நித்திய ஜீவனும் மறுவுருவாதலும்
Transcribed from a message spoken in Chennai
By Milton Rajendram
இது நாம் நன்றாக அறிந்த ஒரு சத்தியம், நன்றாக அறிந்த ஓர் உண்மை. ஆனால், நான் சில கேள்விகள் கேட்டு, பதில்களை வரவழைத்து, அதை மீண்டும் ஒருமுறை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.
மனிதன் – தேவனை வெளியாக்க உண்டாக்கப்பட்டவன்
தேவனுடைய குறிக்கோள், தேவனுடைய திட்டம் ஒரு பூரணமனிதன். தேவனுடைய நோக்கம், தேவனுடைய திட்டம், தேவனுடைய இருதய விருப்பம் அவருடைய இருதயத்திற்கு ஒத்த ஒரு பூரணமனிதன். மனிதன் தேவனை அறிந்து, தேவனை வெளியாக்க வேண்டும் என்பதற்காக தேவன் மனிதனைப் படைத்தார், உண்டாக்கினார்.
Man is God's Idea. மனிதன் தேவனுடைய ஓர் எண்ணக்கருத்து. ஏன் தேவன் மனிதன் என்ற ஓர் உயிரியைப் படைக்கவேண்டும், உண்டாக்க வேண்டும் என்று குறிக்கோள் கொண்டார் என்றால், தம்மை அறிவதற்கும், தம்மை வெளியாக்குவதற்கும் ஒரு உயிரி வேண்டும் என்று தேவன் சித்தம் கொண்டார். தேவனை அறிவதற்கும், தேவனை வெளியாக்குவதற்கும். God intended that He needs a creature to know Him and express Him. இவைகளைக் குறித்துக்கொள்ளுங்கள்; இவைகளெல்லாம் மிக ஆழ்ந்த கேள்விகளுக்கான பதில்கள்.
நீங்கள் சில கேள்விகளைக் கேட்க வேண்டும். தேவன் மனிதனை அவருடைய சாயலின்படி படைத்தார் என்பதற்கு என்ன பொருள்?. இதற்குப் பொருள் இதுதான் என்று எந்த மனிதனும் உறுதியாகவும், இறுதியாகவும் சொல்ல முடியாது.
"தேவன் மனிதனை அவருடைய சாயலின்படி படைத்ததால் மனிதன்தான் கடவுள்," என்று சில மதவாதிகள் சொல்வார்கள். "தேவன் மனிதனை அவருடைய சாயலின்படி படைத்தால் மனிதன் ஒரு கொள்கலம்; தேவன் மனிதன் கொண்டபொருளாக இருக்கவேண்டும் என்று விரும்புகிறார்," என்று சில தத்துவவாதிகள் சொல்வார்கள். இப்படி பலர் பலவிதமாய் சொல்வதுண்டு. இந்தக் கேள்விக்குப் பதில் சொல்வது, பதில் கண்டுப்பிடிப்பது எளதல்ல.
ஆனால், ஒன்று சொல்ல முடியும், தேவனுடைய எல்லாப் படைப்புகளிலும் மனிதன் மிகவும் சிறப்பானவன். மனிதன் மிகவும் குறிப்பிடத்தக்கவன். தேவன் மற்ற படைப்போடு கொண்டுள்ள உறவு வேறு, மனிதனோடு கொண்டுள்ள உறவு வேறு.
மனிதனை ஒரு சிறப்பான, பிரத்தியேகமான, நோக்கத்தோடும், திட்டத்தோடும், குறிக்கோளோடும் தேவன் உண்டாக்கினார், தேவன் படைத்தார். ஆகையால் ஆதியாகமம் 1:26இல் சொல்லப்பட்டுள்ளபடி "தேவன் மனிதனைத் தம் சாயலின்படியும், தம் ரூபத்தின்படியும் படைத்தார், சிருஷ்டித்தார்," என்பதை "மனிதன் தம்மை அறிய வேண்டும், தம்மைப் பெரிய அளவில், விரிவான அளவில் வெளியாக்க வேண்டும் என்பது தேவனுடைய இருதயத்தின் விருப்பமும், வாஞ்சையும், பிரியமுமாய் இருக்கிறது," என்று புரிந்துகொள்கிறோம். It is God’s heart's desire and good pleasure that He should be known, and He should be expressed in an enlarged way. இந்த நோக்கத்தோடு, இந்தத் திட்டத்திற்காக தேவன் மனிதனைப் படைத்தார்.
தேவனை அறிதல் - புறம்பான, உள்ளான தடயங்கள்
எல்லா மனிதர்களும் தேவனை அறிவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது. தேவனை ஏதோவொரு விதத்திலே அறிந்துகொள்கிற capacity, திறன், திராணி எல்லா மனிதர்களுக்கும் உண்டு என்று ரோமர் ஒன்றாம் அதிகாரத்திலே நாம் வாசிக்கின்றோம். God’s invisible nature, eternal power and divinity have been clearly seen in His handiworks. " தேவனைக்குறித்து அறியப்படுவது அவர்களுக்குள்ளே வெளிப்பட்டிருக்கிறது; தேவனே அதை அவர்களுக்கு வெளிப்படுத்தியிருக்கிறார். எப்படியென்றால், காணப்படாதவைகளாகிய அவருடைய நித்திய வல்லமை தேவத்துவம் என்பவைகள், உண்டாக்கப்பட்டிருக்கிறவைகளினாலே, உலகமுண்டானதுமுதற்கொண்டு, தெளிவாய்க் காணப்படும்; ஆதலால் அவர்கள் போக்குச்சொல்ல இடமில்லை" ரோமர் 1:19, 20
தேவனுடைய காணப்படாத தேவத்துவம், அவருடைய வல்லமை ஆகியவைகளைக் காணப்படுகிற இந்த படைப்பிலே to some degree ஒரளவிற்கு எல்லா மனிதர்களும் காணமுடியும். ஆகையால், எந்த மனிதனும் "எனக்குத் தேவனைத் தெரியாது," என்று போக்குச் சொல்வதற்கு இடமில்லை. தேவனை அறிவது மனிதர்களுக்குள்ளே வெளிப்படுத்தப் பட்டிருக்கிறது என்று பவுல் ரோமருக்கு எழுதும்போது சாதிக்கிறார்.
"தேவனை அறிவதற்கென்று தேவன் இந்த உலகத்திலே, இந்தப் பிரபஞ்சத்திலே, ஒரு hint விட்டுவைக்கவில்லை," என்று மனிதன் சொல்லவே முடியாது. There is more than a hint. ஆசிரியர்கள் மாணவர்களிடம் கேள்விகள் கேட்கும்போது கஷ்டமான கேள்விகளுக்கு hint கொடுப்பார்கள்.
சில கேள்விகளுக்குப் பதில்கள் ஏறக்குறைய முந்தின கேள்வியிலோ, பிந்தின கேள்வியிலோ இருக்கும். அந்தக் கேள்விக்குப் பதில்கள் முந்தின கேள்வியிலோ, பிந்தின கேள்வியிலோ இருக்கும் என்பதை recognize பண்ணுவதற்கு, குறைந்தபட்சம், புத்தகத்தை ஒருதடவையாவது வாசித்திருக்க வேண்டும். அதுபோல, தேவன் தம்மைத் தடவியாகிலும் கண்டுபிடிக்குமாறு போதுமான clues இந்த மனுக்குலத்திற்கு இந்தப் பிரபஞ்சத்திலே விட்டுவைத்திருக்கிறார் என்று அப்போஸ்தலர் 17ம் அதிகாரத்தில் "கர்த்தராகிய தம்மை அவர்கள் தடவியாகிலும் கண்டுபிடிக்கத்தக்கதாகத் தம்மைத் தேடும்படிக்கு அப்படிச் செய்தார்; அவர் நம்மில் ஒருவருக்கும் தூரமானவரல்லவே," (17:27) என்று அத்தேனே பட்டணத்தில் பேசும்போது பவுல் கூறுகிறார்.
அவர் நம்மில் ஒருவருக்கும், எந்த மனிதனுக்கும், தூரமானவர் அல்ல. தம்மைத் தடவியாகிலும் கண்டுபிடிக்குமாறு அவர் தடயங்களை விட்டுச் சென்றிருக்கிறார். இது நல்ல வார்த்தை clue, hint.
"எந்தத் தடயமுமே இல்லை, கண்ணைக் கட்டிக் காட்டில் விட்டுவிட்டு, நீ கடவுளுக்குப் பயந்து வாழவில்லை என்று அவர் குற்றங்கண்டுப்பிடிக்கிறார்," என்று எந்த மனிதனும் தேவனைக் குற்றம் சாட்ட முடியாது. ஆனால் இந்தத் தளத்திலே தேவனை அறிவதற்காக அவர் மனிதனை உண்டாக்கவில்லை. இந்த தளத்திலும் தேவனை அறியலாம், இதுவொரு புறம்பான தளம். Very external sphere.
யோபுவின் அனுபவம் – வெளியேயிருந்து உள்ளே
உள்ளான தளத்திலே மனிதன் தேவனை அறியவேண்டும் என்பதுதான் தேவனுடைய நோக்கம், திட்டம். யோபு 42ஆம் அதிகாரம் 5ஆம் வசனம் நமக்குத் தெரியும், "என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்; இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது." "என் காதினால் உம்மைக்குறித்துக் கேள்விப்பட்டேன்," என்பது secondhand knowledge. "இப்பொழுதோ என் கண் உம்மைக் காண்கிறது," என்பது first hand knowledge. முந்தையது புறம்பான அறிவு, பிந்தையது உள்ளான அனுபவ அறிவு.
