருடைய இலக்கு. தேவனுடைய மக்கள் கிறிஸ்துவை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும். God’s objective for his people is to inherit Christ. God has an objective for you. God intends that all his people must inherit Christ. கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்வது 

இதற்கு ஆதாரமாக ஒரு சில வசனங்களை நாம் வாசிப்போம்.

“அவர்களுக்குரிய சுதந்தரம் என்னவென்றால்: நானே அவர்கள் சுதந்தரம். ஆகையால் இஸ்ரயேலில் அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக. நான் அவர்கள் காணியாட்சி” (எசே. 44:28). “ஆகிலும், எனக்கு இலாபமாயிருந்தவைகளெவைகளோ அவைகளைக் கிறிஸ்துவுக்கு நஷ்டமென்று எண்ணினேன். அதுமாத்திரமல்ல, என் கர்த்தராகிய கிறிஸ்து இயேசுவை அறிகிற அறிவின் மேன்மைக்காக எல்லாவற்றையும் நஷ்டமென்று எண்ணிக்கொண்டிருக்கிறேன். சகோதரரே, அதைப் பிடித்துக்கொண்டேனென்று நான் எண்ணுகிறதில்லை. ஒன்று செய்கிறேன், பின்னானவைகளை மறந்து, முன்னானவைகளை நாடி, கிறிஸ்து இயேசுவுக்குள் தேவன் அழைத்த பரம அழைப்பின் பந்தயப் பொருளுக்காக இலக்கை நோக்கித் தொடருகிறேன்” (பிலி. 3:7, 8, 13, 14).

“இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும். கர்த்தருடைய நாமத்தினாலே வருகிறவர் ஸ்தோத்திரிக்கப்பட்டவர் என்று நீங்கள் சொல்லுமளவும், இதுமுதல் என்னைக் காணாதிருப்பீர்கள் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார். இயேசு தேவாலயத்தை விட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீஷர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி: இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே, இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத்.23:38-24:2)

என்னுடைய 

1. முதல் குறிப்பு, தேவனுடைய மக்கள் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும். என்பதுதான் தேவனுடைய இலக்கு.  

2. இரண்டாவது குறிப்பு, தேவனுடைய மக்கள் தங்களுடைய நடைமுறை வாழ்க்கையில், அனுபவ வாழ்க்கையில், கிறிஸ்துவை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும்.  

3. மூன்றாவது குறிப்பு, தேவனுடைய மக்கள் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு தேவனுடைய எதிரியாகிய, பகைவனாகிய, சாத்தான் போர் புரிகிறான். தேவனுடைய மக்கள் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு எதிராக அல்லது கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்ளாதவாறு தேவனுடைய பகைவனாகிய சாத்தான் போர்புரிகிறான். எனவே, நம்முடைய வாழ்க்கையிலே ஒரு போர் உண்டு, போராட்டம் உண்டு.

இரண்டு காரியங்களை நான் குறித்துக்காட்ட விரும்புகிறேன். நாம் ஒன்றைச் சுதந்தரித்துக்கொள்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம் என்று எபேசியர் 1:12 சொல்லுகிறது. “தமது சித்தத்தின் ஆலோசனைக்குத் தக்கதாக எல்லாவற்றையும் நடப்பிக்கிற அவருடைய தீர்மானத்தின்படியே, நாங்கள் முன்குறிக்கப்பட்டு, கிறிஸ்துவுக்குள் அவருடைய சுதந்தரமாகும்படி தெரிந்துகொள்ளப்பட்டோம்”. இதில் இரண்டு காரியங்கள் உள்ளன. நாம் ஏதோவொன்றைச் சுதந்தரிப்பதற்காக அழைக்கப்பட்டிருக்கிறோம். இன்னொன்று, தேவன் நம்மைச் சுதந்தரித்துக்கொள்கிறார்.

“ஒளியிலுள்ள பரிசுத்தவான்களுடைய சுதந்தரத்தில் பங்கடைவதற்கு, நம்மைத் தகுதியுள்ளவர்களாக்கினவரும்” (கொலோ.1:12).

1. கிறிஸ்துவைச் சுதந்தரித்தல்

நாம் ஏதோவொன்றைச் சுதந்தரித்துக்கொள்வதற்காக தேவன் நம்மை அழைத்திருக்கிறார். சுதந்தரிப்பது என்றாலே அது ஒரு மாபெரும் செல்வம், மாபெரும் பொக்கிஷம், மாபெரும் காணியாட்சி, மாபெரும் பங்கு, என்று பொருள். இந்த உலகத்திலே சுதந்தரிப்பது என்றால் முன்னோர்களுடைய சொத்தை நாம் சுதந்தரிக்க வேண்டும் என்று சொல்வார்கள். இந்த உலகத்திலே ஒருவேளை நீதிமன்றங்களில் நடக்கின்ற பெரும்பாலான வழக்குகள் சொத்தைப்பற்றி இருக்கும். சொத்துக்காக அவர்கள் நீதிமன்றங்களுக்குச் செல்வார்கள். சொத்துக்காக அவர்கள் சண்டைபோடுவார்கள். சொத்துக்காக அவர்கள் கொலையுங்கூட செய்வார்கள்.

சொத்து, சுதந்தரம், காணியாட்சி என்ற வார்த்தைகளெல்லாம் தமிழ் வேதாகமத்திலே பயன்படுத்தப்பட்டிருக்கின்றன. சொத்து மிக விரும்பத்தக்க ஒன்று. அது விரும்பத்தக்கது மட்டுமல்ல. அது ஆசையாய்த் தேடத்தக்க ஒன்று. தேவனுடைய மக்கள் அநேகர் இதைப் புரிந்துகொள்ளவில்லை. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை விசுவாசிப்பதென்றால், “நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படும்; பிறகு இந்த உலகத்திலே நன்மைகளும், ஆசீர்வாதங்களும் நிறைந்த ஒரு வாழ்க்கை வாழ்வோம்; அதன்பின் போனஸாக நாம் சாகும்போது பரலோகத்திற்குப் போய்விடுவோம்,” என்பதுதான் தேவனுடைய மக்களுடைய கருத்தாக இருக்கிறது. இதைவிடப் பெரிய இன்சூரன்ஸ் என்ன வேண்டும்? இம்மையிலே சுகமான வாழ்வு, மறுமையிலே பரலோகம். There is no better deal than this.. இப்படிப்பட்ட ஒரு deal மதியீனம் என்றுதான் சொல்ல வேண்டும்.

கிறிஸ்து இல்லாதவை மதிப்பற்றவை

ஆனால், தேவன் நம்மை அழைத்த அழைப்பினுடைய நோக்கம் அதுவல்ல. நாம் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவை என்றைக்கு விசுவாசித்தோமோ அன்றைக்கு ஒரு செயலை தேவன் நம்முடைய வாழ்க்கையிலே தொடங்குகிறார். அது என்னவென்றால் அதற்கு முந்திவரை நாம் வெறுமையான பாத்திரங்கள். தேவனுக்கு மதிப்புடைய எதுவும் மனிதனிடத்தில் இல்லை. தேவனைப் பொறுத்தவரை மனிதன் ஒரு குப்பை என்று சொன்னாலும் மிகையாகாது. இது ஒருவேளை நம்முடைய மனதைப் புண்படுத்தலாம். இயேசுவோடு தொடர்பில்லாத ஒரு மனிதனுடைய மதிப்பு தேவனுக்குமுன்பாக குப்பை. இந்த உலகம் மதிப்புடையது என்றும், அருமையானது என்றும், இதில் விலையேறப்பெற்ற பல காரியங்கள் உள்ளன என்றும் மனிதன் நினைக்கலாம். மதிப்புடையவை என்று அவன் நினைக்கின்ற காரியங்கள் மனிதனுடைய வாழ்க்கையில் இருக்கவும் செய்யலாம். அது கல்வி, வேலை, வருவாய், சொத்து, வீடு, போக்குவரத்து வசதிகள், சமுதாயத்திலே மதிப்பு, அந்தஸ்து, செல்வாக்குபோன்றவைகளாக இருக்கலாம். ஒருவேளை அந்த மனிதன் பக்தி நிறைந்தவனும், ஒரு மதவாதியாகவுங்கூட இருக்கலாம். ஆனால் தேவன் அவைகளையெல்லாம் கணக்கிட்டுப் பார்த்து, “இவைகள் என் பார்வையிலே குப்பை,” என்று சொல்வார்.

