தேவ அறிவு
"ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசுகிறிஸ்துவையும் அறிவதே நித்தியஜீவன் (யோவா 17:3). நாம் தேவனை அறிய வேண்டும் என்பதே அவர் நம்மோடு இடைப்படுவதின் மேலான நோக்கம். இது மேலோட்டமான ஏட்டறிவல்ல; உள்ளான உற்றறிவு. இதுவே பவுலின் ஆவல் (பிலி. 3:8, 10, 11). இதுவே பரிசுத்தவான்களுக்கான அவருடைய ஜெபம் (எபே. 1:17). மனித குமாரன் என்ற முறையில் இயேசுவினுடைய வாழ்க்கையின் எல்லா விவரங்களுக்கும் இதுவே ஆதாரம்: பேசுவதா, அமைதியாக இருப்பதா? செய்வதா, செய்யாமல் இருப்பதா? போவதா, போகாமல் இருப்பதா? சந்திப்பதா, சந்திக்காமல் இருப்பதா? விட்டுக்கொடுப்பதா, மறுப்பதா? வெளிக்காண்பிப்பதா மறைந்துகொள்வதா? உண்பதா உபவாசிப்பதா? இதில் தேவனை அறிகிறோமா என்பதே தேவ மக்களுடைய வாழ்க்கையின் அடிப்படைச் சட்டமாக இருக்க வேண்டும். ஆராதனைகள், வேதபாடங்கள், சிறப்புக் கூட்டங்கள், மாநாடுகள், ஊழியங்கள் ஆகியவைகள் இருந்தும் தேவனை மிகக் குறைவாக அறிந்த கிறிஸ்தவர்கள் அதிகம். தேவமக்கள் தேவ அறிவில் வளர்கிறார்களா, அவர்கள் குணம் கிறிஸ்துவுக்கேற்றாற்போல் மாறுகிறதா என்பதே நம் பணிவிடையின் மதிப்பைத் தீர்மானிக்கும்