முந்தையது objective knowledge, பிந்தையது subjective, personal, experiential knowledge. தேவன் மனிதனைப் படைத்தது மனிதன் புறம்பான, படைக்கப்பட்டவைகளைக்கொண்டு by detection அவரைக் கண்டுபிடித்துவிட வேண்டும் என்பது மட்டுமல்ல, அது ஒரு தடயம். ஆனால், இந்தத் தடயம் தேவனை நோக்கி கைகாட்ட வேண்டும், சுட்டிக்காட்ட வேண்டும். தேவனை உள்ளான விதத்திலே, அனுபவத்திற்குரிய விதத்திலே, அறிய வேண்டும் என்பதுதான் யோபு 42ஆம் அதிகாரம் 5ஆம் வசனத்தின் கருத்து. இதை நன்றாய் மனதில் வைத்துக்கொள்ள வேண்டும்.
யோபு தேவனைத் தெரியாதவன் அல்ல. இந்த முழு வேதாகமத்திலும் யோபுவின் புத்தகத்தைப்போல தத்துவங்கள் நிறைந்த புத்தகம் வேறொன்றும் இல்லை. வேதாகமத்திலே முதலாவது எழுதப்பட்டப்புத்தகம் இது. "எப்படிக் கண்டுப்பிடித்தீர்கள்?" என்று சிலர் கேட்கலாம். தடயம் ஏற்கனவே கேள்வியிலே இருக்கிறது. மோசேயைக்குறித்தோ, நியாயப்பிரமாணத்தைக்குறித்தோ, பலிகளைக்குறித்தோ, காணிக்கைகளைக்குறித்தோ யோபுவின் புத்தகத்தில் ஒன்றும் இல்லை. இவைகளெல்லாம் உருவாவதற்கு முந்தியே யோபு என்ற மனிதன் வாழ்ந்தான். அந்த மனிதனுக்குத் தேவனைப்பற்றிய அறிவு இவ்வளவு உயர்வாக இருந்தது.
ஆகவேதான் 41 அதிகாரங்களிலே அவன் தேவனைக்குறித்துத் தன் நண்பர்களிடத்தில் வாதிடுகிறான். ஏறக்குறைய இப்படிச் சொல்கிறான். "தேவன் எங்கிருக்கிறார் என்று சொல்லும்? அவரிடத்தில் நான்கு கேள்வி நறுக்கென்றுக் கேட்கவேண்டும்." அப்படி வசனம் இருக்கிறதா? இருக்கிறது யோபுவிலே. ஆனால், இந்தப் புறம்பான தளத்திலே அவனுடைய எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தாலும் யோபு தேவனை அறியமுடியாது என்று தேவனுக்குத் தெரியும்.
தேன் இனிப்பானது என்று கவிதைவழியாக, இலக்கியங்கள்வழியாக, படங்கள்வழியாக, காவியங்கள்வழியாக 41 அதிகாரங்களிலே சொன்னாலும் சரி, அது ஒரு துளித் தேனைத் தொட்டுச் சாப்பிடுவதற்கு ஈடானது அல்ல. தேன் இனியது என்று பக்கம் பக்கமாகக் கவிதைகள் எழுதலாம். 42ஆம் அதிகாரத்திலே தேவன் தம்மைப்பற்றிய ஒரு subjective ஆன firsthand knowledge ஐக் கொடுக்கும்போது, "ஆகையால் நான் என்னை அருவருத்து, தூளிலும் சாம்பலிலும் இருந்து மனஸ்தாபப்படுகிறேன்," என்றான்
ஆகவே ஒர் உயிரி அவரை இப்படிப்பட்ட உள்ளான விதத்திலே அறிந்துகொள்ள வேண்டும். அறிந்து தேவனை வெளியாக்க வேண்டும் என்பது தேவனுடைய நோக்கம், தேவனுடைய திட்டம். இப்போது என்னுடைய முதலாவது குறிப்பிற்கு வருவோம்.
1. தேவன் ஒரு மாபெரும் உயிரி - இவரை அறிய நித்திய ஜீவன் தேவை
He is the greatest Living person. Living being. உயிர்வாழ்கிற நபர். உயிர் வாழ்கிற ஒரு நபரையோ அல்லது ஓர் உயிரியையோ நாம் உள்ளான, அனுபவம்சார்ந்த inward experiential விதத்திலே, நாம் அறிந்துகொள்ள வேண்டுமென்றால், அந்த உயிரிக்குள் இருக்கிற அதே உயிரை, அதே ஜீவனை, நாமும் பெற்றிருக்க வேண்டும். மனித உயிரி தாவர உயிரியைவிட பலகோடி மடங்கு உயர்ந்தது. ஆனால், இந்தத் தாவரம் இந்த மண்னை அனுபவித்து அறிவதுபோல நாம் இந்த மண்னை அனுபவித்து அறிய முடியுமா?. என்னதான் நாம் இரண்டு வருஷம் இந்தக் காலை மண்ணிற்குள் புதைத்திருந்தாலும், "இந்த மண்ணிற்குள் புரோட்டின் இருக்கிறது, கால்சியம் இருக்கிறது, நிலநீர் இருக்கிறது," என்று இந்தக் கால் அறிய முடியுமா? அறிய முடியாது.
ஆனால், ஒரு தாவரத்தின் உயிர் இந்த மண்ணிலிருக்கிற எல்லா ஊட்டச் சத்துக்களையும், எல்லாச் செல்வங்களையும், எல்லா வளங்களையும் அறிய முடியும். அதில் எவ்வளவு சுவையான காரியங்கள் எல்லாம் இருக்கிறது. "உயிர் அல்லது ஜீவன் என்பது நம்மைச் சுற்றியிருக்கிற சூழலோடு நம்மைத் தொடர்புப்படுத்துகிறது அல்லது உறவுபடுத்துகிறது," " என்று ஒரு சகோதரர் சொல்லுகிறார். உயிர் இருக்கிறவரைதான் நம்மைச் சுற்றியிருக்கிற சூழலோடு நமக்குத் தொடர்புண்டு. உயிர் இல்லையென்றால் நம்மைச் சுற்றியிருக்கிற சூழலோடு நமக்குத் தொடர்பில்லை. சூழல் என்பதிலே மற்ற உயிரிகள், மற்ற மனிதர்கள் எல்லாரும் அடங்குவார்கள்.
தேவை தேவனுடைய ஜீவன்
ஆகவே, தேவனை அறிய வேண்டும், தேவனை வெளியாக்க வேண்டும் என்றால் அடிப்படையானது தேவனுடைய உயிர் அல்லது தேவனுடைய ஜீவன் நமக்குள்ளிருக்க வேண்டும். மனிதன் தேவனை அறிய வேண்டும், தேவனை வெளியாக்க வேண்டும் என்றால் அடிப்படை requirement, basic requirement மனிதன் தேவனுடைய ஜீவனை உடையவனாக இருக்க வேண்டும். இது மிகப்பெரிய கூற்று.
இந்த மண் என்ற சூழலை நாம் அறிய வேண்டுமென்றால் நாம் தாவரத்தின் ஜீவனை உடையவர்களாக இருக்கவேண்டும். தண்ணீரிலுள்ள பிராண வாயுவை, ஆக்ஜீசனை, அறிய வேண்டுமென்றால் நாம் நீரிலுள்ள ஜீவனை உடையவர்களாக இருக்க வேண்டும். தேவனை அறிய வேண்டும் என்றால் தேவனுடைய ஜீவனை நாம் உடையவர்களாக இருக்க வேண்டும்.
இது எந்தவிதத்திலும் நம்முடைய அறிவுக்கு முரணானது அல்ல. ஆகவே, தேவனுடைய ஆதி எண்ணம் God’s original thought மனிதன் தேவனுடைய ஜீவனைப் பெறவேண்டும், தேவனுடைய ஜீவனை உடையவனாக இருக்க வேண்டும். தேவனுடைய ஜீவனில் பங்குபெற வேண்டும், பங்குற வேண்டும் என்பது தேவனுடைய ஆதி எண்ணம், மூல எண்ணம். God’s original thought. "எந்த அடிப்படையிலே நீங்கள் சொல்ல முடியும்?," என்ற ஒரு கேள்வியை நீங்கள் நிச்சயமாக எழுப்ப வேண்டும். "தேவனை அறிவதற்கு ஒரு ஜீவன் வேண்டும்," என்று எந்த அடிப்படையிலே சொல்ல வேண்டும். "மனிதன் மனித உயிரைக்கொண்டு தேவனை அறிய முடியுமா?" என்றால் முடியாது.
ஏசாயா 55ஆம் அதிகாரத்திலே இந்த வாக்கியங்கள் உண்டு. "என் நினைவுகள் உங்கள் நினைவுகள் அல்ல; உங்கள் வழிகள் என் வழிகளும் அல்லவென்று கர்த்தர் சொல்லுகிறார். பூமியைப்பார்க்கிலும் வானங்கள் எப்படி உயர்ந்திருக்கிறதோ, அப்படியே உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும், உங்கள் நினைவுகளைப்பார்க்கிலும் என் நினைவுகளும் உயர்ந்திருக்கிறது."