இதற்கு எந்த நிரூபணமும் தேவையில்லை. இதெல்லாம் தேவனுக்குமுன்பாக குப்பை. இது உண்மை. “நாங்கள் அனைவரும் தீட்டானவர்கள்போல் இருக்கிறோம். எங்களுடைய நீதிகளெல்லாம் அழுக்கான கந்தைபோல இருக்கிறது” (ஏசாயா 64:6). அப்போஸ்தலனாகிய பவுல், “எனக்கு இலாபமாயிருந்தவைகளை நஷ்டமென்று விட்டேன்,” என்று கூறுகிறார். அப்படிச் சொன்னபிறகு இரகசியமாக, எல்லாரும் தூங்கினபிறகு இரவிலே, “ஐயோ! இவைகளையெல்லாம் அவசரப்பட்டு நஷ்டமென்று விட்டுவிட்டேன் என்று ஏங்கிக்கொண்டிருக்கிறேன். நான் இயேசுகிறிஸ்துவை ஏற்றுக்கொண்டபின் இவைகளையெல்லாம் நஷ்டமென்று விட்டுவிட்டதால் தவறுசெய்துவிட்டேன்,” என்று பவுல் சொல்லவில்லை. அதற்கு மாறாக, “நஷ்டமென்று விட்டேன். விட்டுவிட்டபின் நான் மிகவும் ஆழமாய்ச் சிந்தித்துப்பார்த்தேன். பிறகுதான் தோன்றினது. அது ஒன்றும் பெரிய நஷ்டம் இல்லை,” என்பதுதான் அவருடைய மனப்பாங்கு.

நம் வீட்டுக் குப்பைத்தொட்டியை மாநகராட்சியிலிருந்து குப்பை எடுக்க வருகிறவர்களிடம் கொடுத்துவிட்டு, அது நஷ்டம் என்று நினைப்போமா? “அவசரப்பட்டுக் கொடுத்துவிட்டேன். முதலில் நான் அதை நஷ்டமென்று கருதினேன். பிறகு யோசித்துப்பார்த்தபிறகு நான் செய்தது தவறு என்று தெரிந்தது,” என்று நாம் சொல்வோமா?

பவுல் எவைகளையெல்லாம் நஷ்டமென்றும், குப்பையென்றும் சொல்கிறார் என்பதை நீங்கள் வாசித்துப்பார்த்தால் இந்த உலகம் அவரைப் பைத்தியக்காரனென்று சொல்லும். “பவுல், இவைகளையெல்லாமா நீ நஷ்டமென்று விட்டாய்?” என்று அவரிடம் கேட்டால், “நான் அவைகளை நஷ்டமென்று விட்டது பெரிய பொருட்டல்ல. நான் ஆற அமர உட்கார்ந்து, அதை எடைதூக்கிப் பார்த்து, சீர்தூக்கிப் பார்த்து, நிறுத்துப்பார்த்தபிறகு கண்டுபிடித்தது என்னவென்றால் நான் நஷ்டமென்று விட்டவைவைகள் வெறுங் குப்பைகளே,” என்று அவர் சொல்லுகிறார். குப்பையுமாக எண்ணுகிறேன் என்றால் “நான் நிறுத்துப்பார்த்து, எடைபோட்டுப் பார்த்து, ஆ! நான் இழந்தது குப்பை என்ற முடிவுக்கே வந்திருக்கிறேன்,” என்று பொருள்.

கிறிஸ்து இல்லாத ஒரு மனிதனுடைய வாழ்க்கை, ஒரு மனிதனுடைய மதிப்பு, குப்பை. நித்தியத்தில் அது செல்லாக் காசு. “நித்தியத்தைப்பற்றிப் பேசுவதைக் கொஞ்சம் குறைத்துவிட்டு, முதலில் இந்த உலகத்திற்குரிய வாழ்க்கையைப் பார்க்கலாமே!” என்ற எண்ணம் தேவனுடைய மக்கள் மனதிலேகூட ஓடும். “இவர் பெரிய ஆவிக்குரிய அசுரர்போல் பேசுகிறார்! சோறு வேண்டாமா? துணி வேண்டாமா? இவர் கார் இல்லாமல் வாழ்ந்துவிடுவாரா? என்னமோ தேவனுக்குமுன்பாக நஷ்டமென்று விட்டேன். குப்பை என்றெல்லாம் சொல்கிறார்,” என்று சிலர் நினைக்கலாம்.

அன்று தொடங்கி ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு கணமும் நம்முடைய வாழ்க்கையின் எல்லா நிலைகளிலும், சூழ்நிலைகளிலும், தேவைகளிலும், நெருக்கங்களிலும், வருத்தங்களிலும், இன்பங்களிலும், துன்பங்களிலும், தாழ்விலும், வாழ்விலும், ஜீவனிலும், சாவிலும் நாம் இந்தக் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்ள வேண்டும். ஆதாயம்பண்ணுவது என்பது இன்னொரு வார்த்தை. இந்தக் கிறிஸ்துவை சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் அல்லது ஆதாயம்பண்ணிக்கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம்.

யோபு 28ஆம் அதிகாரத்தை நீங்கள் வாசியுங்கள். அது உங்கள் இருதயத்தின் ஆழங்களைத் தொடும். நாம் மண்பாண்டங்களாய் இருக்கிறோம். “கிறிஸ்து என்கின்ற பொக்கிஷத்தை இந்த மண்பாண்டத்திலே பெற்றிருக்கிறோம்,” (2 கொரி. 4:7) என்று பவுல் கூறுகிறார். மனிதன் என்பவன் ஒரு மண்பாண்டம் போன்றவன் என்றும், அந்த மண்பாண்டத்தில் தங்கம் அல்லது வெள்ளி அல்லது முத்து வைத்திருப்பதுபோலவும் நீங்கள் கற்பனை செய்துகொள்ள வேண்டாம்.

