Preloader
சாட்சியின் கூடாரம்
4 Sep 2026 : என் பசியும், என் தாகமும் மேலும் வாசிக்க
31 Aug 2026 : அப்பிரயோஜனமான ஊழியன் மேலும் வாசிக்க
26 Aug 2026 : என்னை நடத்தியவர் யார்? நடத்துகிறவர் யார்? மேலும் வாசிக்க

காணொளி

27 - எபிரெயர் 8:8-13 - மேன்மையான புதிய உடன்படிக்கை  - 27 - Hebrews 8:8-13 - Superior New Covenant இது பாடம் 27.  கிறிஸ்து மேன்மையான பரம ஆசாரியராக, மேன்மையான பரம இல்லத்தில், மேன்மையான உடன்படிக்கையின் மத்தியஸ்தராகப் பணிவிடை செய்கிறார் என்று எபிரெயர் 8:1-7இல் ஆசிரியர் வாதிடுகிறார். இந்தப் பாடத்தில் புதிய உடன்படிக்கையின் முக்கியமான வாக்குறுதிகளைப் பார்க்கிறோம். 1. பழைய உடன்படிக்கையில் தேவனுடைய சட்டங்கள் வெளியே கற்பலகைகளில் எழுதப்பட்டிருந்தன. புதிய உடன்படிக்கையில் தேவ மக்களின் இருதயங்களில் பாதிக்கப்படும், பொறிக்கப்படும். 2. பழைய உடன்படிக்கையில் மக்கள் தேவனைப் புறம்பே கற்றறிந்தார்கள், பெற்றறிந்தார்கள். புதிய உடன்படிக்கையில் தேவ மக்கள் தேவனை உள்ளான வழியில் உற்றறிகிறார்கள். 3. பழைய உடன்படிக்கையில் மக்களின் பாவங்கள் நிரந்தரமாக நீக்கப்படவில்லை. புதிய உடன்படிக்கையில் பாவங்கள் துடைக்கப்படுகின்றன.