ஓர் எறும்பின் எண்ணங்களோடும் வழிகளோடும் ஒப்பிடும்போது மனிதனுடைய எண்ணங்களும், வழிகளும் எவ்வளவு உயர்ந்தவை. "நான் ரொம்பப் பக்தியுள்ளவனாக வாழப்போகிறேன், என் உடலைக் கழுத்துவரைத் தண்ணீரில் புதைத்துக் கொண்டு யோகம் பண்ணப்போகிறேன்," என்று எறும்பு தீர்மானித்து விட்டது. உடனே அந்த எறும்பு இந்த மனிதனுடைய எண்ணங்களையும், வழிகளையும் தெரிந்துகொள்ள முடியுமா? அந்த எறும்பு முயற்சி எடுத்து கழுத்துவரைத் தண்ணீரில் நின்றுகொண்டு ஒவ்வொரு நாளும் குளிர் காலத்திலே நின்று ஜெபம் பண்ணுகிறது. ஆகையால், "எப்படியாவது என் எண்ணங்களையும், என் வழிகளையும் இந்த எறும்பிற்குள் நான் புகுத்திவிடவேண்டும்," என்றால் அது சாத்தியமா? அது சாத்தியம் இல்லை. அதைத்தான் ஏசாயா சொல்கிறார்.
"உங்கள் எண்ணங்களைப் பார்க்கிலும் என் எண்ணங்களும், உங்கள் வழிகளைப்பார்க்கிலும் என் வழிகளும் உயர்ந்தவை!" எவ்வளவு உயர்ந்தது? It is an unbridgeable gap. இப்போது நான் சொல்லப்போகிற இந்த வாக்கியம் மிகவும் முக்கியமான வாக்கியம்.
நித்திய ஜீவன்
யோவான் 17ஆம் அதிகாரம் 3ஆம் வசனம். நித்திய ஜீவன் என்றால் என்னவென்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து வரையறுக்கிறார். "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும் நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்." இந்த முழு வேதாகமத்திலும் மிக முக்கியமான வசனம் இது. ஜீவன் என்றால் புசிப்பது, குடிப்பது, சுவாசிப்பது என்பது நம்முடைய எண்ணம். உண்மைதான். புசிப்பது, குடிப்பது, சுவாசிப்பது, செயல்படுவது, இயங்குவது இவைகள் எல்லாம் கொண்டதுதான் ஜீவன். ஆனால் இந்த வாக்கியத்திலே ஆண்டவராகிய இயேசு சொல்கிறார், "ஒன்றான மெய்த்தேவனாகிய உம்மையும், நீர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதே நித்திய ஜீவன்."
இதனுடைய பொருள் என்ன? நித்திய ஜீவன் மட்டுமே தேவனையும், அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையும் அறிவதற்குரிய திறனை, திராணியை capacity ஐ மனிதனுக்கு வழங்குகிறது அல்லது எந்த உயிரிக்கும் வழங்குகிறது. நித்திய ஜீவன் இல்லையென்றால் தேவனையோ அவர் அனுப்பினவராகிய இயேசு கிறிஸ்துவையோ அறிய முடியாது. நன்றாய்க் கவனிக்க வேண்டும்.
நாம் இரண்டு பேர்களைப்பற்றி பேசுகிறோமா? தேவன் ஒருவர், இயேசு கிறிஸ்து ஒருவர். அப்படியா? அதற்கு நான் துரிதமாய் வருகிறேன். தேவனுடைய ஆதி எண்ணம், தேவனுடைய மூல எண்ணம் மனிதன் தம்மை அறிந்துகொள்ள வேண்டும் என்பது. இதைப்போன்ற ஒரு பாக்கியம், இதைப்போன்ற ஒரு சிலாக்கியம் மனிதனுக்கு வேறொன்றுமில்லை. எப்படியென்றால், ஓர் அரசன் தன் கருவூலங்கள், தன்னுடைய பொக்கிஷசாலைகள், பண்டக சாலை கள் எல்லாவற்றையும் திறந்துகாட்டினான் என்று வைத்துக்கொள்வோம். அது எவ்வளவு பெரிய பாக்கியம் இல்லையா?
எதிர்மறையான ஓர் எடுத்துக்காட்டை நான் சொல்லுகிறேன். எசேக்கியாவை கர்த்தர் மிகவும் ஆசீர்வதிக்கிறார். அவனுடைய பண்ட சாலைகள், பொக்கிஷசாலைகள் எல்லாம் குவிந்திருக்கிறது. இவன் ரொம்ப அதிசயிக்கத்தக்க விதத்திலே சுகமடைந்து விட்டான் என்பதைக் கேள்விப்பட்ட வுடனே பாபிலோனிய இராஜா தூதுவர்களை அனுப்பி வைக்கிறார். இந்தச் சமயத்திலே எசேக்கியாவினுடைய இருதயம் ஏறக்குறைய கொஞ்சம் மேட்டிமை அடைந்துவிடுகிறது. ஆகவே what a big boy am I? தான் எவ்வளவு பெரிய இராஜா என்பதைக் காண்பிப்பதற்காக தன்னுடைய கருவூலங்கள், தன்னுடைய பொக்கிஷசாலைகள், பண்டகசாலைகள் எல்லாவற்றையும் திறந்து அந்த பாபிலோனிய இராஜாவின் தூதுவர்களுக்குக் காட்டுகிறான். ஏசாயா தீர்க்கதஹ்ரிஷி வந்து, "அவனுடைய இருதயத்திலே நீ விதையை விதைத்து விட்டாய், இதைப் பார்த்துவிட்டுப் போனவன் சும்மா இருக்கமாட்டான். வருவார்கள், இந்தக் கருவூலங்களையும், இந்தப் பொக்கிஷ சாலைகளையும், இந்தப் பண்டகசாலைகளையும் கொள்ளைகொண்டுப் போவதற்கு அவர்கள் வருவார்கள்," என்று சொன்னான். எசேக்கியாவுக்கு இருந்த ஒரே ஆறுதல். "குறைந்தபட்சம் அது என்னுடைய வாழ்நாளிலே நடைபெறாது, என்னுடைய மகன், என்னுடைய பேரன்கள் இவர்களுடைய வாழ்நாளிலே தான் நடைபெறும்," என்பது அவனுடைய ஆறுதல். ஆகவே இதற்கு நான் கொடுக்கின்ற பெயர் Hezekiah syndrome.
"நாங்கள் அணுமின் நிலையம் அமைத்து எங்கள் வாழ்நாளிலே நாங்கள் நல்ல electricity ஐ enjoy பண்ணுவோம். நாங்கள் கழித்துப்போட்ட nuclear wasteஐ எங்கள் பேரன்கள், பேரன்களின் பேரன்கள் சுத்தம் செய்வார்கள்." அவர்கள் சுத்தம் செய்ய முடியாது.
தேவனை அறிவது என்பதென்றால் தேவனுக்குள் எப்படிப்பட்ட செல்வங்களும், வளங்களும் உள்ளன என்பதை அறிவதுதான் தேவனை அறிவது. வெளவாலுக்குக் கண் இல்லை என்று சொல்வார்கள். ஆனால் அது எப்படி ஆங்காங்கே பறந்து போகிறது என்றால் அது சில ஒலி அலைகளை செலுத்தித் திருப்பிப்பெற்று அந்த அதிர்வலைகளை வைத்து அது அங்குமிங்கும் பறந்துபோகிறது. வெளவாலின் உலகத்திலே கண் என்கிற புலம் இல்லை. "எனக்குக் கண் இல்லையே!" என்று அது அதைப்பற்றி பெரிதாக feel பண்ணுவதெல்லாம் கிடையாது. கண் என்கிற புலம் எப்பேர்ப்பட்ட செல்வங்களையும் வளங்களையும் அறிகிறது! colors, வண்ணங்கள், நிறங்கள் என்கின்ற செல்வங்களையும், வளங்களையும், கண் புலம் faculties of seeing the whole world of colors.
அதுபோல, நித்திய ஜீவன் என்பது தேவனுடைய செல்வங்களையும், வளங்களையும் நாம் பார்க்கிறதற்கு நம் கண்களைத் திறக்கிறது. கண்கள், ஆவிக்குரிய கண்கள். கண்கள் என்று சொன்னவுடன், "இயேசு கிறிஸ்து அப்படியே வெள்ளை உடை உடுத்திக்கொண்டு போனதை நான் பார்த்தேன்," என்று சிலர் சொல்வார்கள். நான் இதைப்பற்றி ஒன்றும் பேசவில்லை, கடிந்துகொள்வதும் இல்லை. இதுகூட பரவாயில்லை. சிலர், "மகனே அந்தப் பத்து ரூபாயை நீ காணிக்கையாக அனுப்பு என்று கர்த்தர் என்னுடைய காதில் பேசினார். நானே அடுத்த வேளை டீ க்கு காசு இல்லாமல் இருந்தேன், ஆனால் அனுப்பினேன்," என்பதுபோன்ற சாட்சியை நான் கேட்டிருக்கின்றேன். அதை நான் குறைத்து மதிப்பிடவில்லை. கர்த்தர்மேல் அவர்கள் வைத்திருக்கிற அன்பையும், விசுவாசத்தையும் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக. ஆனால் நான் சொல்கின்ற புலம் faculty என்பது அதுவல்ல. "என் கண்களினால் நான் வெள்ளை அங்கியில் இயேசுவைப் பார்த்தேன், என் காதுகளிலே ஒரு அன்பின் குரலைக் கேட்டேன்." அதையல்ல.
கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியங்கள்
நித்திய ஜீவன் என்பது அப்படிப்பட்ட ஒரு திறனை நமக்குத் தருகிறது. தேவனுடைய செல்வங்களை நாம் பார்க்கலாம். எபேசியர் 3ஆம் அதிகாரம் 8ஆம் வசனத்தின்படி அப்போஸ்தலனாகிய பவுல் சொல்வது, கிறிஸ்துவில் அளவற்ற ஐசுவரியங்கள். The unsearchable riches of Christ. The untraceable riches of Christ, the inexhaustible riches of Christ. "பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது."
