Preloader
சாட்சியின் கூடாரம்
4 Sep 2026 : என் பசியும், என் தாகமும் மேலும் வாசிக்க
31 Aug 2026 : அப்பிரயோஜனமான ஊழியன் மேலும் வாசிக்க
26 Aug 2026 : என்னை நடத்தியவர் யார்? நடத்துகிறவர் யார்? மேலும் வாசிக்க

காணொளி

கிறிஸ்துவே தேவனுடைய நித்திய நோக்கத்தின் மையம். அவரே நம் ஜீவன்; அவரே நம் சாட்சி; அவரே நம் செய்தி; அவரே நம் மகிமை. தேவனுடைய வார்த்தையின் வெளிச்சத்தில் கிறிஸ்துவை அறிந்து, அவருடைய தெய்வீக ஜீவனில் வளர்ந்து, அவருடைய சாயலை வெளிப்படுத்தும் ஒரு மக்களை ஆயத்தப்படுத்துவதே ஜீவ-கிறிஸ்து ஐக்கியத்தின் இருதயப் பாரமும், பார்வையுமாகும். 

தேவனுடைய வார்த்தை ஒவ்வொரு தலைமுறைக்கும் அணையாத விளக்கு; கிறிஸ்து அதன் மையம், ஜீவன், மகிமை. அந்த வார்த்தையின் செல்வத்தை ஒன்றாக ஆராயும் இந்தப் பயணத்தில் உங்களையும் அன்புடன் வரவேற்கிறோம். 

இந்தச் செய்தியில், வேதாகமம் கூறும் அழைப்புக்கும் (Calling) தொழிலுக்கும் (Occupation) இடையேயுள்ள வித்தியாசம் விளக்கப்படுகிறது. தேவன் ஒவ்வொரு விசுவாசியையும் எந்த நோக்கத்திற்காக அழைத்தார்? நம் அன்றாட வேலை, தொழில், ஊழியம் ஆகியவை அந்த அழைப்போடு எவ்வாறு தொடர்புடையவை? தேவனுடைய நித்திய நோக்கத்தின் வெளிச்சத்தில் இந்த முக்கியமான கேள்விகளை இந்தச் செய்தி ஆராய்கிறது.

உரை

அப்போஸ்தலர் நடபடிகள் 20ஆம் அதிகாரம், 24ஆம் வசனத்தை நாம் வாசிப்போம்.

“ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.”

நாம் ஜெபிப்போம்.

எங்கள் ஆண்டவராகிய இயேசுவே, ஒன்றைக்குறித்தும் கவலைப்படாமலும், நீர் எங்களுக்குக் கொடுத்த ஓட்டம் ஒன்றையே நாங்கள் கருத்தில் கொண்டு ஓட, உம்முடைய கரங்களிலிருந்து நாங்கள் பெற்ற பணிவிடையை மட்டுமே நாங்கள் செய்து முடிக்க, உம்முடைய பரிசுத்த ஆவியினால் எங்களுக்குப் போதிப்பீராக. எங்களுக்கு வலுவூட்டுவீராக. எங்களோடு இடைப்படுவீராக. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேட்கிறோம், பிதாவே.

வாழ்க்கையில் நடைபெறுகின்ற எல்லா complex ஆன சூழ்நிலைகளுக்கும் எப்போதும் நம்மால் விளக்கம் கொடுக்க முடியாது. சில சமயங்களில், “கர்த்தாவே, நீரே அறிவீர் அல்லது கர்த்தாவே உமக்கு மட்டுமே தெரியும்,” என்று உலர்ந்த எலும்புகள் நிறைந்த பள்ளத்தாக்கிலே எசேக்கியேல் பதிலளித்தது போலத்தான் நாமும் பதிலளிக்க வேண்டும் பதிலளிக்க முடியும். “கர்த்தாவே நீரே அறிவீர்.” அதற்கு மிஞ்சி நாம் பதிலளிக்க முயல்வது பல வேளைகளிலே அறிவீனமாக இருக்கும். வழி தெரியாமல் இருளிலே நடக்கும்போது நாம் அவருடைய நாமத்தைச் சார்ந்துகொள்வதைத்தவிர வேறு எதையும் தேவனுடைய வார்த்தை நமக்கு போதிக்கவில்லை.

உங்களுக்கு எது முக்கியம்? தொழிலா? அழைப்பா? அழைப்பு. தொழில் என்றால் என்ன? அழைப்பு என்றால் என்ன? தொழிலுக்கும் அழைப்பிற்கும் உள்ள உறவு என்ன? வேறுபாடு என்ன? இவைகளை எல்லாம் விளக்குவதற்கு முந்தியே, அழைப்பு என்றால் என்ன என்பதைப்பற்றிய ஓர் அறிவு தேவனுடைய மக்களாகிய நமக்கு இருக்கத்தான் செய்கிறது. அதற்கு நல்ல எடுத்துக்காட்டு அப்போஸ்தலனாகிய பவுல் எபேசு சபையிலிருந்து விடைபெறும்போது அவர்களோடு பேசுகின்ற இந்தப் பேச்சு.

“பல துன்பங்களை நான் சந்தித்திருக்கிறேன். இன்னும் பல துன்பங்கள் எனக்காக வைக்கப்பட்டிருக்கின்றன என்பதையும் நான் அறிவேன். ஆனால் அவைகளைக்குறித்து நான் கவலைப்படவில்லை. அவைகள் ஒன்றையும் நான் பொருட்படுத்தவும் இல்லை. என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடு முடிக்க நான் விரும்புகிறேன். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் நான் ஒரு பணியைப் பெற்றுக்கொண்டேன். அவருடைய கிருபையின் நற்செய்தியை அறிவிப்பதுதான் அந்தப் பணி. அந்தப் பணியை முடிக்க, நிறைவேற்ற, நான் விரும்புகிறேன். என் ஓட்டத்தை முடிக்கவும், கர்த்தராகிய இயேசுவினிடத்திலிருந்து நான் பெற்ற அந்த ஊழியத்தை, பணியை, நான் நிறைவேற்றவும் விரும்புகிறேன்,” என்று அவர் கூறுகிறார்.

ஆகையால்தான், 2 தீமோத்தேயு 4:6–7ஆம் வசனங்களுக்கு வரும்போது, “நான் இப்பொழுதே பானபலியாக வார்க்கப்பட்டுப்போகிறேன். நான் தேகத்தை விட்டுப் பிரியும் காலம் வந்தது. நல்ல போராட்டத்தைப் போராடினேன். ஓட்டத்தை முடித்தேன். விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்,” என்று கூறுகிறார்.

இந்த வசனம் நமக்கு மிகவும் பரிச்சயமான வசனம். Familiarity breeds contempt மிகவும் பரிச்சயமான வசனம் ஆகையால் அதை நாம் புரிந்து கொண்டது போல் நினைக்கின்றோம். நல்ல போராட்டத்தை போராடினேன் என்றவுடன் பவுல் ஒரு நல்ல விளையாட்டை விளையாடி முடித்தேன் என்று சொல்வது போல் உங்களுக்குத் தோன்றுகிறதா? தோன்றவில்லை. ஆனால் அந்த அர்த்தத்தில்தான் அவர் சொல்கிறார். நல்ல game-ஐ விளையாடி முடித்தேன். என் ஓட்டத்தை எப்படி முடித்தேன் நான்? சந்தோஷத்தோடு முடித்தேன்.

“துன்பங்கள், துயரங்கள், தாங்கமுடியாத இழப்புகள், ஆற்றமுடியாத துயரங்கள் என்னுடைய வாழ்க்கையிலே உண்டு. ஆனால் என்னுடைய ஓட்டத்தைச் சந்தோஷமாய் முடிப்பேன்.” எப்படி ஒரு match அல்லது ஒரு game முடியும் போது சந்தோஷமாய் முடிகிறதோ, அதேபோன்று சந்தோஷத்தோடு என்னுடைய ஓட்டத்தை நான் முடிப்பேன்.

“விசுவாசத்தைக் காத்துக்கொண்டேன்.” என்னைப் பொறுத்தவரை, கர்த்தர் என்மேல் வைத்த அந்த விசுவாசத்தை நான் காத்துக்கொண்டேன் என்பதுதான் இங்கு பொருளாய் இருக்குமோ என்று நான் கருதுகிறேன். கர்த்தர் என்மேல் ஒரு நம்பிக்கையும், ஒரு விசுவாசமும் வைத்திருந்தார். எனக்குக் கொடுக்கப்பட்ட ஓட்டத்தையும், பணியையும் நான் செய்து முடிப்பேன் என்று. கர்த்தர் என்மேல் வைத்த அந்த விசுவாசத்தை நான் காத்துக்கொண்டேன்.

கிறிஸ்தவர்களுக்கு மரணம் என்பது ஒன்றும் விந்தையானது அல்ல. முதல் நூற்றாண்டுகளிலே அரசாங்கத்தினுடைய சட்டப்பூர்வமான சித்திரவதையினால் தேவனுடைய மக்கள் பலர் ஏறக்குறைய கொன்று குவிக்கப்பட்டபோது, விளையாட்டுப் பொருள்களாக மாற்றப்பட்டபோது, ஒரு புறவினத்தான் கிறிஸ்தவர்களைப்பற்றி எழுதுகின்ற வாக்கியம்: “How beautifully these Christians die.” ஒரு கிறிஸ்தவனால் மட்டும்தான் அழகாக மரிக்க முடியும். மரணம் அவனை முகத்திற்கு முகம் சந்திக்கும்போது, “என் ஓட்டத்தைச் சந்தோஷமாய் முடித்தேன். என் கர்த்தர் என்மேல் வைத்த விசுவாசத்தை நான் காத்துக்கொண்டேன்,” என்று சொல்ல முடியும்.  போராட்டம் நிறைந்த விளையாட்டு அது.

தேவனுடைய மக்களாகிய நாம் இந்த வாழ்க்கையை தேவனுடைய கைகளிலிருந்து ஒரு கொடையாகப் பெற்றிருக்கிறோம். நாம் ஒரு நோக்கத்திற்காக இந்த உலகத்திற்கு அனுப்பப்பட்டவர்கள் என்கின்ற உணர்வு அரிதாகவே நம்முடைய உள்ளங்களிலே தோன்றுகிறது. நாம் ஒரு நோக்கத்திற்காக அனுப்பப்பட்டவர்கள். "அனுப்பப்பட்டவர்கள்" என்ற உணர்வு நமக்கு பொதுவாகத் தோன்றுவதுகூட இல்லை. எல்லா மக்களும் இந்த உலகத்திலே வாழ்வதுபோல, உழல்வதுபோலதான் நாமும் வாழ்கிறோம்.

தரிசனம், அனுப்பப்பட்ட பணி, அழைப்பு

இந்த வார்த்தைகள் எல்லாம் மிகவும் அருமையான வார்த்தைகள். Vision, Mission, Calling

 — இந்த வார்த்தைகள் எல்லாம் மிகவும் அருமையான வார்த்தைகள். தரிசனம் என்பது  ஏதோ கண்களால் பார்க்கிற அல்லது ஒரு பரம்புதிரான மண்டலத்தில் நாம் பார்க்கின்ற ஒரு பரவச அனுபவம் என்று நீங்கள் தவறாக நினைத்து விட வேண்டாம். தேவனுடைய பெரிய சித்திரத்தைப்பற்றி, ஆதிமுதல் அந்தம்வரை தேவன் எந்த இலக்கை நோக்கி நகருகிறார், என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைப்பற்றிய ஒரு பெரிய, பரவலான புரிந்துகொள்ளுதலைத்தான் நாம் தரிசனம் என்று கூறுகிறோம்.

ஆதியாகமம் 15ஆம் அதிகாரம் 5–6ஆம் வசனங்களிலே தேவன் ஆபிரகாமைப்பற்றி தான் வைத்திருக்கின்ற தரிசனத்தைக் கூறும்போது, அவனுக்கு ஓர் உணர்வைக் கொடுப்பதற்காக, "நீ வானத்தை அண்ணாந்து பார். நட்சத்திரங்களை எண்ண உன்னாலே கூடுமானால், அவைகளை எண்ணு," என்று சொல்லி, பின்பு அவனை நோக்கி, "உன் சந்ததி இவ்வண்ணமாய் இருக்கும்" என்றார். அவன் கர்த்தரை விசுவாசித்தான். அதை அவர் அவனுக்கு நீதியாக எண்ணினார்.

புதிய ஏற்பாட்டின் அல்லது இரட்சிப்பின் நற்செய்தி அடிப்படையான, ஆதார வசனம் எங்கிருக்கிறது தெரியுமா? எங்கிருக்கிறது? ஆதியாகமம் 15 6 இல்.  “அவன் கர்த்தரை விசுவாசித்தான்.”

