இந்தச் செய்திகள் ஆரவாரமான "பலத்த பெருங்காற்று" அல்லது புரட்டிப்போடும் "நிலநடுக்கம்" அல்லது சுட்டெரிக்கும் "அக்கினி"போன்றவை அல்ல. மாறாக, "அமர்ந்த மெல்லிய சத்தம்"போன்றவை, கோடைகாலத் தென்றல்போன்றவை. ஆகையால், வாழ்வின் இன்ப துன்பங்களைக் கொஞ்சம் ஒதுக்கிவைத்துவிட்டு, உங்கள் வாழ்க்கையைத் தேவனுக்கேற்றாற்போல் மாற்றவல்ல இந்த மென்மையான குரலைக் கேட்கும்படி உங்களை வேண்டுகிறேன். அவருடைய குரலை இனங்காணும் திறன் உங்களுக்கு இருந்தால், அந்தக் குரலைக் கேட்டு நீங்கள் கீழ்ப்படிந்தால், உங்கள் வாழ்க்கை தேவனைப் புகழ்ந்து பாடும் பாடலாக மாறும். கூச்சல் நிறைந்த இந்த உலகத்தில் அவருடைய ஆடுகள் அவருடைய அமர்ந்த, மெல்லிய குரலைக் கேட்கக் கற்றுக்கொள்ள வேண்டும்..