"கிறிஸ்துவின் அளவற்ற ஐசுவரியங்கள், கிறிஸ்துவின் ஆராய்ந்து முடியாத ஐசுவரியங்கள், கிறிஸ்துவின் தீர்ந்துபோகாத ஐசுவரியங்கள். இதைத்தான் நான் புறவினத்தாரிடத்தில் நற்செய்தியாய் அறிவிக்கிறேன்," என்று பவுல் கூறுகிறார். நற்செய்தி அல்லது சுவிசேஷம் என்பது கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய ஆராய்ந்து முடியாத, அளவில்லாத, தீர்ந்துபோகாத ஐசுவரியங்கள்.
இந்த ஐசுவரியங்கள் என்னவென்று நான் இப்போது சொல்வதற்கில்லை. ஆனால் ஒன்று நிச்சயமாய்ச் சொல்ல முடியும். அதைக் காண்கிற மனிதன் பாக்கியவான், அதை அனுபவிக்கிற மனிதன் பாக்கியவான்.
ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அளவற்ற, ஆராய்ந்துமுடியாத, தீர்ந்துபோகாத செல்வங்களை அவன் அனுபவித்து வாழ்கிறான் என்றால் அதுபோன்ற உயர்ந்த வாழ்க்கை எதுவும் இல்லை. இப்படிப்பட்ட நோக்கத்தோடும், திட்டத்தோடும் தேவன் மனிதனைப் படைத்தார். இது என்னுடைய முதலாவது கேள்விக்கு ஓரளவிற்கு நான் சொல்கிற பதில்.
நித்திய ஜீவனின் நோக்கம் என்ன? நித்திய ஜீவன் தேவனை அறிவதற்கு. எப்படி அறிவதற்கு?, உள்ளான அனுபவம்சார்ந்த, அனுபவத்துக்குரிய விதத்திலே, அறிவதற்கு ஒரு திறனை, திராணியை, நித்திய ஜீவன் நமக்குத் தருகிறது. யோவான் 3ஆம் அதிகாரத்தில் ஒரு நிகழ்ச்சி இருக்கிறது. நிக்கொதேமு என்ற யூதத் தலைவன், யூதப் போதகன், யூத அதிகாரி, தேவனுக்குரியக் காரியங்களை ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினிடத்தில் விசாரிக்கும்போது அல்லது அதைப்பற்றி அவன் கலந்துறவாடும்போது, ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து அவனிடம், "நீர் இன்னொரு ஜீவனை, பரத்திலிருந்து ஒரு ஜீவனை, மேலிருந்து ஒரு ஜீவனை, ஒரு புதிய ஜீவனை, பெறாவிட்டால் தேவனுடைய காரியங்களை நீர் காணமுடியாது. தேவனுடைய காரியங்களை appreciate பண்ணக்கூடியத் திராணி, திறமை உனக்கு இருக்காது," என்று கூறினார்.
1 கொரிந்தியர் 2ஆம் அதிகாரத்திலே அப்போஸ்தலனாகிய பவுல் "ஜென்மசுபாவமான மனுஷனோ தேவனுடைய ஆவிக்குரியவைகளை ஏற்றுக்கொள்ளான்; அவைகள் அவனுக்குப் பைத்தியமாகத் தோன்றும்; அவைகள் ஆவிக்கேற்றபிரகாரமாய் ஆராய்ந்து நிதானிக்கப்படுகிறவைகளானதால், அவைகளை அறியவுமாட்டான்," என்று கூறுகிறார். ஆவிக்குரிய காரியங்கள் ஜென்மசுபாவமான மனிதனுக்கு பைத்தியமாய்த் தோன்றும். கிறிஸ்துவில் தேவனுடைய அளவற்ற, ஆராய்ந்து முடியாத, தீர்ந்துப்போகாத ஐசுவரியங்கள் உண்டு என்பதை தேவனுடைய மக்களேகூட காண்பதுமில்லை, விசுவாசிப்பதுமில்லை. நம் குணமோ, நம் வழிகளோ, கிறிஸ்துவுக்கு ஒவ்வாத, முரணான விதத்தில் இருக்கிறதென்றால் அதற்குக் காரணம் இன்னும் கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அளவற்ற, ஆராய்ந்து முடியாத, தீர்ந்துபோகாத செல்வங்களையும், ஐசுவரியங்களையும் நாம் காணவில்லை.
"நாங்கள் தேவனைச் சேவிக்கிறோம், நீங்கள் இந்த வங்கிக் கணக்குக்கு நீங்கள் உங்கள் பணவோலைகளை அனுப்புங்கள்," என்று ஏன் தேவனுடைய மக்கள் பணத்திற்காக இவ்வளவு பதறுகிறார்கள்? உலக மக்கள் எள்ளி நகையாடக்கூடியவிதத்திலே தேவனுடைய மக்கள் ஏன் பணத்தை அவ்வளவு முக்கியத்துவப்படுத்துகிறார்கள், பெரிதுபடுத்துகிறார்கள்? "பணம் இல்லையென்றால் தேவனுடைய சாட்சியை நம்மால் கொண்டுபோக முடியாது, தேவனுடைய சாட்சியை விளங்கச் செய்ய முடியாது, தேவனுடைய வேலையை நிறைவேற்ற முடியாது," என்கின்ற ஒரு தவறான எண்ணம் அவர்களுடைய இருதயத்திலே ஊறிப்போயிருக்கிறது. தேவனுடைய வேலைக்குப் பணம் வேண்டும். ஆனால், "பணமில்லை என்பதால் தேவனுடைய ஊழியம் தடைபட்டிருக்கிறது," என்று அப்போஸ்தலனாகிய பவுல் ஒருநாளும் சொன்னதேயில்லை. "என் வாழ்க்கையிலே தேவனுடைய அழைப்பு நிறைவேறாததற்குக் காரணம் பணம் இல்லாததுதான்," என்று எந்த மனிதனும் சொல்லமுடியாது. "என்னுடைய வாழ்க்கையிலே தேவனுடைய அழைப்பு நிறைவேறாததற்குக் காரணம் என்னுடைய குணம், என்னுடைய இருதயம், என்னுடைய வழிகள், நான் விடுபடாத காரியங்கள்," என்று வேண்டுமானால் சொல்லலாமேதவிர, "போதுமான பணம் இல்லாததால் தடைபட்டது," என்று சொல்லமுடியாது. அல்லது "நான் எவ்வளவு பெரிய தேவனுடைய வேலையைச் செய்துகொண்டிருக்கின்றேன், பிறர் appreciate பண்ணி, என்னைப் பணத்தைக்கொண்டு ஆதரிக்காததால் நான் நல்ல போராட்டத்தைப் போராட முடியவில்லை, ஓட்டத்தை முடிக்கமுடியவில்லை, விசுவாசத்தைக் காத்துக்கொள்ள முடியவில்லை," என்று எந்த மனிதனும் சொல்லமுடியாது. அப்படிப்பட்ட ஒரு impressionயை தேவனுடைய மக்கள் இந்த உலகத்திற்குக் கொடுப்பதற்குக் காரணம் கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய ஐசுவரியங்கள் எவ்வளவு அளவற்றவைகள், ஆராய்ந்து முடியாதவைகள், தீர்ந்து போகாதவைகள் என்று அவர்கள் காணததுதும், அறியாததும், விசுவாசிக்காததுமே. நித்திய ஜீவன் அப்படிப்பட்டத் திராணியைத் தருகிறது.
2. நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஜீவன்.
நான் மேடைபோட்டு சொல்லவேண்டும் என்றால் "நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஜீவன். நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஜீவன்," என்ற ஒன்றைச் சொல்வேன்.
"நித்திய ஜீவன் என்பது நாம் இறந்தபிறகு தேவன் நமக்குத் தருவார், பிறகு நாம் நித்திய நித்தியமாய்ப் பரலோகத்திலே வாழ்வோம். இதுதான் நித்திய ஜீவன்," என்று தேவனுடைய மக்கள் மத்தியிலே ஒரு பரவலான, baseless அடிப்படை எதுவும் இல்லாத ஒரு கருத்து, நம்பிக்கை உண்டு. அதை நான் இப்போது நிரூபிக்கப்போகிறேன். நித்திய ஜீவன் என்பது அது ஒரு எதிர்கால நம்பிக்கையில்லை, அது ஒரு நிகழ்கால உடைமை. Eternal life is not merely a future hope, but it is a present possession.
முதலாவது "எப்படி நீங்கள் நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஜீவன்தான் என்று சொல்கிறீர்கள்?" என்று கேட்கலாம். முதலாவது நித்தியம் என்றால் என்ன பொருள்?, நித்தியம் என்றால் என்ன அர்த்தம்?. சிலர், "முடிவில்லாதது நித்தியம்," என்று சொல்வார்கள். பழைய ரோமன் கத்தோலிக்க வேதாகமத்திலே eternal life என்பது 'முடிவில்லா வாழ்க்கை' என்று மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. அடக்கப் பூசையில் "இறைவன் இவர்களுக்கு முடிவில்லா வாழ்க்கையைத் தருவாராக," என்று சொல்வார்கள், இப்போதிருக்கிற பொதுமொழிபெயர்ப்பிலே eternal life என்பதை 'நிலைவாழ்வு' என்று மொழிபெயர்க்கிறார்கள்.