கிறிஸ்துவுக்கு ஒத்தவர்களாக மாறுதல்

கிறிஸ்துவை சுதந்தரித்துக்கொள்வதென்றால் எங்கோ ஒரு பக்கத்திலே சுதந்தரித்துக்கொள்வது அல்ல. நம்முடைய மனம், நம்முடைய எண்ணங்கள், நம்முடைய சிந்தனைகள், நம்முடைய உணர்ச்சிகள், நம்முடைய விருப்புகள், நம்முடைய வெறுப்புகள், நம்முடைய தீர்மானங்கள், நம்முடைய முடிவுகள், நம்முடைய சாய்மானங்கள், நம்முடைய தேர்ந்தெடுப்புகள், நம்முடைய சுவைகள், நம்முடைய முன்னுரிமைகள், நம்முடைய ஆசைகள், நம்முடைய தவிப்புகள், நம்முடைய ஆர்வங்கள், நம்முடைய ஆவல்கள் எல்லாவற்றிலும் நாம் கிறிஸ்துவுக்கு ஒத்தவர்களாக மாற்றப்படுவதுதான் நாம் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்வது அல்லது கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்வது என்று பொருள். இது தேவனுடைய மக்களுக்காக தேவனுடைய இலக்கு. இந்த வாழ்க்கையினுடைய முடிவிலே அல்லது இந்த யுகத்தினுடைய முடிவிலே தேவன் கிறிஸ்துவை அப்படிச் சுதந்தரித்துக்கொண்ட ஒரு கூட்டம் மக்களைப் பார்த்து, “இது என்னுடைய சொத்து. இது என்னுடைய சுதந்தரம். இது என்னுடைய காணியாட்சி,” என்று சொல்வார்.

கிறிஸ்துவைச் சுதந்தரிப்பவர்கள் தேவனின் சுதந்தரம்

இந்த யுகத்தின் முடிவிலே தேவன் எதைப் பார்த்து கொண்டாடப்போகிறார் அல்லது குதூகலிக்கப் போகிறார்? எதிர்மறையாக நான் இப்போது எதுவும் சொல்லவில்லை. ஆனால் மூன்றாவது குறிப்பிலே சில எதிர்மறையான காரியங்களைச் சொல்ல விரும்புகிறேன். அதை இப்பொழுது நேர்மறையான காரியங்களாகச் சொல்லுகிறேன். இந்த யுகத்தின் முடிவிலே தேவன் எதைப் பார்த்து மகிழ்ச்சியடைவார், இன்புறுவார், குதூகலிப்பார், கொண்டாடுவார் என்றால் இந்தக் கிறிஸ்துவை சுதந்தரித்துக்கொண்ட, கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொண்ட, இந்தக் கிறிஸ்து உருவாக்கப்பட்ட, இந்தக் கிறிஸ்து கட்டியமைக்கப்பட்ட ஒரு கூட்டம் மனிதர்களைப் பார்க்கும்போது, “நான் இவர்களை என்னுடைய சொத்தாக, சுதந்தரமாக, பங்காக, பெற்றுக்கொள்ளப்போகிறேன்,” என்று தேவன் சொல்வார்.

தேவனும் ஒரு சொத்தை விரும்புகிறார். ஆனால், அது மனிதர்கள் சொல்வதுபோன்ற ஒரு சொத்தோ, சுதந்தரமோ, பங்கோ அல்ல. எந்த மனிதன் அல்லது எந்தக் கூட்டம் மனிதர்கள் கிறிஸ்துவைச் சுதந்தரித்திருக்கிறார்களோ, அவர்களைத் தேவன் சுதந்தரித்துக்கொள்வார். இறுதி நாளிலே, வாழ்க்கையின் முடிவிலே, இந்த யுகத்தின் முடிவிலே, தேவன் ஒன்றை எதிர்பார்க்கிறார். அவருக்கு ஒரு சுதந்தரம் வேண்டும். பூமியிலே அவருக்கு ஒரு சுதந்தரம் எல்லா நூற்றாண்டுகளிலும் இருந்தது, இன்றும் இருக்கிறது, வரப்போகிற காலங்களிலும் அது இருக்கும். நாமும் தேவனுடைய சொத்தாக, தேவனுடைய சுதந்தரமாக, தேவனுடைய பங்காக, இருக்க வேண்டும் என்று வாஞ்சிக்கின்ற, கதறுகின்ற அந்த மேகம்போன்ற திரளான கூட்டத்தில் ஒரு பங்காக இருக்க வேண்டும் என்பது நம்முடைய வாஞ்சை.

எகிப்திலிருந்து கானானுக்குள்

இது பழைய ஏற்பாட்டில் ஒரு சித்திரமாக எழுதப்பட்டிருக்கிறது. தேவன் இஸ்ரயேல் மக்களை எகிப்திலிருந்து வெளியே அழைத்து வந்து விட்டுவிடுவதல்ல தேவனுடைய நோக்கம். எகிப்திலிருந்து கானானுக்குள் கொண்டுபோவதுதான் அவருடைய நோக்கம். From Egypt into Canaan. எகிப்திலிருந்து வெளியே என்பதை தேவனுடைய மக்கள் புரிந்துகொள்கிறார்கள். ஆனால், கானானுக்குள் என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவில்லை. இந்த உலகத்திலிருந்து தேவன் நம்மை இரட்சிக்கிறார். தேவனுடைய மக்கள் வளமான கானான் என்கிற நாட்டைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தோடு அவர்களை அழைக்கிறார், இரட்சிக்கிறார்.

முழு பழைய ஏற்பாட்டிலும் இந்த வளமான நாடாகிய கானான் என்பது ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கு ஒரு அடையாளமாக, ஒரு மாதிரியாக, இருக்கிறது. எனவே, தேவன் தம் மக்களைப் பாவத்திலிருந்து, இந்த உலகத்திலிருந்து, வெளியே அழைக்கும்போது அவர்கள் பாவத்திலிருந்தும், உலகத்திலிருந்தும், வெளியே வந்துவிட்ட நிலையில் நின்றுவிடுவது அல்ல தேவனுடைய இலக்கு. அவர்கள் இந்த வளமான நாடாகிய கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய இலக்கு. இந்த வெளிச்சத்திலே நீங்கள் எண்ணாகமம், உபாகமம், யோசுவா ஆகிய புத்த கங்களை வாசித்துப்பாருங்கள். தேவன் தம்முடைய மக்கள் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் என்பதற்கு அடையாளமாக அந்த நல்ல வளமான நாடாகிய கானானை அங்கு வைத் திருக்கிறார். அது ஒரு சித்திரம், ஒரு படம், முன்னடையாளம்.

இஸ்ரயேல் மக்களிலே பன்னிரெண்டு கோத்திரத்தார் இருந்தார்கள். அதில் ஒரு கோத்திரம் லேவி கோத்திரம். தேவன் மோசேயிடம், “நீ கானான் என்கிற நாட்டை வென்று எல்லாக் கோத்திரத்துக்கும் பங்கிட்டுக் கொடு. ஆனால், ஒரேவொரு கோத்திரத்தாருக்கு நீ பங்கு கொடுக்க வேண்டாம். நானே அவர்கள் பங்கு. நானே அவர்கள் சுதந்தரம். நானே அவர்கள் காணியாட்சி,” என்று சொன்னார். நாட்டிலே பதினொரு கோத்திரத்தாருக்குப் பங்கு உண்டு. ஒரேவொரு கோத்திரத்துக்கு மட்டும் பங்கு இல்லை. ஒரு தகப்பன் தன்னுடைய பதினொரு பிள்ளைகளுக்குச் சொத்தைப் பங்கிட்டுக் கொடுத்து விட்டு. பன்னிரண்டாவது பிள்ளையைப் பார்த்து, “நான்தான் உன் சொத்து, பங்கு,” என்று சொன்னால் அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? “இஸ்ரயேலிலே அவர்களுக்குக் காணியாட்சியைக் கொடாதிருப்பீர்களாக. நானே அவர்கள் காணியாட்சி.”

இந்தப் பூமியிலே தேவன் தம் மக்களுக்குத் தேவன் ஒருவரைத்தவிர, கிறிஸ்து ஒருவரைத்தவிர பங்காகவோ, சுதந்தரமாகவோ, காணியாட்சியாகவோ, சொத்தாகவோ வேறு எதையும் தரவில்லை.