இன்றைக்கு இது ஓர் உபதேசம் நிறைந்த செய்தி அல்ல. இது நடைமுறைக்குரிய ஒரு செய்தி. ஆகையால் நான் வேதத்திலிருந்து உபதேசங்களைப் பேசுகிறேன் என்பதைவிட வேதத்திலிருந்து நான் கற்றுக் கொண்டதன் அடிப்படையிலே அழைப்பு, தொழில் ஆகிய காரியங்களைக்குறித்து உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். நான் கற்றுக் கொண்டது, நான் புரிந்துகொண்டது அவைகளைத்தான் நான் பேசுகின்றேன். நான் புரிந்துகொண்டதில் சில பிழைகள் இருக்குமா? இருக்க வாய்ப்புள்ளது. தேவனுடைய மக்கள் நீங்கள் எல்லாருங்கூட அழைப்பையும், தொழிலையும்பற்றி தேவனுடைய வார்த்தையிலிருந்து கற்றுக்கொண்டும், புரிந்துகொண்டும், உங்கள் அனுபவத்திலிருந்து அதை சரிபார்த்துக்கொண்டும் இருக்கின்றீர்கள். ஆகவே ஒருவேளை இதில் சில பிழைகள் இருக்கலாம். ஆனால் பிழைகள் இருக்கிறது என்று நீங்கள் கருதினால் எனக்கு நீங்கள் தெரியப்படுத்த வேண்டும். நான் அதைச் சரிசெய்து கொள்வேன். இது அனுபவத்திற்குரிய ஒன்று. அழைப்பு என்பதைப் பற்றி என்னுடைய புரிந்துகொள்ளுதலை நான் பகிர்ந்துகொள்கிறேன். தொழில் என்பதைப்பற்றி என்னுடைய புரிந்துகொள்ளுதலை நான் பகிர்ந்துகொள்கிறேன்.

தரிசனம் என்பது ஒரு சாவித்துவாரத்தின் வழியாக ஒரு பரந்து விரிந்த நிலப்பரப்பைப் பார்ப்பதல்ல. மாறாக, உயரப் பறக்கின்ற ஒரு கழுகைப்போல, தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார், கர்த்தராகிய இயேசு கிறிஸ்து இந்த உலகத்திற்கு வந்ததுமுதல் தேவன் இந்த உலகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறார், நாம் வாழ்கின்ற இந்த காலகட்டத்திலே தேவன் என்ன செய்து கொண்டிருக்கிறார், என்பதைக் காண்பதுதான் தரிசனம்.

ஒரு சாவித்துவாரத்தின் வழியாகப் பார்த்தால், “எனக்குச் சில துன்பங்கள் உள்ளன. இந்தத் துன்பங்களைத் தீர்ப்பதற்காகத் தேவன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார் அல்லது செயல்பட வேண்டும்”என்பதுதான் என்னுடைய எண்ணமாக இருக்கும். இப்படி நான் சொல்லும்போது, மனிதர்களுடைய அல்லது தேவ மக்களுடைய துன்பங்களை நான் அற்பமாகக் கருதவில்லை. உங்களுடைய துன்பங்கள் உண்மையிலேயே உங்களை வருத்துகின்ற துன்பங்கள்தான். ஆனால், "என்னுடைய துன்பங்கள்" என்ற சாவித்துவாரத்தின் வழியாகவே நான் தேவனுடைய அசைவையும், தேவனுடைய செயல்பாட்டையும் பார்த்துக்கொண்டிருப்பேன் என்றால், உண்மையாகவே தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதை நான் தவறவிட்டு விடுவேன்.

நான் என்னுடைய துன்பங்கள், என்னுடைய பாடுகள் இவைகளை விட்டு உயரப் பறந்து, ஒரு கழுகு பார்ப்பதுபோல, தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைப் பார்க்க வேண்டும்.

உபாகமம் 34:1–4இல் நாம் வாசிக்கலாம். “பின்பு மோசே மோவாபின் சமனான வெளிகளிலிருந்து எரிகோவுக்கு எதிரான நேபோ மலையிலிருக்கும் பிஸ்காவின் கொடுமுடியில் ஏறினான்; அப்பொழுது கர்த்தர் அவனுக்கு, தாண்மட்டுமுள்ள கீலேயாத் தேசம் அனைத்தையும், நப்தலி தேசம் அனைத்தையும், எப்பிராயீம் மனாசே என்பவர்களின் தேசத்தையும், கடைசிச் சமுத்திரம்வரைக்குமுள்ள யூதா தேசம் அனைத்தையும், தென்புறத்தையும், சோவார்வரைக்குமுள்ள பேரீச்சமரங்களின் பட்டணம் என்னும் ஊர்முதற்கொண்டு எரிகோவின் பள்ளத்தாக்காகிய சமனான பூமியையும் காண்பித்தார். அப்பொழுது கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.”

தரிசனத்திற்கு இது ஒரு நல்ல எடுத்துக்காட்டு. பிஸ்காவின் சிகரத்திற்கு தேவன் மோசேயைக் கொண்டுபோய், "உங்களுக்குக் கொடுப்பதற்காக நான் திட்டமிட்டு வைத்திருக்கின்ற தேசம் இதுதான்," என்று காண்பிக்கிறார். இப்போதெல்லாம் திருமணக் கூடங்களிலே drone camera வைத்து முன்னும் பின்னும் இடமும் வலமும் மேலும் கீழுமாக அவர்கள் காட்சிகளைப் பதிவு செய்வதுபோல தேவன் அவனுக்கு ஒரு drone-இல் இருந்து ஒரு கழுகின் பார்வையைக் கொடுப்பது போல இதுதான் அந்த நல்ல தேசம் என்று காண்பிக்கின்றார்.

மோசேயுடைய தனிப்பட்ட துயரம் இங்கு இருக்கிறது. ஆனாலும், கர்த்தர் அவனை நோக்கி: நான் உங்கள் சந்ததிக்குக் கொடுப்பேன் என்று ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் ஆணையிட்ட தேசம் இதுதான், இதை உன் கண் காணும்படி செய்தேன்; ஆனாலும் அவ்விடத்திற்குக் கடந்துபோவதில்லை என்றார்.” ஒரேவொரு தரிசனத்திற்காக மோசே தன்னுடைய வாழ்க்கையை எல்லாம், நம்முடைய வார்த்தைகளில் சொல்வதானால், விற்றுப்போட்டான். இந்த ஒன்று தவிர அவனுடைய வாழ்க்கையில் வேறு எந்த இலக்கும் இல்லை. அந்த இலக்கு எட்டும் தருவாயில் தேவன் சொல்வது, "நீ அந்த இடத்திற்கு போவதில்லை." நீங்கள் இதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்

ஆனால் மோசே அந்தத் தரிசனத்தைப் பார்த்து, "நான் என்னுடைய தலைமுறையில் அதைச் சுதந்தரிக்கவில்லை. ஆனால் தேவனுடைய மக்கள் அதைச் சுதந்தரிப்பார்கள்," என்பதை உணர்ந்தான். ஆகவே, தேவன் என்ன செய்துகொண்டிருக்கிறார் என்பதைப் பார்ப்பதுதான் முக்கியம்.

நாம் வாழ்கின்ற இந்தக் காலகட்டத்திலே, நான் எதிர்மறையாகக் கடுமையான விமர்சனங்களை வைக்க விரும்புவேன். தேவனுடைய மக்களுடைய துன்பங்களையும், துயரங்களையும் பயன்படுத்திக்கொண்டு, அவர்களுக்கு ஒரு ஆறுதலையும், தேறுதலையும், தீர்வையும், விடுதலையையும் தருவதாக விளம்பரம் செய்து, தேவனுடைய இந்தப் பெரிய தரிசனத்தை அவர்கள் தவறவிடுவதற்கு வாய்ப்புள்ளதா? வாய்ப்புள்ளது.

கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே செயல்படுகின்ற பல தலைவர்கள், தேவனுடைய மக்கள் தேவனுடைய தரிசனத்தைத்  தவறவிடுவதற்கு நடத்துகின்றார்கள். இதைத்தான் நான் கடுமையான விமர்சனம் என்று சொல்கிறேன். ஏன் கடுமையானது? ஏனென்றால், இது உன்னை யோக்கியன் போலவும் மற்றவர்களை அயோக்கியர்கள் போலவும் சித்திரிக்கிறது. நான் இப்படிச் சொல்ல விரும்பவில்லை. “You are holier than thou art”  என்கின்ற ஒரு குற்றச்சாட்டை நம்முன் வைக்க நேர்ந்தாலும் இந்தக் கொடிய நிலையை நம்மால் சுட்டிக்காட்டாமல் கடந்துபோக முடியவில்லை.

நகைச்சுவையான வார்த்தைகளில் நான் சொல்வேன். இன்றைக்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏறக்குறைய Aladdin's magic lamp-க்கு சமானமாக சுருக்கப்பட்டுவிட்டார். எப்போதெல்லாம் நாம் அந்த அற்புத விளக்கைத் தொடுகின்றோமோ, அப்போதெல்லாம் அந்த பூதம் எழுந்து நின்று, "பக்தா, உனக்கு என்ன வேண்டும்?" என்று கேட்க வேண்டும். இது கொஞ்சம் மிகைப்படுத்தலாய்த் தோன்றினாலும், இது ஏறக்குறைய இன்றைய தேவமக்களை நடத்துகின்ற நிலைக்குச் சமானம் என்று உங்களால் புரிந்துகொள்ள முடிகிறதா?

இதற்கு அர்த்தம், தேவன் நம்முடைய கவலைகளையும், துக்கங்களையும், துயரங்களையும், பிரச்சினைகளையும்பற்றி அக்கறையற்றவர் என்பதல்ல. நாம் இன்னும் கொஞ்ச நேரத்தில் அதற்கு வரப்போகின்றோம். ஆனால் அவரை Aladdin's magic lamp-க்கு சமானமாக ஒருநாளும் சுருக்க முடியாது.

சுருக்க மனிதர்கள் முயலும்போது, அங்கு இயேசு கிறிஸ்து இருக்க மாட்டார். இயேசு கிறிஸ்துவைப்போன்ற ஒரு கற்பனையை அவர்கள் பற்றிப் பிடித்துக்கொண்டிருப்பார்கள். எப்போதெல்லாம் இயேசு கிறிஸ்துவை மனிதர்கள் ஒரு விக்கிரகத்திற்குச் சமானமாக சுருக்க முயல்கிறார்களோ, அந்த விக்கிரகத்திற்கு ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய அங்கீகாரமோ, அனுமதியோ, அபிஷேகமோ, ஆசீர்வாதமோ, பிரசன்னமோ அங்கு இருக்கப்போவதில்லை.

தரிசனத்தை ஒட்டி “அனுப்பின பணி” என்று ஒன்று உண்டு. நான் சொன்னதுபோல, நாம் எல்லாரும் இந்தப் பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள். இந்தப் பூமியிலே நம்முடைய வாழ்க்கை, மோசே 90ஆம் சங்கீதத்திலே சொல்வதுபோல, 70 வருடம்; பலத்தின் மிகுதியினால் 80 வருடம். “அதெல்லாம் வனாந்திரத்திலே அவர்கள் கர்த்தருக்கு கீழ்ப்படியாததினால் கொடுத்தது. மாறாக 120 வருடம் மனிதர்கள் வாழ முடியும். வாழ வேண்டும்,” என்று நம் இறையியலாளர்கள் கூறுகிறார்கள். “சாகாமலேயே கர்த்தருடைய வருகைவரை மனிதர்கள் வாழ வேண்டும்,” என்று சொல்கின்ற பொய்யர்களும் வேதப்புரட்டர்களும் இருக்கின்றார்கள். தேவன் தம்முடைய மக்களுக்கு பூரணமான ஆயுளை வைத்திருக்கிறார். கோதுமையானது அம்பாரத்திலே சேர்க்கப்படுவதுபோல தேவனுடைய மக்கள் ஏற்ற காலத்தில் தங்கள் பிதாக்களோடு சேர்க்கப்படுகிறார்கள்.

ஆனாலும் நாம் அனுப்பப்பட்டவர்கள்தான். தேவனுக்கு ஒரு தரிசனம் இருக்கின்றது. நாம் அனுப்பப்பட்டவர்கள். ஆகவே, தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் தேவன் ஓர் அழைப்பைக் கொடுக்கின்றார். பவுலுக்கு ஓர் அழைப்பைக் கொடுத்ததுபோல, தேவனுடைய மக்கள் எல்லாருக்கும் தேவன் ஓர் அழைப்பைக் கொடுக்கின்றார். அவருடைய தரிசனத்திற்கும் அனுப்பின பணிக்கும் ஏற்றவாறு, இங்குள்ள ஒவ்வொருவரையும் தேவன், தம்முடைய தரிசனத்தில் ஒரு குறிப்பிட்ட பங்கு ஆற்றுவதற்காக, ஒரு குறிப்பிட்ட வேலையைச் செய்துமுடிப்பதற்காக அழைத்திருக்கின்றார்.