'முடிவில்லாத வாழ்க்கை', 'நிலைவாழ்வு' என்ற இரண்டிலுமே எனக்குத் திருப்தியில்லை. Eternal என்றால் முடிவில்லாதது என்பது உண்மைதான். "அநாதிதேவன் உன் அடைக்கலமே, அவர் நித்திய புயங்கள் உன் ஆதாரமே," என்பதை the eternal God is your refuge. இங்கே நித்திய தேவன் என்றிருக்காது. அநாதிதேவன். அநாதி என்றால், ஆதி என்றால் தொடக்கம். அநாதி என்றால் தொடக்கம் இல்லாதவர். ஆகவே eternal என்றால் முடிவில்லாதது மட்டுமல்ல, தொடக்கமும் இல்லாதது. தொடக்கமும், முடிவும் இல்லாத ஜீவன். படைக்கப்படாத ஜீவன் என்றால் அது தேவனுடைய ஜீவன்தான். தேவன் ஒருவரைத்தவிர மீதி உயிர்களுடைய ஜீவன் படைக்கப்பட்டது. தேவன் ஒருவருடைய ஜீவன்தான் படைக்கப்படாத ஜீவன். ஆகவே, இதற்கு முடிவும் இல்லை, ஆகவே, இது யாருடைய ஜீவனாகத்தான் இருக்க வேண்டும். தேவனுடைய ஜீவனாகத்தான் இருக்க வேண்டும். இதுவொன்று.
இன்னொரு உதாரணமும் தருகிறேன். யோவான் 1ஆம் அதிகாரம் 11, 12ஆம் வசனங்களிலே யோவான் எழுதுகிறார். "அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார், அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக்கொள்ளவில்லை.. அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்." அவர்களுக்கு அதிகாரம், உரிமை, சிலாக்கியம் கொடுத்தார். 13ஆம் வசனம்: அஅவர்கள், இரத்தத்தினாலாவது மாம்ச சித்தத்தினாலாவது புருஷனுடைய சித்தத்தினாலாவது பிறவாமல், தேவனாலே பிறந்தவர்கள். அவர்கள் தேவனாலே பிறந்தவர்கள். Born of God.
யோவான் 3ஆம் அதிகாரத்திலே இதே உண்மையை ஆண்டவராகிய இயேசு, "மாம்சத்தினால் பிறப்பது மாம்சமாயிருக்கும், ஆவியினால் பிறப்பது ஆவியாயிருக்கும்" என்று நிக்கொதேமுவுக்குத் தெரிவிக்கிறார்.
நன்றாய்க் கவனிக்க வேண்டும். எங்கேயோ ஓரிடத்திலிருந்து ஒரு வசனத்தையும், இன்னொரு இடத்திலிருந்து ஒரு வசனத்தையும் பொறுக்கி எடுத்து மொட்டைத் தலைக்கும், முழங்காலுக்கும் முடிச்சிபோடுவதுப்போல முடிச்சிபோடக்கூடாது. அந்த எண்ணம் முழு வேதாகமம் எங்கும் ஓடவேண்டும்.
அவரைஏற்றுக்கொள்ளும்போது நாம் பெற்றுக்கொள்வது ஒரு ஜீவன், அந்த ஜீவனைத் தேவனால் பிறந்தவர்கள் பெற்றுக்கொள்கிறார்கள். ஆகவே இது யாருடைய ஜீவன்தான். இது தேவனுடைய ஜீவன்தான். ஆவியினால் பிறக்கும்போது பெற்றுக்கொள்வது யாருடைய ஜீவனாகத்தான் இருக்கமுடியும்? ஆவியானவர் தருகிற ஜீவனாகத்தானிருக்க முடியும்.
இதை எபேசியரிலே நாம் வாசிக்கிறோம். "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்" (எபே. 2:12). Alienated from the life of God.
கொலோசெயர் 3ஆம் அதிகாரத்திலே "நம்முடைய ஜீவனாகிய கிறிஸ்து வெளிப்படும்போது, நீங்களும் அவரோடேகூட மகிமையிலே வெளிப்படுவீர்கள்" என்றிருக்கிறது. Christ our life. போதுமான நிருபணங்கள் வேதாகமம் முழுவதும் இருக்கிறது. நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஜீவன்.
இப்போது என்னுடைய மூன்றாவது குறிப்புக்கு வருகிறேன். முதல் குறிப்பு என்ன? நித்திய ஜீவன் தேவனை அறியவும், அவரை வெளியாக்கவும் நமக்கு ஒரு திறனைத் தருகிறது. தேவனை அறிவதைப்பற்றி மட்டும்தான் நான் சொன்னேன்.வெளியாக்குவதைப்பற்றி நான் சொல்லவில்லை. அதற்குப் பின்பு வரலாம். இரண்டாவது குறிப்பு நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஜீவன்.
ஆகவே, தேவனுடைய நோக்கமும், திட்டமும் மனிதர்களுக்குத் தேவனுடைய ஜீவனைக் கொடுக்க வேண்டும். மனிதர்கள் தேவனுடைய ஜீவனில் பங்குற வேண்டும் என்பது. மூன்றாவது தேவனுடைய ஜீவனை எப்படி மனிதர்கள் பெறுவது?.
3. மனிதன் தேவனுடைய ஜீவனை எப்படிப் பெறுவது?.
யோவான் 1:12இல் "அவருடைய நாமத்தின்மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக்கொண்டவர்கள் எத்தனைபேர்களோ, அத்தனைபேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி, அவர்களுக்கு அதிகாரங்கொடுத்தார்," என்று நாம் வாசிக்கிறோம். அவர்கள் தேவனால் பிறக்கிறார்கள், தேவனுடையப் பிள்ளைகள். இதைத் தேவனுடைய மக்கள் பலர் நம்புவதில்லை அல்லது இது ஒரு பெரிய புரட்சிகரமான வாழ்க்கையை மாற்றுகின்ற ஓர் அடிப்படை செய்தியாக அவர்களுக்குத் தோன்றுவதில்லை. "நாம் தேவனுடைய பிள்ளைகள்," என்று சொல்லும்போது அவர்களுடைய எண்ணம் " குழந்தையில்லாத பெற்றோர்கள் ஒரு குழந்தையைத் தத்தெடுத்துக்கொள்வதுபோல் தேவன் நம்மைத் தத்தெடுத்திருக்கின்றார் ," என்பது அவர்களுடைய எண்ணம். எபேசியர் 1ஆம் அதிகாரத்திலே "தம்முடைய தயவுள்ள சித்தத்தின்படியே, நம்மை இயேசுகிறிஸ்துமூலமாய்த் தமக்குச் சுவிகாரபுத்திரராகும்படி முன்குறித்திருக்கிறார்," என்று வாசிக்கிறோம். சுவிகாரம் என்றால் தமிழிலே தத்து. சுவிகாரம், தத்து எல்லாம் ஒரே வார்த்தைகள்தான். ஆகவே, தமிழ் வேதாகமத்தைப் படிக்கின்ற தேவனுடைய மக்கள், "நான் முந்தி சாதாரண பாவியாயிருந்தேன். இப்போது தேவன், இராஜா, என்னை என்னத் தத்தெடுத்திருக்கிறார். சுவிகாரப் பிள்ளையாக என்னை எடுத்துக்கொண்டு விட்டார்," என்று எண்ணுகிறார்கள். சுவிகாரம் அல்லது தத்து என்பது அந்தத் தந்தைக்கும், மகனுக்கும் இடையே ஒரு சட்ட ஆதாரமான உறவைக் கொண்டு வருகிறது. Judicial relationship. உயிர் ஆதாரமான, ஜீவாதாரமான உறவைக் கொண்டுவருவது இல்லை. எனக்கும் என் மகளுக்கும் இடையேயுள்ள உறவு சட்ட ஆதாரமான உறவல்ல.
அது என்ன உறவு! ஜீவாதாரமான உறவு. உயிர் ஆதாரமான உறவு.
தேவனுடைய ஜீவனைப் பெறுகிறோம் என்பது தேவனுக்கும் நமக்குமிடையே சட்ட ஆதாரமான உறவைக் கொண்டு வரவில்லை. என்ன உறவைக் கொண்டு வருகிறது? ஜீவாதார உறவு அல்லது உயிர் ஆதார உறவைக் கொண்டுவருகிறது.
ஒருமுறை நான் இதைப்பற்றிச் சொன்னபோது, என்னுடைய Principal டாக்டர் மந்திரமூர்த்தி, "மில்டன் உனக்குத் தெரியுமா, இப்போதெல்லாம் seedless fruits எல்லாம் வருகிறது தெரியுமா? என்று சொன்னார். அதாவது உயிர் ஆதாரமின்றியே Fruits எல்லாம் வருகிறது. நான் சொன்னேன், "தேவனுடைய வித்து," நமக்குள் இருக்கிறது. "தேவனால் பிறந்த எவனும் பாவஞ்செய்யான், ஏனெனில் அவருடைய வித்து அவனுக்குள் தரித்திருக்கிறது" 1 யோவான் 3:9. od’s seed abides in him. அவர் ஓய்வுபெற்றுவிட்டார். மறுபடியும்போய் அதேசெய்தியை அவருக்கு repeat செய்ய விரும்புகிறேன்.
மூன்றாவது குறிப்பு, தேவனுடைய ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறது, அவருடைய குமாரனில் மட்டும்தான் நாம் இந்த ஜீவனைப் பெற்றுக்கொள்ள முடியும். தேவனுடைய குமாரன் இல்லாமல் தேவன் தம்முடைய ஜீவனை மனிதனுக்குக் கொடுக்க முடியாது, மனிதன் பெற்றுக்கொள்ள முடியாது, மனிதன் இதில் பங்குற முடியாது.
ரொம்ப முக்கியமான ஒரு கருத்து. மனிதர்கள் பல மதங்களை உண்டுபண்ணி வைத்திருக்கிறார்கள். இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதற்கும், மற்ற மதங்களுக்கும் வேறுபாடு என்னவென்று கேட்டால், ஒரேயொரு வேறுபாடுதான்.