2. நடைமுறை வாழ்க்கையில் கிறிஸ்துவைச் சுதந்தரித்தல்

ஆகையால், தேவனுடைய மக்கள் தங்கள் நடைமுறை வாழ்க்கையில், அனுபவ வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைச் சுதந்தரிக்க வேண்டும். கிறிஸ்துவைச் சுதந்தரிப்பது என்றால் வேதம் வாசித்தல், ஜெபித்தல், ஞாயிற்றுக்கிழமை கூட்டத்திற்கு வருதல், கிறிஸ்துமஸ் கொண்டாடுதல், உபவாசித்தல், யாருக்காவது ஒரு பெரிய உதவி செய்தல்போன்ற dramaticகான காரியங்களிலே நாம் கிறிஸ்துவைச் சுதந்தரிப்பதுபோல் தோன்றலாம்.

ஆனால், “ஆகையால், நீங்கள் புசித்தாலும், குடித்தாலும், எதைச் செய்தாலும், எல்லாவற்றையும் தேவனுடைய மகிமைக்கென்று செய்யுங்கள்” (1 கொரி. 10:31) என்றும், “வார்த்தையினாலாவது, கிரியையினாலாவது நீங்கள் எதைச் செய்தாலும் அதையெல்லாம் கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செய்து, அவர் முன்னிலையாகப் பிதாவாகிய தேவனை ஸ்தோத்திரியுங்கள்” (கொலோ. 3:17) என்றும், “எதைச் செய்தாலும், அதை மனுஷர்களுக்கென்று செய்யாமல், கர்த்தருக்கென்றே மனப்பூர்மாய்ச் செய்யுங்கள்” (கொலோ. 3:24) என்றும் வேதவாக்கியங்கள் சொல்லுகின்றன. நாம் எல்லாவற்றிலும் கிறிஸ்துவால் வாழ்வதும், கிறிஸ்து நமக்குள் உருவாக்கப்படுவதும், கிறிஸ்து நமக்குள் கட்டியமைக்கப்படுவதும்தான் கிறிஸ்துவைச் சுதந்தரிப்பதாகும். கிறிஸ்துவைச் சுதந்தரிப்பது என்பது என்றைக்கோ ஒருநாள் நடக்கப்போவது அல்ல. மிக முக்கியமாக “இறந்தபிறகு என் தேவன் தம்முடைய மகிமையின் செல்வங்களால் என்னுடைய வறுமையையெல்லாம் நிறைவாக்குவார். செத்தபிறகு தேவன் தம்மை என் சொத்தாக, சுதந்தரமாக, தருவார்,” என்ற எண்ணம் மிகவும் ஆறுதலாக இருக்கலாம். ஆனால், உண்மை அதுவல்ல. கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவது நம் வாழ்வில் ஒவ்வொரு நாளும் நடைபெறுகிற காரியம்..

ஒன்று சொல்கிறேன். நாம் இந்தப் பூமியில் உயிர்வாழ்கிறவரை எந்தக் கிறிஸ்துவைச் சுதந்தரிக்கிறோமோ, அந்தக் கிறிஸ்துவைத்தான் நாம் நித்தியத்திலும் உடையவர்களாக இருப்போம். பூமிக்குரிய இந்த வாழ்வு முடிந்தபிறகு, கிறிஸ்துவை மடமடவென்று சுதந்தரித்துக்கொள்வோம், ஆதாயம்பண்ணிக்கொள்வோம், என்பது நடக்கப்போவதில்லை. இப்பொழுது நாம் எப்படி கிறிஸ்துவை ஆசையாய்ச் சுதந்தரித்துக்கொண்டிருக்கிறோமோ, அதே வீதத்தில்தான் இந்த வாழ்க்கையின் முடிவில் மறுயுகத்திலும் நாம் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொண்டிருப்போம். நாம் இப்பொழுது கிறிஸ்துவை எப்படிச் சுதந்தரித்தாலும், மறுயுகம் ஆரம்பிக்கும்போது தேவன் எல்லாவற்றையும் அழித்துவிட்டு எல்லாருக்கும் சமமான கிறிஸ்துதான் இருப்பார் என்று நடக்கப்போவதில்லை. இதை உங்களால் நம்ப முடியவில்லைன்றால் இந்த ஒரேவொரு கேள்விக்குப் பதிலைக் கண்டுபிடிப்பதற்காக புதிய ஏற்பாட்டை பலமுறை வாசித்துப்பாருங்கள்.

ஆகவே, ஒவ்வொரு நாளையும், ஒவ்வொரு நாளில் 24 மணி நேரமும் நடைபெறுகிற சிறிய பெரிய காரியம் எதையும் நாம் உதாசீனம் பண்ணுவதில்லை. வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலையிலும் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணமுடியாத, சுதந்தரிக்கமுடியாத, சூழ்நிலை என்ற ஒன்று தேவனுடைய மக்களுடைய வாழ்க்கையில் இல்லவே இல்லை. வாழ்வாக இருக்கலாம், குறைவாக இருக்கலாம்; தாழ்வாக இருக்கலாம், உயர்வாக இருக்கலாம்; வறுமையாக இருக்கலாம், வளமையாக இருக்கலாம்; வியாதியாக இருக்கலாம், சுகமாக இருக்கலாம்; நெருக்கங்கள், கண்ணீர் இருக்கலாம்; கதறுதல் இருக்கலாம், மகிழ்ச்சி இருக்கலாம்; கொண்டாட்டம் இருக்கலாம்.

விசுவாசம்

ஆனால், தேவனுடைய மக்கள் எல்லா நிலையிலும் கிறிஸ்துவால் வாழ முடியும் என்பதை விசுவாசிக்க வேண்டும். “இல்லை, இல்லை. அவருடைய நிலைமையில் அவர் கிறிஸ்துவைக்கொண்டு வாழ முடியும். ஆனால், என்னுடைய நிலைமையில் நீங்கள் இருந்தால் கிறிஸ்துவைக்கொண்டு வாழ முடியாது. என்னுடைய நிலைமை மிகக் கடினமானது. எனக்கு நடந்ததுபோல் உங்களுக்கு நடந்தால் நீங்கள் இப்படிச் சொல்லமாட்டீர்கள்,” என்பது இந்த உலகத்து மக்கள் கொடுக்கக்கூடிய சாக்குப்போக்கு. இதற்கு நாம் பலியாகக் கூடாது. “நான் பரீட்சைக்கு நன்றாகப் படிக்கவில்லை. ஆனால், கண்டிப்பாகத் தேர்ச்சி பெற்றுவிடுவேன்,” என்பதல்ல விசுவாசம். “வாழ்வின் எல்லா நிலைக்கும், தேவைக்கும், சூழ்நிலைக்கும், கிறிஸ்து போதுமானவர், அவரைக்கொண்டு வாழ முடியும்,’ என்பதுதான் விசுவாசம்.”இந்தச் சூழலிலே கிறிஸ்துவைக்கொண்டு வாழ முடியாது. இந்த நாட்டில் கிறிஸ்துவைக்கொண்டு வாழலாம். அந்த நாட்டில் வாழ முடியாது. அந்த நாட்டில் வாழலாம்; ஆனால், இந்த நாட்டில் வாழ முடியாது. அந்த நாட்டில் வேண்டுமானால் சுவிசேஷத்தை அறிவிக்கலாம். இந்தியாவிலே அறிவிக்க முடியாது,” என்பது தேவனுடைய பகைவனாகிய சாத்தானுடைய சோதனை. “கர்த்தர் ராஜரிகம்பண்ணுகிறார்” (சங். 97:1; 99:1).