ஆதியாகமம் 12ஆம் அதிகாரம் 1–3ஆம் வசனங்களில் கர்த்தர் கர்த்தர் ஆபிராமை நோக்கி, “நீ உன் தேசத்தையும், உன் இனத்தையும், உன் தகப்பனுடைய வீட்டையும் விட்டுப் புறப்பட்டு, நான் உனக்குக் காண்பிக்கும் தேசத்துக்குப் போ. நான் உன்னைப் பெரிய ஜாதியாக்கி, உன்னை ஆசீர்வதித்து, உன் பேரைப் பெருமைப்படுத்துவேன்; நீ ஆசீர்வாதமாய் இருப்பாய். உன்னை ஆசீர்வதிக்கிறவர்களை ஆசீர்வதிப்பேன், உன்னைச் சபிக்கிறவனைச் சபிப்பேன்; பூமியிலுள்ள வம்சங்களெல்லாம் உனக்குள் ஆசீர்வதிக்கப்படும் என்றார்.”

இது தேவன் ஆபிரகாமுக்குக் கொடுக்கின்ற அழைப்பு. ஆதியாகமம் 12ஆம் அதிகாரம் வேதத்தின் ஒரு திருப்புமுனை என்றுகூடச் சொல்லலாம். "நீ செய்ய வேண்டியது இதுதான். இந்தப் பூமியை நீ சுதந்தரித்துக்கொள்வாய்." ஓரிடத்தில் தேவன் சொல்லுகிறார்: "தேசத்தின் நீளமும் அகலமும் எம்மட்டும் அம்மட்டும் நடந்து திரி. உன்னுடைய கால்கள் மிதிக்கின்ற தேசத்தை எல்லாம் நான் உனக்குத் தருவேன்" என்று. விக்கிரக ஆராதனைக் கூட்டத்திலிருந்து ஆபிரகாமைப் பிரித்தெடுத்து, அவனுடைய எல்லா influence-இலிருந்தும் அவனை வெளியே கொண்டுவந்து, தேவகுணமுள்ள சந்ததியால் தேசத்தை நிரப்பவேண்டும் என்ற நோக்கத்தோடு தேவன் ஆபிரகாமை அழைக்கின்றார்.

தேவன் மனிதனை உண்டாக்கியபோது, ஏதேனில் ஆதாமையும் ஏவாளையும் வைத்தபோது, அவர்களுக்கு ஓர் அழைப்பைக் கொடுத்தார். அந்த அழைப்பு என்ன? "இந்த விலங்குகளுக்கெல்லாம் நீ பேரிடு. இந்தத் தாவரங்களுக்கெல்லாம் நீ பேரிடு. இந்த நிலத்தை நீ பண்படுத்து." அது அவனுக்குக் கொடுக்கப்பட்ட பொறுப்பாளுகை — stewardship. "நீ பலுகு (Be fruitful). பெருகு (Multiply)." இரண்டு பேர் இந்த உலகத்தை, எல்லா விலங்குகளுக்கும் தாவரங்களுக்கும் பேரிட்டு, அவைகளை ஆளவும், இந்த நிலத்தைப் பண்படுத்தவும் முடியாது. நிலம் பெரிது. ஆகவே நீ பலுகிப் பெருக வேண்டும்.

நான் ஒரே ஆள் மட்டும் ஒரு வேலையைச் செய்தால் அதில் பிரச்சினை வராது. என்றைக்கு ஒரு வேலையைச் செய்ய இரண்டு பேரைப் போடுகிறார்களோ, அன்றைக்கு அதில் பிரச்சினை வரும். இதுதான் ஐக்கியத்தின் ஆணிவேர். “brother எனக்குத் தனியா வேலை கொடுங்க நான் செய்து தரேன். யாரோடும் என்னைச் சேர்த்துப் போடாதீர்கள். அல்லது company-இல் “தனியா ஒரு module கொடு. நான் செய்து தருகிறேன். இரண்டு பேரோடு மூன்று பேரோடு சேர்த்துப் போடாதே.”

அது பகிர்ந்துறவாடல் — fellowship. உறவாடல் என்பது மட்டுமல்ல; பகிர்ந்துறவாடல். எதைப் பகிர்ந்துகொள்கிறோம்? இந்த நிலத்தை நாம் பகிர்ந்துகொள்கிறோம். பகிர்ந்து இந்த நிலத்திலே நாம் வேலை செய்ய வேண்டியிருப்பதால் அங்கு பகிர்ந்துறவாடல் வருகின்றது.

"இந்த நிலத்தை நீ காத்துக்கொள். எல்லா உயிரினங்களையும் இந்த உலகத்தையும் நீ ஆண்டுகொள்" என்பது அரசாண்மை. இது ஏதேனில் ஆதாமுக்கு தேவன் கொடுத்த அழைப்பு. அவன் நிலத்தைப் பண்படுத்த வேண்டும். உயிரினங்களுக்குப் பேரிட வேண்டும். இது ஏதேனில் தேவன் ஆதாமுக்குக் கொடுத்த அழைப்பு. அவன் நிலத்தைப் பண்படுத்த வேண்டும். உயிரினங்களுக்குப் பேரிட வேண்டும் என்றால் ஆளுகை செய்ய வேண்டும். ஆளுகை என்பது ஏறக்குறைய ஒரு மேலாளுகை management இருக்கின்றது. ஒரு பகைவன் உண்டு. ஆகவே நீ இதைக் காத்துக்கொள்ள வேண்டும்.

ஏதேனிலே ஆதாமுடைய அழைப்பு அவனுடைய தொழிலாகவும் இருந்தது. இன்னும் தொழில் என்றால் என்னவென்று நான் சொல்லவில்லை. அழைப்புக்கும் தொழிலுக்கும் ஏதேனிலே எந்த வேறுபாடும் இல்லை. ஏனென்றால் மனிதன் அப்பொழுது விழுந்துபோகவில்லை. பாவமும் மரணமும் இந்த உலகத்திற்குள் நுழையவில்லை. ஆனால் மனிதனுடைய வீழ்ச்சிக்குப்பிறகு, அழைப்பும் தொழிலும் எப்போதும் ஒன்றாய் இருப்பது என்கின்ற வாய்ப்பு அற்றுப்போனது. அழைப்பும் தொழிலும் ஒன்றாக இருக்கலாம். ஆனால் பொதுவாக, அழைப்பும் தொழிலும் வெவ்வேறாக இருக்கின்றன.

முதலாவது இதை நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையிலே பார்ப்போம். அவர் தச்சனின் தொழிலைச் செய்தார். மத்தேயு 13:55-இல், "இவன் தச்சனின் மகன் அல்லவா?" என்கிறார்கள். அந்த நாட்களிலே தச்சனின் மகன் என்றால், அவன் தன்னுடைய தந்தையோடு சேர்ந்து தச்சு வேலை செய்கிறான் என்று பொருள். மாற்கு 6:3-இல், "இவன் தச்சன் அல்லவா?" என்கிறார்கள். தகப்பன் உயிரோடு இருக்கிறவரை இவன் யார்? தச்சனின் மகன். தகப்பன் இறந்தபிறகு இவன் யார்? தச்சன்.

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, "நான் ஒன்றும் தச்சனும் அல்ல, தச்சனின் மகனும் அல்ல" என்றெல்லாம் சொல்லவில்லை. அவர் தச்சனின் மகன் என்றும், தச்சன் என்றும் அந்தப் பட்டத்தை ஏற்றுக்கொண்டார்.

இன்றும் கூட சிலர் தங்களுடைய கார்களிலே இந்த slogan-ஐ எழுதிப் போட்டிருக்கிறார்கள். My boss is a Jewish carpenter . என்னுடைய முதலாளி ஒரு யூத தச்சன். இது கேட்பதற்கு வேடிக்கையாகத்தான் இருக்கிறது.  என்னுடைய முதலாளி ஒரு யூத தச்சனைவிட கோடி மடங்கு பெரியவர். ஆனாலும் என்னுடைய முதலாளி யூத தச்சன் என்பதில் ஒரு சுவையும் ஓர் இனிமையும் இருக்கத்தான் செய்கிறது.

தொழில் என்பது, தன்னுடைய, தன்னுடைய குடும்பத்தினுடைய அல்லது தன்னுடைய சமுதாயத்தினுடைய வாழ்வாதாரத்திற்காக ஒரு மனிதன் ஆற்றுகின்ற செயல். மனிதன் என்ற முறையில் அவருடைய வாழ்வாதாரம். வாழ்வாதாரம் என்றால் உணவு, உடை, உறைவிடம், போக்குவரத்து.

எல்லா மனிதனும், பெரும்பாலும், ஒரு குடும்பத்தின் பங்காக இருக்கின்றான். ஆகவே, என்னைப்பற்றிய பொறுப்பு மட்டுமல்ல, என்னுடைய குடும்பத்தைப்பற்றிய பொறுப்பும் உள்ளது. அது இயற்கையானது. பெற்றோரைப்பற்றி, வாழ்க்கைத்துணையைப்பற்றி, பிள்ளைகளைப்பற்றி, உடன்பிறந்தவர்களைப்பற்றி பொறுப்புணர்வு இருப்பதுதான் இயல்பானது. பொறுப்புணர்வு இல்லாமல் இருப்பது இயற்கைக்கு ஒவ்வாதது.

யோவான் 19:26–27இல், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டிருக்கும்போது தன்னுடைய தாயைப்பற்றி அப்படிச் சொல்லுகிறார்: "இயேசு தம்முடைய தாயையும், அருகே நின்ற தமக்கு அன்பாயிருந்த சீடனையும் கண்டு, தம்முடைய தாயை நோக்கி, 'அம்மா, அதோ உன் மகன்' என்றார். பின்பு அந்தச் சீடனை நோக்கி, 'அதோ உன் தாய்' என்றார். அந்நேரம் முதல் அந்தச் சீடன் அவளைத் தன்னிடமாய் ஏற்றுக்கொண்டான்."

ரொம்ப எளிமையானது இது. இதில் பெரிய ஆழமான இறையியல் ஒன்றும் இல்லை. “இதோ உன் தாய் என்றபோது அவளை அவர் இந்த உலகத்திற்கே தாயாக்கினார். இறையன்பிற்குரிய பிள்ளைகளே” என்று சாமியார்கள் சொல்வதுபோல அப்படி உலகத்துக்கெல்லாம் அவர்  தாயாகவில்லை.

ஒரு மனிதன் என்ற முறையிலே இறுதிவரை தன்னுடைய தாய்க்கு அவர் பொறுப்புள்ளவராய் இருந்தார். யோவானை ஏறக்குறைய ஓர் உடன்பிறவா சகோதரனைப்போல, மிகவும் நெருக்கமான ஒரு சீடனாக ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து ஏற்றுக்கொண்டதால், யோவானுடைய பொறுப்பிலே தன் தாயினுடைய எதிர்காலத்தை ஒப்படைக்கிறார். இது எதைக் காட்டுகிறது? தன்னையும் தன்னுடைய குடும்பத்தையும்பற்றிய பொறுப்பு, அவருடைய வாழ்வாதாரத்தைப்பற்றிய பொறுப்பு, அது தேவனிடமிருந்து வந்தது. அது ஒன்றும் சாத்தானிடமிருந்து வந்தது அல்ல.

எளிய வார்த்தைகளில் சொல்வதானால், அவர்களுக்குப் பொருளாதாரம் வேண்டும். அவர்களுக்குப் பணம் வேண்டும், என்பது ஒன்றும் நூதனமான உபதேசம் அல்ல. அது இயற்கையானது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, பணததை ஒரு தீயைப்போல், “நான் அதைத் தொடமாட்டேன்,” என்று சொல்லவில்லை.

ஒரு சாமியாரைப்பற்றி நான் இப்படி கேள்விப்பட்டிருக்கிறேன். கிறிஸ்தவ சாமியார். கிறிஸ்தவ சாமியாருக்கும் சீடர்கள் இருப்பார்கள் அல்லவா? கீழே பணம் விழுந்துவிட்டது என்றால், “பிள்ளையே அதை எடுத்துக் கொள்,” என்று சொல்வாராம். ஏனென்றால் அவர் பணத்தைத் தொட மாட்டாராம். இனி அதற்குமேல் ஒரு படி போய், “பணத்தைப் பார்க்கக்கூட மாட்டோம்,” என்று சொல்வார்கள். இப்போது digital currency தானே; அதை என்ன பார்க்க வேண்டியிருக்கிறது, தொட வேண்டியிருக்கிறது? நம்முடைய போனைக் காட்டினால் பணம் போய்விடுகிறது.