புத்தர் வாழாமல் இருந்திருக்கலாம். ஆனால் புத்தமதம் என்று ஒன்றிருக்கிறது. ஏனென்றால் அது அவருடைய தத்துவங்களை அடிப்படையாகக் கொண்டது. நபிகள் இந்த வரலாற்றிலே ஒருவேளை இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் நபிகளுடைய மதம் நபிகளுடைய போதனைகளை அடிப்படையாகக் கொண்டது. இந்து மதத்தைப்பற்றிக் கேட்கவே வேண்டாம். சனாதனதர்மம். யார் இவைகளை எழுதினார் என்று யாருக்குமே தெரியாது. "உங்களைப்போல இயேசு கிறிஸ்து என்கிற ஒரு நபர் இதைக் கொடுத்தார் என்பதல்ல," என்று அதைப்பற்றி அவர்கள் மிகவும் பெருமை பாராட்டுவார்கள். இது சனாதன தர்மம். எங்கிருந்து இந்த வேதமும், வேதாந்தங்களும், உபநிடதங்களும் வந்ததன என்று யாருக்குமே தெரியாது என்பதிலே பெருமைப்படுவார்கள். ஜீவனை ஒரு உயிரியிடமிருந்து இன்னொரு உயிரிக்குக் கடத்துவதற்கு என்ன தேவை?, ஒரு பாத்திரம் தேவை. அந்தப் பாத்திரத்தைத்தான் நாம் விதை என்று சொல்கிறோம்.
ஆஸ்டின் ஸ்பார்க் இப்படியொரு உவமை சொல்வார்.ஒரு Florist ஒரு பூ விற்பனைக்காரன். இரண்டு ஜன்னல்கள். ஒரு ஜன்னலிலே ஒரு செடியோடுகூடிய ஒரு பூவையும், இன்னொரு ஜன்னலிலே கறுப்பான ஒரு சின்ன விதையையும் வைத்திருந்தானாம். வைத்துவிட்டு, "This is that; that is this. இந்த விதைதான் அந்தப் பூ, அந்தப் பூதான் இந்த விதைக்குள் இருந்தது," என்று வெளியே ஒரு விளம்பரம் வைத்தானாம். ஒரு விதைக்குள் ஜீவன் இருக்கிறது. ஒரு விதையின்மூலமாக ஒரு உயிரிடமிருந்து இன்னொரு உயிரிக்கு ஜீவன் கடத்தப்படுகிறது. தேவனுடைய ஜீவனை எப்படி மனிதனுக்குள் கடத்த முடியும். தேவனுடைய வேதமோ அல்லது இயேசு கிறிஸ்துவின் நற்செய்தியோ Arbitrary ஆனதல்ல. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தன்னை ஒரு விதைக்கு ஒப்பிட்டுப் பேசுகிறார். யோவான் 12:23, 24 "மனுஷகுமாரன் மகிமைப்படும்படியான வேளை வந்தது. மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." அவரைக் காண்பதற்கு ரொம்ப ஆர்வத்தோடு வந்த சில கிரேக்க விருந்தினர்களுக்கு அவர் சொல்கிற பதில் இது. அவர் அந்தக் கிரேக்கர்களைப் பார்க்கக்கூடவில்லை. " பண்டிகையில் ஆராதனை செய்ய வந்தவர்களில் சில கிரேக்கர் இருந்தார்கள். அவர்கள் கலிலேயாநாட்டுப் பெத்சாயிதா ஊரானாகிய பிலிப்புவினிடத்தில் வந்து: ஐயா, இயேசுவைக் காண விரும்புகிறோம் என்று அவனைக் கேட்டுக்கொண்டார்கள். பிலிப்பு வந்து, அதை அந்திரேயாவுக்கு அறிவித்தான்; பின்பு அந்திரேயாவும் பிலிப்புவும் அதை இயேசுவுக்கு அறிவித்தார்கள்."
இயேசு அவர்களிடத்தில் சொல்கிற பதில். "கூட்டிக்கொண்டு வா அந்த கிரேக்கர்களை. கர்த்தர் நம்முடைய ஊழியத்தை ஆசீர்வதித்து, பலத்தினால் நம்முடைய எல்லைகளுக்கு அப்பால் கிரேக்க நாடுகளுக்கு நம்முடைய ஊழியத்தை விரிவாக்குகிறார்." இப்படிச் சொன்னாரா? "கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக்கொடுக்கும்." லூக்கா 12: 49, 50. "பூமியின்மேல் அக்கினியைப் போட வந்தேன், அது இப்பொழுதே பற்றி எரியவேண்டுமென்று விரும்புகிறேன். ஆகிலும் நான் முழுகவேண்டிய ஒரு ஸ்நானமுண்டு, அது முடியுமளவும் எவ்வளவோ நெருக்கப்படுகிறேன்." எவ்வளவோ நெருக்கப்படுகிறேன். ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்குள் தேவனுடைய ஜீவன் இருந்தது. தேவன் தம்முடைய ஜீவனை எந்த ஒரு மனிதனுக்குள்ளும் வைக்க முடியாது. தேவனுக்கும், மனிதனுக்குமிடையே ஒரு நடுவர், ஒரு மத்தியஸ்தர், தேவை. தேவன் தம்முடைய ஜீவனை ஒரு மனிதனுக்குள் வைக்க வேண்டும். அந்த ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு மனிதனை அந்தத் தளத்திற்கு உயர்த்த வேண்டும்.
தேவன் ஒரு தளத்திற்கு இறங்கி வரவேண்டும், மனிதனை அந்தத் தளத்திற்கு உயர்த்த வேண்டும். 1 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 5ஆம் வசனத்திலே நாம் இப்படி வாசிக்கிறோம். "தேவன் ஒருவரே, தேவனுக்கும் மனுஷருக்கும் மத்தியஸ்தரும் ஒருவரே. எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரியசாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது."
நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? தேவனுக்கும் மனிதனுக்கும் மத்தியஸ்தர் ஒருவர் என்றால் தேவன் ரொம்பக் கோபமாக இருக்கிறார் இவர் இரண்டுபேரையும் சாந்தப்படுத்தி வைக்கிறார். அப்படியா?, தேவனும் மனிதனும் எப்படிச் சந்திக்க முடியும்?,தேவனுடைய ஜீவனை எப்படி மனிதனுக்குள் கொண்டுவருவது? மனிதன் எப்படித் தேவனை அறிந்துகொள்வது?, தேவன் புலப்படும் வண்ணம் தன்னைக் காட்டவேண்டும். தேவன் புலப்படும் வண்ணம் தன்னைத் தாழ்த்த வேண்டும். தேவன் புலப்படுவதில்லை. "தேவனை ஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினா." இயேசு கிறிஸ்து புலப்படும் தேவன். இது நம்முடைய சாட்சி. இந்த சாட்சிக்காக எதை வேண்டுமானாலும் கொடுக்கலாம். இயேசு கிறிஸ்து புலப்படும் தேவன். Jesus Christ is God manifest in the flesh. தேவன் புலப்படுவதில்லை. தேவனை அறிகிற புலம் மனிதனுக்கு இல்லை. தேவன் புலப்படுவது இல்லை. தேவனை அறிந்துகொள்வதற்கான புலமும் மனிதனிடத்தில் இல்லை. தேவன் இரண்டும் செய்ய வேண்டும். ஒன்று புலப்படும் வண்ணம் தேவன் வரவும் வேண்டும். அவரை அறிந்துகொள்வதற்கு மனிதனுக்கு என்ன கொடுக்க வேண்டும்?. ஒரு புலம் அல்லது ஜீவனையும் கொடுக்க வேண்டும். அவர் மனிதனுக்குக் கொடுக்க விரும்புவது நித்திய ஜீவன். புலப்படும் வண்ணம் வந்தவர் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து. யோவான் 1ஆம் அதிகாரம் 5ஆம் வசனத்தில் நாம் இப்படி வாசிக்கிறோம். "அவருக்குள் ஜீவன் இருந்தது, அந்த ஜீவன் மனுஷருக்கு ஒளியாயிருந்தது."
தேவனுடைய மாபெரும் அன்பு, மாபெரும் இரக்கம் என்னவென்று கேட்டால், புலப்படும்வண்ணம் அவர் அவருடைய குமாரனில் அவருடைய ஜீவனை வைத்தார். நித்திய ஜீவன் ஒரு கொடை என்று ரோமர் 6:23இல், "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்," என்று வாசிக்கிறோம். Gift of God is eternal life in Christ Jesus, our Lord.
நித்திய ஜீவன் என்பது ஒரு கொடை. Gift. அதுவொரு சம்பளம் அல்ல. தவசுகாலத்திலே நாம் ரொம்ப நல்லவர்களாக வாழ்ந்துவிட்டதால் தவசுக்காலம் முடிந்தவுடனே தேவன் நமக்குத் தருகிற கொடை என்னபதல்ல. தவசுகாலத்திலே non vegetarian சாப்பிடாமல் இருப்பவர்களை நான் குறைசொல்வதாக யாரும் நினைத்துவிடவேண்டாம். இங்கு யாரும் அப்படி lent கடைபிடிப்பதில்லை என்று நான் நினைக்கிறேன். நமக்கு அது கொடை.
ஆனால் தேவனைப் பொறுத்தவரை அது கொடை இல்லை. தேவனைப் பொறுத்தவரை அவருடைய குமாரன் மனிதனாகத் தாழ்ந்து, மனித வாழ்க்கையின் எல்லா உபத்திரவங்களையும், பாடுகளையும், துன்பங்களையும் அனுபவித்து மரணம்வரை அவர் தன்னைத் தாழ்த்த வேண்டியிருந்தது. ஆகையால்தான் அவருடைய நித்திய ஜீவனை மனிதர்களுக்கு அவர் தர முடிந்தது.