எனவே, “இந்தச் சூழலில் கிறிஸ்துவைச் சுதந்தரிக்கமுடியாது. இப்போது நான் ஒரு இடைவேளை எடுத்துக்கொள்கிறேன். சூழ்நிலை மாறும். அதற்குப்பிறகு விட்ட வருடங்களை ஈடுகட்டுவதற்காக வேக கமாக நான் கிறிஸ்துவை ஆதாயம்பண்ணிக்கொள்வேன், சுதந்தரித்துக்கொள்வேன்,” என்பதல்ல. இன்று, இந்தக் கணப்பொழுதிலே என்னுடைய நிலை எப்படி என்பதை நான் சொல்ல வேண்டும். என்னுடைய வேலை எப்படியும் இருக்கலாம். என் கணவனுடைய நிலை, என் மனைவியினுடைய நிலை, என் பிள்ளைகளினுடைய நிலை, என் நாட்டின் நிலை, என் வீட்டின் நிலை எப்படியிருந்தாலும் கிறிஸ்துவால் வாழ்கிற மக்கள் எப்படி வாழ்வார்களோ அப்படித்தான் நாம் வாழ்வோம். இது ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவின்மேல் வைத்திருக்கிற விசுவாசம்.

சுதந்தரமும், இளைப்பாறுதலும்

எபிரேயா; 3, 4ஆம் அதிகாரங்களை நீங்கள் வாசியுங்கள். எபிரேயரின் ஆசிரியர் அங்கு இளைப்பாறுதலைப்பற்றிச் சொல்கிறார். இஸ்ரயேலர்கள் அவிசுவாசத்தினாலும், கீழ்ப்படியாமையினாலும் அந்த இளைப்பாறுதலுக்குள் நுழையவில்லை என்று ஆசிரியர் சொல்லுகிறார். இஸ்ரயேல் மக்கள் அந்த நல்ல வளமான நாடாகிய கானானைச் சுதந்தரிக்கும்போது அவர்களுக்குக் கிடைக்கின்ற அந்த ஆசீர்வாதத்திற்குப் பெயர் இளைப்பாறுதல்.

ஒரு வசனத்தை நான் உங்களுக்கு மேற்கோள் காட்டுகிறேன். “உங்கள் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குக் கொடுக்கும் இளைப்பாறுதலிலும் சுதந்தரத்திலும் நீங்கள் இன்னும் பிரவேசிக்க வில்லையே,” (உபா. 12:9) என்று மோசே சொல்லுகிறார். தேவன் நமக்கு ஒரு சுதந்தரத்தை மட்டும் தரவில்லை. இளைப்பாறுதலையும் தருகிறார். கிறிஸ்துவைச் சுதந்தரிக்கும்போது அடைகிற நிலைதான் இளைப்பாறுதல்.

நல்ல சுகத்தை, நல்ல வருவாய் உள்ள வேலையை, நல்ல காற்றோட்டமுள்ள வீட்டைப் பெரும்பாலான மக்கள் இளைப்பாறுதல் என்று கருதலாம். ஒருவேளை அடுத்த வாரம் நோயில் விழுந்துவிட்டால், வேலை போய்விட்டால், வீட்டின் சௌகரியம் குறைந்துவிட்டால், ஒரேவொரு அறை மட்டுமே மிஞ்சினால், இப்போது இருக்கிற இந்த மனமகிழ்ச்சியும், இந்த மலர் ச்சியும், இந்த உற்சாகமும், இந்தத் துணிவும், இந்தத் தெளிவும் இருக்குமா என்கிற கேள்வியை எனக்குமுன்பாக எப்போதுமே நான் வைத்துப் பார்ப்பது உண்டு. கொஞ்சம் அச்சமாக இருக்கும். ஆனால், கா;த்தருடைய இரக்கத்தினாலே அதே மகிழ்ச்சியோடும், மலா;ச்சியோடும், தெளிவோடும், துணிவோடும் வாழ முடியும் என்று நான் நினைக்கின்றேன்.

தேவனுடைய மக்கள் எந்த அளவுக்கு கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்கிறார்களோ அந்த அளவுக்கு அவா;களுக்கு இளைப்பாறுதல் இருக்கும். குறிப்பிட்ட இந்தச் சூழலிலே, இந்த நிலைமையிலே, கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்ள முடியும் என்று அவா;கள் விசுவாசித்தால் அந்தச் சூழலிலே, அந்த நிலைமையிலே அவா;களுக்கு இளைப்பாறுதல் உண்டு. எப்போது அவா;கள் ஷஷஇந்த நிலையிலும், எந்த நிலைமையிலும், எந்தச் சமரசமுமின்றி முற்றுமுடிய கிறிஸ்துவால் வாழ முடியும்,00 என்கிற விசுவாசத் திற்கும், கீழ்ப்படிதலுக்கும் வருகின்றார்களோ அப்போது அவா;களுக்கு இளைப்பாறுதல் உண்டு. இது ஒவ்வொரு நாளும் நடக்கிற ஒரு வாழ்க்கை.

3. கிறிஸ்துவைச் சுதந்தரிப்பதற்குப் போர்

என்னுடைய மூன்றாவது குறிப்புக்கு வருகிறேன். தேவனுடைய மக்கள் கிறிஸ்துவாகிய மாபெரும் சொத்தை, சுதந்தரத்தை, காணியாட்சியை, சுதந்தரித்துக்கொள்ளாதவாறு, சுதந்தரித்துக்கொள்ளாதபடி, தேவனுடைய பகைவனாகிய சாத்தான் போர் புரிகிறான். தேவனுடைய மக்கள் எல்லாரும் கிறிஸ்து வைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய இலக்கு. ஆனால், இவா;கள் கிறிஸ்து வைச் சுதந்தரித்துக்கொள்ளக் கூடாதுÉ இந்த யுகத்தின் முடிவுக்கு வரும்போது இவா;களும் வெறுமை யாய் இருக்க வேண்டும்É தேவனையும் வெறுமையாய் விட வேண்டும் என்பது சாத்தானுடைய எண்ணம். எனவே, அவன் போர் புரிகிறான்.

மறுபடியும் நான் பழைய ஏற்பாட்டை எடுத்துக்காட்டுகிறேன். தேவன் எப்போதெல்லாம் அவருடைய மக்களிடத்தில் பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசமாகிய கானானைப்பற்றிப் பேசுகிறாரோ அப்போதெல்லாம் “பாலும் தேனும் ஓடுகிற நல்ல தேசமாகிய கானானை உங்களுக்குக் கொடுத்தேன்,” என்று இறந்தகாலத்தில்தான் பேசுகிறாரேதவிர “கொடுப்பேன்” என்று எதிர்காலத்தில் பேசவில்லை. நீங்கள் நன்றாய் வாசித்துப் பாருங்கள். “நான் உங்களுக்குக் கொடுத்த தேசம்” என்று சொல்லுகிறார். இன்னும் அவர்கள் சேத்தைச் சுதந்தரித்துக்கொள்ளவில்லை. ஆனால், அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொள்வதற்கு முந்தியே தேவனுடைய பார்வையிலே அவர்கள் தேசத்தைச் சுதந்தரித்துக்கொண்டதைப் போலத்தான் பேசுகிறார்.