மத்தேயு 25:27இல் அவர் வங்கியைப்பற்றிப் பேசுகிறார், முதலீட்டைப்பற்றிப் பேசுகிறார், வட்டியைப்பற்றிப் பேசுகிறார். ஒரு தாலந்தை வாங்கியவனிடம், “இந்தத் தாலந்தை வங்கியிலே முதலீடு செய்திருந்தால், நான் அதை வட்டியோடு திரும்பப் பெற்றிருப்பேனே!" என்று கூறுகிறார். "இல்லைங்க, இயேசு கிறிஸ்துவுக்கு வங்கி, முதலீடு, வட்டி - இதெல்லாம் அவருக்குத் தெரியாது; அவருக்கு ஈடுபாடும் இல்லை" என்று சொல்ல முடியாது. அப்படியல்ல. அவருக்குத் தெரியும்.

ஆனால் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் அழைப்போ மேசியாவின் அழைப்பு. அவர் உலகின் இரட்சகர். ஏசாயாவின் புத்தகத்தைத் திறந்து வாசித்துச் சொல்லுகிறார்: மேசியா என்ன செய்வார்? “பார்வையற்றவர்களுடைய கண்களைத் திறப்பார். கட்டுண்டுள்ளவர்களுடைய கட்டுகளை அவிழ்ப்பார். சிறைப்பட்டுள்ளவர்களை விடுதலையாக்குவார்,” என்று சொல்லிவிட்டு, "உங்கள் செவிகள் கேட்க இந்த வசனம் இன்று நிறைவேறிவிட்டது," என்று சொல்லுகிறார். தான் யார் என்பது அவருக்குத் தெரியும்.

ஆனால் தான் மேசியா என்று தெரிந்திருந்தபோதும்கூட முப்பது ஆண்டுகள், அவர் சிறு வயது முதற்கொண்டே, "நான் மேசியா. ஆகையால் இந்த ஆணி அடிக்கிறது, screwdriver வைத்து மாட்டுவது, இதெல்லாம் செய்ய மாட்டேன்" என்றெல்லாம் சொல்லவில்லை. நான் இப்படிக்கூடச் சொல்வேன். ஒருவேளை அவர் பொது ஊழியம் செய்ய வந்தபிறகு ஒரு வீட்டிற்குப் போயிருக்கிறார். அங்கே ஒரு bench உடைந்து கிடக்கிறது. அவர் ஓர் ஆணி அடித்து அதை repair பண்ணுவாரா, பண்ணமாட்டாரா? “நான் மேசியா; என்னுடைய அழைப்பைவிட்டு இடதுபுறம், வலதுபுறம் சாயக்கூடாது. அந்த bench என்ன ஆனாலும் எனக்கு என்ன?” என்று சொல்வாரா? அப்படியல்ல.

இந்த மேசியா உயிர்த்தெழுந்தபிறகு துணியை மடித்து வைத்துப் போயிருந்ததாக வேதத்திலே நாம் வாசிக்கிறோம் என்பது உங்களுக்கும் தெரியும். தூதர்களை வைத்து செய்தியை அறிவிக்கச் சொல்லுகிற மேசியாவுக்கு, ஒரு தூதனை வைத்துத்  துணியை மடித்து வைக்கச் சொல்லத் தெரியாதா? “அப்பா, நான் ரொம்ப அவசரமாகப் போய்க்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் நீயே பார்த்துக்கொள்,” என்று சொல்லவில்லை.

மூன்றரை ஆண்டுகளிலே தன்னுடைய மேசியாவின் அழைப்பை நிறைவேற்றுவதில் மட்டுமே அவர் கண்ணும் கருத்துமாய் இருந்தார்; குறியாய் இருந்தார். வருவாயைப்பற்றி அல்லது தன்னுடைய குடும்பத்திற்குரிய வாழ்வாதாரத்தைப்பற்றி அவர் எந்தக் கவனமும் செலுத்தியதாக நமக்குத் தெரியவில்லை.

எருசலேமுக்குப் போக உறுதியோடு இருந்தார் என்று லூக்கா 9:51இல் வாசிக்கிறோம். அதற்கு முன்பு எபிரேயர் 10:5–7இல், "புத்தகச் சுருளில் என்னைப்பற்றி எழுதியிருக்கிறது. தேவனே, நான் உம்முடைய சித்தத்தைச் செய்ய வருகிறேன். என்னுடைய வாழ்க்கை உம்முடைய அழைப்பை மட்டுமே செய்கின்ற ஒரு வாழ்க்கையாக இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன். அந்த அழைப்பை நிறைவேற்றுவதற்கு எருசலேமை நோக்கி என்னுடைய முகத்தை ஒரு கற்பாறையைப் போல வைத்திருக்கிறேன். இடதுபுறம், வலதுபுறம் நான் விலகவில்லை."

விலகுவதற்குப் பல சோதனைகள் வருகின்றன. "நான் நிறைவேற்ற வேண்டிய ஒரு ஞானஸ்நானம் உண்டு. அந்த ஞானஸ்நானம் நிறைவேறும் அளவும் நான் எவ்வளவாய் நெருக்கப்படுகிறேன்" என்று லூக்கா 12:50இல் சொல்லுகிறார். தன்னுடைய அழைப்பை நிறைவேற்றுவது சிலுவை மரணத்தின் மூலமாக என்பது கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவுக்குத் தெரியும். அதை அவர் ஞானஸ்நானம் என்கிறார். "அந்த ஞானஸ்நானம் நிறைவேறும் அளவும் நான் எவ்வளவாய் நெருக்கப்படுகிறேன்" என்று சொல்லுகிறார்.

ஆயினும், அந்தச் சிலுவைக்குப் பின் வருகின்ற மகிழ்ச்சியை நோக்கி, அவர் சிலுவையின் அவமானத்தை ஒரு பொருட்டாக எண்ணவில்லை என்று எபிரேயர் 12:2இல் வாசிக்கின்றோம். அந்த அழைப்பிலிருந்து அவரைத் திசைதிருப்புவதற்கு, அல்லது அவருடைய அழைப்பை சுருக்குவழியில் நிறைவேற்றுவதற்கு அவருக்கு சோதனைகள் வந்தன.

லூக்கா 4:5–8இல் சாத்தான் அவரை ஒரு மலை உச்சிக்குக் கொண்டுபோய், இந்த உலகத்தின் எல்லா ராஜ்யங்களின் மகிமைகளையும் ஒரு drone போல சுட்டிக்காண்பிக்கிறான். அவனுக்கும் இந்த technique எல்லாம் தெரிகிறது. தேவனும் உயரப் பறக்கும் கழுகின் பார்வையைக் கொடுக்கின்றார். சாத்தானும் உயரப் பறக்கும் கழுகின் பார்வையைக் கொடுத்து, "இந்த ராஜ்யங்களும் அவைகளின் மகிமையும் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நீர் தாழ விழுந்து என்னைப் பணிந்துகொண்டால், இவைகளை எல்லாம் நான் உமக்குக் கொடுப்பேன்," என்கிறான்.

“எதற்கு சிலுவை மரணம் என்கின்ற ரொம்ப complex-ஆன, painful-ஆன பாதையின் வழியாய்ப்போய் உம்முடைய அழைப்பை நிறைவேற்ற வேண்டும்? உம்முடைய அழைப்பை நிறைவேற்றுவதற்கு நான் இதோ ஒரு சுருக்குவழியைக் காட்டுகிறேன். இன்று குலுக்கல்; நாளை லட்சாதிபதி! சிறுகச் சிறுக சேர்ப்பானேன். ஒரே சீட்டிலே லட்சாதிபதியாய் மாற வழி இருக்கும்போது!”

ஆகவே, நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய வாழ்க்கையிலும் அழைப்பும் தொழிலும் வெவ்வேறாக இருந்தன. நான் வெவ்வேறாக இருந்தன என்று சொல்லும்போதும், தொழில் என்பது அழைப்பிற்கு முரணானதல்ல. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கையில் எந்த முரண்பாடும் இல்லை. அவருடைய தொழில் அவருடைய அழைப்பிற்கு எதிர்முரணாகவும் இல்லை. அவருடைய அழைப்பு அவருடைய தொழிலுக்கு முரணாகவும் இல்லை. பொதுவாக அழைப்பும் தொழிலும் வெவ்வேறாகத்தான் இருக்கின்றன.

பவுலைப் பொறுத்தவரை, கூடாரம் செய்வது அவருடைய தொழில். அப்போஸ்தலர் 18:3இல் வாசிக்கிறோம். ரோமிலிருந்து ஆக்கிலாவும் பிரிஸ்கில்லாவும் கொரிந்துவுக்கு வந்திருந்தார்கள். அவர்கள் கூடாரத் தொழில் செய்கின்றவர்கள். பவுல், "ஓ, தன்னுடைய தொழிலையே இவர்களும் செய்கின்றவர்கள்," ஆகையால் அவர்களோடு அவன் சேர்ந்துகொண்டான் என்று வாசிக்கின்றோம்.

ஆனால், பவுலுடைய அழைப்பு அப்போஸ்தலனுக்குரியது. அப்போஸ்தலர் 26ஆம் அதிகாரம் 16–18ஆம் வசனங்களில் நாம் வாசிக்கின்றோம். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து தமஸ்குவுக்குப் போகின்ற வழியிலே அவனைச் சந்திக்கும்போதே, "என்ன நோக்கத்திற்காக நீ அழைக்கப்பட்டிருக்கிறாய்? புறவினத்தாரிடத்தில் நற்செய்தியைக் கொண்டுபோவதற்காக நான் உன்னைத் தெரிந்துகொண்டேன்," என்று கூறுகிறார். பவுலுக்கு அதைப்பற்றி எந்தக் கடுகளவு சந்தேகமும்கூட இருந்ததில்லை. "நான் கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் எதற்காகப் பிடிக்கப்பட்டிருக்கிறேன் என்றால், இந்த நற்செய்தியைப் புறவினத்தாரிடத்தில் கொண்டுபோக வேண்டும்."

கலாத்தியர் 2ஆம் அதிகாரத்திற்கு வரும்போது, "யூதர்களுக்கு அப்போஸ்தலனாக கேபாவை ஏற்படுத்தினவர், புறவினத்தாருக்கு அப்போஸ்தலனாக என்னை ஏற்படுத்தினார்," என்று தன்னுடைய அழைப்பைப்பற்றித் தெள்ளத்தெளிவாக இருக்கின்றார். ஆனால் அவர் ஒரு தொழிலும் செய்தார்.

ஆழ்ந்த கேள்வி. ஒரு அப்போஸ்தலன் என்கின்ற அழைப்பைக் கொடுத்த கர்த்தர், அவன் ஒரு தொழிலும் செய்துதான் தன்னுடைய வாழ்வாதாரத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்று அனுமதிப்பாரா? இது ஆழமான கேள்வி. இந்தக் கேள்விக்குப் பதில் கொடுப்பதற்குத் தேவனுடைய மக்கள் திண்டாடுகின்றார்கள். நாம் இப்படிக் கேள்வி கேட்கலாம். பவுல் ஒரு தொழில் செய்துதான் அவருடைய வாழ்வாதாரம் — livelihood — இருக்க வேண்டுமா? அவருடைய அப்போஸ்தல அழைப்பின்மூலமாகவே அவருடைய வாழ்வாதாரம், அவருடைய வருவாய், அவருடைய பொருளாதாரத் தேவைகள் எல்லாம் நிறைவு செய்யப்பட்டிருக்காதா? சந்திக்கப்பட்டிருக்காதா? சந்திக்கப்பட முடியாதா? என்ற கேள்வி எழுகிறது.

நெகேமியா, தொழிலைப்பொறுத்தவரை, அரசனுக்குப் பானபாத்திரக்காரன். அழைப்பைப்பொறுத்தவரை, எருசலேமை ஒரு நகரமாகக் கட்டி எழுப்புவது. பன்னிரண்டு ஆண்டுகள் தன்னுடைய தொழிலை விட்டுவிட்டு வந்து, தன்னுடைய அழைப்பை அவன் நிறைவேற்றுகிறான். பன்னிரண்டு ஆண்டுகள் கழித்து அவன் மீண்டும் தன்னுடைய தொழிலுக்குப் போனான்.