எபிரெயரை நீங்கள் வாசித்துப்பார்க்க வேண்டும். அவர் குமாரனாக இருந்தும் பட்டப்பாடுகளினாலே அவர் கீழ்ப்படிதலைக் கற்றுக்கொண்டு அவர் பூரணரானப்பின்பு அவரை விசுவாசிக்கிறவர்களுக்கு அவர் நித்திய இரட்சிப்பு உண்டாவதற்கு அவர் காரணமானார் என்று எழுதியிருக்கிறது. அதேபோல எபிரேயர் 2ம் அதிகாரத்திலிருக்கும், "தமக்காகவும் தம்மாலேயும் சகலத்தையும் உண்டாக்கினவர், அநேகம் பிள்ளைகளை மகிமையில் கொண்டுவந்து சேர்க்கையில் அவர்களுடைய இரட்சிப்பின் அதிபதியை உபத்திரவங்களினாலே பூரணப்படுத்துகிறது அவருக்கேற்றதாயிருந்தது," என்று வாசிக்கிறோம்.
எனவே, தேவனுடைய ஜீவனை அவர் அவருடைய குமாரனுக்குள் மட்டும்தான் வைக்க முடியும். அவருடைய குமாரன் மனிதனாக வந்து தேவனுக்கும் மனிதனுக்கும் நடுவில் மத்தியஸ்தராக இருந்தார். பிலிப்பியர் 2ஆம் அதிகாரத்தை நன்றாய் வாசித்துப்பார்க்க வேண்டும். "கிறிஸ்து இயேசுவிலிருந்த சிந்தையே உங்களிலும் இருக்கக்கடவது; அவர் தேவனுடைய ரூபமாயிருந்தும், தேவனுக்குச் சமமாயிருப்பதைக் கொள்ளையாடின பொருளாக எண்ணாமல், தம்மைத்தாமே வெறுமையாக்கி, அடிமையின் ரூபமெடுத்து, மனுஷர் சாயலானார். அவர் மனுஷரூபமாய்க் காணப்பட்டு, மரணபரியந்தம், அதாவது சிலுவையின் மரணபரியந்தமும் கீழ்ப்படிந்தவராகி, தம்மைத்தாமே தாழ்த்தினார். ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும் பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசு கிறிஸ்து கர்த்தர் என்று நாவுகள் யாவும் அறிக்கைப் பண்ணும்படிக்கும் எல்லா நமத்துக்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்." நைசீன் விசுவாசப்பிரமாணம் உங்களுக்கு ஞாபகமிருக்கிறதோ இல்லையோ குறைந்தபட்சம் பிலிப்பியர் 2ஆம் அதிகாரத்தின் இந்தப் பகுதி எல்லாருக்கும் எப்படி ஞாபகமிருக்க வேண்டுமென்றால் தூங்கி முழித்தவுடனே, இன்னும் சுயஉணர்வு அடைவதற்கு முந்தியே நீங்கள் ஒரு பாகத்தைச் சொல்ல வேண்டுமென்றால் அது எந்தப் பாகமாக இருக்க வேண்டும். இந்தப் பாகமாக இருக்க வேண்டும்.
தேவனுடைய ஜீவனை மனிதர்களுக்குள் கொண்டுவருவதற்கு அவருடைய குமாரன் மனிதனாகி, தன்னைத் தாழ்த்தி, சிலுவையின் மரணபரியந்தம் அவர் தன்னைத் தாழ்த்தவேண்டியிருந்தது. அவருடைய சிலுவை மரணமும் உயிர்த்தெழுதலும் தேவனுடைய ஜீவனை மனிதர்களுக்குள் கொண்டுவருவதற்கு அவசியம். ஒரு மனிதன் என்ற தளத்திலே ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து முப்பத்து மூன்றரை ஆண்டுகள் வாழ்ந்தார். தேவனுடைய ஜீவனால் வாழ்ந்தார். தேவனுடைய ஜீவனால் மனிதன் என்கிற தளத்தில் வாழ்ந்தார். அதுதான் 1 தீமோத்தேயு 2ஆம் அதிகாரம் 5ஆம் வசனம் வாசித்தது. தேவனுக்கும் மனிதருக்கும் மத்தியஸ்தர் ஒருவரே. அவர் எல்லாரையும் மீட்கும் பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனிதனாகிய கிறிஸ்து இயேசு. அவர் தேவனாக இருந்தபோதும்கூட இந்தப் பூமியிலே அவர் மனிதன் என்கிற தளத்திலே வாழ்ந்தார். தேவனுடைய ஜீவனால் மனித வாழ்க்கையின் எல்லாச் சூழ்நிலைகளிலும் நாம் வாழமுடியும். அல்லேலூயா. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து சந்திக்காத எந்தச் சூழ்நிலையும் இல்லை.
மறுபடியும் இதைக் கூறுகிறேன். அவர் சோதிக்கப்பட்டுப் பாடுபடுகிறதினாலே சோதிக்கப்படுகிற நமக்கு உதவிசெய்ய வல்லவராயிருக்கிறார். எல்லாவிதத்திலும் அவர் நம்மைப்போல் சோதிக்கப்பட்டும் பாவமில்லாதவராயிருக்கிற பிரதான ஆசாரியரையே நாம் கொண்டிருக்கிறோம். எல்லா விதத்திலும் நாம் மனித வாழ்வில் எதிர்கொள்கிற, சந்திக்கிற எந்தச் சோதனையும் ஆண்டவராகிய இயேசு சந்திக்காமல் விடவில்லை. எல்லாவற்றிற்கும்மேலாக ஒரு safety வால்வு அவருக்கு எப்போதுமே இருந்தது. அவர் நினைத்திருந்தாரானால் எந்த நொடியிலும் தன்னுடைய safety வால்வை பயன்படுத்தி "நான் கடவுள்" என வெளியேறியிருக்கலாம். ஆனால், வெளியேறவில்லை. கடைசிவரை அவர் மனிதன் என்ற தளத்திலேயே வாழ்ந்தார். "நீர் யார்?" என்றபோதும்கூட "நன்றாய் உற்றுப்பார்" என்று சொல்லவில்லை. இந்த dialogue எங்கிருந்து வருகிறது என்றுத் தெரியும். இதை நான் ஒன்றும் சொல்லவில்லை.
பிலாத்துவினுடைய கண்களிலே, ஆலோசனைச் சங்கத்தாருடைய கண்களிலே அவர் கையாலாகாத, நிர்க்கதியான ஆட்டுக்குட்டியானவராகவே அவர் காணப்பட்டார். அவர் சீனாய் மலையிலே புகைமூட்டத்தின் நடுவிலே இறங்கின யெகோவாவாக அவர்களுடைய கண்களுக்குக் காணப்படவில்லை. அவர் யெகோவா மனித உருவில் வெளிப்பட்டவராக இருந்தபோதும்கூட.
ஆகவேதான் யோவான் 20ஆம் அதிகாரம் கடைசி வசனம் "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்கும்படியாகவும், விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நித்தியஜீவனை அடையும்படியாகவும், இவைகள் எழுதப்பட்டிருக்கிறது" நன்றாய்க் கவனிக்க வேண்டும். இது யோவான் தன்னுடைய சுவிசேஷத்தை எழுதினபிறகு தன்னுடைய சுவிசேஷத்திற்குக் கொடுக்கிற முடிவுரை. ஒரு நீண்ட புத்தகத்தை எழுதும்போது, "என்னுடைய புத்தகத்தின் முடிவுரை என்னவென்று கேட்டால்" இப்போது நன்றாய்ச் சொல்லவேண்டும். "இயேசு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்று நீங்கள் விசுவாசிக்க வேண்டும். அதற்காகத்தான் நான் இந்தப் புத்தகத்தை எழுதியிருக்கிறேன்." விசுவாசித்து நீங்கள் எதைப் பெறுவீர்கள்?. பாவமன்னிப்பைப் பெறுவீர்கள். உண்மையா, இல்லையா?, அது உண்மைதான். பரலோகத்திற்குப் போவீர்கள் நீங்கள் மரிக்கும்போது, இது உண்மையா, இல்லையா. இது உண்மைதான். இந்தப் பூமியிலே மனிதர்களுக்கென்று தேவன் கொடுக்கிற எல்லா நன்மைகளையும் உங்களுக்கும் தருவார். உண்மையா இல்லையா. உண்மைதான். ஆனால் யோவானைப் பொறுத்தவரை அதுவொருபொருட்டல்ல. யோவானைப் பொறுத்தவரை "விசுவாசித்து அவருடைய நாமத்தினாலே நீங்கள் நித்திய ஜீவனை அடையும்படியாகவும் இவைகள் எழுதப்பட்டிருக்கிறது."1யோவான் 5ஆ ம் அதிகாரம் 11, 12, 13ஆம் வசனம் நமக்குத் தெரியும். "தேவன் நமக்கு நித்தியஜீவனைத் தந்திருக்கிறார், அந்த ஜீவன் அவருடைய குமாரனில் இருக்கிறதென்பதே அந்தச் சாட்சியாம். குமாரனை உடையவன் ஜீவனை உடையவன், தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன்.. உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன்." God has given us eternal life. தேவனைப் பொறுத்தவரை வரப்போகிற யுகத்திலே தேவன் தரப்போகிற நித்திய ஜீவனைப்பற்றி அவர் பேசவில்லை. நித்திய ஜீவன் என்பது இன்றைக்கு நாம் பெற்று அனுபவிக்கிற ஒன்று.