நாம் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொண்டோமா அல்லது சுதந்தரித்துக்கொள்ளப் போகிறோமோ? தேவனுடைய பார்வையிலே “நான் உங்களுக்குச் சுதந்தரமாகக் கொடுத்த கிறிஸ்து,” என்றுதான் சொல்வார். அப்படி வாக்குறுதி கொடுத்தபோதும்கூட தேவனுடைய மக்கள் அந்த நாட்டினுடைய ஒவ்வொரு சதுர அடியையும் கைப்பற்றுவதற்கு போராட வேண்டியிருந்தது.

“Brother, God has promised me. Therefore, my life is a cake walk.. நான் அப்படிப் போனால் இரும்புக் கதவு தானாகவே திறந்தது. நான் போராட வேண்டியிருக்கவில்லை. பேதுரு சிறையில் இருந்தார் இல்லையா? அதுபோல நான் நடந்து வந்தேன், முதல் வாசல் திறந்தது. இரண்டாவது வாசல் திறந்தது. மூன்றாவது வாசல் திறந்தது. நான் நடந்துபோன பாதையெல்லாம் வாசல் வாசலாக திறந்துகொண்டே இருந்தது. இது கர்த்தருடைய சித்தம் என்று அப்போதுதான் புரிந்து கொண்டேன். ஒரு கதவுக்குப் போனேன். அந்தக் கதவு திறக்கவே இல்லை. அதனால் நான் நடந்து வந்த பாதை கர்த்தருடைய சித்தமே இல்லை என்று திரும்பிப்போய்விட்டேன்,” என்ற பாணியில் பேசுகிற மக்கள் நிறையைப்பேர் உண்டு. இதை நீங்கள் நம்புவீர்களா? வேதத்தை நமக்கு இஷ்டத்துக்குப் பயன்படுத்தலாம்.

சகோதரனே, தேவனுடைய சித்தம் என்றால் முதல் வாசல் திறந்து, இரண்டாம் வாசல் திறந்து, மூன்றாம் வாசலும் திறக்க வேண்டும்; நீ நடந்து போகும்போது வாசல் வாசலாகத் திறக்க வேண்டும். காவலாளர்களெல்லாம் தொப்தொப்பென்று விழ வேண்டும். அதுதான் தேவனுடைய சித்தம் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?

யாக்கோபை ஏரோது கொலை செய்தான். அது யாருடைய சித்தம்? யாக்கோபைக் கொலைசெய்தது யூதர்களுக்குப் பிரியமாயிருந்தது என்று கண்டு, பேதுருவையும் கொலை செய்யலாம் என்ற நோக்கத்தோடு அவன் பேதுருவையும் சிறைச்சாலையில் அடைக்கிறான்.

ஆகவே, இதுபோன்ற குழந்தைத்தனமான எண்ணங்களுக்கு நாம் இரையாகக் கூடாது. இப்படிப்பட்ட எண்ணங்களுக்கு நாம் இடம் கொடுத்தால் என்ன நடக்கும்? “ஏரோது யாக்கோபைக் கொலை செய்தான். பேதுருவையும் சிறைச்சாலையில் வைத்துவிட்டான். இப்போது நாம் ஜெபம் பண்ண வேண்டாம். ஏனென்றால், அவன் எப்படியும்; இவரையும் கொல்லதான் போகிறான்,” என்ற அற்றத்திற்கும் போகக் கூடாது.

எல்லா நிலையிலும் தேவனுடைய மக்கள் அவரை நோக்கிக் கதற வேண்டும் என்று அவர் எதிர்பார்க்கிறார். ஆனால், நாம் கதறினபிறகும் யாக்கோபை தேவன் ஏரோதின் வாளுக்கு இறையாக்குகிறார் என்றால் தேவன் தோற்றுவிட்டார் என்றெல்லாம் பொருளல்ல. தேவனே வாக்குறுதி அளித்ததாக இருந்தாலும் போராட்டம் உண்டு. இதை உங்கள் இருதயத்தின் ஆழத்திலே எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.

அதனால், ஒரு போர் வந்தவுடனே விலகிவிடக் கூடாது. “நான் இந்தக் கல்லூரியில் சோ;ந்திருக்கவே கூடாது; இந்தப் பாடத்தை எடுத்திருக்கவே கூடாது; இந்த வேலையில் சேர்ந்திருக்கக் கூடாது; இந்தப் பெண்ணை அல்லது பையனை நான் திருமணம் செய்திருக்கவே கூடாது,” என்று கையை விரித்து விடுகிறார்கள். கல்லூரியில் இரண்டு ஆண்டுகள் கழிந்தபிறகா கல்லூரியையும், பாடத்தையும்பற்றி யோசிப்பது? திருமணமாகி பத்து வருடங்கள் கழிந்தபிறகா பெண்ணையும், பையனையும்பற்றி யோசிப்பது? “Keep your eyes open before you marry a woman. Keep your eyes half shut after you married.” என்று ஒரு நல்ல பரிசுத்தவான் சொன்னார். இன்று தலைகீழாய்ப் பண்ணுவார்கள். They will keep it half shut before they marry. They will keep it fully open after they marry. இது தவறான procedure.

போர்முனையின் தாக்குதல்கள்

1. பாவங்கள் தேவனுடைய மக்களுக்குப் போராட்டம் உண்டு. போராட்டம் நகைச்சுவையானதல்ல. சில போர்முனைகளில் தாக்குதல் எவ்வளவு கொடிதாக இருக்குமென்றால் திரும்பிவிடலாம் என்று தோன்றும். ஒன்றிரண்டு தாக்குதல்களை மட்டும் நான் சொல்லிவிடுகிறேன்.

முதலாவது, பாவமே நமக்கு எதிராகப் போர் செய்யும். கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்ளாதவாறு தேவனுடைய மக்களுக்கு பாவம் போர் புரியும். “ஆத்துமாவுக்குவிரோமாய்ப் போர்செய்கிற மாம்ச இச்சைகள்” என்று பேதுரு எழுதுகிறார் (1 பேதுரு 2:11). நம்முடைய மாம்சத்தில் போர் புரிகிற இச்சைகள். “ஆகையால், மேகம்போன்ற இத்தனை திரளான சாட்சிகள் நம்மைச் சூழ்ந்துகொண்டிருக்க, பாரமான யாவற்றையும், நம்மைச் சுற்றி நெருங்கிநிற்கிற பாவத்தையும் தள்ளிவிட்டு, விசுவாசத்தைத் துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்” (எபி. 12:1, 2). இந்தப் போராட்டத்திலே நம்முடைய மாம்சத்திலே போர்புரிகிற பாவங்கள் கிறிஸ்துவை நாம் சுதந்தரித்துக்கொள்ளாதவாறு நம்மைத் தடுக்கும். அதிலே, என்னைப் பொறுத்தவரை, வெற்றி பெறுவதற்கு ஒரேவொரு வழி உண்டு. தேவன் போதுமான அளவுக்கு வளங்களைக் கொடுத்திருக்கிறார். எல்லாப் பாவத்திற்கும் விளைவு உண்டு என்கிற எண்ணம் தேவனுடைய பிள்ளைகளைக் கட்டுப்படுத்தும். எல்லாப் பாவத்திற்கும் விளைவு உண்டு. விளைவு இல்லாத பாவம் என்று ஒன்று இல்லை. இது உங்களை அச்சுறுத்தும். தேவன்தாம் பாவங்களை மன்னித்து விடுகிறாரே! இதற்கு விளைவு இருக்குமா? தேவன் பாவத்தை மன்னிக்கும்போது எல்லாவற்றையும் அழித்துவிடுவார் என்று சிலபேர் சொல்வார்கள். “மோசம்போகாதிருங்கள், தேவன் தம்மைப் பரியாசம் பண்ணவொட்டார். மனுஷன் எதை விதைக்கிறானோ அதையே அறுப்பான். தன் மாம்சத்திற்கென்று விதைக்கிறவன் மாம்சத்தினால் அழிவை அறுப்பான். ஆவிக்கென்று விதைக்கிறவன் ஆவியினாலே நித்திய ஜீவனை அறுப்பான்” (கலா. 6:7). தேவன்தாம் மன்னித்துவிடுகிறாரே! அவர் மன்னித்துவிடுவதோடு மட்டுமல்ல. தேவன் மறந்தும் விடுகிறார். ஆனால், எல்லாப் பாவத்திற்கும் விளைவு உண்டு.