எப்படிப்பட்ட combination-இல் வேண்டுமானாலும் தேவன் செயல்படலாம். தொழிலும் செய்துகொண்டு, தொழிலும் அழைப்பும் இணையாகவும் செல்லலாம். தொழிலை விட்டுவிட்டு அழைப்பிற்கும் வரலாம். தொழிலை விட்டுவிட்டு அழைப்பை நிறைவேற்றிவிட்டு மீண்டும் தொழிலுக்கும் போகலாம்.

அச்சுறுத்துவார்கள். "கலப்பையில் கை வைத்து பின்னிட்டுப் பார்க்கிறவன் எவனும் தேவனுடைய ராஜ்யத்திற்குப் பாத்திரன் அல்ல" என்றால், நெகேமியா பாத்திரன் அல்ல. பொதுவாக அழைப்பும் தொழிலும் வெவ்வேறாக இருக்கும்.

அழைப்பும் பொருளாதாரமும், தொழிலும் பொருளாதாரமும் என்ற இரண்டு சிறிய குறிப்புகளைக் கூறுகிறேன்.

அழைப்பை நிறைவேற்றுகையில் பிதா கனம் பண்ணுகிறார். பிதா மட்டும்தான் கனம் பண்ணுவார். நம்மை அழைத்தவர் யார்? பிதா. ஆகவே, நம்மை honour, கனம் பண்ண வேண்டியது யார்? பிதா.

யோவான் 12ஆம் அதிகாரம் 26ஆம் வசனத்திலே நாம் வாசிக்கின்றோம்: "ஒருவன் எனக்கு ஊழியம் செய்தால், பிதாவானவர் அவனைக் கனம் பண்ணுவார்." இதை நாம் அடிக்கடி மேற்கோள் காட்டிவிட்டதால், இந்தக் கனம் ஒன்றும் நம்மை impress பண்ணுவது கிடையாது. "ரொம்ப தடவை சொல்லிட்டீங்க, பிரதர். எந்தக் கனமும் வந்ததுபோலவே தெரியவில்லையே!" என்று.

எவ்வளவேனும் பொய்யுரையாத தேவன் அவர். அழைப்பு என்பது தேவன் என்னை எதற்காக, அவருடைய தரிசனத்தில் எந்தப் பங்காற்றுவதற்காக, எந்த வேலையைச் செய்து முடிப்பதற்காக அழைத்தாரோ, அதை நான் செய்யும்போது பிதாவானவர் என்னைக் கனம் பண்ணுவார்.

அது நம்முடைய பரம பிதா தருவதால், அந்தச் சம்பளமும்... அதைச் சம்பளம் என்றுகூடச் சொல்லக் கூடாது. அது ஒரு heavenly salary. அதற்கு salary slip எல்லாம் கிடையாது. அது ஒரு பரம சம்பளம். பரம சம்பளம் என்று சொல்லும்போதே உங்களுக்குப் புரிந்திருக்கும். இதெல்லாம் சம்பளம் இல்லை. “இவர் இலைமறை காயாக, மங்கல வழக்காக, இது என்னவென்று சொல்லுகிறார்? சம்பளம் என்று சொல்லுகிறார்.” பரம சம்பளம்.

சம்பளம் என்றால் அது மாதந்தோறும் கிடைக்கும், அல்லது வாரந்தோறும் கிடைக்கும், அல்லது நாள்தோறும் கிடைக்கும். இந்தப் பரம சம்பளம் எவ்வளவு என்று தேவன்தான் தீர்மானிப்பார். எப்போது தரப்படும் என்பதையும் தேவன்தான் தீர்மானிப்பார். சில சமயங்களில் நீங்கள் வியக்கும் வண்ணமும், மகிழ்ச்சி அடையும் வண்ணமும் சொல்கிறேன், இந்தச் சம்பளத்தை அவர் முதலீடு செய்து நம்முடைய தலைமுறைகளுக்குக் கொடுப்பார்.

“தலைமுறைகளுக்கெல்லாம் கொடுக்க வேண்டாம். என்கிட்ட கையில கொடுக்கச் சொல்லுங்க அவரை!" என்பது எசேக்கியாபோன்ற மனிதர்களின் எண்ணம். நான் எசேக்கியாவைத் தாழ்வான மனிதன் என்று சொல்வதற்கு யோசிக்கிறேன். உயர்வான மனிதன்தான். சில உயர்வான மனிதர்களிடத்தில் தாழ்வான எண்ணங்கள் இருக்கின்றன. "என்னுடைய காலத்தில் இந்தத் துன்பம் நேரிடாதில்லையா?" அதேபோல, தீமை என்றால் அது என்னுடைய தலைமுறைகளின் காலத்தில் நிகழட்டும்.” நன்மை என்றால் நாம் தலைகீழாக யோசிக்க வேண்டும். பிதாவினுடைய அழைப்பை நான் நிறைவேற்றுகின்றேன். பிதா கனம் பண்ணுவார். எனக்கு உறுதிப்பாடு உண்டு. நான் அழைப்பை நிறைவேற்றுவதற்காகச் செய்த என்னுடைய பணிவிடையில், என்னுடைய வேலையில், அந்த வேலைக்கு எவ்வளவு worth, எவ்வளவு தகுதி, எவ்வளவு மதிப்பு உண்டோ, அதில் ஒற்றை நயா பைசாவைக்கூட நம்முடைய பிதா குறைக்க மாட்டார்.

வங்கி, முதலீடு, வட்டி இவை எல்லாவற்றையும் பற்றி தெரிந்த தேவன், நாம் தமிழிலே சொல்வது போல, வட்டியும் முதலுமாக அதைத் திரும்பத் தருவார். நிச்சயமாய்க் கொடுப்பார். எனக்கோ அல்லது என்னுடைய தலைமுறைகளுக்கோ.

உயர்ந்த மனிதர்கள் எப்போதுமே தங்கள் வாழ்க்கையில் என்ன நடைபெறுகிறது என்பதைப்பற்றி மட்டுமே சிந்திக்க மாட்டார்கள். நான் சென்றபிறகு என்னுடைய தலைமுறைகளுக்கு என்ன நேரிடும் என்று சிந்திப்பார்கள். மோசே அப்படி யோசித்தார். யோசுவா அப்படி யோசித்தார். "நானும் என் வீட்டாருமோ கர்த்தரைச் சேவிப்போம்." ஆனால் நம்முடைய தலைமுறைகள் எப்படி இருக்கும்?

தேவன் பரம சம்பளம் தருகிறார். அது இன்றைக்கு நம்முடைய வாழ்க்கைத் தேவைகளுக்கு, வாழ்வாதாரத்திற்கு, பொருளாதாரத் தேவைகளுக்குப் போதுமானதாக இருக்கலாம். சில சமயங்களில் போதுமானதாக இல்லாமலும் போகலாம். அதற்காகத்தான் தொழில். என்னுடைய வாழ்வாதாரம், என்னுடைய உணவு, உடை, உறைவிடம், கல்வி, போக்குவரத்து, மருத்துவச் செலவுகள், தேவைகள் பூர்த்தி செய்யப்படவில்லை என்றால், தேவன் எனக்குப் பரம சம்பளம் தரவில்லை என்று பொருளா? இல்லை.

அது பூர்த்தி செய்யப்படாதபோது நான் என்ன செய்ய வேண்டும்? தொழில். வேலைக்குச் செல்ல வேண்டும். அது ஒன்றும் அவிசுவாசம் அல்ல. நம்முடைய தேவைகளை எந்த அளவுக்குச் சுருக்கிக்கொள்ள முடியுமோ அந்த அளவுக்குச் சுருக்கிக்கொள்ள வேண்டும். இனிமேலும் சுருக்க முடியாது என்கின்ற சூழ்நிலை நேரிடும்போது நாம் வேலைக்குப் போக வேண்டும்; தொழில் செய்ய வேண்டும்.

மாறாக, நாம் பொருளாசை அற்றவர்களாய் இருக்க வேண்டும். தேவன் தருகின்ற பரம சம்பளம், நான் அழைப்பை நிறைவேற்றுவதற்காக என்னுடைய உழைப்பையும், என்னுடைய நேரத்தையும் செலவிடும்போது கிடைக்கின்ற பரம சம்பளம் எனக்குப் போதவில்லை என்றாலும், நான் பொருளாசை உள்ளவனாய் இருக்கக் கூடாது.

1 தீமோத்தேயு 3:3இல், மூப்பன் நடத்துகிறவன், அல்லது தேவனுடைய மக்களிடையே தலைவர்களாக இருக்கிறவர்களுக்கு ஒரு குணலட்சணத்தைச் சொல்லும்போது, அவர்கள் பண ஆசை இல்லாதவர்களாய் இருக்க வேண்டும். இன்னும் ஒரு படி மேலேபோய், அடுத்த படிக்குப்போய், அவன் தன் சொந்தப் பணத்தைச் செலவழித்துப் படையிலே சேவிக்க வேண்டும்.

பொருளாசை அற்றவர்களாய் இருப்பது என்பது எதிர்மறையானது. நான் தேவன் எனக்குக் கொடுத்த அழைப்பை நிறைவேற்றும்போது, அதன் மூலமாய் எனக்குப் பொருள் கிடைக்கும் என்று எனக்கு ஆசை துளியும் இருக்கக் கூடாது. தேவனுடைய அழைப்பை நிறைவேற்றுவதால் எனக்குப் பொருளாதாரம் கிடைக்கும் என்கின்ற எதிர்பார்ப்பு நமக்கு ஒருபோதும் இருக்கக் கூடாது. அவர் எனக்குப் பொருளாதாரம் தந்தாலும் சரி, தாராவிட்டாலும் சரி, தேவன் எனக்குக் கொடுத்த அழைப்பை நான் நிறைவேற்றுவேன்.

அது மட்டுமல்ல, என் சொந்தப் பணம் — சொந்தப் பணம் என்பது என்ன? தொழில் மூலமாய்க் கிடைக்கின்ற என் பணத்தைச் செலவழித்து, நான் என்னுடைய அழைப்பை நிறைவேற்றுவதற்கும் நான் எத்தனிப்பேன். சொந்தப் பணம் என்பது ஒன்றும் நான் என் சொந்த சாமர்த்தியத்தினாலும், சொந்த ஞானத்தினாலும் சம்பாதித்தது என்பதல்ல. தொழில் மூலமாய்த் தருவதும் தேவன்தான் தருகிறார். தொழில் மூலமாய்த் தருகின்ற பணத்தை எதற்குச் செலவிட வேண்டும்? அழைப்புக்குச் செலவிட வேண்டும்.

அடுத்தது, சில சமயங்களில் தொழில் அனுபவத்தில் மறைமுகமாக நம்மை அழைப்புக்கு ஆயத்தப்படுத்துவார். என்னமோ தொழில் என்பதும், அழைப்பு என்பதும் ஒன்றுக்கொன்று ஒவ்வாதவைகள் அல்ல. தொழில் அனுபவத்தில், மறைமுகமாக, நாம் அறியாத வண்ணம், நம்முடைய அழைப்புக்கு தேவன் நம்மை ஆயத்தப்படுத்துவார்.

மோசே இளவரசன் என்ற முறையில் எகிப்தியருடைய எல்லாக் கல்வியிலும் கற்றுத் தேர்ந்தான் என்று அப்போஸ்தலர் 7:22இல் ஸ்தேவான் கூறுகிறார். அவன் ஒரு இளவரசனாக, எகிப்தியருடைய கலைகளிலெல்லாம் கல்வி கற்று, தேர்ச்சி பெற்ற ஒரு competent மனிதனாக மாறும்போது, மோசேக்கு அந்த idea எல்லாம் இருந்திருக்காது. "ஒருநாளிலே நாம் ஒரு அடிமைக் கூட்டத்தை தலைவனாக இருந்து நடத்திக்கொண்டு போகப் போகிறோம்" என்கின்ற ஒரு எண்ணம் கூட மோசேக்குள் இருந்திருக்காது.

நம்முடைய இளவயது முதற்கொண்டு, ஒரு தொழிலில் தேவன் நம்மை ஈடுபடுத்தி இருக்கும்போது, அதிலே தருகின்ற பயிற்சியின்மூலமாக நம்முடைய அழைப்புக்குத் தேவன் நம்மை ஆயத்தப்படுத்துகிறார் என்ற எண்ணம் நமக்கு இல்லாமல் போகலாம்.