"குமாரனை உடையவன் ஜீவனை உடையவன். தேவனுடைய குமாரன் இல்லாதவன் ஜீவன் இல்லாதவன். உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும்,..." 13ஆம் வசனம் உங்களுக்கு நித்திய ஜீவன் உண்டென்று நீங்கள் அறியவும், நித்திய ஜீவன் உண்டு அல்லது உங்களிடம், உங்களில் நித்திய ஜீவன் உள்ளது என்று நீங்கள் அறியவும் தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் நீங்கள் விசுவாசமாயிருக்கவும், தேவகுமாரனுடைய நாமத்தின்மேல் விசுவாசமாயிருக்கிற உங்களுக்கு இவைகளை எழுதியிருக்கிறேன். இது யோவான் தன்னுடைய கடிதத்திற்குக் கொடுக்கிற முடிவுரை. தன்னுடைய நற்செய்திக்குக் கொடுக்கிற முடிவுரை "நீங்கள் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தை விசுவாசித்து நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்ள வேண்டும்." தன்னுடைய கடிதத்திற்குக் கொடுக்கிற முடிவுரை "நீங்கள் இயேசு கிறிஸ்துவினுடைய நாமத்தின்மேல் விசுவாசத்தைக் கொண்டிருக்கவேண்டும்.: நாமம் என்றவுடன் formulaவைக் கொண்டுவரக்கூடாது. நாமம் என்பது ஒரு நபரைக் குறிக்கிறது.
இயேசு கிறிஸ்து என்கிற நபரில் நாம் விசுவாசிக்கும்போது, இந்த நித்திய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். இன்னொருமுறை சொல்கிறேன். இயேசு கிறிஸ்து என்கிற நபரை விசுவாசிப்பது என்றால் என்ன பொருள் என்றால் இந்த நபரை நாம் பற்றிக்கொள்வது, இந்த நபருக்கு நம்மைக் கயைளிப்பது. We commit. இந்த நபரை தேவனுடைய குமாரனென்றும், அவருடைய கிரியைக்காக நாம் அவரைப் போற்றுவது, இந்த நபரின்மீது நாம் அன்பு கூர்வது. இவைகள் எல்லாம் அடங்கியது தான் இந்த நபரை நாம் விசுவாசிப்பது என்பதின் பொருள். இதோடு மூன்றாவது குறிப்பை நான் முடித்துக்கொள்கிறேன்.
முதலாவது குறிப்பு என்ன? நித்திய ஜீவன் தேவனை அறிவதற்கும் அவரை முதலாவது குறிப்பு என்ன? நித்திய ஜீவன் தேவனை அறிவதற்கும் அவரை வெளியாக்குவதற்கும் ஒரு திராணியை, திறனை நமக்குத் தருகிறது. இரண்டாவது குறிப்பு, நித்திய ஜீவன் என்பது தேவனுடைய ஜீவனே. மூன்றாவது குறிப்பு தேவனுடைய ஜீவன் அவருடைய குமாரனிலிருக்கிறது. அதுவொரு technique, அதுவொரு யுக்தியல்ல. பரிசுத்தமாக வாழ்கிறதற்கு 12 யுக்திகள் அல்ல. தேவன் நமக்கொரு யுக்தியை, technique ஐத் தரவில்லை. தேவன் நமக்கு அவருடைய குமாரனையே தந்திருக்கிறார். மனிதனுடைய எல்லா சிக்கல்களுக்கும், பிரச்சினைகளுக்கும் தீர்வு தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து.
இதை சொல்லும்போது சிலருக்கு சப்பென்று ஆகிவிடும். "தேவன் வெளியே வந்து கைகளை வைத்து, எண்ணெய் பூசி, ஜெபம் பண்ணுவார் என்று எதிர்பார்த்தேன். very disappointed." சொல்வது யார்? நாகமான் என்கின்ற தளபதி சொல்கிறார். வெளியே வந்து ஒரு வேப்பிலையெடுத்து மேலேயும், கீழேயும் பூசி "ஓ !பக்தா, பிள்ளையே!" என்று சொல்ல வேண்டும். தேவனுடைய மக்கள் செய்கிற இதுபோன்ற கூத்தை நான் பார்த்திருக்கிறேன். ஆ! இப்படியொரு showmanship இல்லையென்றால் "அங்கு தேவன் இடைப்படவில்லையோ!" என்று மக்கள் நினைத்துவிடுவார்களோ என்பதற்காக ஒரு showmanshipயைக் கொண்டு வருகிறார்கள், ஒரு குரலைக் கொண்டுவருகிறார்கள், ஒரு கூச்சலைக் கொண்டுவருகிறார்கள். ஒரு supernatural effectஐக் கொடுப்பதற்காக எதாவது ஒன்றைச் செய்ய வேண்டும். இல்லையா அந்நிய பாஷை பேச வேண்டும். குதிக்க வேண்டும், எதையாவது சத்தமாகப் பேசவேண்டும். எதுவும் இல்லையென்றால் smoke machineஐவைத்து smoke யாவது விடுவார்கள். தேவன் சீனாய் மலையிலே இறங்கினபோது smoke வந்தது. இங்கே real ஆக அப்படியெல்லாம் smoke இறங்க முடியாது. ஆனால், என்ன செய்வார்கள்? ஒரு limelight பிரசங்கியார்மேல் விழவேண்டும். Auditorium எங்கும் இருளாக இருக்கும். பேசுகிறவர்மேல் மட்டும் ஒளி வெள்ளம் வீசும்.
"அவருக்கு அழகுமில்லை, சௌந்தரியமுமில்லை; அவரைப் பார்க்கும்போது, நாம் அவரை விரும்பத்தக்க ரூபம் அவருக்கு இல்லாதிருந்தது," என்று ஏசாயா 53:2இல் நாம் வாசிக்கின்றோம். There was nothing beautiful about Him, சர்வ சாதாரண மனிதனாய் அவர் நடந்துபோனார். அவரைப் பார்க்கிறவர்கள் யாரும் very unusually attractive person என்ற தோற்றத்தை வைத்தோ, உடையை வைத்தோ சொல்லவில்லை. Oh Yes, He was an unusually attracted person. ஆனால், அந்த புறம்பான, இயற்கையான தேற்றத்தை வைத்து அல்ல.
தேவனுடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவை நாம் பெற்றிருக்கிறோம். அவருடைய ஜீவனை நாம் பெற்றிருக்கிறோம் என்பது இந்தப் பூமியிலே மாபெரும் காரியம். குமாரனை உடையவன் ஜீவனையுடையவன். கிறிஸ்தவ வாழ்க்கையின் தொடக்கம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து என்கிற நபரின்மேல் நாம் வைக்கிற அன்பு, பற்று, விசுவாசம்,.பக்தி என்கிற வார்த்தையைக்கூட நாம் பயன்படுத்தலாம் என்று நான் நினைக்கிறேன். இயேசு கிறிஸ்துவின்மேல் நாம் வைக்கிற பக்தி, விசுவாசம், நம்பிக்கை, அன்பு, நேசம், பற்று, பிடிப்பு இவைகளெல்லாம் சேர்ந்ததுதான் பக்தி.
அவர்மூலமாய் நாம் தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்கிறோம். மனிதர்கள் தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு இவர்கள் யார்?. இவர்கள் தேவனுடைய ஜீவனுக்குப் புறம்பானவர்கள். எபேசியரிலே நாம் வாசிக்கிறோம். "அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார்." "அக்காலத்திலே கிறிஸ்துவைச் சேராதவர்களும், இஸ்ரவேலுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்களும், வாக்குத்தத்தத்தின் உடன்படிக்கைகளுக்கு அந்நியரும், நம்பிக்கையில்லாதவர்களும், இவ்வுலகத்தில் தேவனற்றவர்களுமாயிருந்தீர்களென்று நினைத்துக்கொள்ளுங்கள்." தேவனுடைய காணியாட்சிக்குப் புறம்பானவர்கள், தேவனுடைய ஜீவனுக்குத் தூரமானவர்கள். தேவனுடைய ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு நமக்கு ஒன்றுமேயில்லை. ஆனால், தேவன் தம் குமாரனை அனுப்பி தேவனிடமிருந்து ஜீவனைப் பெற்றுக்கொள்வதற்கு வழிவகையை நமக்குச் செய்திருக்கிறார்.
இதனால் நாம் தேவனை அறிவதற்கும், தேவனுடைய ஐசுவரியங்களையும், செல்வங்களையும், வளங்களையும் அறிவதற்கும் , அனுபவிப்பதற்கும், அவைகளால் வாழ்வதற்கும் ஒரு புதிய பாதையை, ஒரு புதிய மார்க்கத்தைத் திறந்திருக்கிறார். Praise the Lord!
ஒரு வாக்கியத்தைச் சொல்லி முடித்துக்கொள்கிறேன்.மறுவுருவாவது அல்லது இயேசு கிறிஸ்துவினுடைய குணம் உருவாவது என்பதின் தொடக்கம் இது. தேவனுடைய ஜீவனில் பங்குறுவதைத்தவிர ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவினுடைய குணம் ஒரு மனிதனுக்குள் உருவாகிறதற்கு வேறு வாய்ப்பு இல்லை. ஆகவே ஒரு வேப்ப மரத்திடம், "நீ ஒரு மாமரத்தைப்போல இனிப்பான கனி கொடுக்க வேண்டும்," என்று சொல்வது போலாகும்.
ஆனால்< தேவனுடைய ஜீவனை நாம் பெறும்போது, ஆ! ஒரு புதிய சாத்தியக்கூறு நம்முடைய வாழ்க்கையிலே திறந்து வைக்கப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு நாளும் நாம் நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் குணத்திற்கு மறுவுருவாகிற ஒரு வாய்ப்பு, ஒரு சாத்தியம் நம்முடைய வாழ்க்கையிலே திறந்திருக்கிறது.
Praise the Lord.