2. மத அமைப்புமுறை இரண்டாவது, கிறிஸ்துவைச் சுதந்தரிக்காதவாறு உள்ள இன்னொரு தடையை ஒரு நிகழ்ச்சியின்மூலம் நான் விவரிக்கிறேன். ஒருநாள் ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து தம் நெருங்கிய நண்பர்களாகிய பேதுரு, யோவான், யாக்கோபு ஆகிய மூவரையும் அழைத்துக்கொண்டு மறுரூப மலைக்குப் போனார். அங்கு அவர் அவர்களுக்குமுன்பாக மறுரூபமானார். அப்போது மோசேயும், எலியாவும் இயேசுவோடு பேசுவதுபோல காட்சியளித்தார்கள். அதைப் பார்த்தவுடனே பேதுரு பரவசப்பட்டு, “ஆண்டவரே, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்குச் சித்தமானால், இங்கே உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம்,” (மத். 17:4) என்றார். இது தேவனுடைய மக்கள் செய்கிற ஒரு தவறு. அவர்களுடைய வாழ்க்கையிலே இயேசு கிறிஸ்துவுக்கு இடம் உண்டு. ஆனால், இயேசுகிறிஸ்துவோடுகூட எலியாவுக்கும் ஒரு கூடாரம், மோசேக்கும் ஒரு கூடாரம். அதாவது அவர்களுடைய மதத் தலைவர் என்று ஒருவர் இருப்பார். அது ஜான் வெஸ்லியாக இருக்கலாம் அல்லது மார்டின் லூத்தராக இருக்கலாம் அல்லது ஜான் நெல்சன் டார்பியாக இருக்கலாம். மானசிகமாக இயேசுவுக்குத்தான் முதல் கூடாரம். ஆனால் பக்கத்திலே மோசேக்கு ஒரு கூடாரம் உண்டு, எலியாவுக்கும் ஒரு கூடாரம் உண்டு. அந்த இரண்டு கூடாரமும் அவசியமில்லை என்றால் அவர்களால் அதைச் சகிக்க முடியாது. எங்கு மானசிகமாக மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமும் அல்லது அவர்களது மதத் தலைவர்களுக்கும் ஒரு கூடாரம் இருக்கிறதோ, அங்கு அவர்களால் கிறிஸ்துவை முற்றிலுமாகச் சுதந்தரித்துக்கொள்ள முடியாது. இயேசுகிறிஸ்துவுக்கு இடம் கொடுத்திருப்பதுபோல் தோன்றலாம். ஆனால், இயேசுகிறிஸ்துவோடுகூட அவர்கள் வாழ்க்கையில் வேறு சில கூடாரங்கள் இருக்கும். இன்னும் சொல்லப்போனால் அந்த கூடாரங்களோடு சேர்த்துத்தான் அவர்களால் இயேசுகிறிஸ்துவுக்கு ஒரு கூடாரத்தைப் பார்க்க முடியுமேதவிர, மற்ற கூடாரங்களையெல்லாம் கழற்றிவிட்டால், அகற்றிவிட்டால், அங்கு இயேசு கிறிஸ்துவினுடைய கூடாரம் இருக்காது. கிறிஸ்துவை முற்றுமுடிய ஆதாயம்பண்ணிக்கொள்வதற்கு மிகவும் கடுமையான, வன்மையான எதிரி இதுபோன்ற ஒரு மத அமைப்புமுறை.

3. பூமிக்குரியவர்கள் “இதோ, உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கிவிடப்படும்” (மத். 23:38). “இயேசு தேவாலயத்தைவிட்டுப் புறப்பட்டுப்போகையில், அவருடைய சீடர்கள் தேவாலயத்தின் கட்டடங்களை அவருக்குக் காண்பிக்க அவரிடத்தில் வந்தார்கள். இயேசு அவர்களை நோக்கி, இவைகளையெல்லாம் பார்க்கிறீர்களே. இவ்விடத்தில் ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடிக்கு எல்லாம் இடிக்கப்பட்டுப்போகும் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்” (மத். 24:1, 2). யூதர்கள் எருசலேமையும், எருசலேமிலுள்ள தேவாலயத்தையும் மிகப் பெரிதாய்க் கருதினார்கள். தேவன் அங்கு வாசம்பண்ணுகிறார் என்று அவர்கள் நினைத்தார்கள். ஆனால், ஆண்டவராகிய இயேசுவோ, “அது என்னுடைய வீடேயல்ல. அது உங்கள் வீடு,” என்று சொல்கிறார். மேலும், “உங்கள் வீடு உங்களுக்குப் பாழாக்கி விடப்படும்,” என்று சொல்கிறார். இதே கருத்தை லூக்காவின் நற்செய்தியிலும் வாசிக்கிறோம். அவருடைய சீடர்கள் அவரிடம், “இந்தத் தேவாலயம் எவ்வளவு அழகாக அலங்கரிக்கப்பட்டிருக்கிறது! இந்தக் கற்களைப் பாரும்! இந்தக் காணிக்கைகளைப் பாரும்! இந்த தேவாலயத்தைப் பாரும்! அந்த வண்ணநிற கண்ணாடிகளையெல்லாம் பாரும்! அந்த பாடகர் குழு பாடும்போது தேவதூதர்களே பாடுவதுபோல் இருக்கிறது! அந்த கிறிஸ்துமஸ் பாருங்கள்! அந்த உடையைப் பாருங்கள்! அந்த பலிபீடத்தைப் பாருங்கள்! எவ்வளவு solemn ஆக இருக்கிறது!” என்ற பொருளில் சொன்னார்கள். தேவன் இதையெல்லாம் பார்த்து மிகவும் நெகிழ்ந்துவிடுவார் என்று நினைக்கிறீர்களா? ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து, “ஒரு கல்லின்மேல் ஒரு கல்லிராதபடி எல்லாம் இடிக்கப்படும்,” என்று பதில் சொன்னார்.Christian architecture, Christian musicபற்றி ஒரு ரசனைகூட இவருக்கு இல்லையா? இந்தத் தேவாலயம் கட்டி எத்தனை நூற்றாண்டுகள் ஆகிவிட்டன தெரியுமா? This is called St.Paul’s Cathedral. இதன் கற்கள் எவ்வளவு அலங்கரிப்பாக இருக்கிறதென்று பாருங்கள்! இது சாதாரண Cathedral இல்லை. 600 வருட Cathedral. இது 800 வருடத்து composition. தேவன் இதைப் பார்த்து ஆச்சரியப்படுவார் என்று நினைக்கிறீர்களா? Do you think God is impressed in Cathedrals and choirs?