பவுல் ஒரு பரிசேயனாகக் கற்பிக்கப்பட்டு வேத அறிஞனானான். அப்போஸ்தலர் 5:34இல் கமாலியேல் என்கின்ற பரிசேயன், ஆலோசனைச் சங்கத்தாரால் மதிக்கத்தக்க மிகவும் உயர்ந்த ஒரு ஆசிரியனாக இருந்தான் என்று பார்க்கின்றோம். அப்போஸ்தலர் 22:3இல் பவுல் கூறுகிறான்: "இந்த நகரத்திலே, எருசலேமிலே, கமாலியேலின் பாதத்தில் அமர்ந்து கற்ற மாணவன் நான்" என்கிறான்.

இவ்வளவு வேதத்தில் கற்பிக்கப்பட்ட ஒரு மனிதன், ஆண்டவராகிய இயேசுவின் கிருபையின் நற்செய்தியைப் புறவினத்தாருக்குக் கொண்டுபோகத் தேவனுக்குத் தேவை. ஆனால் கமாலியேலின் பாதத்திலே அவன் கல்வி கற்றபோது, "ஒருநாளிலே நாம் இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியைச் சுமந்து போகின்ற ஒரு அப்போஸ்தலனாக மாறுவோம்" என்ற எண்ணம் துளிகூட பவுலுக்கு கிடையாது.

ஆகவே, தொழில் மூலமாக நாம் பெறுகின்ற அனுபவத்தையும், நம்மை அறியாமலேயே, மறைமுகமாக, தேவன் தம்முடைய அழைப்பை நிறைவேற்றுவதற்கு பயன்படுத்திக்கொள்ளலாம். மீன்களைப் பிடிக்கிற பேதுருவையும், அவனுடைய சகோதரன் அந்திரேயாவையும், மனிதர்களைப் பிடிக்கிறவர்களாக தேவன் மாற்றுகிறார்.

அழைப்பை அறிவது. "என்னுடைய அழைப்பு என்ன?" இந்தக் காலத்திலே தேவனுடைய மக்களுக்கு எல்லாவற்றிற்கும் ஒரு கனவு வேண்டும் அல்லது ஒரு தீர்க்கதரிசி வேண்டும். "என்ன வேலை பார்ப்பது? ஐயா, ஜெபம் பண்ணிச் சொல்லுங்க. யாரைக் கல்யாணம் பண்ணுவது? ஐயா, ஜெபம் பண்ணிச் சொல்லுங்க. என் அழைப்பு என்ன? ஐயா, ஜெபம் பண்ணிச் சொல்லுங்க." ஜெபம் பண்ணுகிற outsourcing work-க்கு நிறைய demand இருக்கிறது.

நெகேமியா தேர்ந்தெடுக்கிறான். பவுல் தேர்ந்தெடுக்கிறான். இது தேவனுக்கு மதிப்புடையதாக இருக்க வேண்டும். நான் அழைப்பு என்று சொல்லும்போது, நெகேமியா செய்ததுபோல ஒரு நகரத்தைக் கட்டுவதோ அல்லது பவுல் செய்ததுபோல புறவினத்தாருக்கு நற்செய்தியைக் கொண்டுபோவது மட்டுமல்ல. ஒரு தாய் தன் பிள்ளைகளை வளர்த்து ஆளாக்குவது அழைப்பு. அல்லது, ஒருவேளை என்னுடைய பிள்ளை ஒரு autistic child-ஆக இருக்கும் என்றால், ஒரு தகப்பன், "நான் என்னுடைய வாழ்க்கையில் வேறு எதையும் செய்ய முடியாது. இந்த autistic child-ஐ நான் வளர்த்து, அவனுக்கு உதவியாக இருந்து, அவனை ஆளாக்க விரும்புகிறேன்" என்று சொல்வது அவனுடைய அழைப்பாக இருக்கலாம்.

வில்லியம் வில்பர்போர்ஸ், "ஐரோப்பாவிலிருந்த அடிமை வியாபாரத்தை ஒழிப்பதே என்னுடைய வாழ்க்கையின் அழைப்பு" என்று எடுத்துக்கொண்டார். அவர் முழுநேர ஊழியனாகப் போக விரும்பினார். ஆனால் ஆண்டவர் சொன்னார், "நீ அரசியலில் ஈடுபடு" என்று. தன்னுடைய வாழ்நாளிலே அடிமை வியாபாரத்தை ஒழித்தவர் வில்லியம் வில்பர்போர்ஸ்.

அல்லது லூயி பாஸ்டர் Penicillin-ஐக் கண்டுபிடிப்பது. “என்னுடைய வாழ்க்கையில் ஒன்றேவொன்று நான் செய்ய விரும்புகிறேன். இந்த antibiotic-ஐ நான் கண்டுபிடிக்க வேண்டும்," என்பதாக இருக்கலாம். ஆகவே, அது மிகவும் பிரம்மாண்டமாகத்தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பிரம்மாண்டமாகவும் இருக்கலாம். அல்லது யாரும் கவனிக்காத ஒரு வேலையாகவும் அது இருக்கலாம்.

இரண்டாவது, அந்தக் காரியத்திலே எனக்கு இயல்பான ஈடுபாடும், பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றிருக்கிறேன். இந்த வசனங்கள் எல்லாவற்றையும் நீங்கள் வீட்டில் சென்று வாசித்துப் பாருங்கள். இது பெசலெயல், அகோலியாப் என்ற இரண்டு பேரைப்பற்றியது. "இதோ, யூதா கோத்திரத்தான் ஊரியின் மகனாகிய ஊரின் மகன் பெசலெயலைப் பெயரிட்டு அழைத்தேன். அவனை தேவ ஆவியினால், ஞானத்தினாலும், புத்தியினாலும், அறிவினாலும், சகலவித வேலைகளிலும் நிரப்பினேன்..." (31:2–3). ஆசரிப்புக் கூடாரத்தினுடைய எல்லாப் பண்டபாத்திரங்களையும், பொருள்களையும் உருவாக்குவதற்கு இந்த இரண்டு பேருக்கும் ஒரு சிறப்பான ஆவியைக் கொடுத்தார், ஞானத்தைக் கொடுத்தார், திறமையைக் கொடுத்தார்.  பின்னர், "இதோ, நான் தாண் கோத்திரத்தான் அகிசாமாக்கின் மகனாகிய அகோலியாபை அவனோடே கூட வைத்தேன்; மேலும் ஞான இருதயமுள்ள அனைவருடைய இருதயத்திலும் ஞானத்தை வைத்தேன்..." (31:6). அகோலியாப் பெசலெயலுடன் இணைக்கப்படுகிறார்.  மற்ற திறமையுள்ளவர்களும் சேர்க்கப்படுகிறார்கள்.

"அவர்களுக்கு மற்றவர்களுக்குப் போதிக்கிற திறமையையும் அவர் அவர்களுடைய இருதயத்தில் வைத்தார்..." (35:34).

அழைப்பு என்பது ஏதோ தனித்துவமானது என்று நினைக்க வேண்டாம். “நான் பாலைவனத்திலே உட்கார்ந்துகொண்டு என்னுடைய அழைப்பிற்காக ஜெபித்தேன். கர்த்தர் எனக்கு ஒரு அழைப்பைக் கொடுத்தார். பிறகு நான் அந்த அழைப்பை நிறைவேற்றினேன்,” என்பதல்ல. நம்மைப்போல ஒத்த அழைப்பைப் பெற்றவர்களோடு இணைந்து செயல்படுவது. நெகேமியா ஒன்றும் தனி ஆளாக எருசலேம் நகரத்தைக் கட்டி எழுப்பவில்லை. நெகேமியா 3ஆம் அதிகாரத்திலே ஒருவேளை ஒரு ஐம்பது பேர் அதைச் சேர்ந்து கட்டி எழுப்புகின்றார்கள். அவர்களுக்கும் பொதுவான அழைப்பு அது.

ஆகவே, அழைப்பு என்றதுமே, “இது மாம்சத்திற்குரிய மற்றவர்களிடமிருந்து என்னை பிரித்துக்காட்டுவதற்காக நான் அதை பயன்படுத்திக்கொள்வது அல்ல. எப்போதுமே, நான் மற்றவர்களைப் போல கிடையாது; நாங்க ரொம்ப சிறப்பு" என்று காட்டுவது மனிதனுடைய மாம்சத்திலே உள்ளது. அப்படியல்ல. ஒரு அழைப்பை தேவனிடத்திலிருந்து நாம் பெறும்போது அல்லது தேர்ந்தெடுத்துக்கொள்ளும்போது, அதே ஒத்த அழைப்பைப் பெற்ற தேவனுடைய மக்களோடு நாம் இணைந்துகொள்ள வேண்டும்.

தமிழ் நான் இரட்சிக்கப்பட்டபிறகு கற்றதல்ல. நான்கு வயதிலிருந்தே எனக்குத் தமிழில் ஈடுபாடு உண்டு. நீங்கள் ஆச்சரியப்படலாம்: “இதெல்லாம் ரொம்ப over-ஆக இருக்கிறதே; நான்கு வயதிலிருந்தா?” என்னுடைய தாயார் அப்படிப்பட்டவர். அவர் சொல்கின்ற பழமொழி அப்படிப்பட்டது. அவர் சொல்லித் தருகின்ற செய்யுள் அப்படிப்பட்டது. நான் வேடிக்கையாகச் சொன்னதுண்டு. நான் பள்ளிக்கூடத்திற்குப் போகும்போது என்னுடைய நண்பர்கள் எல்லாம் எழுத்துக்கூட்டிப் படித்துக்கொண்டிருந்தபோது, நான் ஏற்கெனவே படிக்க ஆரம்பித்துவிட்டேன். என்னுடைய அம்மாவினுடைய பயிற்சி அது. என் அம்மா ஒன்றும் teacher அல்ல.  எல்லாருக்கும் அப்படிப்பட்ட வாய்ப்பு கிடைக்குமா? என்று சொல்ல முடியாது.

ஆகவே, சில புத்தகங்களை மொழிபெயர்க்க வேண்டும் அல்லது பாடல்களை மொழிபெயர்க்க வேண்டும் என்று வரும்போது, சிலர் இப்போதுதான் எழுத்துக்கூட்டித் தமிழ் இலக்கணம் வாசிக்க ஆரம்பிப்பார்கள். நான் “ஈறுபோதல் இடையுகரம் இய்யாதல்
ஆதி நீடல் அடியகரம் ஐயாதல்
தன்னொற்றிரட்டல் முன்னின்ற மெய்திரிதல்
இனமிகல் இனையவும் பண்பிற் இயல்பே...” என்ற நூற்பாக்களை நான் எப்போதோ படித்தேன். சிலர் புத்தகங்களை மொழிபெயர்க்க வேண்டும், பாடலை மொழிபெயர்க்க வேண்டும் என்பதற்காக இப்போது 25 வயதில் அல்லது 30 வயதில் நன்னூலில் நூற்பா கற்கிறார்கள். அதை நான் குறையாகச் சொல்லவில்லை. எந்த வயதிலும் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் இளவயது தொடங்கி தேவன் நமக்கு ஓர் ஈடுபாட்டைக் கொடுத்திருப்பாரென்றால், ஒருவேளை அதிலே நம்முடைய அழைப்பு இருக்குமோ என்கிற எண்ணம் வரவேண்டும்.

ஆகவே, இயல்பாகவே எனக்கு ஈடுபாடு இருக்கிறது. எந்த வயதிலும் எதை வேண்டுமானாலும் கற்றுக்கொள்ளலாம். ஆனால் இளவயது தொடங்கி தேவன் நமக்கு ஒரு ஈடுபாட்டைக் கொடுத்திருப்பார் என்றால், “ஒருவேளை அதிலே நம்முடைய அழைப்பு இருக்குமோ!” என்கின்ற எண்ணம் வர வேண்டும்.

ஈடுபாடும், பயிற்சியும், தேர்ச்சியும் பெற்றிருக்கிறேன். எனக்குப் பதிலாக இன்னொருவனைக் கண்டுபிடிப்பது கடினம். நாம் எப்போதுமே எப்படிப்பட்ட அழைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால், “எனக்குப் பதிலாக இன்னொருவனைக் கண்டுபிடிப்பது கடினம்.” அப்போஸ்தலர் 13:22இல் தேவன் தாவீதைப்பற்றி சொல்லுகிறார்: "என்னுடைய இருதயத்திற்கு ஏற்ற தாசன்." இன்னொரு தாவீதைக் கண்டுபிடிப்பது கடினம். இஸ்ரவேலை ஒரு நாடாக உருவாக்குவதற்கு, "தாவீது பாவம் பண்ணினான்; அவனைத் தூக்கி எறிந்துவிடுவோம். இனிமேல் வேறொரு ஆளைக் கண்டுபிடிப்போம்" என்று சொல்லவில்லை.

