10 - எபிரெயர் 3:7-19 - எச்சரிக்கை #2 -அவிசுவாசம் (2)
இது பத்தாவது பாடம். இந்தப் பாடத்தில் எபிரெயர் 3:7-19வரையிலான வசனங்களைப் பார்க்கிறோம். இந்தப் நிருபத்தில் ஆசிரியர் யூதக் கிறிஸ்தவர்களுக்கு 5 எச்சரிக்கைகள் தருகிறார். இது இரண்டாவது எச்சரிக்கை. விசுவாசிகள் விசுவாசத்தில் நிலைத்திருக்க வேண்டும் என்று வலிறுயுத்தி, விசுவாசத்தில் நிலைத்திருக்க நான்கு காரியங்களைக் கவனத்தில் கொள்ளவேண்டும் என்று ஆசிரியர் கூறுகிறார். 1. விசுவாசத்தில் நிலைத்திருக்க தவிர்க்கவேண்டிய மிக மோசமான பாவம் - அவிசுவாசம் 2. விசுவாசத்தில் நிலைத்திருக்கப் பின்பற்றவேண்டிய ஆவிக்குரிய பயிற்சி - கூடுகை 3. விசுவாசத்தில் நிலைத்திருக்க உறுதியாய்ப பற்றிப்பிடிக்கவேண்டிய மாபெரும் சொத்து - இரட்சிப்பு 4. விசுவாசத்தில் நிலைத்திருக்கத் தனக்கானதாக மாற்றவேண்டிய கடந்தகாலக் கதை - இஸ்ரயேலர்களின் வரலாறு ஒன்பதாவது பாடத்தில் முதல் குறிப்பைப் பார்த்தோம். இந்தப் பாடத்தில் மீதமுள்ள மூன்று குறிப்புகளைப் பார்ப்போம்.