“அவர்களுடைய முடிவு அழிவு. அவர்களுடைய தேவன் வயிறு. அவர்களுடைய மகிமை அவர்களுடைய இலச்சையே. அவர்கள் பூமிக்கடுத்தவைகளைச் சிந்திக்கிறார்கள்” (பிலி. 3:19). அதற்கு முந்தின வசனத்திலே அப்போஸ்தலனாகிய பவுல், “ஏனெனில் அநேகர் வேறுவிதமாய் நடக்கிறார்கள். அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞரென்று உங்களுக்கு அநேகந்தரம் சொன்னேன். இப்பொழுது கண்ணீரோடும் சொல்லுகிறேன்” (பிலி. 3:18). கண்ணீரோடு சொல்கிறார். இந்த வசனத்தை நாம் புரிந்துகொள்வது மிகக் கடினம். தேவனுடைய மக்கள் சிலரைப்பற்றி அவர்கள் கிறிஸ்துவின் சிலுவைக்குப் பகைஞர் என்று அவர் சொல்கிறார். அவர்கள் இந்தப் பூமிக்குரியவைகளைச் சிந்திக்கிறார்கள்.

இந்தப் பூமியிலே ஒரு கட்டடத்தைக் கட்டி, நூறு அல்லது இருநூறு பேரைச் சம்பாதிக்கலாம். இவைகளெல்லாம் பெரிய சாதனை என்று மக்கள் நினைக்கிறார்கள். நான் இதைப்பற்றி மிகத் தெளிவாக இருக்கிறேன். புள்ளிவிவரப்படி நாம் நூறு பேராக, இருநூறு பேராக இருக்க வேண்டும் என்பதைப்பற்றி மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். இப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் வேண்டாம். தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் நாம் பயனுள்ளவர்களாக இருக்க வேண்டும் என்பதிலே நாம் மிகவும் குறியாக இருக்க வேண்டும். நாம் பயனுள்ளவர்களாக இருக்கிறோம் என்பதற்காக நம்மேல் உள்ள நன்றியையும், நட்பையும் காட்டுவதற்கு தேவனுடைய மக்கள் அடையாளங்களை வைத்திருக்கிறார்கள். ஒன்று ஞாயிற்றுக்கிழமைக் கூட்டங்களில் தவறாமல் கலந்துகொள்ளுதல். இன்னொன்று தசமபாகம். ஒருவன் ஒரு குறிப்பிட்ட குழுவைச் சேர்ந்தவன் என்பதற்கு இந்த இரண்டும் மிகவும் உறுதியான அடையாளங்கள். தேவனுடைய மக்களை இந்த இரண்டு அடிமைத்தனத்திலிருந்து நாம் விடுதலையாக்குவோம்.

பூமிக்குரிய ஏதோவொரு சாதனையை கிறிஸ்துவுக்குரியது என்று தவறாய்க் கருதியவர்களைச் “சிலுவைக்குப் பகைஞர் என்று முன்பு சொன்னதுபோல இப்போதும் கண்ணீரோடே சொல்கிறேன்,” என்று பவுல் சொல்கிறார்.

ஒன்றாவது, தேவனுடைய மக்கள் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும் என்பது தேவனுடைய இலக்கு. இந்த யுகத்தின் முடிவிலே தேவனுடைய இருதயத்தை இளைப்பாற்றுவது, மகிழ்ச்சியாக்குவது, இன்புறச்செய்வது, அவர் தம்முடைய மக்களிடையே பார்க்கின்ற, தன்னுடைய மக்கள் சுதந்தரித்துக்கொண்ட கிறிஸ்து.

இரண்டாவது, தேவனுடைய மக்கள் தங்களுடைய நடைமுறை வாழ்க்கையில், அனுபவ வாழ்க்கையில், ஒவ்வொரு நாளும் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்ள வேண்டும். எல்லா நிலையிலும், தேவையிலும், சூழ்நிலையிலும் நாம் கிறிஸ்துவால் வாழ்வதே கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்வது.

மூன்றாவது, நாம் அப்படி கிறிஸ்துவைச் சுதந்தரிக்கொள்வதற்கு எதிரியாகிய சாத்தான் ஒரு போரை நம்முடைய வாழ்க்கையிலே வைக்கிறான். அந்தப் போர் நம் முடைய மாம்சத்தில் இருக்கிற இச்சைகளின்மூலமாய் வரலாம் அல்லது மத அமைப்புமுறைகள் மூலமாய் வரலாம் அல்லது பூமிக்குரியவர்கள்மூலமாக வரலாம். ஆனால், கிறிஸ்துவை ஆதாயம்பண்ணுவது அல்லது கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்வது என்பது போரின்றி நடைபெறுவது இல்லை.

ஆகையால், அருமையான சகோதரர்களே, முடிவு மிகவும் மகிமையாக இருக்கும். அவர் தம்முடைய பரிசுத்தவான்களிடத்தில் மகிமைப்படுவதற்கு வருவார் (2 தெச. 1:11) என்று எழுதியிருக்கிறது. “Then He comes to be glorified in his saints”. ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து இந்த உலகிற்கு இரண்டாம் முறையாக வரும்போது அவர் மகிமைப்படுவார். யார்யாரெல்லாம் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக் கொள்கிறார்களோ, சுதந்தரித்துக்கொண்டார்களோ அவர்களில்தான் அவர் மகிமைப்படுகிறார். எந்த அளவுக்கு அவர்கள் கிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொண்டார்களோ அந்த அளவுக்குத்தான் ஆண்டவ ராகிய இயேசுகிறிஸ்து தம்முடைய வருகையிலே மகிமைப்படுகிறார். மகிமை என்றவுடனே நாம் படங்களிலே பார்ப்பதுபோல இயேசுகிறிஸ்துவின் படம் ஒன்று இருக்கும். அதற்குப்பின்னால் மேகங்கள் இருக்கும். தேவதூதர்கள் பெரிய கின்னரங்களும் கொட்டுகளும் வைத்து அடித்துக்கொண்டிருப்பார்கள் என்பதுபோன்ற மகிமையை நினைத்துக்கொள்ள வேண்டும். இன்றைக்கு நாம் நம்முடைய நடைமுறை வாழ்க்கையில், அனுபவ வாழ்க்கையில், கருத்தோடும் சிரத்தையோடும் எப்படி கிறிஸ்துவால் வாழ்கிறோமோ அந்த அளவுக்கு ஆண்டவராகிய இயேசுகிறிஸ்து வரும்போது அவர் தம்முடைய பரிசுத்தவான்களாகிய நம்மில் மகிமைப்படுவார். இந்தப் பூமியிலே நாம் பெறுகின்ற எல்லாத் திருப்தியையும் விட, எல்லா நிறைவையும்விட, அந்தத் திருப்தியும், அந்த நிறைவும் பெரிதாக இருக்கும்.

இதை நீங்கள் நம்புங்கள். இதைச் சொல்லும்போது நம்புவதற்கு உங்களுக்கு அரிதாக இருக்கும். ஒரு நல்ல சாப்பாடு, ஒரு நல்ல வேலை, நல்ல வாழ்க்கைத்துணை இவைகளெல்லாம் தருகிற இன்பத்தைப்போல ஆண்டவராகிய இயேசுகிறிஸ்துவைச் சுதந்தரித்துக்கொள்வது மகிழ்ச்சியையும் இன்பத்தையும் தருமா என்று கேள்வி கேட்கலாம். என்னுடைய பதில் இவைகளெல்லாம் தருகிற மகிழ்ச்சியையும், இன்பத்தையும், நிறைவையும்விட அது தருகிற மகிழ்ச்சியும், இன்பமும், நிறைவும் பெரிதாக இருக்கும், ஆமென்.