இங்கே, “அவர் கர்த்தர். எந்த மனிதனையும் அவர் சார்ந்தவர் இல்லை,” என்று சொல்லலாம். இது கேட்கிறதுக்கு நல்லாயிருக்கிறது, இல்லையா? "மாம்சம் எல்லாம் புல்லைப் போலவும், மனிதனுடைய மகிமை எல்லாம்..." அவர் சவுலை ஒழித்ததுபோல தாவீதையும் ஒழிக்க முடியும். யாரையும் ஒழிக்க முடியும். ஒழிக்க முடியும்; ஆனால் அவர் ஒழிக்க மாட்டார். "இன்னொரு தாவீதை நான் எப்படி உருவாக்குவேன்?" இளவயது முதற்கொண்டு இப்படி என்மேல் அன்புள்ள ஒரு இருதயமும், என்னை ஆராதிக்கின்ற ஒரு இசை ஞானியும்... உண்மையான இசை ஞானி யார்? தாவீதுதான். இப்படிப்பட்ட தன்னலமில்லாத வீரமும் உள்ளவன்.

வாழ்வாதாரம், பொருளாதாரம் கருதப்பட வேண்டிய ஒரு காரணி இல்லை. அழைப்பை நிறைவேற்றும்போது, "இந்த அழைப்பை நான் நிறைவேற்றுவேன் என்றால் எனக்கு என்ன கிடைக்கும் அல்லது என்ன கிடைக்காது?" என்ற கேள்வி எழவே கூடாது. அழைப்புக்கும் பொருளாதாரத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. “எனக்குப் பொருளாதாரம் கிடைத்தாலும் சரி, கிடைக்காவிட்டாலும் சரி, இதைச் செய்யாமல் என்னால் இருக்க முடியாது. இது நான் செய்துதான் ஆக வேண்டும். இது என்னுடைய அழைப்பு” என்று தீர்மானித்தபிறகு, பொருளாதாரம் ஒரு காரணி இல்லை.

நான் சகோதரனை, “நீங்கள் theology படியுங்கள்” என்று அடிக்கடி சொல்வேன். “Theology படிக்கப் போனால் சம்பளம் யார் தருவார்?” அது எனக்கும் தெரியும். ஆனால் என்னுடைய பொறுப்பு அதைச் சொல்வது. இதைச் செய்வதும் செய்யாததும்  அவரைப் பொறுத்தது அல்லது அவருடைய அமைச்சரைப் பொறுத்தது. Theology படிக்கப் போனால் சம்பளம் கிடைக்குமா? கிடைக்காது. ஒரு சகோதரன் Infosys-லேயே U.S.-ல் வேலை பார்த்துக்கொண்டிருந்தார். வேலையை விட்டுவிட்டு theology படிக்கப் போனார். நான்கு வருடமும் துன்புற்றார். ஏதோ ஓர் assistant pastor வாங்குகின்ற வருவாய், அவர்கள் கொடுக்கின்ற காணிக்கை, இவர்கள் கொடுக்கின்ற காணிக்கை—அதில்தான் அவர் தன்னுடைய நான்கு வருட theology education-ஐ முடித்தார்.

ஆனபோதிலும், தொழிலுக்குரிய ஓர்  இடத்தை நான் பார்க்க வேண்டும். வாழ்வாதாரம், பொருளாதாரத்தைப்பற்றி தீத்து 3:14இல் தீத்து கூறுகிறது: " நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராதபடி குறைவுகளை நீக்குகிறதற்கேதுவாக நற்கிரியைகளைச் செய்யப்பழகட்டும்." அதோ அந்த நியாயசாஸ்திரியாகிய சேனாவும், அப்பொல்லோவும் உங்கள் ஊருக்கு வந்திருக்கின்றார்கள். அது எந்த ஊர்? கிரேத்தா தீவுக்கு. அவர்கள் வந்திருக்கின்றார்கள். அவர்களுக்கு எல்லாப் பொருளாதார உதவிகளும் செய்து அனுப்புங்கள்.”

"நான் எப்படி, பிரதர், பொருளாதாரம் செய்வேன்? எங்களிடம் எல்லாம் ஒன்றுமே கிடையாதே,” என்று சொன்னால், “ஒன்றுமே கிடையாதா? அப்படியானால் வேலைசெய்யுங்கள்.” வேலை செய்து, இந்த மாதிரி நம்மிடத்தில் வந்து போகிற தேவனுடைய ஊழியர்களுக்குக் கொடுக்கத்தக்க பொருள் நம் கைகளிலே இருக்க வேண்டும். "நம்முடையவர்களும் கனியற்றவர்களாயிராமல் நற்கிரியைகளைச் செய்யப் பழகட்டும்."

தொழிலுக்குரிய இடம் — பொறுப்பு. ஒரு தனி மனிதனைப்பற்றி, என்னைப்பற்றி, என்னுடைய குடும்பத்தைப்பற்றி, சபையைப்பற்றி, நாட்டைப்பற்றி.

1 தீமோத்தேயு 3:5, " ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?" என்றும், 5:8இல், " ஒருவன் தன் சொந்த ஜனங்களையும், விசேஷமாகத் தன் வீட்டாரையும் விசாரியாமற்போனால், அவன் விசுவாசத்தை மறுதலித்தவனும், அவிசுவாசியிலும் கெட்டவனுமாயிருப்பான்," என்றும் கூறுகிறது.

2 தெசலோனிக்கேயர் 3:6–12 வெறுமனே ஒரு தொழில் செய்து பொருளீட்டுவதைப்பற்றிய காரியம் இல்லை. அவன் ஒழுங்குள்ளவனா, ஒழுங்கற்றவனா என்பதைப்பற்றிய காரியம். பொருளீட்டாமல் மற்றவர்களுடைய பொருளாதாரத்தில் வாழ்வது ஒழுங்கற்றுத் திரிகின்ற வாழ்க்கை என்று அவர் சொல்லுகிறார்.

என் தேவைகளை நான் சுமக்கவில்லை என்றால், யாராவது ஒருவர் சுமந்துதான் ஆக வேண்டும். அப்படியே பரலோகத்திலிருந்து அது மன்னாவைப்போலப் பொழியப் போகிறதா? மன்னாதான் பொழிகிறது. ஆனால் அதற்குப் பின்பாக தேவபிள்ளைகள் அல்லது ஒரு சிலருடைய தியாகமும் பலியும் அங்கு இருக்கும்.

ரொம்ப divine-ஆகவும் heavenly-ஆகவும், "கர்த்தர் கொடுத்தார், பிரதர். கர்த்தர் கொடுத்தார்" என்று சொல்கிறோம். யார் மூலமாகக் கொடுத்தார்? தன்னை வருத்தி, தான் சேவித்ததிலிருந்து சகோதரன் அதைக் கொடுத்தார். இது நடந்தது. என்னுடைய B.E. junior ஒருவர், இந்துப் பின்னணியிலிருந்து இரட்சிக்கப்பட்டவர்; கொஞ்சம் IQ குறைவானவர். அப்போது நிறைய IQ குறைவானவர்களும் இருந்தார்கள். அவர்களுக்காக ஒரு சகோதரன் application போடுவார்; வேலைக்கு application போடுவார்; higher studies-க்கு application போடுவார். அவர் pen கொடுப்பார். அவர்கள் pen-ஐ வாங்கி எழுதுவார்கள். அப்புறம் வந்து கொடுத்த pen-ஐத் திருப்பிக் கேட்பார். ஏனென்றால், எத்தனை பேருக்குத்தான் pen கொடுப்பது? அவர் எங்கேயாவது தொலைத்துவிடுவார். “Brother, மற்றவரிடத்தில் வாங்கினால், பொறுப்பாக இருக்கவேண்டும். வாங்கின பேனாவைத் திருப்பிக்கொடுக்க வேண்டும்,” என்று சோவிழார். “Brother, நீங்கள  ஒன்றும் pen தரவில்லை. கர்த்தர் கொடுத்த pen அது.” இதுதான் joke. இந்த மனப்பான்மை அபூர்வமான மனப்பான்மை என்று நாம் நினைக்கிறோம். இது அபூர்வமான மனப்பான்மை அல்ல. அது தேவனுடைய மக்களிடத்தில் இருக்கிறது. யாராவது ஒருவர் சுமக்கின்றார்கள். எனவே நமக்கு அந்த உணர்வு வர வேண்டும்.

யாராவது ஒருவர் சுமக்கின்றார்கள். எனவே நமக்கு அந்த உணர்வு வர வேண்டும்.

நல்ல உள்ளமும் உடலும் உள்ளவனாய் நான் இருக்கின்றேன். நான் என்னுடைய அழைப்பை நிறைவேற்றுவதற்காக எந்தத் தொழிலுமே செய்யவில்லை என்றால், அப்பொழுது நான் யோசித்துப் பார்க்கிறேன். இந்த இரண்டு பேரில் தொழில் செய்து பொருளீட்டுவதற்கு யாருக்கு அதிகமான திராணியும் திறமையும் இருக்கிறது? நம்மில் able-bodied, able-minded people should work.

பிறர்மேல் சுமத்துவது அன்பல்ல. கூடுமானால், பிறருடைய பலவீனங்களின் சுமைகளை நாம் சுமக்க வேண்டும். இப்படி நம் சொந்தக் கைகளினாலே வேலை செய்து, நாம் பலவீனரைத் தாங்கிக்கொள்ள வேண்டும்.

நம் அழைப்பை நிறைவேற்றுவதற்காக நாம் நம் தொழிலைச் செய்கிறவரை, கர்த்தர் நாம் செய்கிற தொழிலையும் ஆசீர்வதிப்பார். இது prosperity gospel. We believe in prosperity gospel—prosperity which comes to us in a godly way.

தேவனுக்கு உகந்த வழியிலே வருகிற செழிப்பை நாம் உபதேசிக்கிறோம். நாம் செழிப்பிற்கும் வளத்திற்கும் எதிராளிகள் அல்ல. மந்திரவாதிகள்போல, கிளி ஜோசியக்காரர்கள்போல, குடுகுடுப்பைக்காரர்கள்போல, "செழிப்பு வருகிறது, செழிப்பு வருகிறது" என்று சொல்வதற்குத்தான் நாம் எதிராளிகளே தவிர.

ஒரு நல்ல கீர்த்தனை உண்டு:

"கவலைப்படாதே மகனே, கவலைப்படாதே,
உற்ற பிதா நமக்குண்டு, அவர் குறைவற்ற செல்வம் நமக்குண்டு.
உத்தம வேலையைக் கைக்கொண்டு செய்ய, உனக்கென்ன குறை?"

இது செழிப்பின் நற்செய்தியா, இல்லையா? நிச்சயமாக.

நாம் தேவனுடைய மக்கள். அவருடைய உடன்படிக்கையின் மக்கள். அவருக்குப் பயந்து, அவருடைய உடன்படிக்கையின் வழிகளிலே நடக்கிறோம். நம்முடைய அழைப்பை நிறைவேற்றுவதற்காக நாம் ஒரு தொழிலிலே ஈடுபடுகிறோம். நிச்சயமாக தேவன் நாம் கையிட்டுச்  செய்கின்ற தொழிலை ஆசீர்வதிப்பார். நிச்சயமாக தேவனுடைய மக்களுடைய தொழிலை தேவன் ஆசீர்வதிப்பார். இது prosperity gospel. We believe in prosperity gospel—prosperity which comes to us in a godly way.

சில சமயங்களில் தோல்வி வருவதற்கு காரணம், தேவன் நம்மை ஆசீர்வதிக்காதது அல்ல. சில கோட்பாடுகளை நாம் மீறியிருப்போம். ஆகவே தோற்றோம் என்றால் உடனே கைவிட்டுவிடக் கூடாது. ஏன் தோல்வி வந்தது என்று விசாரித்து, தோல்விக்கு மூலகாரணததை நாம் சரிசெய்ய வேண்டும்.

பவுல் தன் அப்போஸ்தல அழைப்பை நிறைவேற்றுவதற்காகக் கூடாரத் தொழில் செய்தார். கூடாரத் தொழிலில் வெற்றி பெற அப்போஸ்தல அழைப்பைப் பயன்படுத்திக்கொள்ளவில்லை.

அடுத்தது, தொழில் செய்வதில் கவனிக்க வேண்டியவைகள்.

திறமை. இதை வாசித்து முடித்துவிடுகிறேன். சிறு வயது தொடங்கி அதற்குரிய திறமையை வளர்ப்பது. "ஒருவன் தன் தொழிலிலே திறமையுள்ளவனாய் இருக்கக் கண்டால், அவன் ஊர் பேர் தெரியாத மனிதர்களுக்கு முன்பாகப் பணிவிடை செய்ய மாட்டான்; அரசர்களுக்கு முன்பாகப் பணிவிடை செய்வான்." தமிழிலே, "நீசர்களுக்கு முன்பாக நிற்க மாட்டான்" என்று இருக்கிறது.

இரண்டு, உழைப்பு. "தேவன்தான் ஆசீர்வதிப்பார் என்று சொல்லிவிட்டீர்களே! அதற்குப்பின் உழைப்பு எதற்கு!" என்று கேட்கலாம். ஒருமுகப்படுத்தப்பட்ட தீவிர உழைப்பு. இதெல்லாம் நான் ரொம்ப சிந்தித்து போட்டிருக்கிறேன். ஒருமுகப்படுத்தப்பட்ட தீவிர உழைப்பு. "நீ உன் திறமையை எல்லாம் வளர்க்க வேண்டாம். காணிக்கை ஒன்று கொடு ஐயாவுக்கு. ஜீ, பூம், பா! நீங்கள் வந்து பணக்காரங்களாய் இருப்பீர்கள்." இல்லை.

தூய்மை. நேர்மையான, நீதியான, தூய்மையான வழிகளிலே அந்தத் தொழில் செய்யப்பட வேண்டும்.

சுருக்கம். தேவைகளை எவ்வளவு சுருக்க முடியுமோ அவ்வளவு சுருக்குதல். பிலிப்பியர் 4ஆம் அதிகாரம்.

சேமிப்பு. முதலீடு செய்வதற்காக.

கடைசியாக, ஈகை. தேவனுடைய பணிக்கான ஈகை. குறைந்தது பத்தில் ஒன்று. பழைய உடன்படிக்கையின்கீழ் தேவனுடைய மக்கள் பத்தில் ஒன்றைக் கொடுப்பது திருச்சட்டமாக இருந்தது. புதிய உடன்படிக்கையில் இந்தத் திருச்சட்டம் அவர்களைக் கட்டாது. ஆனால் ஆவிக்குரிய சட்டமோ இதைவிட உயர்வானதாக இருக்க வேண்டும். குறைந்தது தேவனுடைய மக்கள் தங்கள் வருவாயில் பத்தில் ஒன்றை தேவனுக்கென்றும், தேவனுடைய சபைக்கென்றும், தேவனுடைய நற்செய்திக்கென்றும், பலவீனர்களுக்கென்றும் ஒதுக்கி வைக்க வேண்டும்.

ஆனால் தசமபாகம், பத்தில் ஒன்றைப் பற்றி உங்கள் நிலைப்பாடு என்ன என்பதை நான் தெளிவுபடுத்திவிட்டேன். சரி, என்னுடைய சூழ்நிலைகள் பத்தில் ஒன்று கொடுக்க விடாது. நான் என்ன செய்ய வேண்டும்? இருபதில் ஒன்று கொடுங்கள். நான் பத்தில் ஒன்றைக் கொடுக்கவில்லை என்றால், கர்த்தர் உங்களைத் தண்டிப்பார் என்று சொல்லவில்லை. நான் ஒரு உயர்ந்த தரத்தை வைக்கிறேன். நீங்கள் சரியாகப் புரிந்துகொள்ள வேண்டும்.

ஆனால் மனதார நாம் ஒரு பங்கை ஒதுக்க வேண்டும் என்று தீர்மானிக்கவில்லை என்றால், ஒருநாளும் ஒன்றையும் கொடுக்க மாட்டோம். "கர்த்தர் என்னை ஆசீர்வதித்தபிறகு நான் உங்களுக்குத் தருகிறேன், பிரதர்." அப்படியா? "நீ தர மாட்டேன்" என்று சொல்வதற்கு அது ஒரு euphemism.

உண்மையுள்ள மனிதன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான். எவன் நீர்ப்பாய்ச்சுகிறானோ, அவனுக்கு நீர்ப்பாய்ச்சப்படும். 2 கொரிந்தியர் 8:2-ஐ நீங்கள் ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள். நம்முடைய தரித்திரம் கொடியதாக இருக்கலாம். ஆனால் நாம் பரிபூரண சந்தோஷத்தினாலே உதாரத்துவமாய்க் கொடுக்க எப்போதும் கற்றுக்கொள்ள வேண்டும்.

சில சமயங்களில் நான் இப்படிக்கூட நினைப்பேன். நம்முடைய பிள்ளைகளுக்குக்கூட ஒரு பத்து ரூபாய் கையில் கொடுத்து, "இது காணிக்கை நேரம். போய், பெட்டியிலே போட்டுவிட்டு வா" என்று சொல்ல வேண்டும். பாரம்பரிய சபைகளிலே செய்வதுபோல, அந்தப் பழக்கத்தை அவர்களுக்குப் பழக்குவிப்பதற்காக அப்படிச் செய்ய வேண்டுமோ என்றுகூட நான் நினைப்பது உண்டு.

அந்தக் கடைசி quotation முக்கியமானது:

"Earn all you can, save all you can, and give all you can."

— John Wesley, The Use of Money

எவ்வளவு முடியுமோ அவ்வளவு சம்பாதி. எவ்வளவு முடியுமோ அவ்வளவு சேமி. சேமித்ததை எல்லாம் நீ கொடு.

அடுத்தது, அழைப்பை நிறைவேற்றுவதில் கவனிக்க வேண்டியவைகள். காலமே அடையாளம் காணுதல். காலமே என்றால் என்ன பொருள்? Early. "காலமே தேவனைத் தேடு" என்ற ஒரு பாடல் உண்டு. கடந்த 450 ஆண்டுகளிலே தேவனுடைய மக்கள் தேவன்மேல் அன்புகொண்டு எந்தப் பாடல்களையும் கவிதைகளையும் எழுதவில்லை; நாங்கள்தான் முதல் முறையாகப் பாடலை எழுதுகிறோம் என்பதுபோல் இருக்கிறது. “காலமே தேவனைத் தேடு” என்ற பாடல் என்னுடைய மக்களுக்குத் தெரியாமல் இருப்பது என்னை இன்னும் வருத்தத்திற்கு உள்ளாக்கும். அல்லது நான் சொன்னதுபோல, “உற்ற பிதா நமக்குண்டு, அவர் குறைவற்ற செல்வம் நமக்குண்டு” போன்ற இந்த அருமையான கவிதைகளையும் பாடல்களையும் எங்கே பெறுவோம்? நாம் 450 ஆண்டுகால கிறிஸ்தவப் பாடல் கருவூலங்களையும், பாடல் பொக்கிஷங்களையும் பேணத் தெரியாத ஒரு தலைமுறையாக மாறிவிட்டோமோ என்று நான் அஞ்சுகின்றேன்

அர்ப்பணம், தத்தம், கையளிப்பு செய்தல். "இதுதான் என்னுடைய அழைப்பு" என்று.

தொடர்ச்சியான பயிற்சி, தேர்ச்சி, திறமை. 1 தீமோத்தேயு 4:7 தெரியும்:

"Train yourself to be godly."

கூட்டு வட்டிபோல காலமே தொடங்கு. சிறுகச் சிறுகச் செய். இடைவிடாமல், நேர்கோட்டில், இடதுபுறம் வலதுபுறம் திரும்பாமல் செல்லுதல்.

ஒத்த அழைப்புடையவர்களோடு இணைந்து செய்தல். 1 சாமுவேல் 17:34 நமக்குத் தெரியும். கோலியாத்தைச் சந்திப்பதற்கு, கோலியாத்தோடு போரிடுவதற்கு தாவீது போகும்போது, சவுல் சொல்கிறான், "நீ சின்ன பையன்." உண்மையிலேயே அவன் சின்ன பையன். Census எடுக்க வந்தால் அவனுடைய பெயரைக்கூட சேர்க்க மாட்டார்கள் இஸ்ரவேலில். அவனுடைய அப்பா அவன் பெயரைச் சேர்க்கவில்லை. அந்த அளவுக்கு சின்ன பையன்.

"ஒரு சிங்கம் வந்தது, ஒரு கரடி வந்தது; ஒரு ஆட்டுக்குட்டியைக் காப்பாற்றுவதற்காக சிங்கத்தையும் கரடியையும் அடித்துப் போட்டேன். சிங்கத்தையும் கரடியையும் அடித்துப் போட உதவி செய்த கர்த்தர், இந்த விருத்தசேதனமில்லாத மனிதனையும் அடித்துப் போட எனக்கு உதவி செய்வார்."

ஆகவே, தாவீது இஸ்ரவேலின் ராஜாவாவதற்கு எப்போது தொடங்கி அவன் அந்த அழைப்பை நிறைவேற்றத் தொடங்கியிருந்தான்? முப்பதாவது வயதில் எப்ரோனிலே ராஜாவாக மாறியபிறகு அல்ல. எவனும் கவனிக்காத ஒரு சிறு வயது தொடங்கி, அவன் ராஜா என்று தன்னுடைய அழைப்பை நிறைவேற்றத் தொடங்கியிருந்தான்.

புதிய வானம், புதிய பூமியிலும் நம்முடைய அழைப்பும் தொழிலும் ஒன்றாக இருக்கும். அல்லேலூயா! அங்கே நம்முடைய அழைப்பை நிறைவேற்றுவதற்காக நாம் தொழில் ஒன்று தனியாகச் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. நம்முடைய அழைப்பே நம்முடைய தொழிலாக இருக்கும்.

சிலர் நினைக்கலாம்: "புதிய வானம், புதிய பூமியில் அழைப்பு, தொழில், வேலை எல்லாம் இருக்கிறதா? நான் angels மாதிரி சிறகுகள் வைத்து, butterfly மாதிரி அடித்துக்கொண்டு பாடிக்கொண்டுதானே இருப்போம்?"

குமாரனுடைய அரசாங்கத்தின் பெருக்கத்திற்கு முடிவிராது. அவர் ஆளுகை செய்வார். அவருடைய அரசாங்கத்திற்கு முடிவிராது. அவருடைய ஊழியக்காரர்கள் அவரைச் சேவிப்பார்கள். ஏசாயா 9:7 வாசித்துப் பாருங்கள். புதிய வானம், புதிய பூமியின்கீழ் நாம் செயலாற்றுவோம். நமக்குப் பொறுப்புகள் கொடுக்கப்பட்டிருக்கும். பாடுவதைத்தவிர மற்ற வேலைகளும் இருக்கும். அல்லேலூயா! பாடவும் செய்வோம். ஆனால் பாடிக்கொண்டே இருப்பது மட்டுமல்ல. தேவன் இந்த வார்த்தைகளை நமக்கு ஆசீர்வதிப்பாராக. ஆமென். சிறுவயது முதற்கொண்டு நீங்கள் ஜெபியுங்கள்: ஆண்டவரே, என் அழைப்பு என்ன?”

ஒரு சபையை நடத்துவது அழைப்பு. பிள்ளைகளை வளர்ப்பது அழைப்பு. புத்தகங்களை எழுதுவது அழைப்பு.

ஒரு எச்சரிக்கையுடன் முடித்துவிடுகிறேன். தேவனுடைய மக்கள் சில சமயங்களிலே அழைப்பைப்பற்றிய எந்த அறிவும் இல்லாததினாலே—தேவனுடைய மக்களுக்கு மட்டுமல்ல, நடத்துகின்ற தேவனுடைய மக்களுக்கும் அப்படிப்பட்ட அறிவு இல்லாததினாலே—எனக்கு எது பிடிக்கிறதோ அதற்கு நான் எல்லாரையும் இழுத்துக்கொள்வேன். அவர்களுடைய அழைப்பு என்ன என்பதை அவர்கள் அறிந்துகொள்வதற்கு உதவி செய்யாமல் நடத்துகின்றவர்கள் இந்த முறையிலே அவர்களை இழுத்துக்கொள்கிறார்கள்.

நடத்துகின்றவர்களுடைய, பெற்றோர்களுடைய ஒரு பிரதானமான வேலை, ஒவ்வொருவருக்குள்ளும் தேவன் கொடுத்திருக்கின்ற கிருபைகள் என்ன? கொடைகள் என்ன? திறமைகள் என்ன? இவர்களை replace பண்ணுவது எந்தத் துறையில் மிகக் கடினம்? என்பதை அறிந்து, அதை வளர்த்தெடுப்பதே. நாம் அதை விசாரிக்க வேண்டும். இதைத் தந்தால்தான் ஆயிற்று என்று நாம் அடம்பிடிக்கப்போவதில்லை. ஆனால் அந்த possibility-ஐ நாம் தேவனுக்கு முன்பாக consider பண்ணுவதற்கு முந்தியே, அந்த வாசலை அடைத்துவிடக்கூடாது. தேவன் தாமே தொடர்ந்து உங்களுக்கு கிருபைகளைத் தருவாராக. ஆமென்.

.